Sunday, July 03, 2016

Neethimozhiga'l 19 | நீதிமொழிகள் 19 | Proverbs 19

மாறுபாடான  உதடுகளுள்ள  மூடனைப்பார்க்கிலும்,  உத்தமனாய்  நடக்கிற  தரித்திரனே  வாசி.  (நீதிமொழிகள்  19:1)

maa’rupaadaana  uthaduga'lu'l'la  moodanaippaarkkilum,  uththamanaay  nadakki’ra  thariththiranea  vaasi.  (neethimozhiga’l  19:1)

ஆத்துமா  அறிவில்லாமலிருப்பது  நல்லதல்ல;  கால்  துரிதமானவன்  தப்பி  நடக்கிறான்.  (நீதிமொழிகள்  19:2)

aaththumaa  a’rivillaamaliruppathu  nallathalla;  kaal  thurithamaanavan  thappi  nadakki’raan.  (neethimozhiga’l  19:2)

மனுஷனுடைய  மதியீனம்  அவன்  வழியைத்  தாறுமாறாக்கும்;  என்றாலும்  அவன்  மனம்  கர்த்தருக்கு  விரோதமாய்த்  தாங்கலடையும்.  (நீதிமொழிகள்  19:3)

manushanudaiya  mathiyeenam  avan  vazhiyaith  thaa’rumaa’raakkum;  en’raalum  avan  manam  karththarukku  viroathamaayth  thaanggaladaiyum.  (neethimozhiga’l  19:3)

செல்வம்  அநேக  சிநேகிதரைச்  சேர்க்கும்;  தரித்திரனோ  தன்  சிநேகிதனாலும்  நெகிழப்படுவான்.  (நீதிமொழிகள்  19:4)

selvam  aneaga  sineagitharaich  searkkum;  thariththiranoa  than  sineagithanaalum  negizhappaduvaan.  (neethimozhiga’l  19:4)

பொய்ச்சாட்சிக்காரன்  ஆக்கினைக்குத்  தப்பான்;  பொய்களைப்  பேசுகிறவனும்  தப்புவதில்லை.  (நீதிமொழிகள்  19:5)

poychsaadchikkaaran  aakkinaikkuth  thappaan;  poyga'laip  peasugi’ravanum  thappuvathillai.  (neethimozhiga’l  19:5)

பிரபுவின்  தயையை  அநேகர்  வருந்திக்  கேட்பார்கள்;  கொடைகொடுக்கிறவனுக்கு  எவனும்  சிநேகிதன்.  (நீதிமொழிகள்  19:6)

pirabuvin  thayaiyai  aneagar  varunthik  keadpaarga'l;  kodaikodukki’ravanukku  evanum  sineagithan.  (neethimozhiga’l  19:6)

தரித்திரனை  அவனுடைய  சகோதரர்  எல்லாரும்  பகைக்கிறார்களே,  எத்தனை  அதிகமாய்  அவன்  சிநேகிதர்  அவனுக்குத்  தூரமாவார்கள்;  அவர்களுடைய  வார்த்தைகளை  அவன்  நாடுகிறான்,  அவைகளோ  வெறும்  வார்த்தைகளே.  (நீதிமொழிகள்  19:7)

thariththiranai  avanudaiya  sagoatharar  ellaarum  pagaikki’raarga'lea,  eththanai  athigamaay  avan  sineagithar  avanukkuth  thooramaavaarga'l;  avarga'ludaiya  vaarththaiga'lai  avan  naadugi’raan,  avaiga'loa  ve’rum  vaarththaiga'lea.  (neethimozhiga’l  19:7)

ஞானத்தைப்  பெற்றுக்கொள்ளுகிறவன்  தன்  ஆத்துமாவைச்  சிநேகிக்கிறான்;  புத்தியைக்  காக்கிறவன்  நன்மையடைவான்.  (நீதிமொழிகள்  19:8)

gnaanaththaip  pet’rukko'l'lugi’ravan  than  aaththumaavaich  sineagikki’raan;  buththiyaik  kaakki’ravan  nanmaiyadaivaan.  (neethimozhiga’l  19:8)

பொய்ச்சாட்சிக்காரன்  ஆக்கினைக்குத்  தப்பான்;  பொய்களைப்  பேசுகிறவன்  நாசமடைவான்.  (நீதிமொழிகள்  19:9)

poychsaadchikkaaran  aakkinaikkuth  thappaan;  poyga'laip  peasugi’ravan  naasamadaivaan.  (neethimozhiga’l  19:9)

மூடனுக்குச்  செல்வம்  தகாது;  பிரபுக்களை  ஆண்டுகொள்வது  அடிமைக்கு  எவ்வளவும்  தகாது.  (நீதிமொழிகள்  19:10)

moodanukkuch  selvam  thagaathu;  pirabukka'lai  aa'nduko'lvathu  adimaikku  evva'lavum  thagaathu.  (neethimozhiga’l  19:10)

மனுஷனுடைய  விவேகம்  அவன்  கோபத்தை  அடக்கும்;  குற்றத்தை  மன்னிப்பது  அவனுக்கு  மகிமை.  (நீதிமொழிகள்  19:11)

manushanudaiya  viveagam  avan  koabaththai  adakkum;  kut’raththai  mannippathu  avanukku  magimai.  (neethimozhiga’l  19:11)

ராஜாவின்  கோபம்  சிங்கத்தின்  கெர்ச்சிப்புக்குச்  சமானம்;  அவனுடைய  தயை  புல்லின்மேல்  பெய்யும்  பனிபோலிருக்கும்.  (நீதிமொழிகள்  19:12)

raajaavin  koabam  singgaththin  kerchchippukkuch  samaanam;  avanudaiya  thayai  pullinmeal  peyyum  panipoalirukkum.  (neethimozhiga’l  19:12)

மூடனாகிய  மகன்  தன்  தகப்பனுக்கு  மிகுந்த  துக்கம்;  மனைவியின்  சண்டைகள்  ஓயாத  ஒழுக்கு.  (நீதிமொழிகள்  19:13)

moodanaagiya  magan  than  thagappanukku  miguntha  thukkam;  manaiviyin  sa'ndaiga'l  oayaatha  ozhukku.  (neethimozhiga’l  19:13)

வீடும்  ஆஸ்தியும்  பிதாக்கள்  வைக்கும்  சுதந்தரம்;  புத்தியுள்ள  மனைவியோ  கர்த்தர்  அருளும்  ஈவு.  (நீதிமொழிகள்  19:14)

veedum  aasthiyum  pithaakka'l  vaikkum  suthantharam;  buththiyu'l'la  manaiviyoa  karththar  aru'lum  eevu.  (neethimozhiga’l  19:14)

சோம்பல்  தூங்கிவிழப்பண்ணும்;  அசதியானவன்  பட்டினியாயிருப்பான்.  (நீதிமொழிகள்  19:15)

soambal  thoonggivizhappa'n'num;  asathiyaanavan  pattiniyaayiruppaan.  (neethimozhiga’l  19:15)

கட்டளையைக்  காத்துக்கொள்ளுகிறவன்  தன்  ஆத்துமாவைக்  காக்கிறான்;  தன்  வழிகளை  அவமதிக்கிறவன்  சாவான்.  (நீதிமொழிகள்  19:16)

katta'laiyaik  kaaththukko'l'lugi’ravan  than  aaththumaavaik  kaakki’raan;  than  vazhiga'lai  avamathikki’ravan  saavaan.  (neethimozhiga’l  19:16)

ஏழைக்கு  இரங்குகிறவன்  கர்த்தருக்குக்  கடன்கொடுக்கிறான்;  அவன்  கொடுத்ததை  அவர்  திரும்பக்  கொடுப்பார்.  (நீதிமொழிகள்  19:17)

eazhaikku  iranggugi’ravan  karththarukkuk  kadankodukki’raan;  avan  koduththathai  avar  thirumbak  koduppaar.  (neethimozhiga’l  19:17)

நம்பிக்கையிருக்குமட்டும்  உன்  மகனைச்  சிட்சைசெய்;  ஆனாலும்  அவனைக்  கொல்ல  உன்  ஆத்துமாவை  எழும்பவொட்டாதே.  (நீதிமொழிகள்  19:18)

nambikkaiyirukkumattum  un  maganaich  sidchaisey;  aanaalum  avanaik  kolla  un  aaththumaavai  ezhumbavottaathea.  (neethimozhiga’l  19:18)

கடுங்கோபி  ஆக்கினைக்குள்ளாவான்;  நீ  அவனைத்  தப்புவித்தால்  திரும்பவும்  தப்புவிக்கவேண்டியதாய்  வரும்.  (நீதிமொழிகள்  19:19)

kadungkoabi  aakkinaikku'l'laavaan;  nee  avanaith  thappuviththaal  thirumbavum  thappuvikkavea'ndiyathaay  varum.  (neethimozhiga’l  19:19)

உன்  அந்தியகாலத்தில்  நீ  ஞானமுள்ளவனாயிருக்கும்படி,  ஆலோசனையைக்கேட்டு,  புத்திமதியை  ஏற்றுக்கொள்.  (நீதிமொழிகள்  19:20)

un  anthiyakaalaththil  nee  gnaanamu'l'lavanaayirukkumpadi,  aaloasanaiyaikkeattu,  buththimathiyai  eat’rukko'l.  (neethimozhiga’l  19:20)

மனுஷனுடைய  இருதயத்தின்  எண்ணங்கள்  அநேகம்;  ஆனாலும்  கர்த்தருடைய  யோசனையே  நிலைநிற்கும்.  (நீதிமொழிகள்  19:21)

manushanudaiya  iruthayaththin  e'n'nangga'l  aneagam;  aanaalum  karththarudaiya  yoasanaiyea  nilaini’rkum.  (neethimozhiga’l  19:21)

நன்மைசெய்ய  மனுஷன்  கொண்டிருக்கும்  ஆசையே  தயை;  பொய்யனைப்பார்க்கிலும்  தரித்திரன்  வாசி.  (நீதிமொழிகள்  19:22)

nanmaiseyya  manushan  ko'ndirukkum  aasaiyea  thayai;  poyyanaippaarkkilum  thariththiran  vaasi.  (neethimozhiga’l  19:22)

கர்த்தருக்குப்  பயப்படுதல்  ஜீவனுக்கேதுவானது;  அதை  அடைந்தவன்  திருப்தியடைந்து  நிலைத்திருப்பான்;  தீமை  அவனை  அணுகாது.  (நீதிமொழிகள்  19:23)

karththarukkup  bayappaduthal  jeevanukkeathuvaanathu;  athai  adainthavan  thirupthiyadainthu  nilaiththiruppaan;  theemai  avanai  a'nugaathu.  (neethimozhiga’l  19:23)

சோம்பேறி  தன்  கையைக்  கலத்திலே  வைத்து,  அதைத்  திரும்பத்  தன்  வாயண்டைக்கு  எடுக்காமலிருக்கிறான்.  (நீதிமொழிகள்  19:24)

soambea’ri  than  kaiyaik  kalaththilea  vaiththu,  athaith  thirumbath  than  vaaya'ndaikku  edukkaamalirukki’raan.  (neethimozhiga’l  19:24)

பரியாசக்காரனை  அடி,  அப்பொழுது  பேதை  எச்சரிக்கப்படுவான்;  புத்திமானைக்  கடிந்துகொள்,  அவன்  அறிவுள்ளவனாவான்.  (நீதிமொழிகள்  19:25)

pariyaasakkaaranai  adi,  appozhuthu  peathai  echcharikkappaduvaan;  buththimaanaik  kadinthuko'l,  avan  a’rivu'l'lavanaavaan.  (neethimozhiga’l  19:25)

தன்  தகப்பனைக்  கொள்ளையடித்து,  தன்  தாயைத்  துரத்திவிடுகிறவன்,  இலச்சையையும்  அவமானத்தையும்  உண்டாக்குகிற  மகன்.  (நீதிமொழிகள்  19:26)

than  thagappanaik  ko'l'laiyadiththu,  than  thaayaith  thuraththividugi’ravan,  ilachchaiyaiyum  avamaanaththaiyum  u'ndaakkugi’ra  magan.  (neethimozhiga’l  19:26)

என்  மகனே,  அறிவைத்  தரும்  வார்த்தைகளை  விட்டு  விலகச்செய்யும்  போதகங்களை  நீ  கேளாதே.  (நீதிமொழிகள்  19:27)

en  maganea,  a’rivaith  tharum  vaarththaiga'lai  vittu  vilagachseyyum  poathagangga'lai  nee  kea'laathea.  (neethimozhiga’l  19:27)

பேலியாளின்  சாட்சிக்காரன்  நியாயத்தை  நிந்திக்கிறான்;  துன்மார்க்கருடைய  வாய்  அக்கிரமத்தை  விழுங்கும்.  (நீதிமொழிகள்  19:28)

bealiyaa'lin  saadchikkaaran  niyaayaththai  ninthikki’raan;  thunmaarkkarudaiya  vaay  akkiramaththai  vizhunggum.  (neethimozhiga’l  19:28)

பரியாசக்காரருக்குத்  தண்டனைகளும்,  மூடருடைய  முதுகுக்கு  அடிகளும்  ஆயத்தமாயிருக்கிறது.  (நீதிமொழிகள்  19:29)

pariyaasakkaararukkuth  tha'ndanaiga'lum,  moodarudaiya  muthugukku  adiga'lum  aayaththamaayirukki’rathu.  (neethimozhiga’l  19:29)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!