Sunday, July 03, 2016

Neethimozhiga'l 18 | நீதிமொழிகள் 18 | Proverbs 18

பிரிந்துபோகிறவன்  தன்  இச்சையின்படி  செய்யப்பார்க்கிறான்,  எல்லா  ஞானத்திலும்  தலையிட்டுக்கொள்ளுகிறான்.  (நீதிமொழிகள்  18:1)

pirinthupoagi’ravan  than  ichchaiyinpadi  seyyappaarkki’raan,  ellaa  gnaanaththilum  thalaiyittukko'l'lugi’raan.  (neethimozhiga’l  18:1)

மூடன்  ஞானத்தில்  பிரியங்கொள்ளாமல்,  தன்  மனதிலுள்ளவைகளை  வெளிப்படுத்தப்  பிரியப்படுகிறான்.  (நீதிமொழிகள்  18:2)

moodan  gnaanaththil  piriyangko'l'laamal,  than  manathilu'l'lavaiga'lai  ve'lippaduththap  piriyappadugi’raan.  (neethimozhiga’l  18:2)

துன்மார்க்கன்  வர  அவமானம்  வரும்;  அவமானத்தோடே  நிந்தையும்  வரும்.  (நீதிமொழிகள்  18:3)

thunmaarkkan  vara  avamaanam  varum;  avamaanaththoadea  ninthaiyum  varum.  (neethimozhiga’l  18:3)

மனுஷனுடைய  வாய்மொழிகள்  ஆழமான  ஜலம்போலிருக்கும்;  ஞானத்தின்  ஊற்று  பாய்கிற  ஆற்றைப்போலிருக்கும்.  (நீதிமொழிகள்  18:4)

manushanudaiya  vaaymozhiga'l  aazhamaana  jalampoalirukkum;  gnaanaththin  oot’ru  paaygi’ra  aat’raippoalirukkum.  (neethimozhiga’l  18:4)

வழக்கிலே  நீதிமானைத்  தோற்கடிக்கிறதற்கு,  துன்மார்க்கனுக்கு  முகதாட்சிணியம்பண்ணுவது  நல்லதல்ல.  (நீதிமொழிகள்  18:5)

vazhakkilea  neethimaanaith  thoa’rkadikki’ratha’rku,  thunmaarkkanukku  mugathaadchi'niyampa'n'nuvathu  nallathalla.  (neethimozhiga’l  18:5)

மூடனுடைய  உதடுகள்  விவாதத்தில்  நுழையும்,  அவன்  வாய்  அடிகளை  வரவழைக்கும்.  (நீதிமொழிகள்  18:6)

moodanudaiya  uthaduga'l  vivaathaththil  nuzhaiyum,  avan  vaay  adiga'lai  varavazhaikkum.  (neethimozhiga’l  18:6)

மூடனுடைய  வாய்  அவனுக்குக்  கேடு,  அவன்  உதடுகள்  அவன்  ஆத்துமாவுக்குக்  கண்ணி.  (நீதிமொழிகள்  18:7)

moodanudaiya  vaay  avanukkuk  keadu,  avan  uthaduga'l  avan  aaththumaavukkuk  ka'n'ni.  (neethimozhiga’l  18:7)

கோள்காரனுடைய  வார்த்தைகள்  விளையாட்டுப்போலிருக்கும்,  ஆனாலும்  அவைகள்  உள்ளத்திற்குள்  தைக்கும்.  (நீதிமொழிகள்  18:8)

koa'lkaaranudaiya  vaarththaiga'l  vi'laiyaattuppoalirukkum,  aanaalum  avaiga'l  u'l'laththi’rku'l  thaikkum.  (neethimozhiga’l  18:8)

தன்  வேலையில்  அசதியாயிருப்பவன்  அழிம்பனுக்குச்  சகோதரன்.  (நீதிமொழிகள்  18:9)

than  vealaiyil  asathiyaayiruppavan  azhimbanukkuch  sagoatharan.  (neethimozhiga’l  18:9)

கர்த்தரின்  நாமம்  பலத்த  துருகம்;  நீதிமான்  அதற்குள்  ஓடிச்  சுகமாயிருப்பான்.  (நீதிமொழிகள்  18:10)

karththarin  naamam  balaththa  thurugam;  neethimaan  atha’rku'l  oadich  sugamaayiruppaan.  (neethimozhiga’l  18:10)

ஐசுவரியவானுடைய  பொருள்  அவனுக்கு  அரணான  பட்டணம்;  அது  அவன்  எண்ணத்தில்  உயர்ந்த  மதில்போலிருக்கும்.  (நீதிமொழிகள்  18:11)

aisuvariyavaanudaiya  poru'l  avanukku  ara'naana  patta'nam;  athu  avan  e'n'naththil  uyarntha  mathilpoalirukkum.  (neethimozhiga’l  18:11)

அழிவு  வருமுன்  மனுஷனுடைய  இருதயம்  இறுமாப்பாயிருக்கும்;  மேன்மைக்கு  முன்னானது  தாழ்மை.  (நீதிமொழிகள்  18:12)

azhivu  varumun  manushanudaiya  iruthayam  i’rumaappaayirukkum;  meanmaikku  munnaanathu  thaazhmai.  (neethimozhiga’l  18:12)

காரியத்தைக்  கேட்குமுன்  உத்தரம்  சொல்லுகிறவனுக்கு,  அது  புத்தியீனமும்  வெட்கமுமாயிருக்கும்.  (நீதிமொழிகள்  18:13)

kaariyaththaik  keadkumun  uththaram  sollugi’ravanukku,  athu  buththiyeenamum  vedkamumaayirukkum.  (neethimozhiga’l  18:13)

மனுஷனுடைய  ஆவி  அவன்  பலவீனத்தைத்  தாங்கும்;  முறிந்த  ஆவி  யாரால்  தாங்கக்கூடும்?  (நீதிமொழிகள்  18:14)

manushanudaiya  aavi  avan  balaveenaththaith  thaanggum;  mu’rintha  aavi  yaaraal  thaanggakkoodum?  (neethimozhiga’l  18:14)

புத்திமானுடைய  மனம்  அறிவைச்  சம்பாதிக்கும்;  ஞானியின்  செவி  அறிவை  நாடும்.  (நீதிமொழிகள்  18:15)

buththimaanudaiya  manam  a’rivaich  sambaathikkum;  gnaaniyin  sevi  a’rivai  naadum.  (neethimozhiga’l  18:15)

ஒருவன்  கொடுக்கும்  வெகுமதி  அவனுக்கு  வழியுண்டாக்கி,  பெரியோர்களுக்கு  முன்பாக  அவனைக்  கொண்டுபோய்விடும்.  (நீதிமொழிகள்  18:16)

oruvan  kodukkum  vegumathi  avanukku  vazhiyu'ndaakki,  periyoarga'lukku  munbaaga  avanaik  ko'ndupoayvidum.  (neethimozhiga’l  18:16)

தன்  வழக்கிலே  முதல்பேசுகிறவன்  நீதிமான்போல்  காணப்படுவான்;  அவன்  அயலானோ  வந்து  அவனைப்  பரிசோதிக்கிறான்.  (நீதிமொழிகள்  18:17)

than  vazhakkilea  muthalpeasugi’ravan  neethimaanpoal  kaa'nappaduvaan;  avan  ayalaanoa  vanthu  avanaip  parisoathikki’raan.  (neethimozhiga’l  18:17)

சீட்டுப்போடுதல்  விரோதங்களை  ஒழித்து,  பலவான்கள்  நடுவே  சிக்கறுக்கும்.  (நீதிமொழிகள்  18:18)

seettuppoaduthal  viroathangga'lai  ozhiththu,  balavaanga'l  naduvea  sikka’rukkum.  (neethimozhiga’l  18:18)

அரணான  பட்டணத்தை  வசப்படுத்துவதைப்பார்க்கிலும்  கோபங்கொண்ட  சகோதரனை  வசப்படுத்துவது  அரிது;  அவர்களுடைய  விரோதங்கள்  கோட்டைத்  தாழ்ப்பாள்கள்போலிருக்கும்.  (நீதிமொழிகள்  18:19)

ara'naana  patta'naththai  vasappaduththuvathaippaarkkilum  koabangko'nda  sagoatharanai  vasappaduththuvathu  arithu;  avarga'ludaiya  viroathangga'l  koattaith  thaazhppaa'lga'lpoalirukkum.  (neethimozhiga’l  18:19)

அவனவன்  வாயின்  பலனால்  அவனவன்  வயிறு  நிரம்பும்;  அவனவன்  உதடுகளின்  விளைவினால்  அவனவன்  திருப்தியாவான்.  (நீதிமொழிகள்  18:20)

avanavan  vaayin  palanaal  avanavan  vayi’ru  nirambum;  avanavan  uthaduga'lin  vi'laivinaal  avanavan  thirupthiyaavaan.  (neethimozhiga’l  18:20)

மரணமும்  ஜீவனும்  நாவின்  அதிகாரத்திலிருக்கும்;  அதில்  பிரியப்படுகிறவர்கள்  அதின்  கனியைப்  புசிப்பார்கள்.  (நீதிமொழிகள்  18:21)

mara'namum  jeevanum  naavin  athigaaraththilirukkum;  athil  piriyappadugi’ravarga'l  athin  kaniyaip  pusippaarga'l.  (neethimozhiga’l  18:21)

மனைவியைக்  கண்டடைகிறவன்  நன்மையானதைக்  கண்டடைகிறான்;  கர்த்தரால்  தயையும்  பெற்றுக்கொள்ளுகிறான்.  (நீதிமொழிகள்  18:22)

manaiviyaik  ka'ndadaigi’ravan  nanmaiyaanathaik  ka'ndadaigi’raan;  karththaraal  thayaiyum  pet’rukko'l'lugi’raan.  (neethimozhiga’l  18:22)

தரித்திரன்  கெஞ்சிக்கேட்கிறான்;  ஐசுவரியவான்  கடினமாய்  உத்தரவு  கொடுக்கிறான்.  (நீதிமொழிகள்  18:23)

thariththiran  kegnchikkeadki’raan;  aisuvariyavaan  kadinamaay  uththaravu  kodukki’raan.  (neethimozhiga’l  18:23)

சிநேகிதருள்ளவன்  சிநேகம்  பாராட்டவேண்டும்;  சகோதரனிலும்  அதிக  சொந்தமாய்ச்  சிநேகிப்பவனுமுண்டு.  (நீதிமொழிகள்  18:24)

sineagitharu'l'lavan  sineagam  paaraattavea'ndum;  sagoatharanilum  athiga  sonthamaaych  sineagippavanumu'ndu.  (neethimozhiga’l  18:24)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!