Sunday, July 03, 2016

Neethimozhiga'l 17 | நீதிமொழிகள் 17 | Proverbs 17

சண்டையோடு  கூடிய  வீடுநிறைந்த  கொழுமையான  பதார்த்தங்களைப்பார்க்கிலும்,  அமரிக்கையோடே  சாப்பிடும்  வெறும்  துணிக்கையே  நலம்.  (நீதிமொழிகள்  17:1)

sa'ndaiyoadu  koodiya  veeduni’raintha  kozhumaiyaana  pathaarththangga'laippaarkkilum,  amarikkaiyoadea  saappidum  ve’rum  thu'nikkaiyea  nalam.  (neethimozhiga’l  17:1)

புத்தியுள்ள  வேலைக்காரன்  இலச்சையுண்டாக்குகிற  புத்திரனை  ஆண்டு,  சகோதரருக்குள்ள  சுதந்தரத்தில்  பங்கடைவான்.  (நீதிமொழிகள்  17:2)

buththiyu'l'la  vealaikkaaran  ilachchaiyu'ndaakkugi’ra  puththiranai  aa'ndu,  sagoathararukku'l'la  suthantharaththil  panggadaivaan.  (neethimozhiga’l  17:2)

வெள்ளியைக்  குகையும்,  பொன்னைப்  புடமும்  சோதிக்கும்;  இருதயங்களைச்  சோதிக்கிறவரோ  கர்த்தர்.  (நீதிமொழிகள்  17:3)

ve'l'liyaik  kugaiyum,  ponnaip  pudamum  soathikkum;  iruthayangga'laich  soathikki’ravaroa  karththar.  (neethimozhiga’l  17:3)

துஷ்டன்  அக்கிரம  உதடுகள்  சொல்வதை  உற்றுக்கேட்கிறான்;  பொய்யன்  கேடுள்ள  நாவுக்குச்  செவிகொடுக்கிறான்.  (நீதிமொழிகள்  17:4)

thushdan  akkirama  uthaduga'l  solvathai  ut’rukkeadki’raan;  poyyan  keadu'l'la  naavukkuch  sevikodukki’raan.  (neethimozhiga’l  17:4)

ஏழையைப்  பரியாசம்பண்ணுகிறவன்  அவனை  உண்டாக்கினவரை  நிந்திக்கிறான்;  ஆபத்தைக்குறித்துக்  களிக்கிறவன்  தண்டனைக்குத்  தப்பான்.  (நீதிமொழிகள்  17:5)

eazhaiyaip  pariyaasampa'n'nugi’ravan  avanai  u'ndaakkinavarai  ninthikki’raan;  aabaththaikku’riththuk  ka'likki’ravan  tha'ndanaikkuth  thappaan.  (neethimozhiga’l  17:5)

பிள்ளைகளின்  பிள்ளைகள்  முதியோருக்குக்  கிரீடம்;  பிள்ளைகளின்  மேன்மை  அவர்கள்  பிதாக்களே.  (நீதிமொழிகள்  17:6)

pi'l'laiga'lin  pi'l'laiga'l  muthiyoarukkuk  kireedam;  pi'l'laiga'lin  meanmai  avarga'l  pithaakka'lea.  (neethimozhiga’l  17:6)

மேன்மையானவைகளைப்  பேசும்  உதடு  மூடனுக்குத்  தகாது;  பொய்  பேசும்  உதடு  பிரபுவுக்கு  எவ்வளவேனும்  தகாது.  (நீதிமொழிகள்  17:7)

meanmaiyaanavaiga'laip  peasum  uthadu  moodanukkuth  thagaathu;  poy  peasum  uthadu  pirabuvukku  evva'laveanum  thagaathu.  (neethimozhiga’l  17:7)

பரிதானம்  வாங்குகிறவர்களின்  பார்வைக்கு  அது  இரத்தினம்போலிருக்கும்;  அது  நோக்கும்  திசையெல்லாம்  காரியம்  வாய்க்கும்.  (நீதிமொழிகள்  17:8)

parithaanam  vaanggugi’ravarga'lin  paarvaikku  athu  iraththinampoalirukkum;  athu  noakkum  thisaiyellaam  kaariyam  vaaykkum.  (neethimozhiga’l  17:8)

குற்றத்தை  மூடுகிறவன்  சிநேகத்தை  நாடுகிறான்;  கேட்டதைச்  சொல்லுகிறவன்  பிராணசிநேகிதரையும்  பிரித்துவிடுகிறான்.  (நீதிமொழிகள்  17:9)

kut’raththai  moodugi’ravan  sineagaththai  naadugi’raan;  keattathaich  sollugi’ravan  piraa'nasineagitharaiyum  piriththuvidugi’raan.  (neethimozhiga’l  17:9)

மூடனை  நூறடி  அடிப்பதைப்பார்க்கிலும்,  புத்திமானை  வாயினால்  கண்டிப்பதே  அதிகமாய்  உறைக்கும்.  (நீதிமொழிகள்  17:10)

moodanai  noo’radi  adippathaippaarkkilum,  buththimaanai  vaayinaal  ka'ndippathea  athigamaay  u’raikkum.  (neethimozhiga’l  17:10)

துஷ்டன்  கலகத்தையே  தேடுகிறான்;  குரூரதூதன்  அவனுக்கு  விரோதமாக  அனுப்பப்படுவான்.  (நீதிமொழிகள்  17:11)

thushdan  kalagaththaiyea  theadugi’raan;  kuroorathoothan  avanukku  viroathamaaga  anuppappaduvaan.  (neethimozhiga’l  17:11)

தன்  மதிகேட்டில்  திரியும்  மதியீனனுக்கு  எதிர்ப்படுவதைப்பார்க்கிலும்,  குட்டிகளைப்  பறிகொடுத்த  கரடிக்கு  எதிர்ப்படுவது  வாசி.  (நீதிமொழிகள்  17:12)

than  mathikeattil  thiriyum  mathiyeenanukku  ethirppaduvathaippaarkkilum,  kuttiga'laip  pa’rikoduththa  karadikku  ethirppaduvathu  vaasi.  (neethimozhiga’l  17:12)

நன்மைக்குத்  தீமைசெய்கிறவன்  எவனோ,  அவன்  வீட்டைவிட்டுத்  தீமை  நீங்காது.  (நீதிமொழிகள்  17:13)

nanmaikkuth  theemaiseygi’ravan  evanoa,  avan  veettaivittuth  theemai  neenggaathu.  (neethimozhiga’l  17:13)

சண்டையின்  ஆரம்பம்  மதகைத்  திறந்துவிடுகிறதுபோலிருக்கும்;  ஆதலால்  விவாதம்  எழும்புமுன்  அதை  விட்டுவிடு.  (நீதிமொழிகள்  17:14)

sa'ndaiyin  aarambam  mathagaith  thi’ranthuvidugi’rathupoalirukkum;  aathalaal  vivaatham  ezhumbumun  athai  vittuvidu.  (neethimozhiga’l  17:14)

துன்மார்க்கனை  நீதிமானாக்குகிறவனும்,  நீதிமானைக்  குற்றவாளியாக்குகிறவனுமாகிய  இவ்விருவரும்  கர்த்தருக்கு  அருவருப்பானவர்கள்.  (நீதிமொழிகள்  17:15)

thunmaarkkanai  neethimaanaakkugi’ravanum,  neethimaanaik  kut’ravaa'liyaakkugi’ravanumaagiya  ivviruvarum  karththarukku  aruvaruppaanavarga'l.  (neethimozhiga’l  17:15)

ஞானத்தைக்  கொள்ளும்படி  மூடன்  கையிலே  ரொக்கம்  என்னத்திற்கு?  அதின்மேல்  அவனுக்கு  மனமில்லையே.  (நீதிமொழிகள்  17:16)

gnaanaththaik  ko'l'lumpadi  moodan  kaiyilea  rokkam  ennaththi’rku?  athinmeal  avanukku  manamillaiyea.  (neethimozhiga’l  17:16)

சிநேகிதன்  எல்லாக்  காலத்திலும்  சிநேகிப்பான்;  இடுக்கணில்  உதவவே  சகோதரன்  பிறந்திருக்கிறான்.  (நீதிமொழிகள்  17:17)

sineagithan  ellaak  kaalaththilum  sineagippaan;  idukka'nil  uthavavea  sagoatharan  pi’ranthirukki’raan.  (neethimozhiga’l  17:17)

புத்தியீனன்  தன்  சிநேகிதனுக்கு  முன்பாகக்  கையடித்துக்கொடுத்துப்  பிணைப்படுகிறான்.  (நீதிமொழிகள்  17:18)

buththiyeenan  than  sineagithanukku  munbaagak  kaiyadiththukkoduththup  pi'naippadugi’raan.  (neethimozhiga’l  17:18)

வாதுப்பிரியன்  பாதகப்பிரியன்;  தன்  வாசலை  உயர்த்திக்  கட்டுகிறவன்  அழிவை  நாடுகிறான்.  (நீதிமொழிகள்  17:19)

vaathuppiriyan  paathagappiriyan;  than  vaasalai  uyarththik  kattugi’ravan  azhivai  naadugi’raan.  (neethimozhiga’l  17:19)

மாறுபாடான  இருதயமுள்ளவன்  நன்மையைக்  கண்டடைவதில்லை;  புரட்டு  நாவுள்ளவன்  தீமையில்  விழுவான்.  (நீதிமொழிகள்  17:20)

maa’rupaadaana  iruthayamu'l'lavan  nanmaiyaik  ka'ndadaivathillai;  purattu  naavu'l'lavan  theemaiyil  vizhuvaan.  (neethimozhiga’l  17:20)

மூடபுத்திரனைப்  பெறுகிறவன்  தனக்குச்  சஞ்சலமுண்டாக  அவனைப்  பெறுகிறான்;  மதியீனனுடைய  தகப்பனுக்கு  மகிழ்ச்சியில்லை.  (நீதிமொழிகள்  17:21)

moodapuththiranaip  pe’rugi’ravan  thanakkuch  sagnchalamu'ndaaga  avanaip  pe’rugi’raan;  mathiyeenanudaiya  thagappanukku  magizhchchiyillai.  (neethimozhiga’l  17:21)

மனமகிழ்ச்சி  நல்ல  ஔஷதம்;  முறிந்த  ஆவியோ  எலும்புகளை  உலரப்பண்ணும்.  (நீதிமொழிகள்  17:22)

manamagizhchchi  nalla  aushatham;  mu’rintha  aaviyoa  elumbuga'lai  ularappa'n'num.  (neethimozhiga’l  17:22)

துன்மார்க்கன்,  நீதியின்  வழியைப்  புரட்ட,  மடியிலுள்ள  பரிதானத்தை  வாங்குகிறான்.  (நீதிமொழிகள்  17:23)

thunmaarkkan,  neethiyin  vazhiyaip  puratta,  madiyilu'l'la  parithaanaththai  vaanggugi’raan.  (neethimozhiga’l  17:23)

ஞானம்  புத்திமானுக்கு  முன்பாக  இருக்கும்;  மூடனுடைய  கண்களோ  பூமியின்  கடையாந்தரங்களில்  செல்லும்.  (நீதிமொழிகள்  17:24)

gnaanam  buththimaanukku  munbaaga  irukkum;  moodanudaiya  ka'nga'loa  boomiyin  kadaiyaantharangga'lil  sellum.  (neethimozhiga’l  17:24)

மூடபுத்திரன்  தன்  பிதாவுக்குச்  சலிப்பும்,  தன்னைப்  பெற்றவர்களுக்குக்  கசப்புமானவன்.  (நீதிமொழிகள்  17:25)

moodapuththiran  than  pithaavukkuch  salippum,  thannaip  pet’ravarga'lukkuk  kasappumaanavan.  (neethimozhiga’l  17:25)

நீதிமானைத்  தண்டம்பிடிக்கிறதும்,  நியாயஞ்செய்கிறவனைப்  பிரபுக்கள்  அடிக்கிறதும்  தகுதியல்ல.  (நீதிமொழிகள்  17:26)

neethimaanaith  tha'ndampidikki’rathum,  niyaayagnseygi’ravanaip  pirabukka'l  adikki’rathum  thaguthiyalla.  (neethimozhiga’l  17:26)

அறிவாளி  தன்  வார்த்தைகளை  அடக்குகிறான்;  விவேகி  குளிர்ந்த  மனமுள்ளவன்.  (நீதிமொழிகள்  17:27)

a’rivaa'li  than  vaarththaiga'lai  adakkugi’raan;  viveagi  ku'lirntha  manamu'l'lavan.  (neethimozhiga’l  17:27)

பேசாதிருந்தால்  மூடனும்  ஞானவான்  என்று  எண்ணப்படுவான்;  தன்  உதடுகளை  மூடுகிறவன்  புத்திமான்  என்று  எண்ணப்படுவான்.  (நீதிமொழிகள்  17:28)

peasaathirunthaal  moodanum  gnaanavaan  en’ru  e'n'nappaduvaan;  than  uthaduga'lai  moodugi’ravan  buththimaan  en’ru  e'n'nappaduvaan.  (neethimozhiga’l  17:28)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!