Saturday, July 02, 2016

Neethimozhiga'l 13 | நீதிமொழிகள் 13 | Proverbs 13

ஞானமுள்ள  மகன்  தகப்பனுடைய  போதகத்தைக்  கேட்கிறான்;  பரியாசக்காரனோ  கடிந்துகொள்ளுதலுக்குச்  செவிகொடான்.  (நீதிமொழிகள்  13:1)

gnaanamu'l'la  magan  thagappanudaiya  poathagaththaik  keadki’raan;  pariyaasakkaaranoa  kadinthuko'l'luthalukkuch  sevikodaan.  (neethimozhiga’l  13:1)

மனுஷன்  தன்  வாயின்  பலனால்  நன்மையைப்  புசிப்பான்;  துரோகிகளின்  ஆத்துமாவோ  கொடுமையைப்  புசிக்கும்.  (நீதிமொழிகள்  13:2)

manushan  than  vaayin  palanaal  nanmaiyaip  pusippaan;  thuroagiga'lin  aaththumaavoa  kodumaiyaip  pusikkum.  (neethimozhiga’l  13:2)

தன்  வாயைக்  காக்கிறவன்  தன்  பிராணனைக்  காக்கிறான்;  தன்  உதடுகளை  விரிவாய்த்  திறக்கிறவனோ  கலக்கமடைவான்.  (நீதிமொழிகள்  13:3)

than  vaayaik  kaakki’ravan  than  piraa'nanaik  kaakki’raan;  than  uthaduga'lai  virivaayth  thi’rakki’ravanoa  kalakkamadaivaan.  (neethimozhiga’l  13:3)

சோம்பேறியுடைய  ஆத்துமா  விரும்பியும்  ஒன்றும்  பெறாது;  ஜாக்கிரதையுள்ளவர்களுடைய  ஆத்துமாவோ  புஷ்டியாகும்.  (நீதிமொழிகள்  13:4)

soambea’riyudaiya  aaththumaa  virumbiyum  on’rum  pe’raathu;  jaakkirathaiyu'l'lavarga'ludaiya  aaththumaavoa  pushdiyaagum.  (neethimozhiga’l  13:4)

நீதிமான்  பொய்ப்பேச்சை  வெறுக்கிறான்;  துன்மார்க்கனோ  வெட்கமும்  இலச்சையும்  உண்டாக்குகிறான்.  (நீதிமொழிகள்  13:5)

neethimaan  poyppeachchai  ve’rukki’raan;  thunmaarkkanoa  vedkamum  ilachchaiyum  u'ndaakkugi’raan.  (neethimozhiga’l  13:5)

நீதி  உத்தமமார்க்கத்தானைத்  தற்காக்கும்;  துன்மார்க்கமோ  பாவியைக்  கவிழ்த்துப்போடும்.  (நீதிமொழிகள்  13:6)

neethi  uththamamaarkkaththaanaith  tha’rkaakkum;  thunmaarkkamoa  paaviyaik  kavizhththuppoadum.  (neethimozhiga’l  13:6)

ஒன்றுமில்லாதிருக்கத்  தன்னைச்  செல்வனாகப்  பாராட்டுகிறவனும்  உண்டு;  மிகுந்த  செல்வமிருக்கத்  தன்னைத்  தரித்திரனாகப்  பாராட்டுகிறவனும்  உண்டு.  (நீதிமொழிகள்  13:7)

on’rumillaathirukkath  thannaich  selvanaagap  paaraattugi’ravanum  u'ndu;  miguntha  selvamirukkath  thannaith  thariththiranaagap  paaraattugi’ravanum  u'ndu.  (neethimozhiga’l  13:7)

மனுஷனுடைய  ஐசுவரியம்  அவன்  பிராணனை  மீட்கும்;  தரித்திரனோ  மிரட்டுதலைக்  கேளாதிருக்கிறான்.  (நீதிமொழிகள்  13:8)

manushanudaiya  aisuvariyam  avan  piraa'nanai  meedkum;  thariththiranoa  mirattuthalaik  kea'laathirukki’raan.  (neethimozhiga’l  13:8)

நீதிமான்களின்  வெளிச்சம்  சந்தோஷிப்பிக்கும்;  துன்மார்க்கரின்  தீபமோ  அணைந்துபோம்.  (நீதிமொழிகள்  13:9)

neethimaanga'lin  ve'lichcham  santhoashippikkum;  thunmaarkkarin  theebamoa  a'nainthupoam.  (neethimozhiga’l  13:9)

அகந்தையினால்மாத்திரம்  வாது  பிறக்கும்;  ஆலோசனையைக்  கேட்கிறவர்களிடத்திலோ  ஞானம்  உண்டு.  (நீதிமொழிகள்  13:10)

aganthaiyinaalmaaththiram  vaathu  pi’rakkum;  aaloasanaiyaik  keadki’ravarga'lidaththiloa  gnaanam  u'ndu.  (neethimozhiga’l  13:10)

வஞ்சனையால்  தேடின  பொருள்  குறைந்துபோம்;  கைப்பாடாய்ச்  சேர்க்கிறவனோ  விருத்தியடைவான்.  (நீதிமொழிகள்  13:11)

vagnchanaiyaal  theadina  poru'l  ku’rainthupoam;  kaippaadaaych  searkki’ravanoa  viruththiyadaivaan.  (neethimozhiga’l  13:11)

நெடுங்காலமாய்க்  காத்திருக்குதல்  இருதயத்தை  இளைக்கப்பண்ணும்;  விரும்பினது  வரும்போதோ  ஜீவவிருட்சம்போல்  இருக்கும்.  (நீதிமொழிகள்  13:12)

nedungkaalamaayk  kaaththirukkuthal  iruthayaththai  i'laikkappa'n'num;  virumbinathu  varumpoathoa  jeevavirudchampoal  irukkum.  (neethimozhiga’l  13:12)

திருவசனத்தை  அவமதிக்கிறவன்  நாசமடைவான்;  கற்பனைக்குப்  பயப்படுகிறவனோ  பலனடைவான்.  (நீதிமொழிகள்  13:13)

thiruvasanaththai  avamathikki’ravan  naasamadaivaan;  ka’rpanaikkup  bayappadugi’ravanoa  palanadaivaan.  (neethimozhiga’l  13:13)

ஞானவான்களுடைய  போதகம்  ஜீவஊற்று;  அதினால்  மரணக்கண்ணிகளுக்குத்  தப்பலாம்.  (நீதிமொழிகள்  13:14)

gnaanavaanga'ludaiya  poathagam  jeevaoot’ru;  athinaal  mara'nakka'n'niga'lukkuth  thappalaam.  (neethimozhiga’l  13:14)

நற்புத்தி  தயையை  உண்டாக்கும்;  துரோகிகளுடைய  வழியோ  கரடுமுரடானது.  (நீதிமொழிகள்  13:15)

na’rbuththi  thayaiyai  u'ndaakkum;  thuroagiga'ludaiya  vazhiyoa  karadumuradaanathu.  (neethimozhiga’l  13:15)

விவேகியானவன்  அறிவோடு  நடந்துகொள்ளுகிறான்;  மூடனோ  தன்  மூடத்தனத்தை  வெளிப்படுத்துகிறான்.  (நீதிமொழிகள்  13:16)

viveagiyaanavan  a’rivoadu  nadanthuko'l'lugi’raan;  moodanoa  than  moodaththanaththai  ve'lippaduththugi’raan.  (neethimozhiga’l  13:16)

துரோகமுள்ள  தூதன்  தீதிலே  விழுவான்;  உண்மையுள்ள  ஸ்தானாபதியோ  ஔஷதம்.  (நீதிமொழிகள்  13:17)

thuroagamu'l'la  thoothan  theethilea  vizhuvaan;  u'nmaiyu'l'la  sthaanaabathiyoa  aushatham.  (neethimozhiga’l  13:17)

புத்திமதிகளைத்  தள்ளுகிறவன்  தரித்திரத்தையும்  இலச்சையையும்  அடைவான்;  கடிந்துகொள்ளுதலைக்  கவனித்து  நடக்கிறவனோ  கனமடைவான்.  (நீதிமொழிகள்  13:18)

buththimathiga'laith  tha'l'lugi’ravan  thariththiraththaiyum  ilachchaiyaiyum  adaivaan;  kadinthuko'l'luthalaik  kavaniththu  nadakki’ravanoa  kanamadaivaan.  (neethimozhiga’l  13:18)

வாஞ்சை  நிறைவேறுவது  ஆத்துமாவுக்கு  இனிது;  தீமையை  விட்டு  விலகுவது  மூடருக்கு  அருவருப்பு.  (நீதிமொழிகள்  13:19)

vaagnchai  ni’raivea’ruvathu  aaththumaavukku  inithu;  theemaiyai  vittu  vilaguvathu  moodarukku  aruvaruppu.  (neethimozhiga’l  13:19)

ஞானிகளோடே  சஞ்சரிக்கிறவன்  ஞானமடைவான்;  மூடருக்குத்  தோழனோ  நாசமடைவான்.  (நீதிமொழிகள்  13:20)

gnaaniga'loadea  sagncharikki’ravan  gnaanamadaivaan;  moodarukkuth  thoazhanoa  naasamadaivaan.  (neethimozhiga’l  13:20)

பாவிகளைத்  தீவினை  தொடரும்;  நீதிமான்களுக்கோ  நன்மை  பலனாக  வரும்.  (நீதிமொழிகள்  13:21)

paaviga'laith  theevinai  thodarum;  neethimaanga'lukkoa  nanmai  palanaaga  varum.  (neethimozhiga’l  13:21)

நல்லவன்  தன்  பிள்ளைகளின்  பிள்ளைகளுக்குச்  சுதந்தரம்  வைத்துப்போகிறான்;  பாவியின்  ஆஸ்தியோ  நீதிமானுக்காகச்  சேர்த்துவைக்கப்படும்.  (நீதிமொழிகள்  13:22)

nallavan  than  pi'l'laiga'lin  pi'l'laiga'lukkuch  suthantharam  vaiththuppoagi’raan;  paaviyin  aasthiyoa  neethimaanukkaagach  searththuvaikkappadum.  (neethimozhiga’l  13:22)

ஏழைகளின்  வயல்  மிகுதியான  ஆகாரத்தை  விளைவிக்கும்;  நியாயம்  கிடையாமல்  கெட்டுப்போகிறவர்களும்  உண்டு.  (நீதிமொழிகள்  13:23)

eazhaiga'lin  vayal  miguthiyaana  aagaaraththai  vi'laivikkum;  niyaayam  kidaiyaamal  kettuppoagi’ravarga'lum  u'ndu.  (neethimozhiga’l  13:23)

பிரம்பைக்  கையாடாதவன்  தன்  மகனைப்  பகைக்கிறான்;  அவன்மேல்  அன்பாயிருக்கிறவனோ  அவனை  ஏற்கனவே  தண்டிக்கிறான்.  (நீதிமொழிகள்  13:24)

pirambaik  kaiyaadaathavan  than  maganaip  pagaikki’raan;  avanmeal  anbaayirukki’ravanoa  avanai  ea’rkanavea  tha'ndikki’raan.  (neethimozhiga’l  13:24)

நீதிமான்  தனக்குத்  திருப்தியாகப்  புசிக்கிறான்;  துன்மார்க்கருடைய  வயிறோ  பசித்திருக்கும்.  (நீதிமொழிகள்  13:25)

neethimaan  thanakkuth  thirupthiyaagap  pusikki’raan;  thunmaarkkarudaiya  vayi’roa  pasiththirukkum.  (neethimozhiga’l  13:25)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!