Saturday, July 02, 2016

Neethimozhiga'l 12 | நீதிமொழிகள் 12 | Proverbs 12

புத்திமதிகளை  விரும்புகிறவன்  அறிவை  விரும்புகிறான்;  கடிந்துகொள்ளுதலை  வெறுக்கிறவனோ  மிருககுணமுள்ளவன்.  (நீதிமொழிகள்  12:1)

buththimathiga'lai  virumbugi’ravan  a’rivai  virumbugi’raan;  kadinthuko'l'luthalai  ve’rukki’ravanoa  mirugaku'namu'l'lavan.  (neethimozhiga’l  12:1)

நல்லவன்  கர்த்தரிடத்தில்  தயைபெறுவான்;  துர்ச்சிந்தனைகளுள்ள  மனுஷனை  அவர்  ஆக்கினைக்குட்படுத்துவார்.  (நீதிமொழிகள்  12:2)

nallavan  karththaridaththil  thayaipe’ruvaan;  thurchsinthanaiga'lu'l'la  manushanai  avar  aakkinaikkudpaduththuvaar.  (neethimozhiga’l  12:2)

துன்மார்க்கத்தினால்  மனுஷன்  நிலைவரப்படான்;  நீதிமான்களுடைய  வேரோ  அசையாது.  (நீதிமொழிகள்  12:3)

thunmaarkkaththinaal  manushan  nilaivarappadaan;  neethimaanga'ludaiya  vearoa  asaiyaathu.  (neethimozhiga’l  12:3)

குணசாலியான  ஸ்திரீ  தன்  புருஷனுக்குக்  கிரீடமாயிருக்கிறாள்;  இலச்சை  உண்டுபண்ணுகிறவளோ  அவனுக்கு  எலும்புருக்கியாயிருக்கிறாள்.  (நீதிமொழிகள்  12:4)

ku'nasaaliyaana  sthiree  than  purushanukkuk  kireedamaayirukki’raa'l;  ilachchai  u'ndupa'n'nugi’rava'loa  avanukku  elumburukkiyaayirukki’raa'l.  (neethimozhiga’l  12:4)

நீதிமான்களுடைய  நினைவுகள்  நியாயமானவைகள்;  துன்மார்க்கருடைய  ஆலோசனைகளோ  சூதானவைகள்.  (நீதிமொழிகள்  12:5)

neethimaanga'ludaiya  ninaivuga'l  niyaayamaanavaiga'l;  thunmaarkkarudaiya  aaloasanaiga'loa  soothaanavaiga'l.  (neethimozhiga’l  12:5)

துன்மார்க்கரின்  வார்த்தைகள்  இரத்தஞ்சிந்தப்  பதிவிருப்பதைப்பற்றியது;  உத்தமர்களுடைய  வாயோ  அவர்களைத்  தப்புவிக்கும்.  (நீதிமொழிகள்  12:6)

thunmaarkkarin  vaarththaiga'l  iraththagnsinthap  pathiviruppathaippat’riyathu;  uththamarga'ludaiya  vaayoa  avarga'laith  thappuvikkum.  (neethimozhiga’l  12:6)

துன்மார்க்கர்  கவிழ்க்கப்பட்டு  ஒழிந்துபோவார்கள்;  நீதிமான்களுடைய  வீடோ  நிலைநிற்கும்.  (நீதிமொழிகள்  12:7)

thunmaarkkar  kavizhkkappattu  ozhinthupoavaarga'l;  neethimaanga'ludaiya  veedoa  nilaini’rkum.  (neethimozhiga’l  12:7)

தன்  புத்திக்குக்தக்கதாக  மனுஷன்  புகழப்படுவான்;  மாறுபாடான  இருதயமுள்ளவனோ  இகழப்படுவான்.  (நீதிமொழிகள்  12:8)

than  buththikkukthakkathaaga  manushan  pugazhappaduvaan;  maa’rupaadaana  iruthayamu'l'lavanoa  igazhappaduvaan.  (neethimozhiga’l  12:8)

ஆகாரமில்லாதவனாயிருந்தும்,  தன்னைத்தான்  கனம்பண்ணிக்கொள்ளுகிறவனைப்பார்க்கிலும்,  கனமற்றவனாயிருந்தும்  பணிவிடைக்காரனுள்ளவன்  உத்தமன்.  (நீதிமொழிகள்  12:9)

aagaaramillaathavanaayirunthum,  thannaiththaan  kanampa'n'nikko'l'lugi’ravanaippaarkkilum,  kanamat’ravanaayirunthum  pa'nividaikkaaranu'l'lavan  uththaman.  (neethimozhiga’l  12:9)

நீதிமான்  தன்  மிருகஜீவனைக்  காப்பாற்றுகிறான்;  துன்மார்க்கருடைய  இரக்கமும்  கொடுமையே.  (நீதிமொழிகள்  12:10)

neethimaan  than  mirugajeevanaik  kaappaat’rugi’raan;  thunmaarkkarudaiya  irakkamum  kodumaiyea.  (neethimozhiga’l  12:10)

தன்  நிலத்தைப்  பயிரிடுகிறவன்  ஆகாரத்தினால்  திருப்தியடைவான்;  வீணரைப்  பின்பற்றுகிறவனோ  மதியற்றவன்.  (நீதிமொழிகள்  12:11)

than  nilaththaip  payiridugi’ravan  aagaaraththinaal  thirupthiyadaivaan;  vee'naraip  pinpat’rugi’ravanoa  mathiyat’ravan.  (neethimozhiga’l  12:11)

துன்மார்க்கன்  துஷ்டருடைய  வலையை  விரும்புகிறான்;  நீதிமானுடைய  வேர்  கனி  கொடுக்கும்.  (நீதிமொழிகள்  12:12)

thunmaarkkan  thushdarudaiya  valaiyai  virumbugi’raan;  neethimaanudaiya  vear  kani  kodukkum.  (neethimozhiga’l  12:12)

துன்மார்க்கனுக்கு  அவன்  உதடுகளின்  துரோகமே  கண்ணி;  நீதிமானோ  நெருக்கத்தினின்று  நீங்குவான்.  (நீதிமொழிகள்  12:13)

thunmaarkkanukku  avan  uthaduga'lin  thuroagamea  ka'n'ni;  neethimaanoa  nerukkaththinin’ru  neengguvaan.  (neethimozhiga’l  12:13)

அவனவன்  தன்  தன்  வாயின்  பலனால்  திருப்தியடைவான்;  அவனவன்  கைக்கிரியையின்  பலனுக்குத்தக்கதாக  அவனவனுக்குக்  கிடைக்கும்.  (நீதிமொழிகள்  12:14)

avanavan  than  than  vaayin  palanaal  thirupthiyadaivaan;  avanavan  kaikkiriyaiyin  palanukkuththakkathaaga  avanavanukkuk  kidaikkum.  (neethimozhiga’l  12:14)

மதியீனனுடைய  வழி  அவன்  பார்வைக்குச்  செம்மையாயிருக்கும்;  ஆலோசனைக்குச்  செவிகொடுக்கிறவனோ  ஞானமுள்ளவன்.  (நீதிமொழிகள்  12:15)

mathiyeenanudaiya  vazhi  avan  paarvaikkuch  semmaiyaayirukkum;  aaloasanaikkuch  sevikodukki’ravanoa  gnaanamu'l'lavan.  (neethimozhiga’l  12:15)

மூடனுடைய  கோபம்  சீக்கிரத்தில்  வெளிப்படும்;  இலச்சையை  மூடுகிறவனோ  விவேகி.  (நீதிமொழிகள்  12:16)

moodanudaiya  koabam  seekkiraththil  ve'lippadum;  ilachchaiyai  moodugi’ravanoa  viveagi.  (neethimozhiga’l  12:16)

சத்தியவாசகன்  நீதியை  வெளிப்படுத்துவான்;  பொய்ச்சாட்சிக்காரனோ  வஞ்சகத்தை  வெளிப்படுத்துவான்.  (நீதிமொழிகள்  12:17)

saththiyavaasagan  neethiyai  ve'lippaduththuvaan;  poychsaadchikkaaranoa  vagnchagaththai  ve'lippaduththuvaan.  (neethimozhiga’l  12:17)

பட்டயக்குத்துகள்போல்  பேசுகிறவர்களும்  உண்டு;  ஞானமுள்ளவர்களுடைய  நாவோ  ஔஷதம்.  (நீதிமொழிகள்  12:18)

pattayakkuththuga'lpoal  peasugi’ravarga'lum  u'ndu;  gnaanamu'l'lavarga'ludaiya  naavoa  aushatham.  (neethimozhiga’l  12:18)

சத்திய  உதடு  என்றும்  நிலைத்திருக்கும்;  பொய்நாவோ  ஒரு  நிமிஷமாத்திரம்  இருக்கும்.  (நீதிமொழிகள்  12:19)

saththiya  uthadu  en’rum  nilaiththirukkum;  poynaavoa  oru  nimishamaaththiram  irukkum.  (neethimozhiga’l  12:19)

தீங்கைப்  பிணைக்கிறவர்களின்  இருதயத்தில்  இருக்கிறது  கபடம்;  சமாதானம்பண்ணுகிற  ஆலோசனைக்காரருக்கு  உள்ளது  சந்தோஷம்.  (நீதிமொழிகள்  12:20)

theenggaip  pi'naikki’ravarga'lin  iruthayaththil  irukki’rathu  kabadam;  samaathaanampa'n'nugi’ra  aaloasanaikkaararukku  u'l'lathu  santhoasham.  (neethimozhiga’l  12:20)

நீதிமானுக்கு  ஒரு  கேடும்  வராது;  துன்மார்க்கரோ  தீமையினால்  நிறையப்படுவார்கள்.  (நீதிமொழிகள்  12:21)

neethimaanukku  oru  keadum  varaathu;  thunmaarkkaroa  theemaiyinaal  ni’raiyappaduvaarga'l.  (neethimozhiga’l  12:21)

பொய்  உதடுகள்  கர்த்தருக்கு  அருவருப்பானவைகள்;  உண்மையாய்  நடக்கிறவர்களோ  அவருக்குப்  பிரியம்.  (நீதிமொழிகள்  12:22)

poy  uthaduga'l  karththarukku  aruvaruppaanavaiga'l;  u'nmaiyaay  nadakki’ravarga'loa  avarukkup  piriyam.  (neethimozhiga’l  12:22)

விவேகமுள்ள  மனுஷன்  அறிவை  அடக்கிவைக்கிறான்;  மூடருடைய  இருதயமோ  மதியீனத்தைப்  பிரசித்தப்படுத்தும்.  (நீதிமொழிகள்  12:23)

viveagamu'l'la  manushan  a’rivai  adakkivaikki’raan;  moodarudaiya  iruthayamoa  mathiyeenaththaip  pirasiththappaduththum.  (neethimozhiga’l  12:23)

ஜாக்கிரதையுள்ளவர்களுடைய  கை  ஆளுகைசெய்யும்;  சோம்பேறியோ  பகுதிகட்டுவான்.  (நீதிமொழிகள்  12:24)

jaakkirathaiyu'l'lavarga'ludaiya  kai  aa'lugaiseyyum;  soambea’riyoa  paguthikattuvaan.  (neethimozhiga’l  12:24)

மனுஷனுடைய  இருதயத்திலுள்ள  கவலை  அதை  ஒடுக்கும்;  நல்வார்த்தையோ  அதை  மகிழ்ச்சியாக்கும்.  (நீதிமொழிகள்  12:25)

manushanudaiya  iruthayaththilu'l'la  kavalai  athai  odukkum;  nalvaarththaiyoa  athai  magizhchchiyaakkum.  (neethimozhiga’l  12:25)

நீதிமான்  தன்  அயலானைப்பார்க்கிலும்  மேன்மையுள்ளவன்;  துன்மார்க்கருடைய  வழியோ  அவர்களை  மோசப்படுத்தும்.  (நீதிமொழிகள்  12:26)

neethimaan  than  ayalaanaippaarkkilum  meanmaiyu'l'lavan;  thunmaarkkarudaiya  vazhiyoa  avarga'lai  moasappaduththum.  (neethimozhiga’l  12:26)

சோம்பேறி  தான்  வேட்டையாடிப்  பிடித்ததைச்  சமைப்பதில்லை;  ஜாக்கிரதையுள்ளவனுடைய  பொருளோ  அருமையானது.  (நீதிமொழிகள்  12:27)

soambea’ri  thaan  veattaiyaadip  pidiththathaich  samaippathillai;  jaakkirathaiyu'l'lavanudaiya  poru'loa  arumaiyaanathu.  (neethimozhiga’l  12:27)

நீதியின்  பாதையில்  ஜீவன்  உண்டு;  அந்தப்  பாதையில்  மரணம்  இல்லை.  (நீதிமொழிகள்  12:28)

neethiyin  paathaiyil  jeevan  u'ndu;  anthap  paathaiyil  mara'nam  illai.  (neethimozhiga’l  12:28)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!