Saturday, July 02, 2016

Neethimozhiga'l 11 | நீதிமொழிகள் 11 | Proverbs 11

கள்ளத்தராசு  கர்த்தருக்கு  அருவருப்பானது;  சுமுத்திரையான  நிறைகல்லோ  அவருக்குப்  பிரியம்.  (நீதிமொழிகள்  11:1)

ka'l'laththaraasu  karththarukku  aruvaruppaanathu;  sumuththiraiyaana  ni’raikalloa  avarukkup  piriyam.  (neethimozhiga’l  11:1)

அகந்தை  வந்தால்  இலச்சையும்  வரும்;  தாழ்ந்த  சிந்தையுள்ளவர்களிடத்தில்  ஞானம்  உண்டு.  (நீதிமொழிகள்  11:2)

aganthai  vanthaal  ilachchaiyum  varum;  thaazhntha  sinthaiyu'l'lavarga'lidaththil  gnaanam  u'ndu.  (neethimozhiga’l  11:2)

செம்மையானவர்களுடைய  உத்தமம்  அவர்களை  நடத்தும்;  துரோகிகளின்  மாறுபாடோ  அவர்களைப்  பாழாக்கும்.  (நீதிமொழிகள்  11:3)

semmaiyaanavarga'ludaiya  uththamam  avarga'lai  nadaththum;  thuroagiga'lin  maa’rupaadoa  avarga'laip  paazhaakkum.  (neethimozhiga’l  11:3)

கோபாக்கினைநாளில்  ஐசுவரியம்  உதவாது;  நீதியோ  மரணத்துக்குத்  தப்புவிக்கும்.  (நீதிமொழிகள்  11:4)

koabaakkinainaa'lil  aisuvariyam  uthavaathu;  neethiyoa  mara'naththukkuth  thappuvikkum.  (neethimozhiga’l  11:4)

உத்தமனுடைய  நீதி  அவன்  வழியைச்  செம்மைப்படுத்தும்;  துன்மார்க்கனோ  தன்  துன்மார்க்கத்தினால்  விழுவான்.  (நீதிமொழிகள்  11:5)

uththamanudaiya  neethi  avan  vazhiyaich  semmaippaduththum;  thunmaarkkanoa  than  thunmaarkkaththinaal  vizhuvaan.  (neethimozhiga’l  11:5)

செம்மையானவர்களுடைய  நீதி  அவர்களைத்  தப்புவிக்கும்;  துரோகிகளோ  தங்கள்  தீவினையிலே  பிடிபடுவார்கள்.  (நீதிமொழிகள்  11:6)

semmaiyaanavarga'ludaiya  neethi  avarga'laith  thappuvikkum;  thuroagiga'loa  thangga'l  theevinaiyilea  pidipaduvaarga'l.  (neethimozhiga’l  11:6)

துன்மார்க்கன்  மரிக்கும்போது  அவன்  நம்பிக்கை  அழியும்;  அக்கிரமக்காரரின்  அபேட்சை  கெட்டுப்போம்.  (நீதிமொழிகள்  11:7)

thunmaarkkan  marikkumpoathu  avan  nambikkai  azhiyum;  akkiramakkaararin  abeadchai  kettuppoam.  (neethimozhiga’l  11:7)

நீதிமான்  இக்கட்டினின்று  விடுவிக்கப்படுவான்;  அவன்  இருந்த  இடத்திலே  துன்மார்க்கன்  வருவான்.  (நீதிமொழிகள்  11:8)

neethimaan  ikkattinin’ru  viduvikkappaduvaan;  avan  iruntha  idaththilea  thunmaarkkan  varuvaan.  (neethimozhiga’l  11:8)

மாயக்காரன்  தனக்கு  அடுத்தவனை  வாயினால்  கெடுக்கிறான்;  நீதிமானோ  அறிவினால்  தப்புகிறான்.  (நீதிமொழிகள்  11:9)

maayakkaaran  thanakku  aduththavanai  vaayinaal  kedukki’raan;  neethimaanoa  a’rivinaal  thappugi’raan.  (neethimozhiga’l  11:9)

நீதிமான்கள்  நன்றாயிருந்தால்  பட்டணம்  களிகூரும்;  துன்மார்க்கர்  அழிந்தால்  கெம்பீரம்  உண்டாகும்.  (நீதிமொழிகள்  11:10)

neethimaanga'l  nan’raayirunthaal  patta'nam  ka'likoorum;  thunmaarkkar  azhinthaal  kembeeram  u'ndaagum.  (neethimozhiga’l  11:10)

செம்மையானவர்களுடைய  ஆசீர்வாதத்தினால்  பட்டணம்  நிலைபெற்றோங்கும்;  துன்மார்க்கருடைய  வாயினால்  அது  இடிந்துவிழும்.  (நீதிமொழிகள்  11:11)

semmaiyaanavarga'ludaiya  aaseervaathaththinaal  patta'nam  nilaipet’roanggum;  thunmaarkkarudaiya  vaayinaal  athu  idinthuvizhum.  (neethimozhiga’l  11:11)

மதிகெட்டவன்  பிறனை  அவமதிக்கிறான்;  புத்திமானோ  தன்  வாயை  அடக்கிக்கொண்டிருக்கிறான்.  (நீதிமொழிகள்  11:12)

mathikettavan  pi’ranai  avamathikki’raan;  buththimaanoa  than  vaayai  adakkikko'ndirukki’raan.  (neethimozhiga’l  11:12)

புறங்கூறித்  திரிகிறவன்  இரகசியத்தை  வெளிப்படுத்துகிறான்;  ஆவியில்  உண்மையுள்ளவனோ  காரியத்தை  அடக்குகிறான்.  (நீதிமொழிகள்  11:13)

pu’rangkoo’rith  thirigi’ravan  iragasiyaththai  ve'lippaduththugi’raan;  aaviyil  u'nmaiyu'l'lavanoa  kaariyaththai  adakkugi’raan.  (neethimozhiga’l  11:13)

ஆலோசனையில்லாத  இடத்தில்  ஜனங்கள்  விழுந்துபோவார்கள்;  அநேக  ஆலோசனைக்காரர்  உண்டானால்  சுகம்  உண்டாகும்.  (நீதிமொழிகள்  11:14)

aaloasanaiyillaatha  idaththil  janangga'l  vizhunthupoavaarga'l;  aneaga  aaloasanaikkaarar  u'ndaanaal  sugam  u'ndaagum.  (neethimozhiga’l  11:14)

அந்நியனுக்காகப்  பிணைப்படுகிறவன்  வெகு  பாடுபடுவான்;  பிணைப்படுவதை  வெறுப்பவன்  சுகமாயிருப்பான்.  (நீதிமொழிகள்  11:15)

anniyanukkaagap  pi'naippadugi’ravan  vegu  paadupaduvaan;  pi'naippaduvathai  ve’ruppavan  sugamaayiruppaan.  (neethimozhiga’l  11:15)

நல்லொழுக்கமுள்ள  ஸ்திரீ  மானத்தைக்  காப்பாள்;  பராக்கிரமசாலிகள்  ஐசுவரியத்தைக்  காப்பார்கள்.  (நீதிமொழிகள்  11:16)

nallozhukkamu'l'la  sthiree  maanaththaik  kaappaa'l;  baraakkiramasaaliga'l  aisuvariyaththaik  kaappaarga'l.  (neethimozhiga’l  11:16)

தயையுள்ள  மனுஷன்  தன்  ஆத்துமாவுக்கு  நன்மைசெய்துகொள்ளுகிறான்;  கடூரனோ  தன்  உடலை  அலைக்கழிக்கிறான்.  (நீதிமொழிகள்  11:17)

thayaiyu'l'la  manushan  than  aaththumaavukku  nanmaiseythuko'l'lugi’raan;  kadooranoa  than  udalai  alaikkazhikki’raan.  (neethimozhiga’l  11:17)

துன்மார்க்கன்  விருதாவேலையைச்  செய்கிறான்;  நீதியை  விதைக்கிறவனோ  மெய்ப்பலனைப்  பெறுவான்.  (நீதிமொழிகள்  11:18)

thunmaarkkan  viruthaavealaiyaich  seygi’raan;  neethiyai  vithaikki’ravanoa  meyppalanaip  pe’ruvaan.  (neethimozhiga’l  11:18)

நீதி  ஜீவனுக்கு  ஏதுவாகிறதுபோல்,  தீமையைப்  பின்தொடருகிறவன்  மரணத்துக்கு  ஏதுவாகிறான்.  (நீதிமொழிகள்  11:19)

neethi  jeevanukku  eathuvaagi’rathupoal,  theemaiyaip  pinthodarugi’ravan  mara'naththukku  eathuvaagi’raan.  (neethimozhiga’l  11:19)

மாறுபாடுள்ள  இருதயமுடையவர்கள்  கர்த்தருக்கு  அருவருப்பானவர்கள்;  உத்தம  மார்க்கத்தாரோ  அவருக்குப்  பிரியமானவர்கள்.  (நீதிமொழிகள்  11:20)

maa’rupaadu'l'la  iruthayamudaiyavarga'l  karththarukku  aruvaruppaanavarga'l;  uththama  maarkkaththaaroa  avarukkup  piriyamaanavarga'l.  (neethimozhiga’l  11:20)

கையோடே  கைகோர்த்தாலும்,  துஷ்டன்  தண்டனைக்குத்  தப்பான்;  நீதிமான்களுடைய  சந்ததியோ  விடுவிக்கப்படும்.  (நீதிமொழிகள்  11:21)

kaiyoadea  kaikoarththaalum,  thushdan  tha'ndanaikkuth  thappaan;  neethimaanga'ludaiya  santhathiyoa  viduvikkappadum.  (neethimozhiga’l  11:21)

மதிகேடாய்  நடக்கிற  அழகுள்ள  ஸ்திரீ,  பன்றியின்  மூக்கிலுள்ள  பொன்மூக்குத்திக்குச்  சமானம்.  (நீதிமொழிகள்  11:22)

mathikeadaay  nadakki’ra  azhagu'l'la  sthiree,  pan’riyin  mookkilu'l'la  ponmookkuththikkuch  samaanam.  (neethimozhiga’l  11:22)

நீதிமான்களுடைய  ஆசை  நன்மையே;  துன்மார்க்கருடைய  நம்பிக்கையோ  கோபாக்கினையாய்  முடியும்.  (நீதிமொழிகள்  11:23)

neethimaanga'ludaiya  aasai  nanmaiyea;  thunmaarkkarudaiya  nambikkaiyoa  koabaakkinaiyaay  mudiyum.  (neethimozhiga’l  11:23)

வாரியிறைத்தும்  விருத்தியடைவாரும்  உண்டு;  அதிகமாய்ப்  பிசினித்தனம்பண்ணியும்  வறுமையடைவாரும்  உண்டு.  (நீதிமொழிகள்  11:24)

vaariyi’raiththum  viruththiyadaivaarum  u'ndu;  athigamaayp  pisiniththanampa'n'niyum  va’rumaiyadaivaarum  u'ndu.  (neethimozhiga’l  11:24)

உதாரகுணமுள்ள  ஆத்துமா  செழிக்கும்;  எவன்  தண்ணீர்  பாய்ச்சுகிறானோ  அவனுக்குத்  தண்ணீர்  பாய்ச்சப்படும்.  (நீதிமொழிகள்  11:25)

uthaaraku'namu'l'la  aaththumaa  sezhikkum;  evan  tha'n'neer  paaychchugi’raanoa  avanukkuth  tha'n'neer  paaychchappadum.  (neethimozhiga’l  11:25)

தானியத்தைக்  கட்டிவைக்கிறவனை  ஜனங்கள்  சபிப்பார்கள்;  விற்கிறவனுடைய  தலையின்மேல்  ஆசீர்வாதம்  தங்கும்.  (நீதிமொழிகள்  11:26)

thaaniyaththaik  kattivaikki’ravanai  janangga'l  sabippaarga'l;  vi’rki’ravanudaiya  thalaiyinmeal  aaseervaatham  thanggum.  (neethimozhiga’l  11:26)

நன்மையை  ஜாக்கிரதையுடன்  தேடுகிறவன்  தயையைப்  பெறுவான்;  தீமையைத்  தேடுகிறவனுக்கோ  தீமையே  வரும்.  (நீதிமொழிகள்  11:27)

nanmaiyai  jaakkirathaiyudan  theadugi’ravan  thayaiyaip  pe’ruvaan;  theemaiyaith  theadugi’ravanukkoa  theemaiyea  varum.  (neethimozhiga’l  11:27)

தன்  ஐசுவரியத்தை  நம்புகிறவன்  விழுவான்;  நீதிமான்களோ  துளிரைப்போலே  தழைப்பார்கள்.  (நீதிமொழிகள்  11:28)

than  aisuvariyaththai  nambugi’ravan  vizhuvaan;  neethimaanga'loa  thu'liraippoalea  thazhaippaarga'l.  (neethimozhiga’l  11:28)

தன்  வீட்டைக்  கலைக்கிறவன்  காற்றைச்  சுதந்தரிப்பான்;  மூடன்  ஞானமுள்ளவனுக்கு  அடிமையாவான்.  (நீதிமொழிகள்  11:29)

than  veettaik  kalaikki’ravan  kaat’raich  suthantharippaan;  moodan  gnaanamu'l'lavanukku  adimaiyaavaan.  (neethimozhiga’l  11:29)

நீதிமானுடைய  பலன்  ஜீவவிருட்சம்;  ஆத்துமாக்களை  ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன்  ஞானமுள்ளவன்.  (நீதிமொழிகள்  11:30)

neethimaanudaiya  palan  jeevavirudcham;  aaththumaakka'lai  aathaayappaduththikko'l'lugi’ravan  gnaanamu'l'lavan.  (neethimozhiga’l  11:30)

இதோ,  நீதிமானுக்கு  பூமியில்  சரிக்கட்டப்படுமே;  துன்மார்க்கனுக்கும்  பாவிக்கும்  எத்தனை  அதிகம்.  (நீதிமொழிகள்  11:31)

ithoa,  neethimaanukku  boomiyil  sarikkattappadumea;  thunmaarkkanukkum  paavikkum  eththanai  athigam.  (neethimozhiga’l  11:31)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!