Sunday, July 10, 2016

Naagoom 1 | நாகூம் 1 | Nahum 1

நினிவேயின்  பாரம்.  எல்கோசானாகிய  நாகூமின்  தரிசனப்  புஸ்தகம்.  (நாகூம்  1:1)

niniveayin  baaram.  elkoasaanaagiya  naagoomin  tharisanap  pusthagam.  (naagoom  1:1)

கர்த்தர்  எரிச்சலுள்ளவரும்  நீதியைச்  சரிக்கட்டுகிறவருமான  தேவன்;  கர்த்தர்  நீதியைச்  சரிக்கட்டுகிறவர்,  உக்கிரகோபமுள்ளவர்;  கர்த்தர்  தம்முடைய  சத்துருக்களுக்குப்  பிரதிபலன்  அளிக்கிறவர்,  அவர்  தம்முடைய  பகைஞருக்காகக்  கோபத்தை  வைத்துவைக்கிறவர்.  (நாகூம்  1:2)

karththar  erichchalu'l'lavarum  neethiyaich  sarikkattugi’ravarumaana  theavan;  karththar  neethiyaich  sarikkattugi’ravar,  ukkirakoabamu'l'lavar;  karththar  thammudaiya  saththurukka'lukkup  pirathipalan  a'likki’ravar,  avar  thammudaiya  pagaignarukkaagak  koabaththai  vaiththuvaikki’ravar.  (naagoom  1:2)

கர்த்தர்  நீடிய  சாந்தமும்,  மிகுந்த  வல்லமையுமுள்ளவர்;  அவர்களை  ஆக்கினையில்லாமல்  தப்புவிக்கமாட்டார்;  கர்த்தருடைய  வழி  சுழல்காற்றிலும்  பெருங்காற்றிலும்  இருக்கிறது;  மேகங்கள்  அவருடைய  பாதத்தூளாயிருக்கிறது.  (நாகூம்  1:3)

karththar  neediya  saanthamum,  miguntha  vallamaiyumu'l'lavar;  avarga'lai  aakkinaiyillaamal  thappuvikkamaattaar;  karththarudaiya  vazhi  suzhalkaat’rilum  perungkaat’rilum  irukki’rathu;  meagangga'l  avarudaiya  paathaththoo'laayirukki’rathu.  (naagoom  1:3)

அவர்  சமுத்திரத்தை  அதட்டி,  அதை  வற்றிப்போகப்பண்ணி,  சகல  ஆறுகளையும்  வறட்சியாக்குகிறார்;  பாசானும்  கர்மேலும்  சோர்ந்து,  லீபனோனின்  செழிப்பு  வாடிப்போகும்.  (நாகூம்  1:4)

avar  samuththiraththai  athatti,  athai  vat’rippoagappa'n'ni,  sagala  aa’ruga'laiyum  va’radchiyaakkugi’raar;  baasaanum  karmealum  soarnthu,  leebanoanin  sezhippu  vaadippoagum.  (naagoom  1:4)

அவர்  சமுகத்தில்  பர்வதங்கள்  அதிர்ந்து  மலைகள்  கரைந்துபோகும்;  அவர்  பிரசன்னத்தினால்  பூமியும்  பூச்சக்கரமும்  அதில்  குடியிருக்கிற  அனைவரோடும்  எடுபட்டுப்போம்.  (நாகூம்  1:5)

avar  samugaththil  parvathangga'l  athirnthu  malaiga'l  karainthupoagum;  avar  pirasannaththinaal  boomiyum  poochchakkaramum  athil  kudiyirukki’ra  anaivaroadum  edupattuppoam.  (naagoom  1:5)

அவருடைய  கோபத்துக்கு  முன்பாக  நிற்பவன்  யார்?  அவருடைய  உக்கிரகோபத்திலே  தரிப்பவன்  யார்?  அவருடைய  எரிச்சல்  அக்கினியைப்போல  இறைக்கப்படுகிறது;  அவராலே  கன்மலைகள்  பேர்க்கப்படும்.  (நாகூம்  1:6)

avarudaiya  koabaththukku  munbaaga  ni’rpavan  yaar?  avarudaiya  ukkirakoabaththilea  tharippavan  yaar?  avarudaiya  erichchal  akkiniyaippoala  i’raikkappadugi’rathu;  avaraalea  kanmalaiga'l  pearkkappadum.  (naagoom  1:6)

கர்த்தர்  நல்லவர்,  இக்கட்டுநாளிலே  அரணான  கோட்டை;  தம்மை  நம்புகிறவர்களை  அறிந்திருக்கிறார்.  (நாகூம்  1:7)

karththar  nallavar,  ikkattunaa'lilea  ara'naana  koattai;  thammai  nambugi’ravarga'lai  a’rinthirukki’raar.  (naagoom  1:7)

ஆனாலும்  நினிவேயின்  ஸ்தானத்தை,  புரண்டுவருகிற  வெள்ளத்தினால்  சர்வசங்காரம்பண்ணுவார்;  இருள்  அவர்  சத்துருக்களைப்  பின்தொடரும்.  (நாகூம்  1:8)

aanaalum  niniveayin  sthaanaththai,  pura'nduvarugi’ra  ve'l'laththinaal  sarvasanggaarampa'n'nuvaar;  iru'l  avar  saththurukka'laip  pinthodarum.  (naagoom  1:8)

நீங்கள்  கர்த்தருக்கு  விரோதமாகச்  செய்ய  நினைக்கிறதென்ன?  அவர்  சர்வசங்காரம்பண்ணுவார்;  இடுக்கம்  மறுபடியும்  உண்டாகாது.  (நாகூம்  1:9)

neengga'l  karththarukku  viroathamaagach  seyya  ninaikki’rathenna?  avar  sarvasanggaarampa'n'nuvaar;  idukkam  ma’rupadiyum  u'ndaagaathu.  (naagoom  1:9)

அவர்கள்  சன்னபின்னலாயிருக்கிற  முட்செடிகளுக்கு  ஒப்பாயிருக்கையிலும்,  தங்கள்  மதுபானத்தினால்  வெறிகொண்டிருக்கையிலும்,  அவர்கள்  முழுதும்  காய்ந்துபோன  செத்தையைப்போல  எரிந்துபோவார்கள்.  (நாகூம்  1:10)

avarga'l  sannapinnalaayirukki’ra  mudchediga'lukku  oppaayirukkaiyilum,  thangga'l  mathubaanaththinaal  ve’riko'ndirukkaiyilum,  avarga'l  muzhuthum  kaaynthupoana  seththaiyaippoala  erinthupoavaarga'l.  (naagoom  1:10)

கர்த்தருக்கு  விரோதமாகப்  பொல்லாத  நினைவுகொண்டிருக்கிற  துராலோசனைக்காரன்  ஒருவன்  உன்னிடத்திலிருந்து  புறப்பட்டான்.  (நாகூம்  1:11)

karththarukku  viroathamaagap  pollaatha  ninaivuko'ndirukki’ra  thuraaloasanaikkaaran  oruvan  unnidaththilirunthu  pu’rappattaan.  (naagoom  1:11)

கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  அவர்கள்  சம்பூரணமடைந்து  அநேகராயிருந்தாலும்  அறுப்புண்டுபோவார்கள்;  அவன்  ஒழிந்துபோவான்;  உன்னை  நான்  சிறுமைப்படுத்தினேன்,  இனி  உன்னைச்  சிறுமைப்படுத்தாதிருப்பேன்.  (நாகூம்  1:12)

karththar  sollugi’rathu  ennaven’raal:  avarga'l  sampoora'namadainthu  aneagaraayirunthaalum  a’ruppu'ndupoavaarga'l;  avan  ozhinthupoavaan;  unnai  naan  si’rumaippaduththinean,  ini  unnaich  si’rumaippaduththaathiruppean.  (naagoom  1:12)

இப்போதும்  நான்  உன்மேல்  இருக்கிற  அவன்  நுகத்தை  முறித்து,  உன்  கட்டுகளை  அறுப்பேன்.  (நாகூம்  1:13)

ippoathum  naan  unmeal  irukki’ra  avan  nugaththai  mu’riththu,  un  kattuga'lai  a’ruppean.  (naagoom  1:13)

உன்னைக்குறித்துக்  கர்த்தர்  கட்டளைகொடுத்திருக்கிறார்;  இனி  உன்  பேருக்கு  வித்துவிதைக்கப்படுவதில்லை;  உன்  தேவர்களின்  கோவிலில்  இருக்கிற  வெட்டப்பட்ட  விக்கிரகத்தையும்,  வார்க்கப்பட்ட  விக்கிரகத்தையும்  நான்  நிர்மூலம்பண்ணுவேன்;  நீ  கனவீனனானபடியால்  அதை  உனக்குப்  பிரேதக்குழியாக்குவேன்.  (நாகூம்  1:14)

unnaikku’riththuk  karththar  katta'laikoduththirukki’raar;  ini  un  pearukku  viththuvithaikkappaduvathillai;  un  theavarga'lin  koavilil  irukki’ra  vettappatta  vikkiragaththaiyum,  vaarkkappatta  vikkiragaththaiyum  naan  nirmoolampa'n'nuvean;  nee  kanaveenanaanapadiyaal  athai  unakkup  pireathakkuzhiyaakkuvean.  (naagoom  1:14)

இதோ,  சமாதானத்தைக்  கூறுகிற  சுவிசேஷகனுடைய  கால்கள்  மலைகளின்மேல்  வருகிறது;  யூதாவே,  உன்  பண்டிகைகளை  ஆசரி;  உன்  பொருத்தனைகளைச்  செலுத்து;  துஷ்டன்  இனி  உன்  வழியாய்க்  கடந்துவருவதில்லை,  அவன்  முழுவதும்  சங்கரிக்கப்பட்டான்.  (நாகூம்  1:15)

ithoa,  samaathaanaththaik  koo’rugi’ra  suviseashaganudaiya  kaalga'l  malaiga'linmeal  varugi’rathu;  yoothaavea,  un  pa'ndigaiga'lai  aasari;  un  poruththanaiga'laich  seluththu;  thushdan  ini  un  vazhiyaayk  kadanthuvaruvathillai,  avan  muzhuvathum  sanggarikkappattaan.  (naagoom  1:15)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!