Monday, July 11, 2016

Meegaa 5 | மீகா 5 | Micah 5

சேனைகளையுடைய  நகரமே,  இப்போது  தண்டுதண்டாகக்  கூடிக்கொள்;  நமக்கு  விரோதமாக  முற்றிக்கை  போடப்படும்;  இஸ்ரவேலுடைய  நியாயாதிபதியைக்  கோலினால்  கன்னத்திலே  அடிப்பார்கள்.  (மீகா  5:1)

seanaiga'laiyudaiya  nagaramea,  ippoathu  tha'ndutha'ndaagak  koodikko'l;  namakku  viroathamaaga  mut’rikkai  poadappadum;  isravealudaiya  niyaayaathibathiyaik  koalinaal  kannaththilea  adippaarga'l.  (meegaa  5:1)

எப்பிராத்தா  என்னப்பட்ட  பெத்லெகேமே,  நீ  யூதேயாவிலுள்ள  ஆயிரங்களுக்குள்ளே  சிறியதாயிருந்தும்,  இஸ்ரவேலை  ஆளப்போகிறவர்  உன்னிடத்திலிருந்து  புறப்பட்டு  என்னிடத்தில்  வருவார்;  அவருடைய  புறப்படுதல்  அநாதிநாட்களாகிய  பூர்வத்தினுடையது.  (மீகா  5:2)

eppiraaththaa  ennappatta  bethleheamea,  nee  yootheayaavilu'l'la  aayirangga'lukku'l'lea  si’riyathaayirunthum,  isravealai  aa'lappoagi’ravar  unnidaththilirunthu  pu’rappattu  ennidaththil  varuvaar;  avarudaiya  pu’rappaduthal  anaathinaadka'laagiya  poorvaththinudaiyathu.  (meegaa  5:2)

ஆனாலும்  பிரசவிக்கிறவள்  பிரசவிக்கிறமட்டும்  அவர்களை  ஒப்புக்கொடுப்பார்;  அப்பொழுது  அவருடைய  சகோதரரில்  மீதியானவர்கள்  இஸ்ரவேல்  புத்திரரோடுங்கூடத்  திரும்புவார்கள்.  (மீகா  5:3)

aanaalum  pirasavikki’rava'l  pirasavikki’ramattum  avarga'lai  oppukkoduppaar;  appozhuthu  avarudaiya  sagoathararil  meethiyaanavarga'l  israveal  puththiraroadungkoodath  thirumbuvaarga'l.  (meegaa  5:3)

அவர்  நின்றுகொண்டு,  கர்த்தருடைய  பலத்தோடும்  தம்முடைய  தேவனாகிய  கர்த்தருடைய  நாமத்தின்  மகத்துவத்தோடும்  மேய்ப்பார்;  ஆகையால்  அவர்கள்  நிலைத்திருப்பார்கள்;  அவர்  இனிப்  பூமியின்  எல்லைகள்பரியந்தமும்  மகிமைப்படுவார்.  (மீகா  5:4)

avar  nin’ruko'ndu,  karththarudaiya  balaththoadum  thammudaiya  theavanaagiya  karththarudaiya  naamaththin  magaththuvaththoadum  meayppaar;  aagaiyaal  avarga'l  nilaiththiruppaarga'l;  avar  inip  boomiyin  ellaiga'lpariyanthamum  magimaippaduvaar.  (meegaa  5:4)

இவரே  சமாதான  காரணர்;  அசீரியன்  நம்முடைய  தேசத்திலே  வரும்போதும்,  நம்முடைய  அரண்மனைகளை  மிதிக்கும்போதும்,  ஏழு  மேய்ப்பரையும்  மனுஷரில்  எட்டு  அதிபதிகளையும்  அவனுக்கு  விரோதமாக  நிறுத்துவேன்.  (மீகா  5:5)

ivarea  samaathaana  kaara'nar;  aseeriyan  nammudaiya  theasaththilea  varumpoathum,  nammudaiya  ara'nmanaiga'lai  mithikkumpoathum,  eazhu  meaypparaiyum  manusharil  ettu  athibathiga'laiyum  avanukku  viroathamaaga  ni’ruththuvean.  (meegaa  5:5)

இவர்கள்  அசீரியா  தேசத்தையும்,  நிம்ரோதின்  தேசத்தையும்,  அதினுடைய  வாசல்களுக்கு  உட்புறமாகப்  பட்டயத்திற்கு  இரையாக்குவார்கள்;  அசீரியன்  நம்முடைய  தேசத்தில்  வரும்போதும்,  நம்முடைய  எல்லைகளை  மிதிக்கும்போதும்  அவனுக்கு  நம்மைத்  தப்புவிப்பார்.  (மீகா  5:6)

ivarga'l  aseeriyaa  theasaththaiyum,  nimroathin  theasaththaiyum,  athinudaiya  vaasalga'lukku  udpu’ramaagap  pattayaththi’rku  iraiyaakkuvaarga'l;  aseeriyan  nammudaiya  theasaththil  varumpoathum,  nammudaiya  ellaiga'lai  mithikkumpoathum  avanukku  nammaith  thappuvippaar.  (meegaa  5:6)

யாக்கோபிலே  மீதியானவர்கள்  கர்த்தராலே  வருகிற  பனியைப்போலவும்,  மனுஷனுக்குக்  காத்திராமலும்,  மனுபுத்திரருக்குத்  தாமதியாமலும்,  பூண்டுகள்மேல்  வருகிற  மழைகளைப்போலவும்,  அநேக  ஜனங்களின்  நடுவிலே  இருப்பார்கள்.  (மீகா  5:7)

yaakkoabilea  meethiyaanavarga'l  karththaraalea  varugi’ra  paniyaippoalavum,  manushanukkuk  kaaththiraamalum,  manupuththirarukkuth  thaamathiyaamalum,  poo'nduga'lmeal  varugi’ra  mazhaiga'laippoalavum,  aneaga  janangga'lin  naduvilea  iruppaarga'l.  (meegaa  5:7)

யாக்கோபிலே  மீதியானவர்கள்,  சிங்கம்  காட்டுமிருகங்களுக்குள்ளே  இருக்கிறதற்குச்  சமானமாகவும்,  கடந்துபோய்  மிதித்துத்  தப்புவிப்பார்  இல்லாமல்  பீறிப்போடுகிற  பாலசிங்கம்  ஆட்டுமந்தைகளுக்குள்ளே  இருக்கிறதற்குச்  சமானமாகவும்  ஜாதிகளுக்குள்  அநேக  ஜனங்களின்  நடுவிலே  இருப்பார்கள்.  (மீகா  5:8)

yaakkoabilea  meethiyaanavarga'l,  singgam  kaattumirugangga'lukku'l'lea  irukki’ratha’rkuch  samaanamaagavum,  kadanthupoay  mithiththuth  thappuvippaar  illaamal  pee’rippoadugi’ra  baalasinggam  aattumanthaiga'lukku'l'lea  irukki’ratha’rkuch  samaanamaagavum  jaathiga'lukku'l  aneaga  janangga'lin  naduvilea  iruppaarga'l.  (meegaa  5:8)

உன்னுடைய  கை  உன்  விரோதிகளின்மேல்  உயரும்;  உன்  சத்துருக்களெல்லாரும்  சங்கரிக்கப்படுவார்கள்.  (மீகா  5:9)

unnudaiya  kai  un  viroathiga'linmeal  uyarum;  un  saththurukka'lellaarum  sanggarikkappaduvaarga'l.  (meegaa  5:9)

அந்நாளிலே  நான்  உன்  குதிரைகளை  உன்  நடுவில்  இராதபடிக்குச்  சங்கரித்து,  உன்  இரதங்களை  அழித்து,  (மீகா  5:10)

annaa'lilea  naan  un  kuthiraiga'lai  un  naduvil  iraathapadikkuch  sanggariththu,  un  irathangga'lai  azhiththu,  (meegaa  5:10)

உன்  தேசத்துப்  பட்டணங்களைச்  சங்கரித்து,  உன்  அரண்களையெல்லாம்  நிர்மூலமாக்கி,  (மீகா  5:11)

un  theasaththup  patta'nangga'laich  sanggariththu,  un  ara'nga'laiyellaam  nirmoolamaakki,  (meegaa  5:11)

சூனிய  வித்தைகள்  உன்  கையில்  இராதபடிக்கு  அகற்றுவேன்;  நாள்  பார்க்கிறவர்கள்  உன்னிடத்தில்  இல்லாமற்போவார்கள்.  (மீகா  5:12)

sooniya  viththaiga'l  un  kaiyil  iraathapadikku  agat’ruvean;  naa'l  paarkki’ravarga'l  unnidaththil  illaama’rpoavaarga'l.  (meegaa  5:12)

உன்  சுரூபங்களையும்  உன்  சிலைகளையும்  உன்  நடுவில்  இராதபடிக்கு  நிர்மூலமாக்குவேன்;  உன்  கையின்  கிரியையை  நீ  இனிப்  பணிந்துகொள்ளாய்.  (மீகா  5:13)

un  suroobangga'laiyum  un  silaiga'laiyum  un  naduvil  iraathapadikku  nirmoolamaakkuvean;  un  kaiyin  kiriyaiyai  nee  inip  pa'ninthuko'l'laay.  (meegaa  5:13)

நான்  உன்  விக்கிரகத்தோப்புகளை  உன்  நடுவில்  இராதபடிக்குப்  பிடுங்கி,  உன்  பட்டணங்களை  அழித்து,  (மீகா  5:14)

naan  un  vikkiragaththoappuga'lai  un  naduvil  iraathapadikkup  pidunggi,  un  patta'nangga'lai  azhiththu,  (meegaa  5:14)

செவிகொடாத  புறஜாதிகளிடத்திலே  கோபத்தோடும்  உக்கிரத்தோடும்  நீதியைச்  சரிக்கட்டுவேன்  என்றார்.  (மீகா  5:15)

sevikodaatha  pu’rajaathiga'lidaththilea  koabaththoadum  ukkiraththoadum  neethiyaich  sarikkattuvean  en’raar.  (meegaa  5:15)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!