Monday, July 11, 2016

Meegaa 4 | மீகா 4 | Micah 4

ஆனாலும்,  கடைசி  நாட்களில்  கர்த்தருடைய  ஆலயமாகிய  பர்வதம்  பர்வதங்களின்  கொடுமுடியில்  ஸ்தாபிக்கப்பட்டு,  மலைகளுக்கு  மேலாய்  உயர்த்தப்பட்டிருக்கும்,  எல்லா  ஜாதிகளும்  அதினிடத்திற்கு  ஓடிவருவார்கள்.  (மீகா  4:1)

aanaalum,  kadaisi  naadka'lil  karththarudaiya  aalayamaagiya  parvatham  parvathangga'lin  kodumudiyil  sthaabikkappattu,  malaiga'lukku  mealaay  uyarththappattirukkum,  ellaa  jaathiga'lum  athinidaththi’rku  oadivaruvaarga'l.  (meegaa  4:1)

திரளான  ஜாதிகள்  புறப்பட்டுவந்து:  நாம்  கர்த்தரின்  பர்வதத்துக்கும்,  யாக்கோபின்  தேவனுடைய  ஆலயத்துக்கும்  போவோம்  வாருங்கள்;  அவர்  தமது  வழிகளை  நமக்குப்  போதிப்பார்,  நாம்  அவர்  பாதைகளில்  நடப்போம்  என்பார்கள்;  ஏனெனில்  சீயோனிலிருந்து  வேதமும்,  எருசலேமிலிருந்து  கர்த்தரின்  வசனமும்  வெளிப்படும்.  (மீகா  4:2)

thira'laana  jaathiga'l  pu’rappattuvanthu:  naam  karththarin  parvathaththukkum,  yaakkoabin  theavanudaiya  aalayaththukkum  poavoam  vaarungga'l;  avar  thamathu  vazhiga'lai  namakkup  poathippaar,  naam  avar  paathaiga'lil  nadappoam  enbaarga'l;  eanenil  seeyoanilirunthu  veathamum,  erusaleamilirunthu  karththarin  vasanamum  ve'lippadum.  (meegaa  4:2)

அவர்  திரளான  ஜனங்களுக்குள்  நியாயந்தீர்த்து,  தூரத்திலுள்ள  பலத்த  ஜாதிகளைக்  கடிந்துகொள்ளுவார்;  அப்பொழுது  அவர்கள்  தங்கள்  பட்டயங்களை  மண்வெட்டிகளாகவும்,  தங்கள்  ஈட்டிகளை  அறிவாள்களாகவும்  அடிப்பார்கள்;  ஒரு  ஜாதிக்கு  விரோதமாய்  மறுஜாதி  பட்டயம்  எடுப்பதில்லை;  இனி  அவர்கள்  யுத்தத்தைக்  கற்பதுமில்லை.  (மீகா  4:3)

avar  thira'laana  janangga'lukku'l  niyaayantheerththu,  thooraththilu'l'la  balaththa  jaathiga'laik  kadinthuko'l'luvaar;  appozhuthu  avarga'l  thangga'l  pattayangga'lai  ma'nvettiga'laagavum,  thangga'l  eettiga'lai  a’rivaa'lga'laagavum  adippaarga'l;  oru  jaathikku  viroathamaay  ma’rujaathi  pattayam  eduppathillai;  ini  avarga'l  yuththaththaik  ka’rpathumillai.  (meegaa  4:3)

அவனவன்  தன்தன்  திராட்சச்செடியின்  நிழலிலும்,  தன்தன்  அத்திமரத்தின்  நிழலிலும்  பயப்படுத்துவார்  இல்லாமல்  உட்காருவான்;  சேனைகளுடைய  கர்த்தரின்  வாய்  இதைச்  சொல்லிற்று.  (மீகா  4:4)

avanavan  thanthan  thiraadchachsediyin  nizhalilum,  thanthan  aththimaraththin  nizhalilum  bayappaduththuvaar  illaamal  udkaaruvaan;  seanaiga'ludaiya  karththarin  vaay  ithaich  sollit’ru.  (meegaa  4:4)

சகல  ஜனங்களும்  தங்கள்  தங்கள்  தேவனுடைய  நாமத்தைப்  பற்றிக்கொண்டு  நடப்பார்கள்;  நாங்களும்  எங்கள்  தேவனாகிய  கர்த்தருடைய  நாமத்தைப்  பற்றிக்கொண்டு  என்றென்றைக்குமுள்ள  சதாகாலங்களிலும்  நடப்போம்.  (மீகா  4:5)

sagala  janangga'lum  thangga'l  thangga'l  theavanudaiya  naamaththaip  pat’rikko'ndu  nadappaarga'l;  naangga'lum  engga'l  theavanaagiya  karththarudaiya  naamaththaip  pat’rikko'ndu  en’ren’raikkumu'l'la  sathaakaalangga'lilum  nadappoam.  (meegaa  4:5)

கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  அந்நாளிலே  நான்  நொண்டியானவளைச்  சேர்த்து,  தள்ளுண்டவளையும்  தீங்கு  அனுபவித்தவளையும்  கூட்டிக்கொண்டு,  (மீகா  4:6)

karththar  sollugi’rathu  ennaven’raal:  annaa'lilea  naan  no'ndiyaanava'laich  searththu,  tha'l'lu'ndava'laiyum  theenggu  anubaviththava'laiyum  koottikko'ndu,  (meegaa  4:6)

நொண்டியானவளை  மீதியான  ஜனமாகவும்,  தூரமாய்த்  தள்ளுண்டுபோனவளைப்  பலத்த  ஜாதியாகவும்  வைப்பேன்;  அவர்கள்பேரில்  கர்த்தர்  சீயோன்  பர்வதத்திலே  இதுமுதல்  என்றென்றைக்கும்  ராஜாவாயிருப்பார்.  (மீகா  4:7)

no'ndiyaanava'lai  meethiyaana  janamaagavum,  thooramaayth  tha'l'lu'ndupoanava'laip  balaththa  jaathiyaagavum  vaippean;  avarga'lpearil  karththar  seeyoan  parvathaththilea  ithumuthal  en’ren’raikkum  raajaavaayiruppaar.  (meegaa  4:7)

மந்தையின்  துருக்கமே,  சீயோன்  குமாரத்தியின்  அரணே,  முந்தின  ஆளுகை  உன்னிடத்தில்  வரும்;  ராஜரிகம்  எருசலேம்  குமாரத்தியினிடத்தில்  வரும்.  (மீகா  4:8)

manthaiyin  thurukkamea,  seeyoan  kumaaraththiyin  ara'nea,  munthina  aa'lugai  unnidaththil  varum;  raajarigam  erusaleam  kumaaraththiyinidaththil  varum.  (meegaa  4:8)

இப்போதும்  நீ  சத்தமிட்டுக்  கதறுவானேன்?  ராஜாவானவர்  உன்னிடத்தில்  இல்லையோ?  உன்  ஆலோசனைக்காரர்  அழிந்துபோனார்களோ?  பிரசவிக்கிற  ஸ்திரீக்கு  ஒத்த  வேதனை  உனக்கு  உண்டாகும்.  (மீகா  4:9)

ippoathum  nee  saththamittuk  katha’ruvaanean?  raajaavaanavar  unnidaththil  illaiyoa?  un  aaloasanaikkaarar  azhinthupoanaarga'loa?  pirasavikki’ra  sthireekku  oththa  veathanai  unakku  u'ndaagum.  (meegaa  4:9)

சீயோன்  குமாரத்தியே,  பிரசவ  ஸ்திரீயைப்போல  அம்பாயப்பட்டு  வேதனைப்படு;  நீ  இப்போது  நகரத்திலிருந்து  புறப்பட்டு,  வெளிகளில்  தங்கி,  பாபிலோன்வரைக்கும்  போவாய்,  அங்கே  விடுவிக்கப்படுவாய்;  அங்கே  கர்த்தர்  உன்னை  உன்  சத்துருக்களின்  கைக்கு  நீங்கலாக்கி  மீட்பார்.  (மீகா  4:10)

seeyoan  kumaaraththiyea,  pirasava  sthireeyaippoala  ambaayappattu  veathanaippadu;  nee  ippoathu  nagaraththilirunthu  pu’rappattu,  ve'liga'lil  thanggi,  baabiloanvaraikkum  poavaay,  anggea  viduvikkappaduvaay;  anggea  karththar  unnai  un  saththurukka'lin  kaikku  neenggalaakki  meedpaar.  (meegaa  4:10)

சீயோன்  தீட்டுப்படுவாளாக,  எங்கள்  கண்  அவளைக்  காண்பதாக  என்று  சொல்லி,  அநேக  ஜாதியார்  உனக்கு  விரோதமாகக்  கூடியிருக்கிறார்கள்.  (மீகா  4:11)

seeyoan  theettuppaduvaa'laaga,  engga'l  ka'n  ava'laik  kaa'nbathaaga  en’ru  solli,  aneaga  jaathiyaar  unakku  viroathamaagak  koodiyirukki’raarga'l.  (meegaa  4:11)

ஆனாலும்  அவர்கள்  கர்த்தருடைய  நினைவுகளை  அறியாமலும்,  அவருடைய  யோசனையை  உணராமலும்  இருக்கிறார்கள்;  அவர்  அரிக்கட்டுகளைப்போல  அவர்களைக்  களத்திலே  சேர்ப்பார்.  (மீகா  4:12)

aanaalum  avarga'l  karththarudaiya  ninaivuga'lai  a’riyaamalum,  avarudaiya  yoasanaiyai  u'naraamalum  irukki’raarga'l;  avar  arikkattuga'laippoala  avarga'laik  ka'laththilea  searppaar.  (meegaa  4:12)

சீயோன்  குமாரத்தியே,  நீ  எழுந்து  போரடி;  நான்  உன்  கொம்புகளை  இரும்பும்,  உன்  குளம்புகளை  வெண்கலமுமாக்குவேன்;  நீ  அநேக  ஜனங்களை  நொறுக்கிப்போடுவாய்;  அவர்கள்  தேடிச்  சேர்த்ததை  நீ  கர்த்தருக்கென்றும்,  அவர்களுடைய  ஆஸ்தியைப்  பூமிக்கெல்லாம்  ஆண்டவராயிருக்கிறவருக்கென்றும்  நியமிப்பாய்.  (மீகா  4:13)

seeyoan  kumaaraththiyea,  nee  ezhunthu  poaradi;  naan  un  kombuga'lai  irumbum,  un  ku'lambuga'lai  ve'ngalamumaakkuvean;  nee  aneaga  janangga'lai  no’rukkippoaduvaay;  avarga'l  theadich  searththathai  nee  karththarukken’rum,  avarga'ludaiya  aasthiyaip  boomikkellaam  aa'ndavaraayirukki’ravarukken’rum  niyamippaay.  (meegaa  4:13)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!