Monday, July 11, 2016

Meegaa 3 | மீகா 3 | Micah 3

நான்  சொன்னது:  யாக்கோபின்  தலைவர்களே,  இஸ்ரவேல்  வம்சத்து  அதிபதிகளே,  நியாயம்  இன்னதென்று  அறிவது  உங்களுக்கு  அல்லவோ  அடுத்தது.  (மீகா  3:1)

naan  sonnathu:  yaakkoabin  thalaivarga'lea,  israveal  vamsaththu  athibathiga'lea,  niyaayam  innathen’ru  a’rivathu  ungga'lukku  allavoa  aduththathu.  (meegaa  3:1)

ஆனாலும்  நன்மையை  வெறுத்து,  தீமையை  விரும்பி,  அவர்கள்மேல்  இருக்கிற  அவர்களுடைய  தோலையும்  அவர்கள்  எலும்புகள்மேல்  இருக்கிற  அவர்களுடைய  சதையையும்  பிடுங்கி,  (மீகா  3:2)

aanaalum  nanmaiyai  ve’ruththu,  theemaiyai  virumbi,  avarga'lmeal  irukki’ra  avarga'ludaiya  thoalaiyum  avarga'l  elumbuga'lmeal  irukki’ra  avarga'ludaiya  sathaiyaiyum  pidunggi,  (meegaa  3:2)

என்  ஜனத்தின்  சதையைத்  தின்று,  அவர்கள்மேல்  இருக்கிற  அவர்களுடைய  தோலை  உரிந்துகொண்டு,  அவர்கள்  எலும்புகளை  முறித்து,  பானையிலே  போடும்வண்ணமாகவும்  இறைச்சியைக்  கொப்பரைக்குள்ளே  போடும்வண்ணமாகவும்  அவைகளைத்  துண்டிக்கிறார்கள்.  (மீகா  3:3)

en  janaththin  sathaiyaith  thin’ru,  avarga'lmeal  irukki’ra  avarga'ludaiya  thoalai  urinthuko'ndu,  avarga'l  elumbuga'lai  mu’riththu,  paanaiyilea  poadumva'n'namaagavum  i’raichchiyaik  kopparaikku'l'lea  poadumva'n'namaagavum  avaiga'laith  thu'ndikki’raarga'l.  (meegaa  3:3)

அப்பொழுது  அவர்கள்  கர்த்தரை  நோக்கிக்  கூப்பிடுவார்கள்;  ஆனாலும்  அவர்கள்  தங்கள்  கிரியைகளில்  பொல்லாதவர்களானபடியினால்,  அவர்  அவர்களுக்கு  மறுஉத்தரவு  கொடாமல்,  தமது  முகத்தை  அக்காலத்திலே  அவர்களுக்கு  மறைத்துக்கொள்ளுவார்.  (மீகா  3:4)

appozhuthu  avarga'l  karththarai  noakkik  kooppiduvaarga'l;  aanaalum  avarga'l  thangga'l  kiriyaiga'lil  pollaathavarga'laanapadiyinaal,  avar  avarga'lukku  ma’ruuththaravu  kodaamal,  thamathu  mugaththai  akkaalaththilea  avarga'lukku  ma’raiththukko'l'luvaar.  (meegaa  3:4)

தங்கள்  பற்களினால்  கடிக்கிறவர்களாயிருந்து,  சமாதானமென்று  சொல்லி,  தங்கள்  வாய்க்கு  உணவைக்  கொடாதவனுக்கு  விரோதமாகச்  சண்டைக்கு  ஆயத்தம்பண்ணி,  என்  ஜனத்தை  மோசம்போக்குகிற  தீர்க்கதரிசிகளுக்கு  விரோதமாய்க்  கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  (மீகா  3:5)

thangga'l  pa’rka'linaal  kadikki’ravarga'laayirunthu,  samaathaanamen’ru  solli,  thangga'l  vaaykku  u'navaik  kodaathavanukku  viroathamaagach  sa'ndaikku  aayaththampa'n'ni,  en  janaththai  moasampoakkugi’ra  theerkkatharisiga'lukku  viroathamaayk  karththar  sollugi’rathu  ennaven’raal:  (meegaa  3:5)

தரிசனங்காணக்கூடாத  இராத்திரியும்,  குறிசொல்லக்கூடாத  அந்தகாரமும்  உங்களுக்கு  வரும்;  தீர்க்கதரிசிகளின்மேல்  சூரியன்  அஸ்தமித்து,  அவர்கள்மேல்  பகல்  காரிருளாய்ப்  போகும்.  (மீகா  3:6)

tharisanangkaa'nakkoodaatha  iraaththiriyum,  ku’risollakkoodaatha  anthagaaramum  ungga'lukku  varum;  theerkkatharisiga'linmeal  sooriyan  asthamiththu,  avarga'lmeal  pagal  kaariru'laayp  poagum.  (meegaa  3:6)

தரிசனம்  பார்க்கிறவர்கள்  வெட்கி,  குறிசொல்லுகிறவர்கள்  நாணி,  உத்தரவுகொடுக்கிற  தேவன்  இல்லாததினால்  அவர்கள்  எல்லாரும்  தங்கள்  வாயை  மூடுவார்கள்.  (மீகா  3:7)

tharisanam  paarkki’ravarga'l  vedki,  ku’risollugi’ravarga'l  naa'ni,  uththaravukodukki’ra  theavan  illaathathinaal  avarga'l  ellaarum  thangga'l  vaayai  mooduvaarga'l.  (meegaa  3:7)

நானோ,  யாக்கோபுக்கு  அவன்  மீறுதலையும்,  இஸ்ரவேலுக்கு  அவன்  பாவத்தையும்  அறிவிக்கும்படி,  கர்த்தருடைய  ஆவி  அருளிய  பலத்தினாலும்,  நியாயத்தினாலும்,  பராக்கிரமத்தினாலும்  நிரப்பப்பட்டிருக்கிறேன்.  (மீகா  3:8)

naanoa,  yaakkoabukku  avan  mee’ruthalaiyum,  isravealukku  avan  paavaththaiyum  a’rivikkumpadi,  karththarudaiya  aavi  aru'liya  balaththinaalum,  niyaayaththinaalum,  baraakkiramaththinaalum  nirappappattirukki’rean.  (meegaa  3:8)

நியாயத்தை  அருவருத்து,  செம்மையானவைகளையெல்லாம்  கோணலாக்கி,  (மீகா  3:9)

niyaayaththai  aruvaruththu,  semmaiyaanavaiga'laiyellaam  koa'nalaakki,  (meegaa  3:9)

சீயோனை  இரத்தப்பழியினாலும்,  எருசலேமை  அநியாயத்தினாலும்  கட்டுவிக்கிற  யாக்கோபு  வம்சத்துத்  தலைவர்களே,  இஸ்ரவேல்  வம்சத்து  அதிபதிகளே,  இதைக்  கேளுங்கள்.  (மீகா  3:10)

seeyoanai  iraththappazhiyinaalum,  erusaleamai  aniyaayaththinaalum  kattuvikki’ra  yaakkoabu  vamsaththuth  thalaivarga'lea,  israveal  vamsaththu  athibathiga'lea,  ithaik  kea'lungga'l.  (meegaa  3:10)

அதின்  தலைவர்கள்  பரிதானத்துக்கு  நியாயந்தீர்க்கிறார்கள்;  அதின்  ஆசாரியர்கள்  கூலிக்கு  உபதேசிக்கிறார்கள்;  அதின்  தீர்க்கதரிசிகள்  பணத்துக்குக்  குறிசொல்லுகிறார்கள்;  ஆகிலும்  அவர்கள்  கர்த்தரைச்  சார்ந்துகொண்டு:  கர்த்தர்  எங்கள்  நடுவில்  இல்லையோ?  தீங்கு  எங்கள்மேல்  வராது  என்கிறார்கள்.  (மீகா  3:11)

athin  thalaivarga'l  parithaanaththukku  niyaayantheerkki’raarga'l;  athin  aasaariyarga'l  koolikku  ubatheasikki’raarga'l;  athin  theerkkatharisiga'l  pa'naththukkuk  ku’risollugi’raarga'l;  aagilum  avarga'l  karththaraich  saarnthuko'ndu:  karththar  engga'l  naduvil  illaiyoa?  theenggu  engga'lmeal  varaathu  engi’raarga'l.  (meegaa  3:11)

ஆகையால்  உங்கள்நிமித்தம்  சீயோன்  வயல்வெளியைப்போல  உழப்பட்டு,  எருசலேம்  மண்மேடுகளாய்ப்போம்,  ஆலயத்தின்  பர்வதம்  காட்டு  மேடுகளாய்ப்போம்.  (மீகா  3:12)

aagaiyaal  ungga'lnimiththam  seeyoan  vayalve'liyaippoala  uzhappattu,  erusaleam  ma'nmeaduga'laayppoam,  aalayaththin  parvatham  kaattu  meaduga'laayppoam.  (meegaa  3:12)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!