Monday, July 11, 2016

Meegaa 2 | மீகா 2 | Micah 2


அக்கிரமத்தை  யோசித்து,  தங்கள்  படுக்கைகளின்மேல்  பொல்லாப்பு  செய்ய  எத்தனம்பண்ணித்  தங்கள்  கையில்  வல்லமை  இருக்கிறபடியினால்,  விடியற்காலமாகிறபோது  அதை  நடப்பித்து,  (மீகா  2:1)

akkiramaththai  yoasiththu,  thangga'l  padukkaiga'linmeal  pollaappu  seyya  eththanampa'n'nith  thangga'l  kaiyil  vallamai  irukki’rapadiyinaal,  vidiya’rkaalamaagi’rapoathu  athai  nadappiththu,  (meegaa  2:1)

வயல்களை  இச்சித்துப்  பறித்துக்கொண்டு,  வீடுகளை  இச்சித்து  எடுத்துக்கொண்டு,  புருஷனையும்  அவன்  வீட்டையும்,  மனுஷனையும்  அவன்  சுதந்தரத்தையும்  ஒடுக்குகிறவர்களுக்கு  ஐயோ!  (மீகா  2:2)

vayalga'lai  ichchiththup  pa’riththukko'ndu,  veeduga'lai  ichchiththu  eduththukko'ndu,  purushanaiyum  avan  veettaiyum,  manushanaiyum  avan  suthantharaththaiyum  odukkugi’ravarga'lukku  aiyoa!  (meegaa  2:2)

ஆகையால்  கர்த்தர்:  நான்  இந்த  வம்சத்தாருக்கு  விரோதமாய்த்  தீமையை  வருவிக்க  நினைக்கிறேன்;  அதினின்று  நீங்கள்  கழுத்தை  நீக்கமாட்டீர்கள்;  நீங்கள்  மேட்டிமையாய்  நடப்பதில்லை;  அது  தீமையான  காலம்.  (மீகா  2:3)

aagaiyaal  karththar:  naan  intha  vamsaththaarukku  viroathamaayth  theemaiyai  varuvikka  ninaikki’rean;  athinin’ru  neengga'l  kazhuththai  neekkamaatteerga'l;  neengga'l  meattimaiyaay  nadappathillai;  athu  theemaiyaana  kaalam.  (meegaa  2:3)

அந்நாளில்  உங்கள்பேரில்  ஒப்புச்சொல்லி,  நாம்  முற்றிலும்  பாழானோம்;  நமது  ஜனத்தின்  சுதந்தரத்தை  மாற்றிப்போட்டார்;  என்னமாய்  அதை  என்னைவிட்டு  நீக்கிப்போட்டார்!  நமது  வயல்களைப்  பிடுங்கிப்  பகிர்ந்துகொடுத்தாரே  என்று  துயரமான  புலம்பலாய்ப்  புலம்புவார்கள்.  (மீகா  2:4)

annaa'lil  ungga'lpearil  oppuchsolli,  naam  mut’rilum  paazhaanoam;  namathu  janaththin  suthantharaththai  maat’rippoattaar;  ennamaay  athai  ennaivittu  neekkippoattaar!  namathu  vayalga'laip  pidunggip  pagirnthukoduththaarea  en’ru  thuyaramaana  pulambalaayp  pulambuvaarga'l.  (meegaa  2:4)

கர்த்தரின்  சபையில்  சுதந்தர  வீதங்களை  அளந்துகொடுக்கிறவர்கள்  உனக்கு  இல்லாதிருப்பார்கள்.  (மீகா  2:5)

karththarin  sabaiyil  suthanthara  veethangga'lai  a'lanthukodukki’ravarga'l  unakku  illaathiruppaarga'l.  (meegaa  2:5)

தீர்க்கதரிசனஞ்  சொல்லாதிருப்பீர்களாக  என்கிறார்கள்;  அவர்கள்  தீர்க்கதரிசனஞ்  சொல்லுவார்கள்,  இந்தப்பிரகாரமாய்  அவர்கள்  தீர்க்கதரிசனஞ்  சொல்லாவிட்டால்  நிந்தை  நீங்காதே.  (மீகா  2:6)

theerkkatharisanagn  sollaathiruppeerga'laaga  engi’raarga'l;  avarga'l  theerkkatharisanagn  solluvaarga'l,  inthappiragaaramaay  avarga'l  theerkkatharisanagn  sollaavittaal  ninthai  neenggaathea.  (meegaa  2:6)

யாக்கோபு  வம்சம்  என்று  பேர்பெற்றவர்களே,  கர்த்தரின்  ஆவி  குறுகியிருக்கிறதோ?  அவருடைய  கிரியைகள்  இவைகள்தானோ?  செம்மையாய்  நடக்கிறவனுக்கு  என்  வார்த்தைகள்  நன்மை  செய்யாதோ?  (மீகா  2:7)

yaakkoabu  vamsam  en’ru  pearpet’ravarga'lea,  karththarin  aavi  ku’rugiyirukki’rathoa?  avarudaiya  kiriyaiga'l  ivaiga'lthaanoa?  semmaiyaay  nadakki’ravanukku  en  vaarththaiga'l  nanmai  seyyaathoa?  (meegaa  2:7)

என்  ஜனங்கள்  பூர்வமுதல்  சத்துருவைப்போல்  எழும்பினார்கள்.  யுத்தத்திலிருந்து  திரும்பிவந்து  வழியில்  அஞ்சாமல்  கடந்துபோகிறவர்களுடைய  மேலங்கியையும்  வஸ்திரத்தையும்  உரிந்துகொண்டீர்கள்.  (மீகா  2:8)

en  janangga'l  poorvamuthal  saththuruvaippoal  ezhumbinaarga'l.  yuththaththilirunthu  thirumbivanthu  vazhiyil  agnchaamal  kadanthupoagi’ravarga'ludaiya  mealanggiyaiyum  vasthiraththaiyum  urinthuko'ndeerga'l.  (meegaa  2:8)

என்  ஜனத்தின்  ஸ்திரீகளை  அவர்களுடைய  சௌக்கியமான  வீடுகளிலிருந்து  துரத்திவிட்டீர்கள்;  அவர்களுடைய  குழந்தைகளுக்கு  இருந்த  என்  அலங்காரத்தை  என்றைக்கும்  இல்லாதபடிக்குப்  பறித்துக்கொண்டீர்கள்.  (மீகா  2:9)

en  janaththin  sthireega'lai  avarga'ludaiya  saukkiyamaana  veeduga'lilirunthu  thuraththivitteerga'l;  avarga'ludaiya  kuzhanthaiga'lukku  iruntha  en  alanggaaraththai  en’raikkum  illaathapadikkup  pa’riththukko'ndeerga'l.  (meegaa  2:9)

எழுந்திருந்து  போங்கள்;  இது  நீங்கள்  இளைப்பாறும்  இடம்  அல்ல,  இது  தீட்டுப்பட்டது,  இது  உங்களை  நாசப்படுத்தும்,  அந்த  நாசம்  மிகவும்  கொடியதாயிருக்கும்.  (மீகா  2:10)

ezhunthirunthu  poangga'l;  ithu  neengga'l  i'laippaa’rum  idam  alla,  ithu  theettuppattathu,  ithu  ungga'lai  naasappaduththum,  antha  naasam  migavum  kodiyathaayirukkum.  (meegaa  2:10)

மனம்போகிற  போக்கின்படிபோய்,  அபத்தமானதை  உரைக்கிற  ஒருவன்,  திராட்சரசத்தையும்  மதுபானத்தையுங்குறித்து  நான்  உனக்குப்  பிரசங்கிப்பேனென்றால்,  அவனே  இந்த  ஜனத்திற்கு  ஏற்ற  பிரசங்கியாயிருப்பான்.  (மீகா  2:11)

manampoagi’ra  poakkinpadipoay,  abaththamaanathai  uraikki’ra  oruvan,  thiraadcharasaththaiyum  mathubaanaththaiyungku’riththu  naan  unakkup  pirasanggippeanen’raal,  avanea  intha  janaththi’rku  eat’ra  pirasanggiyaayiruppaan.  (meegaa  2:11)

யாக்கோபின்  ஜனங்களே,  உங்களெல்லாரையும்  நான்  நிச்சயமாய்க்  கூட்டுவேன்,  இஸ்ரவேலில்  மீதியானவர்களை  நிச்சயமாய்ச்  சேர்ப்பேன்;  போஸ்றாவின்  ஆடுகளைப்போல்  அவர்களை  ஏகக்கூட்டமாக்குவேன்;  தன்  தொழுவத்துக்குள்ளே  சேர்ந்த  மந்தைக்குச்  சமானமாய்  ஜனத்திரளினாலே  இரைச்சல்  உண்டாகும்.  (மீகா  2:12)

yaakkoabin  janangga'lea,  ungga'lellaaraiyum  naan  nichchayamaayk  koottuvean,  isravealil  meethiyaanavarga'lai  nichchayamaaych  searppean;  boas’raavin  aaduga'laippoal  avarga'lai  eagakkoottamaakkuvean;  than  thozhuvaththukku'l'lea  searntha  manthaikkuch  samaanamaay  janaththira'linaalea  iraichchal  u'ndaagum.  (meegaa  2:12)

தடைகளை  நீக்கிப்போடுகிறவர்  அவர்களுக்கு  முன்பாக  நடந்துபோகிறார்;  அவர்கள்  தடைகளை  நீக்கி,  வாசலால்  உட்பிரவேசித்துக்  கடந்துபோவார்கள்;  அவர்கள்  ராஜா  அவர்களுக்கு  முன்பாகப்  போவார்,  கர்த்தர்  அவர்கள்  முன்னணியில்  நடந்துபோவார்.  (மீகா  2:13)

thadaiga'lai  neekkippoadugi’ravar  avarga'lukku  munbaaga  nadanthupoagi’raar;  avarga'l  thadaiga'lai  neekki,  vaasalaal  udpiraveasiththuk  kadanthupoavaarga'l;  avarga'l  raajaa  avarga'lukku  munbaagap  poavaar,  karththar  avarga'l  munna'niyil  nadanthupoavaar.  (meegaa  2:13)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!