Monday, July 11, 2016

Meegaa 1 | மீகா 1 | Micah 1


யோதாம்,  ஆகாஸ்,  எசேக்கியா  என்னும்  யூதா  ராஜாக்களுடைய  நாட்களில்,  மொரேசா  ஊரானாகிய  மீகாவுக்கு  உண்டானதும்,  அவன்  சமாரியாவுக்கும்  எருசலேமுக்கும்  விரோதமாய்த்  தரிசித்ததுமான  கர்த்தருடைய  வார்த்தை.  (மீகா  1:1)

yoathaam,  aagaas,  eseakkiyaa  ennum  yoothaa  raajaakka'ludaiya  naadka'lil,  moreasaa  ooraanaagiya  meegaavukku  u'ndaanathum,  avan  samaariyaavukkum  erusaleamukkum  viroathamaayth  tharisiththathumaana  karththarudaiya  vaarththai.  (meegaa  1:1)

சகல  ஜனங்களே,  கேளுங்கள்;  பூமியே,  அதிலுள்ளவைகளே,  செவிகொடுங்கள்;  கர்த்தராகிய  ஆண்டவர்,  தம்முடைய  பரிசுத்த  ஆலயத்திலிருக்கிற  ஆண்டவரே,  உங்களுக்கு  விரோதமாகச்  சாட்சியாயிருப்பார்.  (மீகா  1:2)

sagala  janangga'lea,  kea'lungga'l;  boomiyea,  athilu'l'lavaiga'lea,  sevikodungga'l;  karththaraagiya  aa'ndavar,  thammudaiya  parisuththa  aalayaththilirukki’ra  aa'ndavarea,  ungga'lukku  viroathamaagach  saadchiyaayiruppaar.  (meegaa  1:2)

இதோ,  கர்த்தர்  தமது  ஸ்தானத்திலிருந்து  புறப்பட்டு  வருகிறார்;  அவர்  இறங்கிப்  பூமியின்  உயர்ந்த  இடங்களை  மிதிப்பார்.  (மீகா  1:3)

ithoa,  karththar  thamathu  sthaanaththilirunthu  pu’rappattu  varugi’raar;  avar  i’ranggip  boomiyin  uyarntha  idangga'lai  mithippaar.  (meegaa  1:3)

மெழுகு  அக்கினிக்கு  முன்பாக  உருகுகிறதுபோலவும்,  மலைகளிலிருந்து  பாயுந்  தண்ணீர்  தரையைப்  பிளக்கிறதுபோலவும்,  பர்வதங்கள்  அவர்  கீழே  உருகி,  பள்ளத்தாக்குகள்  பிளந்துபோகும்.  (மீகா  1:4)

mezhugu  akkinikku  munbaaga  urugugi’rathupoalavum,  malaiga'lilirunthu  paayun  tha'n'neer  tharaiyaip  pi'lakki’rathupoalavum,  parvathangga'l  avar  keezhea  urugi,  pa'l'laththaakkuga'l  pi'lanthupoagum.  (meegaa  1:4)

இது  எல்லாம்  யாக்கோபுடைய  மீறுதலினிமித்தமும்,  இஸ்ரவேல்  வம்சத்தாருடைய  பாவங்களினிமித்தமும்  சம்பவிக்கும்;  யாக்கோபின்  மீறுதலுக்குக்  காரணமென்ன?  சமாரியா  அல்லவோ?  யூதாவின்  மேடைகளுக்குக்  காரணமென்ன?  எருசலேம்  அல்லவோ?  (மீகா  1:5)

ithu  ellaam  yaakkoabudaiya  mee’ruthalinimiththamum,  israveal  vamsaththaarudaiya  paavangga'linimiththamum  sambavikkum;  yaakkoabin  mee’ruthalukkuk  kaara'namenna?  samaariyaa  allavoa?  yoothaavin  meadaiga'lukkuk  kaara'namenna?  erusaleam  allavoa?  (meegaa  1:5)

ஆகையால்  நான்  சமாரியாவை  வெளியான  மண்மேடும்,  திராட்சச்செடி  நடுகிற  நிலமுமாக்கி,  அதின்  கற்களைப்  பள்ளத்தாக்கிலே  புரண்டு  விழப்பண்ணி,  அதின்  அஸ்திபாரங்களைத்  திறந்துவைப்பேன்.  (மீகா  1:6)

aagaiyaal  naan  samaariyaavai  ve'liyaana  ma'nmeadum,  thiraadchachsedi  nadugi’ra  nilamumaakki,  athin  ka’rka'laip  pa'l'laththaakkilea  pura'ndu  vizhappa'n'ni,  athin  asthibaarangga'laith  thi’ranthuvaippean.  (meegaa  1:6)

அதின்  சுரூபங்கள்  எல்லாம்  நொறுக்கப்படும்;  அதின்  பணையங்கள்  எல்லாம்  அக்கினியால்  எரித்துப்போடப்படும்;  அதின்  விக்கிரகங்களை  எல்லாம்  பாழாக்குவேன்;  வேசிப்பணையத்தினால்  சேர்க்கப்பட்டது,  திரும்ப  வேசிப்பணையமாய்ப்  போகும்.  (மீகா  1:7)

athin  suroobangga'l  ellaam  no’rukkappadum;  athin  pa'naiyangga'l  ellaam  akkiniyaal  eriththuppoadappadum;  athin  vikkiragangga'lai  ellaam  paazhaakkuvean;  veasippa'naiyaththinaal  searkkappattathu,  thirumba  veasippa'naiyamaayp  poagum.  (meegaa  1:7)

இதினிமித்தம்  நான்  புலம்பி  அலறுவேன்;  பறிகொடுத்தவனாகவும்  அம்மணமாகவும்  நடப்பேன்;  நான்  ஓரிகளைப்போல  ஊளையிட்டு,  ஆந்தைகளைப்போல  அலறுவேன்.  (மீகா  1:8)

ithinimiththam  naan  pulambi  ala’ruvean;  pa’rikoduththavanaagavum  amma'namaagavum  nadappean;  naan  oariga'laippoala  oo'laiyittu,  aanthaiga'laippoala  ala’ruvean.  (meegaa  1:8)

அதின்  காயம்  ஆறாதது;  அது  யூதாமட்டும்  வந்தது;  என்  ஜனத்தின்  வாசலாகிய  எருசலேம்மட்டும்  வந்தெட்டினது.  (மீகா  1:9)

athin  kaayam  aa’raathathu;  athu  yoothaamattum  vanthathu;  en  janaththin  vaasalaagiya  erusaleammattum  vanthettinathu.  (meegaa  1:9)

அதைக்  காத்பட்டணத்திலே  அறிவியாதேயுங்கள்,  அழவே  வேண்டாம்;  பெத்அப்ராவிலே  புழுதியில்  புரளு.  (மீகா  1:10)

athaik  kaathpatta'naththilea  a’riviyaatheayungga'l,  azhavea  vea'ndaam;  bethapraavilea  puzhuthiyil  pura'lu.  (meegaa  1:10)

சாப்பீரில்  குடியிருக்கிறவளே,  வெட்கத்துடன்  அம்மணமாய்  அப்பாலே  போ;  சாயனானில்  குடியிருக்கிறவள்  வெளியே  வருவதில்லை;  பெத்ஏசேலின்  புலம்பல்  உங்களுக்கு  அடைக்கலமாயிராது.  (மீகா  1:11)

saappeeril  kudiyirukki’rava'lea,  vedkaththudan  amma'namaay  appaalea  poa;  saayanaanil  kudiyirukki’rava'l  ve'liyea  varuvathillai;  betheasealin  pulambal  ungga'lukku  adaikkalamaayiraathu.  (meegaa  1:11)

மாரோத்தில்  குடியிருக்கிறவள்  நன்மை  வருமென்று  எதிர்பார்த்திருந்தாள்;  ஆனாலும்  தீமை  கர்த்தரிடத்திலிருந்து  எருசலேமின்  வாசல்வரைக்கும்  வந்தது.  (மீகா  1:12)

maaroaththil  kudiyirukki’rava'l  nanmai  varumen’ru  ethirpaarththirunthaa'l;  aanaalum  theemai  karththaridaththilirunthu  erusaleamin  vaasalvaraikkum  vanthathu.  (meegaa  1:12)

லாகீசில்  குடியிருக்கிறவளே,  வேகமான  குதிரைகளை  இரதத்திலே  பூட்டு;  நீயே  சீயோன்  குமாரத்தியின்  பாவத்துக்குக்  காரணி;  உன்னிடத்தில்  இஸ்ரவேலின்  பாதகங்கள்  காணப்பட்டது.  (மீகா  1:13)

laageesil  kudiyirukki’rava'lea,  veagamaana  kuthiraiga'lai  irathaththilea  poottu;  neeyea  seeyoan  kumaaraththiyin  paavaththukkuk  kaara'ni;  unnidaththil  isravealin  paathagangga'l  kaa'nappattathu.  (meegaa  1:13)

ஆகையால்  மோர்ஷேத்காத்தினிடத்தில்  உனக்கு  இருக்கிறதைக்  கொடுத்துவிடுவாய்;  அக்சீபின்  வீடுகள்  இஸ்ரவேலின்  ராஜாக்களுக்கு  அபத்தமாய்ப்போகும்.  (மீகா  1:14)

aagaiyaal  moarsheathkaaththinidaththil  unakku  irukki’rathaik  koduththuviduvaay;  akseebin  veeduga'l  isravealin  raajaakka'lukku  abaththamaayppoagum.  (meegaa  1:14)

மரேஷாவில்  குடியிருக்கிறவளே,  உனக்கு  இன்னும்  ஒரு  சுதந்தரவாளியை  வரப்பண்ணுவேன்;  அவன்  இஸ்ரவேலின்  மகிமையாகிய  அதுல்லாம்மட்டும்  வருவான்.  (மீகா  1:15)

mareashaavil  kudiyirukki’rava'lea,  unakku  innum  oru  suthantharavaa'liyai  varappa'n'nuvean;  avan  isravealin  magimaiyaagiya  athullaammattum  varuvaan.  (meegaa  1:15)

உனக்கு  அருமையான  உன்  பிள்ளைகளினிமித்தம்  நீ  உன்  தலையைச்  சிரைத்து  மொட்டையிட்டுக்கொள்;  கழுகைப்போல  முழுமொட்டையாயிரு,  அவர்கள்  உன்னைவிட்டுச்  சிறைப்பட்டுப்போகிறார்கள்.  (மீகா  1:16)

unakku  arumaiyaana  un  pi'l'laiga'linimiththam  nee  un  thalaiyaich  siraiththu  mottaiyittukko'l;  kazhugaippoala  muzhumottaiyaayiru,  avarga'l  unnaivittuch  si’raippattuppoagi’raarga'l.  (meegaa  1:16)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!