Sunday, July 10, 2016

Malkiyaa 4 | மல்கியா 4 | Malachi 4

இதோ,  சூளையைப்போல  எரிகிற  நாள்  வரும்;  அப்பொழுது  அகங்காரிகள்  யாவரும்  அக்கிரமஞ்செய்கிற  யாவரும்  துரும்பாயிருப்பார்கள்;  வரப்போகிற  அந்த  நாள்  அவர்களைச்  சுட்டெரிக்கும்;  அது  அவர்களுக்கு  வேரையும்  கொப்பையும்  வைக்காமற்போகும்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  (மல்கியா  4:1)

ithoa,  soo'laiyaippoala  erigi’ra  naa'l  varum;  appozhuthu  aganggaariga'l  yaavarum  akkiramagnseygi’ra  yaavarum  thurumbaayiruppaarga'l;  varappoagi’ra  antha  naa'l  avarga'laich  sutterikkum;  athu  avarga'lukku  vearaiyum  koppaiyum  vaikkaama’rpoagum  en’ru  seanaiga'lin  karththar  sollugi’raar.  (malkiyaa  4:1)

ஆனாலும்  என்  நாமத்துக்குப்  பயந்திருக்கிற  உங்கள்மேல்  நீதியின்  சூரியன்  உதிக்கும்;  அதின்  செட்டைகளின்கீழ்  ஆரோக்கியம்  இருக்கும்;  நீங்கள்  வெளியே  புறப்பட்டுப்போய்,  கொழுத்த  கன்றுகளைப்போல  வளருவீர்கள்.  (மல்கியா  4:2)

aanaalum  en  naamaththukkup  bayanthirukki’ra  ungga'lmeal  neethiyin  sooriyan  uthikkum;  athin  settaiga'linkeezh  aaroakkiyam  irukkum;  neengga'l  ve'liyea  pu’rappattuppoay,  kozhuththa  kan’ruga'laippoala  va'laruveerga'l.  (malkiyaa  4:2)

துன்மார்க்கரை  மிதிப்பீர்கள்;  நான்  இதைச்  செய்யும்நாளிலே  அவர்கள்  உங்கள்  உள்ளங்கால்களின்கீழ்  சாம்பலாயிருப்பார்கள்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  (மல்கியா  4:3)

thunmaarkkarai  mithippeerga'l;  naan  ithaich  seyyumnaa'lilea  avarga'l  ungga'l  u'l'langkaalga'linkeezh  saambalaayiruppaarga'l  en’ru  seanaiga'lin  karththar  sollugi’raar.  (malkiyaa  4:3)

ஓரேபிலே  இஸ்ரவேலரெல்லாருக்காகவும்  என்  தாசனாகிய  மோசேக்கு  நான்  கற்பித்த  நியாயப்பிரமாணமாகிய  கட்டளைகளையும்  நியாயங்களையும்  நினையுங்கள்.  (மல்கியா  4:4)

oareabilea  isravealarellaarukkaagavum  en  thaasanaagiya  moaseakku  naan  ka’rpiththa  niyaayappiramaa'namaagiya  katta'laiga'laiyum  niyaayangga'laiyum  ninaiyungga'l.  (malkiyaa  4:4)

இதோ,  கர்த்தருடைய  பெரிதும்  பயங்கரமுமான  நாள்  வருகிறதற்கு  முன்னே  நான்  உங்களிடத்திற்கு  எலியா  தீர்க்கதரிசியை  அனுப்புகிறேன்.  (மல்கியா  4:5)

ithoa,  karththarudaiya  perithum  bayanggaramumaana  naa'l  varugi’ratha’rku  munnea  naan  ungga'lidaththi’rku  eliyaa  theerkkatharisiyai  anuppugi’rean.  (malkiyaa  4:5)

நான்  வந்து  பூமியைச்  சங்காரத்தால்  அடிக்காதபடிக்கு,  அவன்  பிதாக்களுடைய  இருதயத்தைப்  பிள்ளைகளிடத்திற்கும்,  பிள்ளைகளுடைய  இருதயத்தை  அவர்கள்  பிதாக்களிடத்திற்கும்  திருப்புவான்.  (மல்கியா  4:6)

naan  vanthu  boomiyaich  sanggaaraththaal  adikkaathapadikku,  avan  pithaakka'ludaiya  iruthayaththaip  pi'l'laiga'lidaththi’rkum,  pi'l'laiga'ludaiya  iruthayaththai  avarga'l  pithaakka'lidaththi’rkum  thiruppuvaan.  (malkiyaa  4:6)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!