Sunday, July 10, 2016

Malkiyaa 3 | மல்கியா 3 | Malachi 3

இதோ,  நான்  என்  தூதனை  அனுப்புகிறேன்,  அவன்  எனக்கு  முன்பாகப்  போய்,  வழியை  ஆயத்தம்பண்ணுவான்;  அப்பொழுது  நீங்கள்  தேடுகிற  ஆண்டவரும்  நீங்கள்  விரும்புகிற  உடன்படிக்கையின்  தூதனுமானவர்  தம்முடைய  ஆலயத்துக்குத்  தீவிரமாய்  வருவார்;  இதோ,  வருகிறார்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  (மல்கியா  3:1)

ithoa,  naan  en  thoothanai  anuppugi’rean,  avan  enakku  munbaagap  poay,  vazhiyai  aayaththampa'n'nuvaan;  appozhuthu  neengga'l  theadugi’ra  aa'ndavarum  neengga'l  virumbugi’ra  udanpadikkaiyin  thoothanumaanavar  thammudaiya  aalayaththukkuth  theeviramaay  varuvaar;  ithoa,  varugi’raar  en’ru  seanaiga'lin  karththar  sollugi’raar.  (malkiyaa  3:1)

ஆனாலும்  அவர்  வரும்  நாளைச்  சகிப்பவன்  யார்?  அவர்  வெளிப்படுகையில்  நிலைநிற்பவன்  யார்?  அவர்  புடமிடுகிறவனுடைய  அக்கினியைப்போலவும்,  வண்ணாருடைய  சவுக்காரத்தைப்போலவும்  இருப்பார்.  (மல்கியா  3:2)

aanaalum  avar  varum  naa'laich  sagippavan  yaar?  avar  ve'lippadugaiyil  nilaini’rpavan  yaar?  avar  pudamidugi’ravanudaiya  akkiniyaippoalavum,  va'n'naarudaiya  savukkaaraththaippoalavum  iruppaar.  (malkiyaa  3:2)

அவர்  உட்கார்ந்து  வெள்ளியைப்  புடமிட்டுச்  சுத்திகரித்துக்கொண்டிருப்பார்;  அவர்  லேவியின்  புத்திரரைச்  சுத்திகரித்து,  அவர்கள்  கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும்,  நீதியாய்  காணிக்கையைச்  செலுத்தும்படிக்கும்,  அவர்களைப்  பொன்னைப்போலவும்  வெள்ளியைப்போலவும்  புடமிடுவார்.  (மல்கியா  3:3)

avar  udkaarnthu  ve'l'liyaip  pudamittuch  suththigariththukko'ndiruppaar;  avar  leaviyin  puththiraraich  suththigariththu,  avarga'l  karththarudaiyavarga'laayirukkumpadikkum,  neethiyaay  kaa'nikkaiyaich  seluththumpadikkum,  avarga'laip  ponnaippoalavum  ve'l'liyaippoalavum  pudamiduvaar.  (malkiyaa  3:3)

அப்பொழுது  பூர்வநாட்களிலும்  முந்தின  வருஷங்களிலும்  இருந்ததுபோல,  யூதாவின்  காணிக்கையும்,  எருசலேமின்  காணிக்கையும்  கர்த்தருக்குப்  பிரியமாயிருக்கும்.  (மல்கியா  3:4)

appozhuthu  poorvanaadka'lilum  munthina  varushangga'lilum  irunthathupoala,  yoothaavin  kaa'nikkaiyum,  erusaleamin  kaa'nikkaiyum  karththarukkup  piriyamaayirukkum.  (malkiyaa  3:4)

நான்  நியாயத்தீர்ப்புச்  செய்யும்படி  உங்களிடத்தில்  வந்து,  சூனியக்காரருக்கும்  விபசாரருக்கும்  பொய்யாணை  இடுகிறவர்களுக்கும்,  எனக்குப்  பயப்படாமல்  விதவைகளும்  திக்கற்ற  பிள்ளைகளுமாகிய  கூலிக்காரரின்  கூலியை  அபகரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும்,  பரதேசிக்கு  அநியாயஞ்செய்கிறவர்களுக்கும்  விரோதமாய்த்  தீவிரமான  சாட்சியாயிருப்பேன்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  (மல்கியா  3:5)

naan  niyaayaththeerppuch  seyyumpadi  ungga'lidaththil  vanthu,  sooniyakkaararukkum  vibasaararukkum  poyyaa'nai  idugi’ravarga'lukkum,  enakkup  bayappadaamal  vithavaiga'lum  thikkat’ra  pi'l'laiga'lumaagiya  koolikkaararin  kooliyai  abagariththukko'l'lugi’ravarga'lukkum,  paratheasikku  aniyaayagnseygi’ravarga'lukkum  viroathamaayth  theeviramaana  saadchiyaayiruppean  en’ru  seanaiga'lin  karththar  sollugi’raar.  (malkiyaa  3:5)

நான்  கர்த்தர்,  நான்  மாறாதவர்;  ஆகையால்  யாக்கோபின்  புத்திரராகிய  நீங்கள்  நிர்மூலமாகவில்லை.  (மல்கியா  3:6)

naan  karththar,  naan  maa’raathavar;  aagaiyaal  yaakkoabin  puththiraraagiya  neengga'l  nirmoolamaagavillai.  (malkiyaa  3:6)

நீங்கள்  உங்கள்  பிதாக்களின்  நாட்கள்  தொடங்கி  என்  கட்டளைகளைக்  கைக்கொள்ளாமல்,  அவைகளைவிட்டு  விலகிப்போனீர்கள்;  என்னிடத்திற்குத்  திரும்புங்கள்,  அப்பொழுது  உங்களிடத்திற்குத்  திரும்புவேன்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்;  நாங்கள்  எந்த  விஷயத்தில்  திரும்பவேண்டும்  என்கிறீர்கள்.  (மல்கியா  3:7)

neengga'l  ungga'l  pithaakka'lin  naadka'l  thodanggi  en  katta'laiga'laik  kaikko'l'laamal,  avaiga'laivittu  vilagippoaneerga'l;  ennidaththi’rkuth  thirumbungga'l,  appozhuthu  ungga'lidaththi’rkuth  thirumbuvean  en’ru  seanaiga'lin  karththar  sollugi’raar;  naangga'l  entha  vishayaththil  thirumbavea'ndum  engi’reerga'l.  (malkiyaa  3:7)

மனுஷன்  தேவனை  வஞ்சிக்கலாமா?  நீங்களோ  என்னை  வஞ்சிக்கிறீர்கள்.  எதிலே  உம்மை  வஞ்சித்தோம்  என்கிறீர்கள்?  தசமபாகத்திலும்  காணிக்கைகளிலுந்தானே.  (மல்கியா  3:8)

manushan  theavanai  vagnchikkalaamaa?  neengga'loa  ennai  vagnchikki’reerga'l.  ethilea  ummai  vagnchiththoam  engi’reerga'l?  thasamapaagaththilum  kaa'nikkaiga'lilunthaanea.  (malkiyaa  3:8)

நீங்கள்  சபிக்கப்பட்டவர்கள்;  ஜனத்தாராகிய  நீங்கள்  எல்லாரும்  என்னை  வஞ்சித்தீர்கள்.  (மல்கியா  3:9)

neengga'l  sabikkappattavarga'l;  janaththaaraagiya  neengga'l  ellaarum  ennai  vagnchiththeerga'l.  (malkiyaa  3:9)

என்  ஆலயத்தில்  ஆகாரம்  உண்டாயிருக்கும்படித்  தசமபாகங்களையெல்லாம்  பண்டசாலையிலே  கொண்டுவாருங்கள்;  அப்பொழுது  நான்  வானத்தின்  பலகணிகளைத்  திறந்து,  இடங்கொள்ளாமற்போகுமட்டும்  உங்கள்மேல்  ஆசீர்வாதத்தை  வருஷிக்கமாட்டேனோவென்று  அதினால்  என்னைச்  சோதித்துப்  பாருங்கள்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  (மல்கியா  3:10)

en  aalayaththil  aagaaram  u'ndaayirukkumpadith  thasamapaagangga'laiyellaam  pa'ndasaalaiyilea  ko'nduvaarungga'l;  appozhuthu  naan  vaanaththin  palaga'niga'laith  thi’ranthu,  idangko'l'laama’rpoagumattum  ungga'lmeal  aaseervaathaththai  varushikkamaatteanoaven’ru  athinaal  ennaich  soathiththup  paarungga'l  en’ru  seanaiga'lin  karththar  sollugi’raar.  (malkiyaa  3:10)

பூமியின்  கனியைப்  பட்சித்துப்  போடுகிறவைகளை  உங்கள்  நிமித்தம்  கண்டிப்பேன்;  அவைகள்  உங்கள்  நிலத்தின்  பலனை  அழிப்பதில்லை,  வெளியிலுள்ள  திராட்சக்கொடி  பழமில்லாமற்போவதுமில்லை  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  (மல்கியா  3:11)

boomiyin  kaniyaip  padchiththup  poadugi’ravaiga'lai  ungga'l  nimiththam  ka'ndippean;  avaiga'l  ungga'l  nilaththin  palanai  azhippathillai,  ve'liyilu'l'la  thiraadchakkodi  pazhamillaama’rpoavathumillai  en’ru  seanaiga'lin  karththar  sollugi’raar.  (malkiyaa  3:11)

அப்பொழுது  எல்லா  ஜாதிகளும்  உங்களைப்  பாக்கியவான்கள்  என்பார்கள்;  தேசம்  விரும்பப்படத்தக்கதாயிருக்கும்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  (மல்கியா  3:12)

appozhuthu  ellaa  jaathiga'lum  ungga'laip  baakkiyavaanga'l  enbaarga'l;  theasam  virumbappadaththakkathaayirukkum  en’ru  seanaiga'lin  karththar  sollugi’raar.  (malkiyaa  3:12)

நீங்கள்  எனக்கு  விரோதமாய்ப்  பேசின  பேச்சுகள்  கடினமாயிருக்கிறது  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  ஆனாலும்  உமக்கு  விரோதமாக  என்னத்தைப்  பேசினோம்  என்கிறீர்கள்.  (மல்கியா  3:13)

neengga'l  enakku  viroathamaayp  peasina  peachchuga'l  kadinamaayirukki’rathu  en’ru  karththar  sollugi’raar;  aanaalum  umakku  viroathamaaga  ennaththaip  peasinoam  engi’reerga'l.  (malkiyaa  3:13)

தேவனைச்  சேவிப்பது  விருதா,  அவருடைய  கட்டளைகளைக்  கைக்கொள்ளுகிறதினாலும்,  சேனைகளின்  கர்த்தருக்கு  முன்பாகத்  துக்கித்து  நடக்கிறதினாலும்  என்ன  பிரயோஜனம்?  (மல்கியா  3:14)

theavanaich  seavippathu  viruthaa,  avarudaiya  katta'laiga'laik  kaikko'l'lugi’rathinaalum,  seanaiga'lin  karththarukku  munbaagath  thukkiththu  nadakki’rathinaalum  enna  pirayoajanam?  (malkiyaa  3:14)

இப்போதும்  அகங்காரிகளைப்  பாக்கியவான்கள்  என்கிறோம்;  தீமை  செய்கிறவர்கள்  திடப்படுகிறார்கள்;  அவர்கள்  தேவனைப்  பரீட்சைபார்த்தாலும்  விடுவிக்கப்படுகிறார்களே  என்று  சொல்லுகிறீர்கள்.  (மல்கியா  3:15)

ippoathum  aganggaariga'laip  baakkiyavaanga'l  engi’roam;  theemai  seygi’ravarga'l  thidappadugi’raarga'l;  avarga'l  theavanaip  pareedchaipaarththaalum  viduvikkappadugi’raarga'lea  en’ru  sollugi’reerga'l.  (malkiyaa  3:15)

அப்பொழுது  கர்த்தருக்குப்  பயந்தவர்கள்  ஒருவரோடொருவர்  பேசிக்கொள்வார்கள்;  கர்த்தர்  கவனித்துக்கேட்பார்;  கர்த்தருக்குப்  பயந்தவர்களுக்காகவும்  அவருடைய  நாமத்தைத்  தியானிக்கிறவர்களுக்காகவும்  ஞாபகப்புஸ்தகம்  ஒன்று  அவருக்கு  முன்பாக  எழுதப்பட்டிருக்கிறது.  (மல்கியா  3:16)

appozhuthu  karththarukkup  bayanthavarga'l  oruvaroadoruvar  peasikko'lvaarga'l;  karththar  kavaniththukkeadpaar;  karththarukkup  bayanthavarga'lukkaagavum  avarudaiya  naamaththaith  thiyaanikki’ravarga'lukkaagavum  gnaabagappusthagam  on’ru  avarukku  munbaaga  ezhuthappattirukki’rathu.  (malkiyaa  3:16)

என்  சம்பத்தை  நான்  சேர்க்கும்  நாளிலே  அவர்கள்  என்னுடையவர்களாயிருப்பார்கள்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்;  ஒரு  மனுஷன்  தனக்கு  ஊழியஞ்செய்கிற  தன்னுடைய  குமாரனைக்  கடாட்சிக்கிறதுபோல  நான்  அவர்களைக்  கடாட்சிப்பேன்.  (மல்கியா  3:17)

en  sambaththai  naan  searkkum  naa'lilea  avarga'l  ennudaiyavarga'laayiruppaarga'l  en’ru  seanaiga'lin  karththar  sollugi’raar;  oru  manushan  thanakku  oozhiyagnseygi’ra  thannudaiya  kumaaranaik  kadaadchikki’rathupoala  naan  avarga'laik  kadaadchippean.  (malkiyaa  3:17)

அப்பொழுது  நீங்கள்  நீதிமானுக்கும்  துன்மார்க்கனுக்கும்,  தேவனுக்கு  ஊழியஞ்செய்கிறவனுக்கும்  அவருக்கு  ஊழியஞ்செய்யாதவனுக்கும்  இருக்கிற  வித்தியாசத்தைத்  திரும்பவும்  காண்பீர்கள்.  (மல்கியா  3:18)

appozhuthu  neengga'l  neethimaanukkum  thunmaarkkanukkum,  theavanukku  oozhiyagnseygi’ravanukkum  avarukku  oozhiyagnseyyaathavanukkum  irukki’ra  viththiyaasaththaith  thirumbavum  kaa'nbeerga'l.  (malkiyaa  3:18)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!