Thursday, July 28, 2016

Leaviyaraagamam 26 | லேவியராகமம் 26 | Leviticus 26


நீங்கள்  உங்களுக்கு  விக்கிரகங்களையும்  சுரூபங்களையும்  உண்டாக்காமலும்,  உங்களுக்குச்  சிலையை  நிறுத்தாமலும்,  சித்திரந்தீர்ந்த  கல்லை  நமஸ்கரிக்கும்பொருட்டு  உங்கள்  தேசத்தில்  வைக்காமலும்  இருப்பீர்களாக;  நான்  உங்கள்  தேவனாகிய  கர்த்தர்.  (லேவியராகமம்  26:1)

neengga'l  ungga'lukku  vikkiragangga'laiyum  suroobangga'laiyum  u'ndaakkaamalum,  ungga'lukkuch  silaiyai  ni’ruththaamalum,  siththirantheerntha  kallai  namaskarikkumporuttu  ungga'l  theasaththil  vaikkaamalum  iruppeerga'laaga;  naan  ungga'l  theavanaagiya  karththar.  (leaviyaraagamam  26:1)

என்  ஓய்வுநாட்களை  ஆசரித்து,  என்  பரிசுத்த  ஸ்தலத்தைக்குறித்துப்  பயபக்தியாயிருப்பீர்களாக;  நான்  கர்த்தர்.  (லேவியராகமம்  26:2)

en  oayvunaadka'lai  aasariththu,  en  parisuththa  sthalaththaikku’riththup  bayabakthiyaayiruppeerga'laaga;  naan  karththar.  (leaviyaraagamam  26:2)

நீங்கள்  என்  கட்டளைகளின்படி  நடந்து,  என்  கற்பனைகளைக்  கைக்கொண்டு,  அவைகளின்படி  செய்தால்,  (லேவியராகமம்  26:3)

neengga'l  en  katta'laiga'linpadi  nadanthu,  en  ka’rpanaiga'laik  kaikko'ndu,  avaiga'linpadi  seythaal,  (leaviyaraagamam  26:3)

நான்  ஏற்ற  காலத்தில்  உங்களுக்கு  மழைபெய்யப்பண்ணுவேன்;  பூமி  தன்  பலனையும்,  வெளியிலுள்ள  மரங்கள்  தங்கள்  கனியையும்  கொடுக்கும்.  (லேவியராகமம்  26:4)

naan  eat’ra  kaalaththil  ungga'lukku  mazhaipeyyappa'n'nuvean;  boomi  than  palanaiyum,  ve'liyilu'l'la  marangga'l  thangga'l  kaniyaiyum  kodukkum.  (leaviyaraagamam  26:4)

திராட்சப்பழம்  பறிக்குங்  காலம்வரைக்கும்  போரடிப்புக்  காலம்  இருக்கும்;  விதைப்புக்  காலம்வரைக்கும்  திராட்சப்பழம்  பறிக்குங்  காலம்  இருக்கும்;  நீங்கள்  உங்கள்  அப்பத்தைத்  திருப்தியாகச்  சாப்பிட்டு,  உங்கள்  தேசத்தில்  சுகமாய்க்  குடியிருப்பீர்கள்.  (லேவியராகமம்  26:5)

thiraadchappazham  pa’rikkung  kaalamvaraikkum  poaradippuk  kaalam  irukkum;  vithaippuk  kaalamvaraikkum  thiraadchappazham  pa’rikkung  kaalam  irukkum;  neengga'l  ungga'l  appaththaith  thirupthiyaagach  saappittu,  ungga'l  theasaththil  sugamaayk  kudiyiruppeerga'l.  (leaviyaraagamam  26:5)

தேசத்தில்  சமாதானம்  கட்டளையிடுவேன்;  தத்தளிக்கப்பண்ணுவார்  இல்லாமல்  படுத்துக்கொள்வீர்கள்;  துஷ்ட  மிருகங்களைத்  தேசத்தில்  இராதபடிக்கு  ஒழியப்பண்ணுவேன்;  பட்டயம்  உங்கள்  தேசத்தில்  உலாவுவதில்லை.  (லேவியராகமம்  26:6)

theasaththil  samaathaanam  katta'laiyiduvean;  thaththa'likkappa'n'nuvaar  illaamal  paduththukko'lveerga'l;  thushda  mirugangga'laith  theasaththil  iraathapadikku  ozhiyappa'n'nuvean;  pattayam  ungga'l  theasaththil  ulaavuvathillai.  (leaviyaraagamam  26:6)

உங்கள்  சத்துருக்களைத்  துரத்துவீர்கள்;  அவர்கள்  உங்கள்  முன்பாகப்  பட்டயத்தால்  விழுவார்கள்.  (லேவியராகமம்  26:7)

ungga'l  saththurukka'laith  thuraththuveerga'l;  avarga'l  ungga'l  munbaagap  pattayaththaal  vizhuvaarga'l.  (leaviyaraagamam  26:7)

உங்களில்  ஐந்துபேர்  நூறுபேரைத்  துரத்துவார்கள்;  உங்களில்  நூறுபேர்  பதினாயிரம்பேரைத்  துரத்துவார்கள்;  உங்கள்  சத்துருக்கள்  உங்களுக்கு  முன்பாகப்  பட்டயத்தால்  விழுவார்கள்.  (லேவியராகமம்  26:8)

ungga'lil  ainthupear  noo’rupearaith  thuraththuvaarga'l;  ungga'lil  noo’rupear  pathinaayirampearaith  thuraththuvaarga'l;  ungga'l  saththurukka'l  ungga'lukku  munbaagap  pattayaththaal  vizhuvaarga'l.  (leaviyaraagamam  26:8)

நான்  உங்கள்மேல்  கண்ணோக்கமாயிருந்து,  உங்களைப்  பலுகவும்  பெருகவும்பண்ணி,  உங்களோடே  என்  உடன்படிக்கையைத்  திடப்படுத்துவேன்.  (லேவியராகமம்  26:9)

naan  ungga'lmeal  ka'n'noakkamaayirunthu,  ungga'laip  palugavum  perugavumpa'n'ni,  ungga'loadea  en  udanpadikkaiyaith  thidappaduththuvean.  (leaviyaraagamam  26:9)

போன  வருஷத்துப்  பழைய  தானியத்தைச்  சாப்பிட்டு,  புதிய  தானியத்துக்கு  இடமுண்டாகும்படி,  பழையதை  விலக்குவீர்கள்.  (லேவியராகமம்  26:10)

poana  varushaththup  pazhaiya  thaaniyaththaich  saappittu,  puthiya  thaaniyaththukku  idamu'ndaagumpadi,  pazhaiyathai  vilakkuveerga'l.  (leaviyaraagamam  26:10)

உங்கள்  நடுவில்  என்  வாசஸ்தலத்தை  ஸ்தாபிப்பேன்;  என்  ஆத்துமா  உங்களை  அரோசிப்பதில்லை.  (லேவியராகமம்  26:11)

ungga'l  naduvil  en  vaasasthalaththai  sthaabippean;  en  aaththumaa  ungga'lai  aroasippathillai.  (leaviyaraagamam  26:11)

நான்  உங்கள்  நடுவிலே  உலாவி,  உங்கள்  தேவனாயிருப்பேன்,  நீங்கள்  என்  ஜனமாயிருப்பீர்கள்.  (லேவியராகமம்  26:12)

naan  ungga'l  naduvilea  ulaavi,  ungga'l  theavanaayiruppean,  neengga'l  en  janamaayiruppeerga'l.  (leaviyaraagamam  26:12)

நீங்கள்  எகிப்தியருக்கு  அடிமைகளாயிராதபடிக்கு,  நான்  அவர்கள்  தேசத்திலிருந்து  உங்களைப்  புறப்படப்பண்ணி,  உங்கள்  நுகத்தடிகளை  முறித்து,  உங்களை  நிமிர்ந்து  நடக்கப்பண்ணின  உங்கள்  தேவனாகிய  கர்த்தர்.  (லேவியராகமம்  26:13)

neengga'l  egipthiyarukku  adimaiga'laayiraathapadikku,  naan  avarga'l  theasaththilirunthu  ungga'laip  pu’rappadappa'n'ni,  ungga'l  nugaththadiga'lai  mu’riththu,  ungga'lai  nimirnthu  nadakkappa'n'nina  ungga'l  theavanaagiya  karththar.  (leaviyaraagamam  26:13)

நீங்கள்  எனக்குச்  செவிகொடாமலும்,  இந்தக்  கற்பனைகள்  எல்லாவற்றின்படி  செய்யாமலும்,  (லேவியராகமம்  26:14)

neengga'l  enakkuch  sevikodaamalum,  inthak  ka’rpanaiga'l  ellaavat’rinpadi  seyyaamalum,  (leaviyaraagamam  26:14)

என்  கட்டளைகளை  வெறுத்து,  உங்கள்  ஆத்துமா  என்  நியாயங்களை  அரோசித்து,  என்  கற்பனைகள்  எல்லாவற்றின்படியும்  செய்யாதபடிக்கு,  என்  உடன்படிக்கையை  நீங்கள்  மீறிப்போடுவீர்களாகில்:  (லேவியராகமம்  26:15)

en  katta'laiga'lai  ve’ruththu,  ungga'l  aaththumaa  en  niyaayangga'lai  aroasiththu,  en  ka’rpanaiga'l  ellaavat’rinpadiyum  seyyaathapadikku,  en  udanpadikkaiyai  neengga'l  mee’rippoaduveerga'laagil:  (leaviyaraagamam  26:15)

நான்  உங்களுக்குச்  செய்வது  என்னவென்றால்,  கண்களைப்  பூத்துப்போகப்பண்ணுகிறதற்கும்,  இருதயத்தைத்  துயரப்படுத்துகிறதற்கும்,  திகிலையும்  ஈளையையும்  காய்ச்சலையும்  உங்களுக்கு  வரப்பண்ணுவேன்;  நீங்கள்  விதைக்கும்  விதை  விருதாவாயிருக்கும்;  உங்கள்  சத்துருக்கள்  அதின்  பலனைத்  தின்பார்கள்.  (லேவியராகமம்  26:16)

naan  ungga'lukkuch  seyvathu  ennaven’raal,  ka'nga'laip  pooththuppoagappa'n'nugi’ratha’rkum,  iruthayaththaith  thuyarappaduththugi’ratha’rkum,  thigilaiyum  ee'laiyaiyum  kaaychchalaiyum  ungga'lukku  varappa'n'nuvean;  neengga'l  vithaikkum  vithai  viruthaavaayirukkum;  ungga'l  saththurukka'l  athin  palanaith  thinbaarga'l.  (leaviyaraagamam  26:16)

நான்  உங்களுக்கு  விரோதமாக  என்  முகத்தைத்  திருப்புவேன்;  உங்கள்  சத்துருக்களுக்கு  முன்பாக  முறிய  அடிக்கப்படுவீர்கள்;  உங்கள்  பகைஞர்  உங்களை  ஆளுவார்கள்;  துரத்துவார்  இல்லாதிருந்தும்  ஓடுவீர்கள்.  (லேவியராகமம்  26:17)

naan  ungga'lukku  viroathamaaga  en  mugaththaith  thiruppuvean;  ungga'l  saththurukka'lukku  munbaaga  mu’riya  adikkappaduveerga'l;  ungga'l  pagaignar  ungga'lai  aa'luvaarga'l;  thuraththuvaar  illaathirunthum  oaduveerga'l.  (leaviyaraagamam  26:17)

இவ்விதமாய்  நான்  உங்களுக்குச்  செய்தும்,  இன்னும்  நீங்கள்  எனக்குச்  செவிகொடாதிருந்தால்,  உங்கள்  பாவங்களினிமித்தம்  பின்னும்  ஏழத்தனையாக  உங்களைத்  தண்டித்து,  (லேவியராகமம்  26:18)

ivvithamaay  naan  ungga'lukkuch  seythum,  innum  neengga'l  enakkuch  sevikodaathirunthaal,  ungga'l  paavangga'linimiththam  pinnum  eazhaththanaiyaaga  ungga'laith  tha'ndiththu,  (leaviyaraagamam  26:18)

உங்கள்  வல்லமையின்  பெருமையை  முறித்து,  உங்கள்  வானத்தை  இரும்பைப்போலவும்,  உங்கள்  பூமியை  வெண்கலத்தைப்போலவும்  ஆக்குவேன்.  (லேவியராகமம்  26:19)

ungga'l  vallamaiyin  perumaiyai  mu’riththu,  ungga'l  vaanaththai  irumbaippoalavum,  ungga'l  boomiyai  ve'ngalaththaippoalavum  aakkuvean.  (leaviyaraagamam  26:19)

உங்கள்  பெலன்  விருதாவிலே  செலவழியும்;  உங்கள்  தேசம்  தன்  பலனையும்,  தேசத்தின்  மரங்கள்  தங்கள்  கனிகளையும்  கொடுக்கமாட்டாது.  (லேவியராகமம்  26:20)

ungga'l  belan  viruthaavilea  selavazhiyum;  ungga'l  theasam  than  palanaiyum,  theasaththin  marangga'l  thangga'l  kaniga'laiyum  kodukkamaattaathu.  (leaviyaraagamam  26:20)

நீங்கள்  எனக்குச்  செவிகொடுக்க  மனதில்லாமல்,  எனக்கு  எதிர்த்து  நடப்பீர்களானால்,  நான்  உங்கள்  பாவங்களுக்குத்தக்கதாக  இன்னும்  ஏழத்தனை  வாதையை  உங்கள்மேல்  வரப்பண்ணி,  (லேவியராகமம்  26:21)

neengga'l  enakkuch  sevikodukka  manathillaamal,  enakku  ethirththu  nadappeerga'laanaal,  naan  ungga'l  paavangga'lukkuththakkathaaga  innum  eazhaththanai  vaathaiyai  ungga'lmeal  varappa'n'ni,  (leaviyaraagamam  26:21)

உங்களுக்குள்ளே  வெளியின்  துஷ்டமிருகங்களை  வரவிடுவேன்;  அவைகள்  உங்களைப்  பிள்ளைகளற்றவர்களாக்கி,  உங்கள்  மிருகஜீவன்களை  அழித்து,  உங்களைக்  குறைந்துபோகப்பண்ணும்;  உங்கள்  வழிகள்  பாழாய்க்  கிடக்கும்.  (லேவியராகமம்  26:22)

ungga'lukku'l'lea  ve'liyin  thushdamirugangga'lai  varaviduvean;  avaiga'l  ungga'laip  pi'l'laiga'lat’ravarga'laakki,  ungga'l  mirugajeevanga'lai  azhiththu,  ungga'laik  ku’rainthupoagappa'n'num;  ungga'l  vazhiga'l  paazhaayk  kidakkum.  (leaviyaraagamam  26:22)

நான்  செய்யும்  தண்டனையினால்  நீங்கள்  குணப்படாமல்,  எனக்கு  எதிர்த்து  நடந்தால்,  (லேவியராகமம்  26:23)

naan  seyyum  tha'ndanaiyinaal  neengga'l  ku'nappadaamal,  enakku  ethirththu  nadanthaal,  (leaviyaraagamam  26:23)

நான்  உங்களுக்கு  எதிர்த்து  நடந்து,  உங்கள்  பாவங்களினிமித்தம்  ஏழத்தனையாக  வாதித்து,  (லேவியராகமம்  26:24)

naan  ungga'lukku  ethirththu  nadanthu,  ungga'l  paavangga'linimiththam  eazhaththanaiyaaga  vaathiththu,  (leaviyaraagamam  26:24)

என்  உடன்படிக்கையை  மீறினதற்குப்  பழிவாங்கும்  பட்டயத்தை  உங்கள்மேல்  வரப்பண்ணி,  நீங்கள்  உங்கள்  பட்டணங்களில்  சேர்ந்தபின்,  கொள்ளைநோயை  உங்கள்  நடுவிலே  அனுப்புவேன்;  சத்துருவின்  கையில்  ஒப்புக்கொடுக்கப்படுவீர்கள்.  (லேவியராகமம்  26:25)

en  udanpadikkaiyai  mee’rinatha’rkup  pazhivaanggum  pattayaththai  ungga'lmeal  varappa'n'ni,  neengga'l  ungga'l  patta'nangga'lil  searnthapin,  ko'l'lainoayai  ungga'l  naduvilea  anuppuvean;  saththuruvin  kaiyil  oppukkodukkappaduveerga'l.  (leaviyaraagamam  26:25)

உங்கள்  அப்பம்  என்னும்  ஆதரவுகோலை  நான்  முறித்துப்போடும்போது,  பத்து  ஸ்திரீகள்  ஒரே  அடுப்பில்  உங்கள்  அப்பத்தைச்  சுட்டு,  அதைத்  திரும்ப  உங்களுக்கு  நிறுத்துக்கொடுப்பார்கள்;  நீங்கள்  சாப்பிட்டும்  திருப்தியடையமாட்டீர்கள்.  (லேவியராகமம்  26:26)

ungga'l  appam  ennum  aatharavukoalai  naan  mu’riththuppoadumpoathu,  paththu  sthireega'l  orea  aduppil  ungga'l  appaththaich  suttu,  athaith  thirumba  ungga'lukku  ni’ruththukkoduppaarga'l;  neengga'l  saappittum  thirupthiyadaiyamaatteerga'l.  (leaviyaraagamam  26:26)

இன்னும்  இவைகளெல்லாவற்றாலும்  நீங்கள்  எனக்குச்  செவிகொடாமல்,  எனக்கு  எதிர்த்து  நடந்தால்,  (லேவியராகமம்  26:27)

innum  ivaiga'lellaavat’raalum  neengga'l  enakkuch  sevikodaamal,  enakku  ethirththu  nadanthaal,  (leaviyaraagamam  26:27)

நானும்  உக்கிரத்தோடே  உங்களுக்கு  எதிர்த்து  நடந்து,  நானே  உங்கள்  பாவங்களினிமித்தம்  உங்களை  ஏழத்தனையாய்த்  தண்டிப்பேன்.  (லேவியராகமம்  26:28)

naanum  ukkiraththoadea  ungga'lukku  ethirththu  nadanthu,  naanea  ungga'l  paavangga'linimiththam  ungga'lai  eazhaththanaiyaayth  tha'ndippean.  (leaviyaraagamam  26:28)

உங்கள்  குமாரரின்  மாம்சத்தையும்  உங்கள்  குமாரத்திகளின்  மாம்சத்தையும்  புசிப்பீர்கள்.  (லேவியராகமம்  26:29)

ungga'l  kumaararin  maamsaththaiyum  ungga'l  kumaaraththiga'lin  maamsaththaiyum  pusippeerga'l.  (leaviyaraagamam  26:29)

நான்  உங்கள்  மேடைகளை  அழித்து,  உங்கள்  விக்கிரகச்  சிலைகளை  நிர்த்தூளியாக்கி,  உங்கள்  உடல்களை  உங்கள்  நரகலான  தேவர்களுடைய  உடல்கள்மேல்  எறிவேன்;  என்  ஆத்துமா  உங்களை  அரோசிக்கும்.  (லேவியராகமம்  26:30)

naan  ungga'l  meadaiga'lai  azhiththu,  ungga'l  vikkiragach  silaiga'lai  nirththoo'liyaakki,  ungga'l  udalga'lai  ungga'l  naragalaana  theavarga'ludaiya  udalga'lmeal  e’rivean;  en  aaththumaa  ungga'lai  aroasikkum.  (leaviyaraagamam  26:30)

நான்  உங்கள்  பட்டணங்களை  வெறுமையும்,  உங்கள்  பரிசுத்த  ஸ்தலங்களைப்  பாழுமாக்கி,  உங்கள்  சுகந்த  வாசனையை  முகராதிருப்பேன்.  (லேவியராகமம்  26:31)

naan  ungga'l  patta'nangga'lai  ve’rumaiyum,  ungga'l  parisuththa  sthalangga'laip  paazhumaakki,  ungga'l  sugantha  vaasanaiyai  mugaraathiruppean.  (leaviyaraagamam  26:31)

நான்  தேசத்தைப்  பாழாக்குவேன்;  அதிலே  குடியிருக்கிற  உங்கள்  சத்துருக்கள்  பிரமிப்பார்கள்.  (லேவியராகமம்  26:32)

naan  theasaththaip  paazhaakkuvean;  athilea  kudiyirukki’ra  ungga'l  saththurukka'l  piramippaarga'l.  (leaviyaraagamam  26:32)

ஜாதிகளுக்குள்ளே  உங்களைச்  சிதற  அடித்து,  உங்கள்  பின்னாகப்  பட்டயத்தை  உருவுவேன்;  உங்கள்  தேசம்  பாழும்,  உங்கள்  பட்டணங்கள்  வனாந்தரமுமாகும்.  (லேவியராகமம்  26:33)

jaathiga'lukku'l'lea  ungga'laich  sitha’ra  adiththu,  ungga'l  pinnaagap  pattayaththai  uruvuvean;  ungga'l  theasam  paazhum,  ungga'l  patta'nangga'l  vanaantharamumaagum.  (leaviyaraagamam  26:33)

நீங்கள்  உங்கள்  சத்துருக்களின்  தேசத்தில்  இருக்கும்போது,  தேசமானது  பாழாய்க்கிடக்கிற  நாளெல்லாம்  தன்  ஓய்வுநாட்களை  இரம்மியமாய்  அநுபவிக்கும்;  அப்பொழுது  தேசம்  ஓய்வடைந்து,  தன்  ஓய்வுநாட்களை  இரம்மியமாய்  அநுபவிக்கும்.  (லேவியராகமம்  26:34)

neengga'l  ungga'l  saththurukka'lin  theasaththil  irukkumpoathu,  theasamaanathu  paazhaaykkidakki’ra  naa'lellaam  than  oayvunaadka'lai  irammiyamaay  anubavikkum;  appozhuthu  theasam  oayvadainthu,  than  oayvunaadka'lai  irammiyamaay  anubavikkum.  (leaviyaraagamam  26:34)

நீங்கள்  அதிலே  குடியிருக்கும்போது,  அது  உங்கள்  ஓய்வு  வருஷங்களில்  ஓய்வடையாதபடியினாலே,  அது  பாழாய்க்கிடக்கும்  நாளெல்லாம்  ஓய்வடைந்திருக்கும்.  (லேவியராகமம்  26:35)

neengga'l  athilea  kudiyirukkumpoathu,  athu  ungga'l  oayvu  varushangga'lil  oayvadaiyaathapadiyinaalea,  athu  paazhaaykkidakkum  naa'lellaam  oayvadainthirukkum.  (leaviyaraagamam  26:35)

உங்களில்  உயிரோடு  மீதியாயிருப்பவர்களின்  இருதயங்கள்  தங்கள்  சத்துருக்களின்  தேசங்களில்  மனத்தளர்ச்சி  அடையும்படி  செய்வேன்;  அசைகிற  இலையின்  சத்தமும்  அவர்களை  ஓட்டும்;  அவர்கள்  பட்டயத்திற்குத்  தப்பி  ஓடுகிறதுபோல  ஓடி,  துரத்துவார்  இல்லாமல்  விழுவார்கள்.  (லேவியராகமம்  26:36)

ungga'lil  uyiroadu  meethiyaayiruppavarga'lin  iruthayangga'l  thangga'l  saththurukka'lin  theasangga'lil  manaththa'larchchi  adaiyumpadi  seyvean;  asaigi’ra  ilaiyin  saththamum  avarga'lai  oattum;  avarga'l  pattayaththi’rkuth  thappi  oadugi’rathupoala  oadi,  thuraththuvaar  illaamal  vizhuvaarga'l.  (leaviyaraagamam  26:36)

துரத்துவார்  இல்லாமல்,  பட்டயத்துக்கு  முன்  விழுவதுபோல,  ஒருவர்மேல்  ஒருவர்  இடறிவிழுவார்கள்;  உங்கள்  சத்துருக்களுக்குமுன்  நிற்க  உங்களுக்குப்  பெலன்  இராது.  (லேவியராகமம்  26:37)

thuraththuvaar  illaamal,  pattayaththukku  mun  vizhuvathupoala,  oruvarmeal  oruvar  ida’rivizhuvaarga'l;  ungga'l  saththurukka'lukkumun  ni’rka  ungga'lukkup  belan  iraathu.  (leaviyaraagamam  26:37)

புறஜாதிகளுக்குள்ளே  அழிந்துபோவீர்கள்;  உங்கள்  சத்துருக்களின்  தேசம்  உங்களைப்  பட்சிக்கும்.  (லேவியராகமம்  26:38)

pu’rajaathiga'lukku'l'lea  azhinthupoaveerga'l;  ungga'l  saththurukka'lin  theasam  ungga'laip  padchikkum.  (leaviyaraagamam  26:38)

உங்களில்  தப்பினவர்கள்  தங்கள்  அக்கிரமங்களினிமித்தமும்,  தங்கள்  பிதாக்களின்  அக்கிரமங்களினிமித்தமும்,  உங்கள்  சத்துருக்களின்  தேசங்களில்  வாடிப்போவார்கள்.  (லேவியராகமம்  26:39)

ungga'lil  thappinavarga'l  thangga'l  akkiramangga'linimiththamum,  thangga'l  pithaakka'lin  akkiramangga'linimiththamum,  ungga'l  saththurukka'lin  theasangga'lil  vaadippoavaarga'l.  (leaviyaraagamam  26:39)

அவர்கள்  எனக்கு  விரோதமாகத்  துரோகம்பண்ணி  நடப்பித்த  தங்கள்  அக்கிரமத்தையும்,  தங்கள்  பிதாக்களின்  அக்கிரமத்தையும்  அறிக்கையிடுகிறதுமன்றி,  (லேவியராகமம்  26:40)

avarga'l  enakku  viroathamaagath  thuroagampa'n'ni  nadappiththa  thangga'l  akkiramaththaiyum,  thangga'l  pithaakka'lin  akkiramaththaiyum  a’rikkaiyidugi’rathuman’ri,  (leaviyaraagamam  26:40)

அவர்கள்  எனக்கு  எதிர்த்து  நடந்தபடியினால்,  நானும்  அவர்களுக்கு  எதிர்த்து  நடந்து,  அவர்களுடைய  சத்துருக்களின்  தேசத்திலே  அவர்களைக்  கொண்டுபோய்  விட்டதையும்  அறிக்கையிட்டு,  விருத்தசேதனமில்லாத  தங்கள்  இருதயத்தைத்  தாழ்த்தி,  தங்கள்  அக்கிரமத்துக்குக்  கிடைத்த  தண்டனையை  நியாயம்  என்று  ஒத்துக்கொண்டால்,  (லேவியராகமம்  26:41)

avarga'l  enakku  ethirththu  nadanthapadiyinaal,  naanum  avarga'lukku  ethirththu  nadanthu,  avarga'ludaiya  saththurukka'lin  theasaththilea  avarga'laik  ko'ndupoay  vittathaiyum  a’rikkaiyittu,  viruththaseathanamillaatha  thangga'l  iruthayaththaith  thaazhththi,  thangga'l  akkiramaththukkuk  kidaiththa  tha'ndanaiyai  niyaayam  en’ru  oththukko'ndaal,  (leaviyaraagamam  26:41)

நான்  யாக்கோபோடே  பண்ணின  என்  உடன்படிக்கையையும்,  ஈசாக்கோடே  பண்ணின  என்  உடன்படிக்கையையும்,  ஆபிரகாமோடே  பண்ணின  என்  உடன்படிக்கையையும்  நினைப்பேன்;  தேசத்தையும்  நினைப்பேன்.  (லேவியராகமம்  26:42)

naan  yaakkoaboadea  pa'n'nina  en  udanpadikkaiyaiyum,  eesaakkoadea  pa'n'nina  en  udanpadikkaiyaiyum,  aabirahaamoadea  pa'n'nina  en  udanpadikkaiyaiyum  ninaippean;  theasaththaiyum  ninaippean.  (leaviyaraagamam  26:42)

தேசம்  அவர்களாலே  விடப்பட்டு,  பாழாய்க்கிடக்கிறதினாலே  தன்  ஓய்வுநாட்களை  இரம்மியமாய்  அநுபவிக்கும்;  அவர்கள்  என்  நியாயங்களை  அவமதித்து,  அவர்களுடைய  ஆத்துமா  என்  கட்டளைகளை  வெறுத்தபடியினால்  அடைந்த  தங்களுடைய  அக்கிரமத்தின்  தண்டனையை  நியாயம்  என்று  ஒத்துக்கொள்ளுவார்கள்.  (லேவியராகமம்  26:43)

theasam  avarga'laalea  vidappattu,  paazhaaykkidakki’rathinaalea  than  oayvunaadka'lai  irammiyamaay  anubavikkum;  avarga'l  en  niyaayangga'lai  avamathiththu,  avarga'ludaiya  aaththumaa  en  katta'laiga'lai  ve’ruththapadiyinaal  adaintha  thangga'ludaiya  akkiramaththin  tha'ndanaiyai  niyaayam  en’ru  oththukko'l'luvaarga'l.  (leaviyaraagamam  26:43)

அவர்கள்  தங்கள்  சத்துருக்களின்  தேசத்திலிருந்தாலும்,  நான்  அவர்களை  நிர்மூலமாக்கத்தக்கதாகவும்,  நான்  அவர்களோடே  பண்ணின  என்  உடன்படிக்கையை  அபத்தமாக்கத்தக்கதாகவும்,  நான்  அவர்களைக்  கைவிடவும்  வெறுக்கவுமாட்டேன்;  நான்  அவர்கள்  தேவனாகிய  கர்த்தர்.  (லேவியராகமம்  26:44)

avarga'l  thangga'l  saththurukka'lin  theasaththilirunthaalum,  naan  avarga'lai  nirmoolamaakkaththakkathaagavum,  naan  avarga'loadea  pa'n'nina  en  udanpadikkaiyai  abaththamaakkaththakkathaagavum,  naan  avarga'laik  kaividavum  ve’rukkavumaattean;  naan  avarga'l  theavanaagiya  karththar.  (leaviyaraagamam  26:44)

அவர்களுடைய  தேவனாயிருக்கும்படிக்கு,  நான்  புறஜாதிகளின்  கண்களுக்கு  முன்பாக  எகிப்துதேசத்திலிருந்து  அவர்களைப்  புறப்படச்செய்து,  அவர்களுடைய  முன்னோர்களோடே  நான்  பண்ணின  உடன்படிக்கையை  அவர்கள்  நிமித்தம்  நினைவுகூருவேன்;  நான்  கர்த்தர்  என்று  சொல்  என்றார்.  (லேவியராகமம்  26:45)

avarga'ludaiya  theavanaayirukkumpadikku,  naan  pu’rajaathiga'lin  ka'nga'lukku  munbaaga  egipthutheasaththilirunthu  avarga'laip  pu’rappadachseythu,  avarga'ludaiya  munnoarga'loadea  naan  pa'n'nina  udanpadikkaiyai  avarga'l  nimiththam  ninaivukooruvean;  naan  karththar  en’ru  sol  en’raar.  (leaviyaraagamam  26:45)

கர்த்தர்  தமக்கும்  இஸ்ரவேல்  சந்ததியாருக்கும்  நடுவே  இருக்கும்படி  மோசேயைக்கொண்டு,  சீனாய்மலையின்மேல்  கொடுத்த  கட்டளைகளும்  நியாயங்களும்  இவைகளே.  (லேவியராகமம்  26:46)

karththar  thamakkum  israveal  santhathiyaarukkum  naduvea  irukkumpadi  moaseayaikko'ndu,  seenaaymalaiyinmeal  koduththa  katta'laiga'lum  niyaayangga'lum  ivaiga'lea.  (leaviyaraagamam  26:46)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!