Thursday, July 28, 2016

Leaviyaraagamam 10 | லேவியராகமம் 10 | Leviticus 10

பின்பு  ஆரோனின்  குமாரராகிய  நாதாபும்  அபியூவும்  தன்தன்  தூபகலசத்தை  எடுத்து,  அவைகளில்  அக்கினியையும்  அதின்மேல்  தூபவர்க்கத்தையும்  போட்டு,  கர்த்தர்  தங்களுக்குக்  கட்டளையிடாத  அந்நிய  அக்கினியை  அவருடைய  சந்நிதியில்  கொண்டுவந்தார்கள்.  (லேவியராகமம்  10:1)

pinbu  aaroanin  kumaararaagiya  naathaabum  abiyoovum  thanthan  thoobakalasaththai  eduththu,  avaiga'lil  akkiniyaiyum  athinmeal  thoobavarkkaththaiyum  poattu,  karththar  thangga'lukkuk  katta'laiyidaatha  anniya  akkiniyai  avarudaiya  sannithiyil  ko'nduvanthaarga'l.  (leaviyaraagamam  10:1)

அப்பொழுது  அக்கினி  கர்த்தருடைய  சந்நிதியிலிருந்து  புறப்பட்டு,  அவர்களைப்  பட்சித்தது;  அவர்கள்  கர்த்தருடைய  சந்நிதியில்  செத்தார்கள்.  (லேவியராகமம்  10:2)

appozhuthu  akkini  karththarudaiya  sannithiyilirunthu  pu’rappattu,  avarga'laip  padchiththathu;  avarga'l  karththarudaiya  sannithiyil  seththaarga'l.  (leaviyaraagamam  10:2)

அப்பொழுது  மோசே  ஆரோனை  நோக்கி:  என்னிடத்தில்  சேருகிறவர்களால்  நான்  பரிசுத்தம்  பண்ணப்பட்டு,  சகல  ஜனங்களுக்கும்  முன்பாக  நான்  மகிமைப்படுவேன்  என்று  கர்த்தர்  சொன்னது  இதுதான்  என்றான்;  ஆரோன்  பேசாதிருந்தான்.  (லேவியராகமம்  10:3)

appozhuthu  moasea  aaroanai  noakki:  ennidaththil  searugi’ravarga'laal  naan  parisuththam  pa'n'nappattu,  sagala  janangga'lukkum  munbaaga  naan  magimaippaduvean  en’ru  karththar  sonnathu  ithuthaan  en’raan;  aaroan  peasaathirunthaan.  (leaviyaraagamam  10:3)

பின்பு  மோசே  ஆரோனின்  சிறிய  தகப்பனான  ஊசியேலின்  குமாரராகிய  மீசவேலையும்  எல்சாபானையும்  அழைத்து:  நீங்கள்  கிட்டவந்து,  உங்கள்  சகோதரரைப்  பரிசுத்த  ஸ்தலத்துக்கு  முன்னின்று  எடுத்து,  பாளயத்துக்குப்  புறம்பே  கொண்டுபோங்கள்  என்றான்.  (லேவியராகமம்  10:4)

pinbu  moasea  aaroanin  si’riya  thagappanaana  oosiyealin  kumaararaagiya  meesavealaiyum  elsaapaanaiyum  azhaiththu:  neengga'l  kittavanthu,  ungga'l  sagoathararaip  parisuththa  sthalaththukku  munnin’ru  eduththu,  paa'layaththukkup  pu’rambea  ko'ndupoangga'l  en’raan.  (leaviyaraagamam  10:4)

மோசே  சொன்னபடி  அவர்கள்  கிட்டவந்து,  அவர்களை  அவர்கள்  உடுத்தியிருந்த  சட்டைகளோடும்  எடுத்துப்  பாளயத்துக்குப்  புறம்பே  கொண்டுபோனார்கள்.  (லேவியராகமம்  10:5)

moasea  sonnapadi  avarga'l  kittavanthu,  avarga'lai  avarga'l  uduththiyiruntha  sattaiga'loadum  eduththup  paa'layaththukkup  pu’rambea  ko'ndupoanaarga'l.  (leaviyaraagamam  10:5)

மோசே  ஆரோனையும்  எலெயாசார்  இத்தாமார்  என்னும்  அவன்  குமாரரையும்  நோக்கி:  நீங்கள்  சாகாதபடிக்கும்,  சபையனைத்தின்மேலும்  கடுங்கோபம்  வராதபடிக்கும்,  நீங்கள்  உங்கள்  தலைப்பாகையை  எடுத்துப்போடாமலும்,  உங்கள்  வஸ்திரங்களைக்  கிழிக்காமலும்  இருப்பீர்களாக;  உங்கள்  சகோதரராகிய  இஸ்ரவேல்  குடும்பத்தார்  யாவரும்  கர்த்தர்  கொளுத்தின  இந்த  அக்கினிக்காகப்  புலம்புவார்களாக.  (லேவியராகமம்  10:6)

moasea  aaroanaiyum  eleyaasaar  iththaamaar  ennum  avan  kumaararaiyum  noakki:  neengga'l  saagaathapadikkum,  sabaiyanaiththinmealum  kadungkoabam  varaathapadikkum,  neengga'l  ungga'l  thalaippaagaiyai  eduththuppoadaamalum,  ungga'l  vasthirangga'laik  kizhikkaamalum  iruppeerga'laaga;  ungga'l  sagoathararaagiya  israveal  kudumbaththaar  yaavarum  karththar  ko'luththina  intha  akkinikkaagap  pulambuvaarga'laaga.  (leaviyaraagamam  10:6)

நீங்கள்  சாகாதபடிக்கு  ஆசரிப்புக்  கூடாரவாசலிலிருந்து  புறப்படாதிருங்கள்;  கர்த்தருடைய  அபிஷேகதைலம்  உங்கள்மேல்  இருக்கிறதே  என்றான்;  அவர்கள்  மோசேயினுடைய  வார்த்தையின்படியே  செய்தார்கள்.  (லேவியராகமம்  10:7)

neengga'l  saagaathapadikku  aasarippuk  koodaaravaasalilirunthu  pu’rappadaathirungga'l;  karththarudaiya  abisheagathailam  ungga'lmeal  irukki’rathea  en’raan;  avarga'l  moaseayinudaiya  vaarththaiyinpadiyea  seythaarga'l.  (leaviyaraagamam  10:7)

கர்த்தர்  ஆரோனை  நோக்கி:  (லேவியராகமம்  10:8)

karththar  aaroanai  noakki:  (leaviyaraagamam  10:8)

நீயும்  உன்னோடேகூட  உன்  குமாரரும்  சாகாதிருக்கவேண்டுமானால்,  ஆசரிப்புக்  கூடாரத்துக்குள்  பிரவேசிக்கிறபோது,  திராட்சரசத்தையும்  மதுவையும்  குடிக்கவேண்டாம்.  (லேவியராகமம்  10:9)

neeyum  unnoadeakooda  un  kumaararum  saagaathirukkavea'ndumaanaal,  aasarippuk  koodaaraththukku'l  piraveasikki’rapoathu,  thiraadcharasaththaiyum  mathuvaiyum  kudikkavea'ndaam.  (leaviyaraagamam  10:9)

பரிசுத்தமுள்ளதற்கும்  பரிசுத்தமில்லாததற்கும்,  தீட்டுள்ளதற்கும்  தீட்டில்லாததற்கும்,  வித்தியாசம்பண்ணும்படிக்கும்,  (லேவியராகமம்  10:10)

parisuththamu'l'latha’rkum  parisuththamillaathatha’rkum,  theettu'l'latha’rkum  theettillaathatha’rkum,  viththiyaasampa'n'numpadikkum,  (leaviyaraagamam  10:10)

கர்த்தர்  மோசேயைக்கொண்டு  இஸ்ரவேல்  புத்திரருக்குச்  சொன்ன  சகல  பிரமாணங்களையும்  அவர்களுக்குப்  போதிக்கும்படிக்கும்,  இது  உங்கள்  தலைமுறைதோறும்  நித்திய  கட்டளையாயிருக்கும்  என்றார்.  (லேவியராகமம்  10:11)

karththar  moaseayaikko'ndu  israveal  puththirarukkuch  sonna  sagala  piramaa'nangga'laiyum  avarga'lukkup  poathikkumpadikkum,  ithu  ungga'l  thalaimu’raithoa’rum  niththiya  katta'laiyaayirukkum  en’raar.  (leaviyaraagamam  10:11)

மோசே  ஆரோனையும்  மீதியாயிருந்த  அவன்  குமாரராகிய  எலெயாசாரையும்  இத்தாமாரையும்  நோக்கி:  நீங்கள்  கர்த்தருடைய  தகனபலிகளில்  மீதியான  போஜனபலியை  எடுத்து,  பலிபீடத்தண்டையிலே  புளிப்பில்லாததாகப்  புசியுங்கள்;  அது  மகா  பரிசுத்தமானது.  (லேவியராகமம்  10:12)

moasea  aaroanaiyum  meethiyaayiruntha  avan  kumaararaagiya  eleyaasaaraiyum  iththaamaaraiyum  noakki:  neengga'l  karththarudaiya  thaganabaliga'lil  meethiyaana  poajanabaliyai  eduththu,  balipeedaththa'ndaiyilea  pu'lippillaathathaagap  pusiyungga'l;  athu  mahaa  parisuththamaanathu.  (leaviyaraagamam  10:12)

அதைப்  பரிசுத்த  ஸ்தலத்திலே  புசியுங்கள்;  அது  கர்த்தருடைய  தகனபலிகளில்  உனக்கும்  உன்  குமாரருக்கும்  ஏற்படுத்தப்பட்டதாயிருக்கிறது;  இப்படிக்  கட்டளை  பெற்றிருக்கிறேன்.  (லேவியராகமம்  10:13)

athaip  parisuththa  sthalaththilea  pusiyungga'l;  athu  karththarudaiya  thaganabaliga'lil  unakkum  un  kumaararukkum  ea’rpaduththappattathaayirukki’rathu;  ippadik  katta'lai  pet’rirukki’rean.  (leaviyaraagamam  10:13)

அசைவாட்டும்  மார்க்கண்டத்தையும்,  ஏறெடுத்துப்  படைக்கும்  முன்னந்தொடையையும்,  நீயும்  உன்னோடேகூட  உன்  குமாரரும்  குமாரத்திகளும்  சுத்தமான  ஸ்தலத்திலே  புசிப்பீர்களாக;  இஸ்ரவேல்  புத்திரருடைய  சமாதானபலிகளில்  அவைகள்  உனக்கும்  உன்  பிள்ளைகளுக்கும்  கிடைக்கும்படி  ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.  (லேவியராகமம்  10:14)

asaivaattum  maarkka'ndaththaiyum,  ea’reduththup  padaikkum  munnanthodaiyaiyum,  neeyum  unnoadeakooda  un  kumaararum  kumaaraththiga'lum  suththamaana  sthalaththilea  pusippeerga'laaga;  israveal  puththirarudaiya  samaathaanabaliga'lil  avaiga'l  unakkum  un  pi'l'laiga'lukkum  kidaikkumpadi  ea’rpaduththappattirukki’rathu.  (leaviyaraagamam  10:14)

கொழுப்பாகிய  தகனபலிகளோடே  அவர்கள்  கர்த்தருடைய  சந்நிதியில்  அசைவாட்டும்  பலியாக  அசைவாட்டும்படி  ஏறெடுத்துப்  படைக்கும்  முன்னந்தொடையையும்,  அசைவாட்டும்  மார்க்கண்டத்தையும்  கொண்டுவருவார்கள்;  அது  கர்த்தர்  கட்டளையிட்டபடியே  உனக்கும்  உன்  பிள்ளைகளுக்கும்  நித்திய  கட்டளையாக  ஏற்படுத்தப்பட்டிருக்கிறது  என்றான்.  (லேவியராகமம்  10:15)

kozhuppaagiya  thaganabaliga'loadea  avarga'l  karththarudaiya  sannithiyil  asaivaattum  baliyaaga  asaivaattumpadi  ea’reduththup  padaikkum  munnanthodaiyaiyum,  asaivaattum  maarkka'ndaththaiyum  ko'nduvaruvaarga'l;  athu  karththar  katta'laiyittapadiyea  unakkum  un  pi'l'laiga'lukkum  niththiya  katta'laiyaaga  ea’rpaduththappattirukki’rathu  en’raan.  (leaviyaraagamam  10:15)

பாவநிவாரணபலியாகச்  செலுத்தப்பட்ட  வெள்ளாட்டுக்கடாவை  மோசே  தேடிப்பார்த்தான்;  அது  தகனிக்கப்பட்டிருந்தது;  ஆகையால்,  மீதியாயிருந்த  எலெயாசார்  இத்தாமார்  என்னும்  ஆரோனின்  குமாரர்மேல்  அவன்  கோபங்கொண்டு:  (லேவியராகமம்  10:16)

paavanivaara'nabaliyaagach  seluththappatta  ve'l'laattukkadaavai  moasea  theadippaarththaan;  athu  thaganikkappattirunthathu;  aagaiyaal,  meethiyaayiruntha  eleyaasaar  iththaamaar  ennum  aaroanin  kumaararmeal  avan  koabangko'ndu:  (leaviyaraagamam  10:16)

பாவநிவாரணபலியை  நீங்கள்  பரிசுத்த  ஸ்தலத்தில்  புசியாமற்போனதென்ன?  அது  மகா  பரிசுத்தமாயிருக்கிறதே;  சபையின்  அக்கிரமத்தைச்  சுமந்து  தீர்ப்பதற்குக்  கர்த்தருடைய  சந்நிதியில்  அவர்களுக்காகப்  பாவநிவிர்த்தி  செய்யும்பொருட்டு,  அதை  உங்களுக்குக்  கொடுத்தாரே.  (லேவியராகமம்  10:17)

paavanivaara'nabaliyai  neengga'l  parisuththa  sthalaththil  pusiyaama’rpoanathenna?  athu  mahaa  parisuththamaayirukki’rathea;  sabaiyin  akkiramaththaich  sumanthu  theerppatha’rkuk  karththarudaiya  sannithiyil  avarga'lukkaagap  paavanivirththi  seyyumporuttu,  athai  ungga'lukkuk  koduththaarea.  (leaviyaraagamam  10:17)

அதின்  இரத்தம்  பரிசுத்த  ஸ்தலத்துக்குள்ளே  கொண்டுவரப்படவில்லையே;  நான்  கட்டளையிட்டபடி  நீங்கள்  அதைப்  பரிசுத்த  ஸ்தலத்தில்  புசிக்கவேண்டியதாயிருந்ததே  என்றான்.  (லேவியராகமம்  10:18)

athin  iraththam  parisuththa  sthalaththukku'l'lea  ko'nduvarappadavillaiyea;  naan  katta'laiyittapadi  neengga'l  athaip  parisuththa  sthalaththil  pusikkavea'ndiyathaayirunthathea  en’raan.  (leaviyaraagamam  10:18)

அப்பொழுது  ஆரோன்  மோசேயை  நோக்கி:  அவர்கள்  தங்கள்  பாவநிவாரணபலியையும்,  தங்கள்  சர்வாங்க  தகனபலியையும்  கர்த்தருடைய  சந்நிதியில்  செலுத்தின  இன்றுதானே  எனக்கு  இப்படி  நேரிட்டதே;  பாவநிவாரணபலியை  இன்று  நான்  புசித்தேனானால்,  அது  கர்த்தரின்  பார்வைக்கு  நன்றாய்  இருக்குமோ  என்றான்.  (லேவியராகமம்  10:19)

appozhuthu  aaroan  moaseayai  noakki:  avarga'l  thangga'l  paavanivaara'nabaliyaiyum,  thangga'l  sarvaangga  thaganabaliyaiyum  karththarudaiya  sannithiyil  seluththina  in’ruthaanea  enakku  ippadi  nearittathea;  paavanivaara'nabaliyai  in’ru  naan  pusiththeanaanaal,  athu  karththarin  paarvaikku  nan’raay  irukkumoa  en’raan.  (leaviyaraagamam  10:19)

மோசே  அதைக்  கேட்டபோது  அமைதலாயிருந்தான்.  (லேவியராகமம்  10:20)

moasea  athaik  keattapoathu  amaithalaayirunthaan.  (leaviyaraagamam  10:20)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!