Sunday, July 31, 2016

E'n'naagamam 27 | எண்ணாகமம் 27 | Numbers 27

யோசேப்பின்  குமாரனாகிய  மனாசேயின்  குடும்பங்களில்,  மனாசேயின்  குமாரனாகிய  மாகீரின்  மகனான  கிலெயாத்துக்குப்  பிறந்த  ஏபேருக்குப்  புத்திரனாயிருந்த  செலோப்பியாத்தின்  குமாரத்திகளாகிய  மக்லாள்,  நோவாள்,  ஒக்லாள்,  மில்காள்,  திர்சாள்  என்பவர்கள்  வந்து,  (எண்ணாகமம்  27:1)

yoaseappin  kumaaranaagiya  manaaseayin  kudumbangga'lil,  manaaseayin  kumaaranaagiya  maakeerin  maganaana  kileyaaththukkup  pi’rantha  eapearukkup  puththiranaayiruntha  seloappiyaaththin  kumaaraththiga'laagiya  maklaa'l,  noavaa'l,  oklaa'l,  milkaa'l,  thirsaa'l  enbavarga'l  vanthu,  (e’n’naagamam  27:1)

ஆசரிப்புக்  கூடாரவாசலிலே  மோசேக்கும்,  ஆசாரியனாகிய  எலெயாசாருக்கும்,  பிரபுக்களுக்கும்,  சபையனைத்திற்கும்  முன்பாக  நின்று:  (எண்ணாகமம்  27:2)

aasarippuk  koodaaravaasalilea  moaseakkum,  aasaariyanaagiya  eleyaasaarukkum,  pirabukka'lukkum,  sabaiyanaiththi’rkum  munbaaga  nin’ru:  (e’n’naagamam  27:2)

எங்கள்  தகப்பன்  வனாந்தரத்தில்  மரணமடைந்தார்;  அவர்  கர்த்தருக்கு  விரோதமாகக்  கூடின  கோராகின்  கூட்டத்தாரில்  சேர்ந்தவர்  அல்ல,  தம்முடைய  பாவத்தினாலே  மரித்தார்;  அவருக்குக்  குமாரர்  இல்லை.  (எண்ணாகமம்  27:3)

engga'l  thagappan  vanaantharaththil  mara'namadainthaar;  avar  karththarukku  viroathamaagak  koodina  koaraakin  koottaththaaril  searnthavar  alla,  thammudaiya  paavaththinaalea  mariththaar;  avarukkuk  kumaarar  illai.  (e’n’naagamam  27:3)

எங்கள்  தகப்பனுக்குக்  குமாரன்  இல்லாததினாலே,  அவருடைய  பேர்  அவருடைய  வம்சத்தில்  இல்லாமல்  அற்றுப்போகலாமா?  எங்கள்  தகப்பனுடைய  சகோதரருக்குள்ளே  எங்களுக்குக்  காணியாட்சி  கொடுக்கவேண்டும்  என்றார்கள்.  (எண்ணாகமம்  27:4)

engga'l  thagappanukkuk  kumaaran  illaathathinaalea,  avarudaiya  pear  avarudaiya  vamsaththil  illaamal  at’ruppoagalaamaa?  engga'l  thagappanudaiya  sagoathararukku'l'lea  engga'lukkuk  kaa'niyaadchi  kodukkavea'ndum  en’raarga'l.  (e’n’naagamam  27:4)

மோசே  அவர்களுடைய  நியாயத்தைக்  கர்த்தருடைய  சந்நிதியில்  கொண்டுபோனான்.  (எண்ணாகமம்  27:5)

moasea  avarga'ludaiya  niyaayaththaik  karththarudaiya  sannithiyil  ko'ndupoanaan.  (e’n’naagamam  27:5)

அப்பொழுது  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  (எண்ணாகமம்  27:6)

appozhuthu  karththar  moaseayai  noakki:  (e’n’naagamam  27:6)

செலோப்பியாத்தின்  குமாரத்திகள்  சொல்லுகிறது  சரிதான்;  அவர்களுக்கு  அவர்கள்  தகப்பனுடைய  சகோதரருக்குள்ளே  சுதந்தரம்  கொடுக்கவேண்டும்;  அவர்கள்  தகப்பன்  பின்வைத்த  சுதந்தரத்தை  அவர்களுக்குக்  கிடைக்கும்படி  செய்வாயாக.  (எண்ணாகமம்  27:7)

seloappiyaaththin  kumaaraththiga'l  sollugi’rathu  sarithaan;  avarga'lukku  avarga'l  thagappanudaiya  sagoathararukku'l'lea  suthantharam  kodukkavea'ndum;  avarga'l  thagappan  pinvaiththa  suthantharaththai  avarga'lukkuk  kidaikkumpadi  seyvaayaaga.  (e’n’naagamam  27:7)

மேலும்  நீ  இஸ்ரவேல்  புத்திரரை  நோக்கி:  ஒருவன்  குமாரன்  இல்லாமல்  மரித்தால்,  அவனுக்குரிய  சுதந்தரத்தை  அவன்  குமாரத்திக்குக்  கொடுக்கவேண்டும்.  (எண்ணாகமம்  27:8)

mealum  nee  israveal  puththirarai  noakki:  oruvan  kumaaran  illaamal  mariththaal,  avanukkuriya  suthantharaththai  avan  kumaaraththikkuk  kodukkavea'ndum.  (e’n’naagamam  27:8)

அவனுக்குக்  குமாரத்தியும்  இல்லாதிருந்தால்,  அவனுக்குரிய  சுதந்தரத்தை  அவன்  சகோதரருக்குக்  கொடுக்கவேண்டும்.  (எண்ணாகமம்  27:9)

avanukkuk  kumaaraththiyum  illaathirunthaal,  avanukkuriya  suthantharaththai  avan  sagoathararukkuk  kodukkavea'ndum.  (e’n’naagamam  27:9)

அவனுக்குச்  சகோதரரும்  இல்லாதிருந்தால்,  அவனுக்குரிய  சுதந்தரத்தை  அவன்  தகப்பனுடைய  சகோதரருக்குக்  கொடுக்கவேண்டும்.  (எண்ணாகமம்  27:10)

avanukkuch  sagoathararum  illaathirunthaal,  avanukkuriya  suthantharaththai  avan  thagappanudaiya  sagoathararukkuk  kodukkavea'ndum.  (e’n’naagamam  27:10)

அவன்  தகப்பனுக்குச்  சகோதரர்  இல்லாதிருந்தால்,  அவனுக்குரிய  சுதந்தரத்தை  அவன்  வம்சத்திலே  அவனுக்குக்  கிட்டின  உறவின்முறையானுக்குச்  சுதந்தரமாகக்  கொடுக்கவேண்டும்;  இது,  கர்த்தர்  மோசேக்குக்  கட்டளையிட்டபடியே,  இஸ்ரவேல்  புத்திரருக்கு  நியாயவிதிப்பிரமாணமாய்  இருக்கக்கடவது  என்று  சொல்  என்றார்.  (எண்ணாகமம்  27:11)

avan  thagappanukkuch  sagoatharar  illaathirunthaal,  avanukkuriya  suthantharaththai  avan  vamsaththilea  avanukkuk  kittina  u’ravinmu’raiyaanukkuch  suthantharamaagak  kodukkavea'ndum;  ithu,  karththar  moaseakkuk  katta'laiyittapadiyea,  israveal  puththirarukku  niyaayavithippiramaa'namaay  irukkakkadavathu  en’ru  sol  en’raar.  (e’n’naagamam  27:11)

பின்பு  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  நீ  இந்த  அபாரீம்  மலையில்  ஏறி,  நான்  இஸ்ரவேல்  புத்திரருக்குக்  கொடுத்த  தேசத்தைப்  பார்.  (எண்ணாகமம்  27:12)

pinbu  karththar  moaseayai  noakki:  nee  intha  abaareem  malaiyil  ea’ri,  naan  israveal  puththirarukkuk  koduththa  theasaththaip  paar.  (e’n’naagamam  27:12)

நீ  அதைப்  பார்த்தபின்பு,  உன்  சகோதரனாகிய  ஆரோன்  சேர்க்கப்பட்டதுபோல,  நீயும்  உன்  ஜனத்தாரிடத்தில்  சேர்க்கப்படுவாய்;  (எண்ணாகமம்  27:13)

nee  athaip  paarththapinbu,  un  sagoatharanaagiya  aaroan  searkkappattathupoala,  neeyum  un  janaththaaridaththil  searkkappaduvaay;  (e’n’naagamam  27:13)

சபையார்  வாக்குவாதம்பண்ணின  சீன்  வனாந்தரத்தில்  தண்ணீருக்கடுத்த  விஷயத்தில்  அவர்கள்  கண்களுக்கு  முன்பாக  என்னைப்  பரிசுத்தம்பண்ணவேண்டிய  நீங்கள்  என்  கட்டளையை  மீறினீர்களே  என்றார்.  இது  சீன்  வனாந்தரத்தில்  காதேஸ்  ஊர்அருகே  உண்டான  மேரிபாவின்  தண்ணீருக்கடுத்த  காரியமே.  (எண்ணாகமம்  27:14)

sabaiyaar  vaakkuvaathampa'n'nina  seen  vanaantharaththil  tha'n'neerukkaduththa  vishayaththil  avarga'l  ka'nga'lukku  munbaaga  ennaip  parisuththampa'n'navea'ndiya  neengga'l  en  katta'laiyai  mee’rineerga'lea  en’raar.  ithu  seen  vanaantharaththil  kaatheas  oorarugea  u'ndaana  mearibaavin  tha'n'neerukkaduththa  kaariyamea.  (e’n’naagamam  27:14)

அப்பொழுது  மோசே  கர்த்தரை  நோக்கி:  (எண்ணாகமம்  27:15)

appozhuthu  moasea  karththarai  noakki:  (e’n’naagamam  27:15)

கர்த்தருடைய  சபை  மேய்ப்பன்  இல்லாத  மந்தையைப்போல்  இராதபடிக்கு,  (எண்ணாகமம்  27:16)

karththarudaiya  sabai  meayppan  illaatha  manthaiyaippoal  iraathapadikku,  (e’n’naagamam  27:16)

அந்தச்  சபைக்கு  முன்பாகப்  போக்கும்  வரத்துமாய்  இருக்கும்படிக்கும்,  அவர்களைப்  போகவும்  வரவும்  பண்ணும்படிக்கும்,  மாம்சமான  யாவருடைய  ஆவிகளுக்கும்  தேவனாகிய  கர்த்தர்  ஒரு  புருஷனை  அவர்கள்மேல்  அதிகாரியாக  ஏற்படுத்தவேண்டும்  என்றான்.  (எண்ணாகமம்  27:17)

anthach  sabaikku  munbaagap  poakkum  varaththumaay  irukkumpadikkum,  avarga'laip  poagavum  varavum  pa'n'numpadikkum,  maamsamaana  yaavarudaiya  aaviga'lukkum  theavanaagiya  karththar  oru  purushanai  avarga'lmeal  athigaariyaaga  ea’rpaduththavea'ndum  en’raan.  (e’n’naagamam  27:17)

கர்த்தர்  மோசேயை  நோக்கி:  ஆவியைப்  பெற்றிருக்கிற  புருஷனாகிய  யோசுவா  என்னும்  நூனின்  குமாரனை  நீ  தெரிந்துகொண்டு,  அவன்மேல்  உன்  கையை  வைத்து,  (எண்ணாகமம்  27:18)

karththar  moaseayai  noakki:  aaviyaip  pet’rirukki’ra  purushanaagiya  yoasuvaa  ennum  noonin  kumaaranai  nee  therinthuko'ndu,  avanmeal  un  kaiyai  vaiththu,  (e’n’naagamam  27:18)

அவனை  ஆசாரியனாகிய  எலெயாசாருக்கும்  சபையனைத்திற்கும்  முன்பாக  நிறுத்தி,  அவர்கள்  கண்களுக்கு  முன்பாக  அவனுக்குக்  கட்டளைகொடுத்து,  (எண்ணாகமம்  27:19)

avanai  aasaariyanaagiya  eleyaasaarukkum  sabaiyanaiththi’rkum  munbaaga  ni’ruththi,  avarga'l  ka'nga'lukku  munbaaga  avanukkuk  katta'laikoduththu,  (e’n’naagamam  27:19)

இஸ்ரவேல்  புத்திரராகிய  சபையார்  எல்லாரும்  அவனுக்குக்  கீழ்ப்படியும்படிக்கு,  உன்  கனத்தில்  கொஞ்சம்  அவனுக்குக்  கொடு.  (எண்ணாகமம்  27:20)

israveal  puththiraraagiya  sabaiyaar  ellaarum  avanukkuk  keezhppadiyumpadikku,  un  kanaththil  kogncham  avanukkuk  kodu.  (e’n’naagamam  27:20)

அவன்  ஆசாரியனாகிய  எலெயாசாருக்கு  முன்பாக  நிற்கக்கடவன்;  அவனிமித்தம்  அந்த  ஆசாரியன்  கர்த்தருடைய  சந்நிதானத்தில்  வந்து,  ஊரீம்  என்னும்  நியாயத்தினாலே  ஆலோசனை  கேட்கக்கடவன்;  அவருடைய  கட்டளையின்படியே,  அவனும்  அவனோடேகூட  இஸ்ரவேல்  புத்திரராகிய  சபையார்  எல்லாரும்  போகவும்  அவருடைய  கட்டளையின்படியே  வரவும்  வேண்டியது  என்றார்.  (எண்ணாகமம்  27:21)

avan  aasaariyanaagiya  eleyaasaarukku  munbaaga  ni’rkakkadavan;  avanimiththam  antha  aasaariyan  karththarudaiya  sannithaanaththil  vanthu,  ooreem  ennum  niyaayaththinaalea  aaloasanai  keadkakkadavan;  avarudaiya  katta'laiyinpadiyea,  avanum  avanoadeakooda  israveal  puththiraraagiya  sabaiyaar  ellaarum  poagavum  avarudaiya  katta'laiyinpadiyea  varavum  vea'ndiyathu  en’raar.  (e’n’naagamam  27:21)

மோசே  தனக்குக்  கர்த்தர்  கட்டளையிட்டபடியே  யோசுவாவை  அழைத்துக்கொண்டுபோய்,  அவனை  ஆசாரியனாகிய  எலெயாசாருக்கும்  சபையனைத்திற்கும்  முன்பாக  நிறுத்தி,  (எண்ணாகமம்  27:22)

moasea  thanakkuk  karththar  katta'laiyittapadiyea  yoasuvaavai  azhaiththukko'ndupoay,  avanai  aasaariyanaagiya  eleyaasaarukkum  sabaiyanaiththi’rkum  munbaaga  ni’ruththi,  (e’n’naagamam  27:22)

அவன்மேல்  தன்  கைகளை  வைத்து,  கர்த்தர்  தனக்குச்  சொன்னபடியே  அவனுக்குக்  கட்டளைகொடுத்தான்.  (எண்ணாகமம்  27:23)

avanmeal  than  kaiga'lai  vaiththu,  karththar  thanakkuch  sonnapadiyea  avanukkuk  katta'laikoduththaan.  (e’n’naagamam  27:23)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!