Sunday, July 31, 2016

E'n'naagamam 25 | எண்ணாகமம் 25 | Numbers 25

இஸ்ரவேல்  சித்தீமிலே  தங்கியிருக்கையில்,  ஜனங்கள்  மோவாபின்  குமாரத்திகளோடே  வேசித்தனம்  பண்ணத்தொடங்கினார்கள்.  (எண்ணாகமம்  25:1)

israveal  siththeemilea  thanggiyirukkaiyil,  janangga'l  moavaabin  kumaaraththiga'loadea  veasiththanam  pa'n'naththodangginaarga'l.  (e’n’naagamam  25:1)

அவர்கள்  தங்கள்  தேவர்களுக்கு  இட்ட  பலிகளை  விருந்துண்ணும்படி  ஜனங்களை  அழைத்தார்கள்;  ஜனங்கள்  போய்ப்  புசித்து,  அவர்கள்  தேவர்களைப்  பணிந்துகொண்டார்கள்.  (எண்ணாகமம்  25:2)

avarga'l  thangga'l  theavarga'lukku  itta  baliga'lai  virunthu'n'numpadi  janangga'lai  azhaiththaarga'l;  janangga'l  poayp  pusiththu,  avarga'l  theavarga'laip  pa'ninthuko'ndaarga'l.  (e’n’naagamam  25:2)

இப்படி  இஸ்ரவேலர்  பாகால்பேயோரைப்  பற்றிக்கொண்டார்கள்;  அதனால்  இஸ்ரவேலர்மேல்  கர்த்தருடைய  கோபம்  மூண்டது.  (எண்ணாகமம்  25:3)

ippadi  isravealar  baagaalpeayoaraip  pat’rikko'ndaarga'l;  athanaal  isravealarmeal  karththarudaiya  koabam  moo'ndathu.  (e’n’naagamam  25:3)

கர்த்தர்  மோசேயை  நோக்கி:  கர்த்தருடைய  உக்கிரமான  கோபம்  இஸ்ரவேலைவிட்டு  நீங்கும்படி  நீ  ஜனங்களின்  தலைவர்  எல்லாரையும்  கூட்டிக்கொண்டு,  அப்படிச்  செய்தவர்களைச்  சூரியனுக்கு  எதிரே  கர்த்தருடைய  சந்நிதானத்தில்  தூக்கிப்போடும்படி  செய்  என்றார்.  (எண்ணாகமம்  25:4)

karththar  moaseayai  noakki:  karththarudaiya  ukkiramaana  koabam  isravealaivittu  neenggumpadi  nee  janangga'lin  thalaivar  ellaaraiyum  koottikko'ndu,  appadich  seythavarga'laich  sooriyanukku  ethirea  karththarudaiya  sannithaanaththil  thookkippoadumpadi  sey  en’raar.  (e’n’naagamam  25:4)

அப்படியே  மோசே  இஸ்ரவேலின்  நியாயாதிபதிகளை  நோக்கி:  நீங்கள்  அவரவர்  பாகால்பேயோரைப்  பற்றிக்கொண்ட  உங்கள்  மனிதரைக்  கொன்றுபோடுங்கள்  என்றான்.  (எண்ணாகமம்  25:5)

appadiyea  moasea  isravealin  niyaayaathibathiga'lai  noakki:  neengga'l  avaravar  baagaalpeayoaraip  pat’rikko'nda  ungga'l  manitharaik  kon’rupoadungga'l  en’raan.  (e’n’naagamam  25:5)

அப்பொழுது  மோசேயும்  இஸ்ரவேல்  புத்திரராகிய  சபையார்  அனைவரும்  ஆசரிப்புக்  கூடாரவாசலுக்கு  முன்பாக  அழுதுகொண்டு  நிற்கையில்,  அவர்கள்  கண்களுக்கு  முன்பாக  இஸ்ரவேல்  புத்திரரில்  ஒருவன்  ஒரு  மீதியானிய  ஸ்திரீயைத்  தன்  சகோதரரிடத்திலே  அழைத்துக்கொண்டுவந்தான்.  (எண்ணாகமம்  25:6)

appozhuthu  moaseayum  israveal  puththiraraagiya  sabaiyaar  anaivarum  aasarippuk  koodaaravaasalukku  munbaaga  azhuthuko'ndu  ni’rkaiyil,  avarga'l  ka'nga'lukku  munbaaga  israveal  puththiraril  oruvan  oru  meethiyaaniya  sthireeyaith  than  sagoathararidaththilea  azhaiththukko'nduvanthaan.  (e’n’naagamam  25:6)

அதை  ஆசாரியனாகிய  ஆரோனின்  குமாரனான  எலெயாசாரின்  மகன்  பினெகாஸ்  கண்டபோது,  அவன்  நடுச்சபையிலிருந்து  எழுந்து,  ஒரு  ஈட்டியைத்  தன்  கையிலே  பிடித்து,  (எண்ணாகமம்  25:7)

athai  aasaariyanaagiya  aaroanin  kumaaranaana  eleyaasaarin  magan  pinegaas  ka'ndapoathu,  avan  naduchsabaiyilirunthu  ezhunthu,  oru  eettiyaith  than  kaiyilea  pidiththu,  (e’n’naagamam  25:7)

இஸ்ரவேலனாகிய  அந்த  மனிதன்  வேசித்தனம்பண்ணும்  அறையிலே  அவன்  பின்னாலே  போய்,  இஸ்ரவேல்  மனிதனும்  அந்த  ஸ்திரீயுமாகிய  இருவருடைய  வயிற்றிலும்  ஈட்டி  உருவிப்போக  அவர்களைக்  குத்திப்போட்டான்;  அப்பொழுது  இஸ்ரவேல்  புத்திரரில்  உண்டான  வாதை  நின்றுபோயிற்று.  (எண்ணாகமம்  25:8)

isravealanaagiya  antha  manithan  veasiththanampa'n'num  a’raiyilea  avan  pinnaalea  poay,  israveal  manithanum  antha  sthireeyumaagiya  iruvarudaiya  vayit’rilum  eetti  uruvippoaga  avarga'laik  kuththippoattaan;  appozhuthu  israveal  puththiraril  u'ndaana  vaathai  nin’rupoayit’ru.  (e’n’naagamam  25:8)

அந்த  வாதையால்  செத்தவர்கள்  இருபத்துநாலாயிரம்பேர்.  (எண்ணாகமம்  25:9)

antha  vaathaiyaal  seththavarga'l  irubaththunaalaayirampear.  (e’n’naagamam  25:9)

கர்த்தர்  மோசேயை  நோக்கி:  (எண்ணாகமம்  25:10)

karththar  moaseayai  noakki:  (e’n’naagamam  25:10)

நான்  என்  எரிச்சலில்  இஸ்ரவேல்  புத்திரரை  நிர்மூலமாக்காதபடிக்கு,  ஆசாரியனாகிய  ஆரோனின்  குமாரனான  எலெயாசாரின்  மகன்  பினெகாஸ்,  என்  நிமித்தம்  அவர்கள்  நடுவில்  பக்திவைராக்கியம்  காண்பித்ததினால்,  இஸ்ரவேல்  புத்திரர்மேல்  உண்டான  என்  உக்கிரத்தைத்  திருப்பினான்.  (எண்ணாகமம்  25:11)

naan  en  erichchalil  israveal  puththirarai  nirmoolamaakkaathapadikku,  aasaariyanaagiya  aaroanin  kumaaranaana  eleyaasaarin  magan  pinegaas,  en  nimiththam  avarga'l  naduvil  bakthivairaakkiyam  kaa'nbiththathinaal,  israveal  puththirarmeal  u'ndaana  en  ukkiraththaith  thiruppinaan.  (e’n’naagamam  25:11)

ஆகையால்,  இதோ,  அவனுக்கு  என்  சமாதானத்தின்  உடன்படிக்கையைக்  கட்டளையிடுகிறேன்.  (எண்ணாகமம்  25:12)

aagaiyaal,  ithoa,  avanukku  en  samaathaanaththin  udanpadikkaiyaik  katta'laiyidugi’rean.  (e’n’naagamam  25:12)

அவன்  தன்  தேவனுக்காக  பக்திவைராக்கியம்  காண்பித்து,  இஸ்ரவேல்  புத்திரருக்காகப்  பாவநிவிர்த்தி  செய்தபடியினால்,  அவனுக்கும்  அவனுக்குப்  பின்பு  அவன்  சந்ததிக்கும்  நித்திய  ஆசாரிய  பட்டத்திற்குரிய  உடன்படிக்கை  உண்டாயிருக்கும்  என்று  சொல்  என்றார்.  (எண்ணாகமம்  25:13)

avan  than  theavanukkaaga  bakthivairaakkiyam  kaa'nbiththu,  israveal  puththirarukkaagap  paavanivirththi  seythapadiyinaal,  avanukkum  avanukkup  pinbu  avan  santhathikkum  niththiya  aasaariya  pattaththi’rkuriya  udanpadikkai  u'ndaayirukkum  en’ru  sol  en’raar.  (e’n’naagamam  25:13)

மீதியானிய  ஸ்திரீயோடே  குத்துண்டு  செத்த  இஸ்ரவேல்  மனிதனுடைய  பேர்  சிம்ரி;  அவன்  சல்லூவின்  குமாரனும்,  சிமியோனியரின்  தகப்பன்  வம்சத்தில்  ஒரு  பிரபுவுமாயிருந்தான்.  (எண்ணாகமம்  25:14)

meethiyaaniya  sthireeyoadea  kuththu'ndu  seththa  israveal  manithanudaiya  pear  simri;  avan  salloovin  kumaaranum,  simiyoaniyarin  thagappan  vamsaththil  oru  pirabuvumaayirunthaan.  (e’n’naagamam  25:14)

குத்துண்ட  மீதியானிய  ஸ்திரீயின்  பேர்  கஸ்பி,  அவள்  சூரின்  குமாரத்தி,  அவன்  மீதியானியருடைய  தகப்பன்  வம்சத்தாரான  ஜனங்களுக்குத்  தலைவனாயிருந்தான்.  (எண்ணாகமம்  25:15)

kuththu'nda  meethiyaaniya  sthireeyin  pear  kasbi,  ava'l  soorin  kumaaraththi,  avan  meethiyaaniyarudaiya  thagappan  vamsaththaaraana  janangga'lukkuth  thalaivanaayirunthaan.  (e’n’naagamam  25:15)

கர்த்தர்  மோசேயை  நோக்கி:  (எண்ணாகமம்  25:16)

karththar  moaseayai  noakki:  (e’n’naagamam  25:16)

மீதியானியரை  நெருக்கி  அவர்களை  வெட்டிப்போடுங்கள்.  (எண்ணாகமம்  25:17)

meethiyaaniyarai  nerukki  avarga'lai  vettippoadungga'l.  (e’n’naagamam  25:17)

பேயோரின்  சங்கதியிலும்  பேயோரின்  நிமித்தம்  வாதையுண்டான  நாளிலே  குத்துண்ட  அவர்கள்  சகோதரியாகிய  கஸ்பி  என்னும்  மீதியான்  பிரபுவினுடைய  குமாரத்தியின்  சங்கதியிலும்,  அவர்கள்  உங்களுக்குச்  செய்த  சர்ப்பனைகளினால்  உங்களை  மோசம்போக்கி  நெருக்கினார்களே  என்றார்.  (எண்ணாகமம்  25:18)

peayoarin  sanggathiyilum  peayoarin  nimiththam  vaathaiyu'ndaana  naa'lilea  kuththu'nda  avarga'l  sagoathariyaagiya  kasbi  ennum  meethiyaan  pirabuvinudaiya  kumaaraththiyin  sanggathiyilum,  avarga'l  ungga'lukkuch  seytha  sarppanaiga'linaal  ungga'lai  moasampoakki  nerukkinaarga'lea  en’raar.  (e’n’naagamam  25:18)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!