Sunday, July 31, 2016

E'n'naagamam 24 | எண்ணாகமம் 24 | Numbers 24


இஸ்ரவேலை  ஆசீர்வதிப்பதே  கர்த்தருக்குப்  பிரியம்  என்று  பிலேயாம்  கண்ட  போது,  அவன்  முந்திச்  செய்துவந்தது  போல  நிமித்தம்பார்க்கப்  போகாமல்,  வனாந்தரத்திற்கு  நேராகத்  தன்  முகத்தைத்  திருப்பி,  (எண்ணாகமம்  24:1)

isravealai  aaseervathippathea  karththarukkup  piriyam  en’ru  bileayaam  ka'nda  poathu,  avan  munthich  seythuvanthathu  poala  nimiththampaarkkap  poagaamal,  vanaantharaththi’rku  nearaagath  than  mugaththaith  thiruppi,  (e’n’naagamam  24:1)

தன்  கண்களை  ஏறெடுத்து,  இஸ்ரவேல்  தன்  கோத்திரங்களின்படியே  பாளயமிறங்கியிருக்கிறதைப்  பார்த்தான்;  தேவ  ஆவி  அவன்மேல்  வந்தது.  (எண்ணாகமம்  24:2)

than  ka'nga'lai  ea’reduththu,  israveal  than  koaththirangga'linpadiyea  paa'layami’ranggiyirukki’rathaip  paarththaan;  theava  aavi  avanmeal  vanthathu.  (e’n’naagamam  24:2)

அப்பொழுது  அவன்  தன்  வாக்கியத்தை  எடுத்துரைத்து:  பேயோரின்  குமாரனாகிய  பிலேயாம்  சொல்லுகிறதாவது,  கண்திறக்கப்பட்டவன்  உரைக்கிறதாவது,  (எண்ணாகமம்  24:3)

appozhuthu  avan  than  vaakkiyaththai  eduththuraiththu:  beayoarin  kumaaranaagiya  bileayaam  sollugi’rathaavathu,  ka'nthi’rakkappattavan  uraikki’rathaavathu,  (e’n’naagamam  24:3)

தேவன்  அருளும்  வார்த்தைகளைக்  கேட்டு,  சர்வவல்லவரின்  தரிசனத்தைக்  கண்டு  தாழ  விழும்போது,  கண்திறக்கப்பட்டவன்  விளம்புகிறதாவது,  (எண்ணாகமம்  24:4)

theavan  aru'lum  vaarththaiga'laik  keattu,  sarvavallavarin  tharisanaththaik  ka'ndu  thaazha  vizhumpoathu,  ka'nthi’rakkappattavan  vi'lambugi’rathaavathu,  (e’n’naagamam  24:4)

யாக்கோபே,  உன்  கூடாரங்களும்,  இஸ்ரவேலே,  உன்  வாசஸ்தலங்களும்  எவ்வளவு  அழகானவைகள்!  (எண்ணாகமம்  24:5)

yaakkoabea,  un  koodaarangga'lum,  isravealea,  un  vaasasthalangga'lum  evva'lavu  azhagaanavaiga'l!  (e’n’naagamam  24:5)

அவைகள்  பரவிப்போகிற  ஆறுகளைப்போலவும்,  நதியோரத்திலுள்ள  தோட்டங்களைப்போலவும்,  கர்த்தர்  நாட்டின  சந்தனமரங்களைப்போலவும்,  தண்ணீர்  அருகே  உள்ள  கேதுரு  விருட்சங்களைப்போலவும்  இருக்கிறது.  (எண்ணாகமம்  24:6)

avaiga'l  paravippoagi’ra  aa’ruga'laippoalavum,  nathiyoaraththilu'l'la  thoattangga'laippoalavum,  karththar  naattina  santhanamarangga'laippoalavum,  tha'n'neer  arugea  u'l'la  keathuru  virudchangga'laippoalavum  irukki’rathu.  (e’n’naagamam  24:6)

அவர்களுடைய  நீர்ச்சால்களிலிருந்து  தண்ணீர்  பாயும்;  அவர்கள்  வித்து  திரளான  தண்ணீர்களில்  பரவும்;  அவர்களுடைய  ராஜா  ஆகாகைப்  பார்க்கிலும்  உயருவான்;  அவர்கள்  ராஜ்யம்  மேன்மையடையும்.  (எண்ணாகமம்  24:7)

avarga'ludaiya  neerchsaalga'lilirunthu  tha'n'neer  paayum;  avarga'l  viththu  thira'laana  tha'n'neerga'lil  paravum;  avarga'ludaiya  raajaa  aagaakaip  paarkkilum  uyaruvaan;  avarga'l  raajyam  meanmaiyadaiyum.  (e’n’naagamam  24:7)

தேவன்  அவர்களை  எகிப்திலிருந்து  புறப்படப்பண்ணினார்;  காண்டாமிருகத்துக்கொத்த  பெலன்  அவர்களுக்கு  உண்டு;  அவர்கள்  தங்கள்  சத்துருக்களாகிய  ஜாதிகளைப்  பட்சித்து,  அவர்கள்  எலும்புகளை  நொறுக்கி,  அவர்களைத்  தங்கள்  அம்புகளாலே  எய்வார்கள்.  (எண்ணாகமம்  24:8)

theavan  avarga'lai  egipthilirunthu  pu’rappadappa'n'ninaar;  kaa'ndaamirugaththukkoththa  belan  avarga'lukku  u'ndu;  avarga'l  thangga'l  saththurukka'laagiya  jaathiga'laip  padchiththu,  avarga'l  elumbuga'lai  no’rukki,  avarga'laith  thangga'l  ambuga'laalea  eyvaarga'l.  (e’n’naagamam  24:8)

சிங்கம்போலவும்  துஷ்ட  சிங்கம்போலவும்  மடங்கிப்  படுத்துக்கொண்டிருக்கிறார்கள்;  அவர்களை  எழுப்புகிறவன்  யார்?  உங்களை  ஆசீர்வதிக்கிறவன்  ஆசீர்வதிக்கப்பட்டவன்,  உங்களைச்  சபிக்கிறவன்  சபிக்கப்பட்டவன்  என்றான்.  (எண்ணாகமம்  24:9)

singgampoalavum  thushda  singgampoalavum  madanggip  paduththukko'ndirukki’raarga'l;  avarga'lai  ezhuppugi’ravan  yaar?  ungga'lai  aaseervathikki’ravan  aaseervathikkappattavan,  ungga'laich  sabikki’ravan  sabikkappattavan  en’raan.  (e’n’naagamam  24:9)

அப்பொழுது  பாலாக்  பிலேயாமின்மேல்  கோபம்  மூண்டவனாகி,  கையோடே  கைதட்டி,  பிலேயாமை  நோக்கி:  என்  சத்துருக்களைச்  சபிக்க  உன்னை  அழைத்தனுப்பினேன்;  நீயோ  இந்த  மூன்றுமுறையும்  அவர்களை  ஆசீர்வதிக்கவே  ஆசீர்வதித்தாய்.  (எண்ணாகமம்  24:10)

appozhuthu  baalaak  bileayaaminmeal  koabam  moo'ndavanaagi,  kaiyoadea  kaithatti,  bileayaamai  noakki:  en  saththurukka'laich  sabikka  unnai  azhaiththanuppinean;  neeyoa  intha  moon’rumu’raiyum  avarga'lai  aaseervathikkavea  aaseervathiththaay.  (e’n’naagamam  24:10)

ஆகையால்  உன்  இடத்துக்கு  ஓடிப்போ;  உன்னை  மிகவும்  கனம்பண்ணுவேன்  என்றேன்;  நீ  கனமடையாதபடிக்குக்  கர்த்தர்  தடுத்தார்  என்றான்.  (எண்ணாகமம்  24:11)

aagaiyaal  un  idaththukku  oadippoa;  unnai  migavum  kanampa'n'nuvean  en’rean;  nee  kanamadaiyaathapadikkuk  karththar  thaduththaar  en’raan.  (e’n’naagamam  24:11)

அப்பொழுது  பிலேயாம்  பாலாகை  நோக்கி:  பாலாக்  எனக்குத்  தன்  வீடு  நிறைய  வெள்ளியும்  பொன்னும்  கொடுத்தாலும்,  நான்  என்  மனதாய்  நன்மையாகிலும்  தீமையாகிலும்  செய்கிறதற்குக்  கர்த்தரின்  கட்டளையை  மீறக்கூடாது;  கர்த்தர்  சொல்வதையே  சொல்வேன்  என்று,  (எண்ணாகமம்  24:12)

appozhuthu  bileayaam  baalaakai  noakki:  baalaak  enakkuth  than  veedu  ni’raiya  ve'l'liyum  ponnum  koduththaalum,  naan  en  manathaay  nanmaiyaagilum  theemaiyaagilum  seygi’ratha’rkuk  karththarin  katta'laiyai  mee’rakkoodaathu;  karththar  solvathaiyea  solvean  en’ru,  (e’n’naagamam  24:12)

நீர்  என்னிடத்திற்கு  அனுப்பின  ஸ்தானாபதிகளிடத்தில்  நான்  சொல்லவில்லையா?  (எண்ணாகமம்  24:13)

neer  ennidaththi’rku  anuppina  sthaanaabathiga'lidaththil  naan  sollavillaiyaa?  (e’n’naagamam  24:13)

இதோ,  நான்  என்  ஜனத்தாரிடத்திற்குப்  போகிறேன்;  பிற்காலத்திலே  இந்த  ஜனங்கள்  உம்முடைய  ஜனங்களுக்குச்  செய்வது  இன்னதென்று  உமக்குத்  தெரிவிப்பேன்  வாரும்  என்று  சொல்லி,  (எண்ணாகமம்  24:14)

ithoa,  naan  en  janaththaaridaththi’rkup  poagi’rean;  pi’rkaalaththilea  intha  janangga'l  ummudaiya  janangga'lukkuch  seyvathu  innathen’ru  umakkuth  therivippean  vaarum  en’ru  solli,  (e’n’naagamam  24:14)

அவன்  தன்  வாக்கியத்தை  எடுத்துரைத்து:  பேயோரின்  குமாரன்  பிலேயாம்  சொல்லுகிறதாவது,  கண்திறக்கப்பட்டவன்  உரைக்கிறதாவது,  (எண்ணாகமம்  24:15)

avan  than  vaakkiyaththai  eduththuraiththu:  beayoarin  kumaaran  bileayaam  sollugi’rathaavathu,  ka'nthi’rakkappattavan  uraikki’rathaavathu,  (e’n’naagamam  24:15)

தேவன்  அருளும்  வார்த்தைகளைக்  கேட்டு,  உன்னதமானவர்  அளித்த  அறிவை  அறிந்து,  சர்வவல்லவரின்  தரிசனத்தைக்  கண்டு,  தாழவிழும்போது,  கண்திறக்கப்பட்டவன்  விளம்புகிறதாவது;  (எண்ணாகமம்  24:16)

theavan  aru'lum  vaarththaiga'laik  keattu,  unnathamaanavar  a'liththa  a’rivai  a’rinthu,  sarvavallavarin  tharisanaththaik  ka'ndu,  thaazhavizhumpoathu,  ka'nthi’rakkappattavan  vi'lambugi’rathaavathu;  (e’n’naagamam  24:16)

அவரைக்  காண்பேன்,  இப்பொழுது  அல்ல;  அவரைத்  தரிசிப்பேன்,  சமீபமாய்  அல்ல;  ஒரு  நட்சத்திரம்  யாக்கோபிலிருந்து  உதிக்கும்,  ஒரு  செங்கோல்  இஸ்ரவேலிலிருந்து  எழும்பும்;  அது  மோவாபின்  எல்லைகளை  நொறுக்கி,  சேத்புத்திரர்  எல்லாரையும்  நிர்மூலமாக்கும்.  (எண்ணாகமம்  24:17)

avaraik  kaa'nbean,  ippozhuthu  alla;  avaraith  tharisippean,  sameebamaay  alla;  oru  nadchaththiram  yaakkoabilirunthu  uthikkum,  oru  senggoal  isravealilirunthu  ezhumbum;  athu  moavaabin  ellaiga'lai  no’rukki,  seathpuththirar  ellaaraiyum  nirmoolamaakkum.  (e’n’naagamam  24:17)

ஏதோம்  சுதந்தரமாகும்,  சேயீர்  தன்  சத்துருக்களுக்குச்  சுதந்தரமாகும்;  இஸ்ரவேல்  பராக்கிரமஞ்செய்யும்.  (எண்ணாகமம்  24:18)

eathoam  suthantharamaagum,  seayeer  than  saththurukka'lukkuch  suthantharamaagum;  israveal  baraakkiramagnseyyum.  (e’n’naagamam  24:18)

யாக்கோபிலிருந்து  தோன்றும்  ஒருவர்  ஆளுகை  செய்வார்;  பட்டணங்களில்  மீதியானவர்களை  அழிப்பார்  என்றான்.  (எண்ணாகமம்  24:19)

yaakkoabilirunthu  thoan’rum  oruvar  aa'lugai  seyvaar;  patta'nangga'lil  meethiyaanavarga'lai  azhippaar  en’raan.  (e’n’naagamam  24:19)

மேலும்,  அவன்  அமலேக்கைப்  பார்த்து,  தன்  வாக்கியத்தை  எடுத்துரைத்து:  அமலேக்கு  முந்தியெழும்பினவன்;  ஆனாலும்  அவன்  முடிவிலே  முற்றிலும்  நாசமாவான்  என்றான்.  (எண்ணாகமம்  24:20)

mealum,  avan  amaleakkaip  paarththu,  than  vaakkiyaththai  eduththuraiththu:  amaleakku  munthiyezhumbinavan;  aanaalum  avan  mudivilea  mut’rilum  naasamaavaan  en’raan.  (e’n’naagamam  24:20)

அன்றியும்  அவன்  கேனியனைப்  பார்த்து,  தன்  வாக்கியத்தை  எடுத்துரைத்து:  உன்  வாசஸ்தலம்  அரணிப்பானது;  உன்  கூட்டைக்  கன்மலையில்  கட்டினாய்.  (எண்ணாகமம்  24:21)

an’riyum  avan  keaniyanaip  paarththu,  than  vaakkiyaththai  eduththuraiththu:  un  vaasasthalam  ara'nippaanathu;  un  koottaik  kanmalaiyil  kattinaay.  (e’n’naagamam  24:21)

ஆகிலும்  கேனியன்  அழிந்துபோவான்;  அசூர்  உன்னைச்  சிறைபிடித்துக்  கொண்டுபோக  எத்தனைநாள்  செல்லும்  என்றான்.  (எண்ணாகமம்  24:22)

aagilum  keaniyan  azhinthupoavaan;  asoor  unnaich  si’raipidiththuk  ko'ndupoaga  eththanainaa'l  sellum  en’raan.  (e’n’naagamam  24:22)

பின்னும்  அவன்  தன்  வாக்கியத்தை  எடுத்துரைத்து:  ஐயோ,  தேவன்  இதைச்  செய்யும்போது  யார்  பிழைப்பான்;  (எண்ணாகமம்  24:23)

pinnum  avan  than  vaakkiyaththai  eduththuraiththu:  aiyoa,  theavan  ithaich  seyyumpoathu  yaar  pizhaippaan;  (e’n’naagamam  24:23)

சித்தீமின்  கரைதுறையிலிருந்து  கப்பல்கள்  வந்து,  அசூரைச்  சிறுமைப்படுத்தி,  ஏபேரையும்  வருத்தப்படுத்தும்;  அவனும்  முற்றிலும்  அழிந்துபோவான்  என்றான்.  (எண்ணாகமம்  24:24)

siththeemin  karaithu’raiyilirunthu  kappalga'l  vanthu,  asooraich  si’rumaippaduththi,  eabearaiyum  varuththappaduththum;  avanum  mut’rilum  azhinthupoavaan  en’raan.  (e’n’naagamam  24:24)

பின்பு  பிலேயாம்  எழுந்து  புறப்பட்டு,  தன்  இடத்திற்குத்  திரும்பினான்;  பாலாகும்  தன்  வழியே  போனான்.  (எண்ணாகமம்  24:25)

pinbu  bileayaam  ezhunthu  pu’rappattu,  than  idaththi’rkuth  thirumbinaan;  baalaakum  than  vazhiyea  poanaan.  (e’n’naagamam  24:25)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!