Sunday, July 31, 2016

E'n'naagamam 21 | எண்ணாகமம் 21 | Numbers 21


வேவுகாரர்  காண்பித்த  வழியாக  இஸ்ரவேலர்  வருகிறார்கள்  என்று  தெற்கே  வாசம்பண்ணுகிற  கானானியனாகிய  ஆராத்  ராஜா  கேள்விப்பட்டபோது,  அவன்  இஸ்ரவேலருக்கு  விரோதமாக  யுத்தம்பண்ணி,  அவர்களில்  சிலரைச்  சிறைபிடித்துக்கொண்டுபோனான்.  (எண்ணாகமம்  21:1)

veavukaarar  kaa'nbiththa  vazhiyaaga  isravealar  varugi’raarga'l  en’ru  the’rkea  vaasampa'n'nugi’ra  kaanaaniyanaagiya  aaraath  raajaa  kea'lvippattapoathu,  avan  isravealarukku  viroathamaaga  yuththampa'n'ni,  avarga'lil  silaraich  si’raipidiththukko'ndupoanaan.  (e’n’naagamam  21:1)

அப்பொழுது  இஸ்ரவேலர்  கர்த்தரை  நோக்கி:  தேவரீர்  இந்த  ஜனங்களை  எங்கள்  கையில்  ஒப்புக்கொடுத்தால்,  அவர்களுடைய  பட்டணங்களைச்  சங்காரம்  பண்ணுவோம்  என்று  பிரதிக்கினை  பண்ணினார்கள்.  (எண்ணாகமம்  21:2)

appozhuthu  isravealar  karththarai  noakki:  theavareer  intha  janangga'lai  engga'l  kaiyil  oppukkoduththaal,  avarga'ludaiya  patta'nangga'laich  sanggaaram  pa'n'nuvoam  en’ru  pirathikkinai  pa'n'ninaarga'l.  (e’n’naagamam  21:2)

கர்த்தர்  இஸ்ரவேலின்  சத்தத்துக்குச்  செவிகொடுத்து,  அவர்களுக்குக்  கானானியரை  ஒப்புக்கொடுத்தார்;  அப்பொழுது  அவர்களையும்  அவர்கள்  பட்டணங்களையும்  சங்காரம்பண்ணி,  அவ்விடத்திற்கு  ஓர்மா  என்று  பேரிட்டார்கள்.  (எண்ணாகமம்  21:3)

karththar  isravealin  saththaththukkuch  sevikoduththu,  avarga'lukkuk  kaanaaniyarai  oppukkoduththaar;  appozhuthu  avarga'laiyum  avarga'l  patta'nangga'laiyum  sanggaarampa'n'ni,  avvidaththi’rku  oarmaa  en’ru  pearittaarga'l.  (e’n’naagamam  21:3)

அவர்கள்  ஏதோம்  தேசத்தைச்  சுற்றிப்போகும்படிக்கு,  ஓர்  என்னும்  மலையைவிட்டு,  சிவந்த  சமுத்திரத்தின்  வழியாய்ப்  பிரயாணம்பண்ணினார்கள்;  வழியினிமித்தம்  ஜனங்கள்  மனமடிவடைந்தார்கள்.  (எண்ணாகமம்  21:4)

avarga'l  eathoam  theasaththaich  sut’rippoagumpadikku,  oar  ennum  malaiyaivittu,  sivantha  samuththiraththin  vazhiyaayp  pirayaa'nampa'n'ninaarga'l;  vazhiyinimiththam  janangga'l  manamadivadainthaarga'l.  (e’n’naagamam  21:4)

ஜனங்கள்  தேவனுக்கும்  மோசேக்கும்  விரோதமாகப்  பேசி:  நாங்கள்  வனாந்தரத்திலே  சாகும்படி  நீங்கள்  எங்களை  எகிப்து  தேசத்திலிருந்து  வரப்பண்ணினதென்ன?  இங்கே  அப்பமும்  இல்லை,  தண்ணீரும்  இல்லை;  இந்த  அற்பமான  உணவு  எங்கள்  மனதுக்கு  வெறுப்பாயிருக்கிறது  என்றார்கள்.  (எண்ணாகமம்  21:5)

janangga'l  theavanukkum  moaseakkum  viroathamaagap  peasi:  naangga'l  vanaantharaththilea  saagumpadi  neengga'l  engga'lai  egipthu  theasaththilirunthu  varappa'n'ninathenna?  inggea  appamum  illai,  tha'n'neerum  illai;  intha  a’rpamaana  u'navu  engga'l  manathukku  ve’ruppaayirukki’rathu  en’raarga'l.  (e’n’naagamam  21:5)

அப்பொழுது  கர்த்தர்  கொள்ளிவாய்ச்  சர்ப்பங்களை  ஜனங்களுக்குள்ளே  அனுப்பினார்;  அவைகள்  ஜனங்களைக்  கடித்ததினால்  இஸ்ரவேலருக்குள்ளே  அநேக  ஜனங்கள்  செத்தார்கள்.  (எண்ணாகமம்  21:6)

appozhuthu  karththar  ko'l'livaaych  sarppangga'lai  janangga'lukku'l'lea  anuppinaar;  avaiga'l  janangga'laik  kadiththathinaal  isravealarukku'l'lea  aneaga  janangga'l  seththaarga'l.  (e’n’naagamam  21:6)

அதினால்  ஜனங்கள்  மோசேயினிடத்தில்  போய்:  நாங்கள்  கர்த்தருக்கும்  உமக்கும்  விரோதமாய்ப்  பேசினதினால்  பாவஞ்செய்தோம்;  சர்ப்பங்கள்  எங்களைவிட்டு  நீங்கும்படி  கர்த்தரை  நோக்கி  விண்ணப்பம்  பண்ணவேண்டும்  என்றார்கள்;  மோசே  ஜனங்களுக்காக  விண்ணப்பம்பண்ணினான்.  (எண்ணாகமம்  21:7)

athinaal  janangga'l  moaseayinidaththil  poay:  naangga'l  karththarukkum  umakkum  viroathamaayp  peasinathinaal  paavagnseythoam;  sarppangga'l  engga'laivittu  neenggumpadi  karththarai  noakki  vi'n'nappam  pa'n'navea'ndum  en’raarga'l;  moasea  janangga'lukkaaga  vi'n'nappampa'n'ninaan.  (e’n’naagamam  21:7)

அப்பொழுது  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  நீ  ஒரு  கொள்ளிவாய்ச்  சர்ப்பத்தின்  உருவத்தைச்  செய்து,  அதை  ஒரு  கம்பத்தின்மேல்  தூக்கிவை;  கடிக்கப்பட்டவன்  எவனோ  அவன்  அதை  நோக்கிப்பார்த்தால்  பிழைப்பான்  என்றார்.  (எண்ணாகமம்  21:8)

appozhuthu  karththar  moaseayai  noakki:  nee  oru  ko'l'livaaych  sarppaththin  uruvaththaich  seythu,  athai  oru  kambaththinmeal  thookkivai;  kadikkappattavan  evanoa  avan  athai  noakkippaarththaal  pizhaippaan  en’raar.  (e’n’naagamam  21:8)

அப்படியே  மோசே  ஒரு  வெண்கலச்  சர்ப்பத்தை  உண்டாக்கி,  அதை  ஒரு  கம்பத்தின்மேல்  தூக்கிவைத்தான்;  சர்ப்பம்  ஒருவனைக்  கடித்தபோது,  அவன்  அந்த  வெண்கலச்  சர்ப்பத்தை  நோக்கிப்பார்த்துப்  பிழைப்பான்.  (எண்ணாகமம்  21:9)

appadiyea  moasea  oru  ve'ngalach  sarppaththai  u'ndaakki,  athai  oru  kambaththinmeal  thookkivaiththaan;  sarppam  oruvanaik  kadiththapoathu,  avan  antha  ve'ngalach  sarppaththai  noakkippaarththup  pizhaippaan.  (e’n’naagamam  21:9)

இஸ்ரவேல்  புத்திரர்  பிரயாணப்பட்டுப்போய்,  ஓபோத்தில்  பாளயமிறங்கினார்கள்.  (எண்ணாகமம்  21:10)

israveal  puththirar  pirayaa'nappattuppoay,  oaboaththil  paa'layami’rangginaarga'l.  (e’n’naagamam  21:10)

ஓபோத்திலிருந்து  பிரயாணம்பண்ணி,  சூரியோதயத்திற்கு  நேராய்  மோவாபுக்கு  எதிரான  வனாந்தரத்திலுள்ள  அபாரீமின்  மேடுகளில்  பாளயமிறங்கினார்கள்.  (எண்ணாகமம்  21:11)

oaboaththilirunthu  pirayaa'nampa'n'ni,  sooriyoathayaththi’rku  nearaay  moavaabukku  ethiraana  vanaantharaththilu'l'la  abaareemin  meaduga'lil  paa'layami’rangginaarga'l.  (e’n’naagamam  21:11)

அங்கேயிருந்து  பிரயாணப்பட்டுப்போய்,  சாரேத்  பள்ளத்தாக்கிலே  பாளயமிறங்கினார்கள்.  (எண்ணாகமம்  21:12)

anggeayirunthu  pirayaa'nappattuppoay,  saareath  pa'l'laththaakkilea  paa'layami’rangginaarga'l.  (e’n’naagamam  21:12)

அங்கேயிருந்து  பிரயாணப்பட்டுப்போய்,  எமோரியரின்  எல்லையிலிருந்து  வருகிறதும்  வனாந்தரத்தில்  ஓடுகிறதுமான  அர்னோன்  ஆற்றுக்கு  இப்புறம்  பாளயமிறங்கினார்கள்;  அந்த  அர்னோன்  மோவாபுக்கும்  எமோரியருக்கும்  நடுவே  இருக்கிற  மோவாபின்  எல்லை.  (எண்ணாகமம்  21:13)

anggeayirunthu  pirayaa'nappattuppoay,  emoariyarin  ellaiyilirunthu  varugi’rathum  vanaantharaththil  oadugi’rathumaana  arnoan  aat’rukku  ippu’ram  paa'layami’rangginaarga'l;  antha  arnoan  moavaabukkum  emoariyarukkum  naduvea  irukki’ra  moavaabin  ellai.  (e’n’naagamam  21:13)

அதினால்  சூப்பாவிலுள்ள  வாகேபும்,  அர்னோனின்  ஆற்றுக்கால்களும்,  (எண்ணாகமம்  21:14)

athinaal  sooppaavilu'l'la  vaageabum,  arnoanin  aat’rukkaalga'lum,  (e’n’naagamam  21:14)

ஆர்  என்னும்  ஸ்தலத்துக்குப்  பாயும்  நீரோடையும்  மோவாபின்  எல்லையைச்  சார்ந்திருக்கிறது  என்னும்  வசனம்  கர்த்தருடைய  யுத்த  புஸ்தகத்தில்  எழுதியிருக்கிறது.  (எண்ணாகமம்  21:15)

aar  ennum  sthalaththukkup  paayum  neeroadaiyum  moavaabin  ellaiyaich  saarnthirukki’rathu  ennum  vasanam  karththarudaiya  yuththa  pusthagaththil  ezhuthiyirukki’rathu.  (e’n’naagamam  21:15)

அங்கேயிருந்து  பேயேருக்குப்  போனார்கள்;  ஜனங்களைக்  கூடிவரச்செய்,  அவர்களுக்குத்  தண்ணீர்  கொடுப்பேன்  என்று  கர்த்தர்  மோசேக்குச்  சொன்ன  ஊற்று  இருக்கிற  இடம்  அதுதான்.  (எண்ணாகமம்  21:16)

anggeayirunthu  beayearukkup  poanaarga'l;  janangga'laik  koodivarachsey,  avarga'lukkuth  tha'n'neer  koduppean  en’ru  karththar  moaseakkuch  sonna  oot’ru  irukki’ra  idam  athuthaan.  (e’n’naagamam  21:16)

அப்பொழுது  இஸ்ரவேலர்  பாடின  பாட்டாவது:  ஊற்றுத்  தண்ணீரே,  பொங்கிவா;  அதைக்குறித்துப்  பாடுவோம்  வாருங்கள்.  (எண்ணாகமம்  21:17)

appozhuthu  isravealar  paadina  paattaavathu:  oot’ruth  tha'n'neerea,  ponggivaa;  athaikku’riththup  paaduvoam  vaarungga'l.  (e’n’naagamam  21:17)

நியாயப்பிரமாணிக்கனின்  ஏவுதலால்  அதிபதிகள்  கிணற்றைத்  தோண்டினார்கள்;  ஜனத்தில்  மேன்மக்கள்  தங்கள்  தண்டாயுதங்களைக்கொண்டு  தோண்டினார்கள்  என்று  பாடினார்கள்.  (எண்ணாகமம்  21:18)

niyaayappiramaa'nikkanin  eavuthalaal  athibathiga'l  ki'nat’raith  thoa'ndinaarga'l;  janaththil  meanmakka'l  thangga'l  tha'ndaayuthangga'laikko'ndu  thoa'ndinaarga'l  en’ru  paadinaarga'l.  (e’n’naagamam  21:18)

அந்த  வனாந்தரத்திலிருந்து  மாத்தனாவுக்கும்,  மாத்தனாவிலிருந்து  நகாலியேலுக்கும்,  நகாலியேலிலிருந்து  பாமோத்துக்கும்,  (எண்ணாகமம்  21:19)

antha  vanaantharaththilirunthu  maaththanaavukkum,  maaththanaavilirunthu  nagaaliyealukkum,  nagaaliyealilirunthu  baamoaththukkum,  (e’n’naagamam  21:19)

பள்ளத்தாக்கிலுள்ள  மோவாபின்  வெளியில்  இருக்கிற  பாமோத்திலிருந்து  எஷிமோனை  நோக்கும்  பிஸ்காவின்  உச்சிக்கும்  போனார்கள்.  (எண்ணாகமம்  21:20)

pa'l'laththaakkilu'l'la  moavaabin  ve'liyil  irukki’ra  baamoaththilirunthu  eshimoanai  noakkum  piskaavin  uchchikkum  poanaarga'l.  (e’n’naagamam  21:20)

அப்பொழுது  இஸ்ரவேலர்  எமோரியரின்  ராஜாவாகிய  சீகோனிடத்தில்  ஸ்தானாபதிகளை  அனுப்பி:  (எண்ணாகமம்  21:21)

appozhuthu  isravealar  emoariyarin  raajaavaagiya  seegoanidaththil  sthaanaabathiga'lai  anuppi:  (e’n’naagamam  21:21)

உமது  தேசத்தின்  வழியாய்க்  கடந்துபோகும்படி  உத்தரவு  கொடுக்கவேண்டும்;  நாங்கள்  வயல்களிலும்,  திராட்சத்தோட்டங்களிலும்  போகாமலும்,  துரவுகளின்  தண்ணீரைக்  குடியாமலும்,  உமது  எல்லையைக்  கடந்துபோகுமட்டும்  ராஜபாதையில்  நடந்துபோவோம்  என்று  சொல்லச்சொன்னார்கள்.  (எண்ணாகமம்  21:22)

umathu  theasaththin  vazhiyaayk  kadanthupoagumpadi  uththaravu  kodukkavea'ndum;  naangga'l  vayalga'lilum,  thiraadchaththoattangga'lilum  poagaamalum,  thuravuga'lin  tha'n'neeraik  kudiyaamalum,  umathu  ellaiyaik  kadanthupoagumattum  raajapaathaiyil  nadanthupoavoam  en’ru  sollachsonnaarga'l.  (e’n’naagamam  21:22)

சீகோன்  தன்  எல்லைவழியாய்க்  கடந்துபோக  இஸ்ரவேலுக்கு  உத்தரவு  கொடாமல்,  தன்  ஜனங்களெல்லாரையும்  கூட்டிக்கொண்டு,  இஸ்ரவேலருக்கு  விரோதமாக  வனாந்தரத்திலே  புறப்பட்டு,  யாகாசுக்கு  வந்து,  இஸ்ரவேலரோடே  யுத்தம்பண்ணினான்.  (எண்ணாகமம்  21:23)

seegoan  than  ellaivazhiyaayk  kadanthupoaga  isravealukku  uththaravu  kodaamal,  than  janangga'lellaaraiyum  koottikko'ndu,  isravealarukku  viroathamaaga  vanaantharaththilea  pu’rappattu,  yaagaasukku  vanthu,  isravealaroadea  yuththampa'n'ninaan.  (e’n’naagamam  21:23)

இஸ்ரவேலர்  அவனைப்  பட்டயக்கருக்கினால்  வெட்டி,  அர்னோன்  தொடங்கி  அம்மோன்  புத்திரரின்  தேசத்தைச்சார்ந்த  யாப்போக்குவரைக்குமுள்ள  அவனுடைய  தேசத்தைக்  கட்டிக்கொண்டார்கள்;  அம்மோன்  புத்திரரின்  எல்லை  அரணிப்பானதாயிருந்தது.  (எண்ணாகமம்  21:24)

isravealar  avanaip  pattayakkarukkinaal  vetti,  arnoan  thodanggi  ammoan  puththirarin  theasaththaichsaarntha  yaabboakkuvaraikkumu'l'la  avanudaiya  theasaththaik  kattikko'ndaarga'l;  ammoan  puththirarin  ellai  ara'nippaanathaayirunthathu.  (e’n’naagamam  21:24)

இஸ்ரவேலர்  அந்தப்  பட்டணங்கள்  யாவையும்  பிடித்து,  எஸ்போனிலும்  அதைச்  சார்ந்த  எல்லாக்  கிராமங்களிலும்  எமோரியருடைய  எல்லாப்  பட்டணங்களிலும்  குடியிருந்தார்கள்.  (எண்ணாகமம்  21:25)

isravealar  anthap  patta'nangga'l  yaavaiyum  pidiththu,  esboanilum  athaich  saarntha  ellaak  kiraamangga'lilum  emoariyarudaiya  ellaap  patta'nangga'lilum  kudiyirunthaarga'l.  (e’n’naagamam  21:25)

எஸ்போனானது  எமோரியரின்  ராஜாவாகிய  சீகோனின்  பட்டணமாயிருந்தது;  அவன்  மோவாபியரின்  முந்தின  ராஜாவுக்கு  விரோதமாக  யுத்தம்பண்ணி,  அர்னோன்வரைக்கும்  இருந்த  அவன்  தேசத்தையெல்லாம்  அவன்  கையிலிருந்து  பறித்துக்கொண்டான்.  (எண்ணாகமம்  21:26)

esboanaanathu  emoariyarin  raajaavaagiya  seegoanin  patta'namaayirunthathu;  avan  moavaabiyarin  munthina  raajaavukku  viroathamaaga  yuththampa'n'ni,  arnoanvaraikkum  iruntha  avan  theasaththaiyellaam  avan  kaiyilirunthu  pa’riththukko'ndaan.  (e’n’naagamam  21:26)

அதினாலே  கவிகட்டுகிறவர்கள்:  எஸ்போனுக்கு  வாருங்கள்;  சீகோனின்  பட்டணம்  ஸ்திரமாய்க்  கட்டப்படுவதாக.  (எண்ணாகமம்  21:27)

athinaalea  kavikattugi’ravarga'l:  esboanukku  vaarungga'l;  seegoanin  patta'nam  sthiramaayk  kattappaduvathaaga.  (e’n’naagamam  21:27)

எஸ்போனிலிருந்து  அக்கினியும்  சீகோனுடைய  பட்டணத்திலிருந்து  ஜுவாலையும்  புறப்பட்டு,  மோவாபுடைய  ஆர்  என்னும்  ஊரையும்,  அர்னோனுடைய  மேடுகளிலுள்ள  ஆண்டவமார்களையும்  பட்சித்தது.  (எண்ணாகமம்  21:28)

esboanilirunthu  akkiniyum  seegoanudaiya  patta'naththilirunthu  juvaalaiyum  pu’rappattu,  moavaabudaiya  aar  ennum  ooraiyum,  arnoanudaiya  meaduga'lilu'l'la  aa'ndavamaarga'laiyum  padchiththathu.  (e’n’naagamam  21:28)

ஐயோ,  மோவாபே,  கேமோஷ்  தேவனின்  ஜனமே,  நீ  நாசமானாய்;  தப்பி  ஓடின  தன்  குமாரரையும்  தன்  குமாரத்திகளையும்  எமோரியரின்  ராஜாவாகிய  சீகோனுக்குச்  சிறைகளாக  ஒப்புக்கொடுத்தான்.  (எண்ணாகமம்  21:29)

aiyoa,  moavaabea,  keamoash  theavanin  janamea,  nee  naasamaanaay;  thappi  oadina  than  kumaararaiyum  than  kumaaraththiga'laiyum  emoariyarin  raajaavaagiya  seegoanukkuch  si’raiga'laaga  oppukkoduththaan.  (e’n’naagamam  21:29)

அவர்களை  எய்துபோட்டோம்;  எஸ்போன்  பட்டணம்  தீபோன்  ஊர்வரைக்கும்  நாசமாயிற்று;  மேதேபாவுக்குச்  சமீபமான  நோப்பா  பட்டணபரியந்தம்  அவர்களைப்  பாழாக்கினோம்  என்று  பாடினார்கள்.  (எண்ணாகமம்  21:30)

avarga'lai  eythupoattoam;  esboan  patta'nam  theeboan  oorvaraikkum  naasamaayit’ru;  meatheabaavukkuch  sameebamaana  noappaa  patta'napariyantham  avarga'laip  paazhaakkinoam  en’ru  paadinaarga'l.  (e’n’naagamam  21:30)

இஸ்ரவேலர்  இப்படியே  எமோரியரின்  தேசத்திலே  குடியிருந்தார்கள்.  (எண்ணாகமம்  21:31)

isravealar  ippadiyea  emoariyarin  theasaththilea  kudiyirunthaarga'l.  (e’n’naagamam  21:31)

பின்பு,  மோசே  யாசேர்  பட்டணத்துக்கு  வேவு  பார்க்கிறவர்களை  அனுப்பினான்;  அவர்கள்  அதைச்சேர்ந்த  கிராமங்களைக்  கட்டிக்கொண்டு,  அங்கே  இருந்த  எமோரியரைத்  துரத்திவிட்டார்கள்.  (எண்ணாகமம்  21:32)

pinbu,  moasea  yaasear  patta'naththukku  veavu  paarkki’ravarga'lai  anuppinaan;  avarga'l  athaichsearntha  kiraamangga'laik  kattikko'ndu,  anggea  iruntha  emoariyaraith  thuraththivittaarga'l.  (e’n’naagamam  21:32)

பின்பு  பாசானுக்குப்  போகிற  வழியாய்த்  திரும்பிவிட்டார்கள்;  அப்பொழுது  பாசான்  ராஜாவாகிய  ஓக்  என்பவன்  தன்  சமஸ்த  ஜனங்களோடும்  அவர்களை  எதிர்த்து  யுத்தம்பண்ணும்படிக்கு,  எத்ரேயுக்குப்  புறப்பட்டு  வந்தான்.  (எண்ணாகமம்  21:33)

pinbu  baasaanukkup  poagi’ra  vazhiyaayth  thirumbivittaarga'l;  appozhuthu  baasaan  raajaavaagiya  oak  enbavan  than  samastha  janangga'loadum  avarga'lai  ethirththu  yuththampa'n'numpadikku,  ethreayukkup  pu’rappattu  vanthaan.  (e’n’naagamam  21:33)

கர்த்தர்  மோசேயை  நோக்கி:  அவனுக்குப்  பயப்படவேண்டாம்;  அவனையும்  அவன்  ஜனங்கள்  எல்லாரையும்,  அவன்  தேசத்தையும்  உன்  கையில்  ஒப்புக்கொடுத்தேன்;  எஸ்போனிலே  வாசமாயிருந்த  எமோரியரின்  ராஜாவாகிய  சீகோனுக்கு  நீ  செய்தபடியே  இவனுக்கும்  செய்வாய்  என்றார்.  (எண்ணாகமம்  21:34)

karththar  moaseayai  noakki:  avanukkup  bayappadavea'ndaam;  avanaiyum  avan  janangga'l  ellaaraiyum,  avan  theasaththaiyum  un  kaiyil  oppukkoduththean;  esboanilea  vaasamaayiruntha  emoariyarin  raajaavaagiya  seegoanukku  nee  seythapadiyea  ivanukkum  seyvaay  en’raar.  (e’n’naagamam  21:34)

அப்படியே  ஒருவரும்  உயிருடன்  மீதியாயிராதபடிக்கு  அவனையும்,  அவன்  குமாரரையும்,  அவனுடைய  சகல  ஜனங்களையும்  வெட்டிப்போட்டு,  அவன்  தேசத்தைக்  கட்டிக்கொண்டார்கள்.  (எண்ணாகமம்  21:35)

appadiyea  oruvarum  uyirudan  meethiyaayiraathapadikku  avanaiyum,  avan  kumaararaiyum,  avanudaiya  sagala  janangga'laiyum  vettippoattu,  avan  theasaththaik  kattikko'ndaarga'l.  (e’n’naagamam  21:35)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!