Sunday, July 31, 2016

E'n'naagamam 20 | எண்ணாகமம் 20 | Numbers 20

இஸ்ரவேல்  புத்திரரின்  சபையார்  எல்லாரும்  முதலாம்  மாதத்தில்  சீன்வனாந்தரத்திலே  சேர்ந்து,  ஜனங்கள்  காதேசிலே  தங்கியிருக்கையில்,  மிரியாம்  மரணமடைந்து,  அங்கே  அடக்கம்பண்ணப்பட்டாள்.  (எண்ணாகமம்  20:1)

israveal  puththirarin  sabaiyaar  ellaarum  muthalaam  maathaththil  seenvanaantharaththilea  searnthu,  janangga'l  kaatheasilea  thanggiyirukkaiyil,  miriyaam  mara'namadainthu,  anggea  adakkampa'n'nappattaa'l.  (e’n’naagamam  20:1)

ஜனங்களுக்குத்  தண்ணீர்  இல்லாதிருந்தது;  அப்பொழுது  அவர்கள்  மோசேக்கும்  ஆரோனுக்கும்  விரோதமாகக்  கூட்டங்கூடினார்கள்.  (எண்ணாகமம்  20:2)

janangga'lukkuth  tha'n'neer  illaathirunthathu;  appozhuthu  avarga'l  moaseakkum  aaroanukkum  viroathamaagak  koottangkoodinaarga'l.  (e’n’naagamam  20:2)

ஜனங்கள்  மோசேயோடே  வாக்குவாதம்பண்ணி:  எங்கள்  சகோதரர்  கர்த்தருடைய  சந்நிதியில்  மாண்டபோது  நாங்களும்  மாண்டுபோயிருந்தால்  நலமாயிருக்கும்.  (எண்ணாகமம்  20:3)

janangga'l  moaseayoadea  vaakkuvaathampa'n'ni:  engga'l  sagoatharar  karththarudaiya  sannithiyil  maa'ndapoathu  naangga'lum  maa'ndupoayirunthaal  nalamaayirukkum.  (e’n’naagamam  20:3)

நாங்களும்  எங்கள்  மிருகங்களும்  இங்கே  சாகும்படி,  நீங்கள்  கர்த்தரின்  சபையை  இந்த  வனாந்தரத்திலே  கொண்டுவந்தது  என்ன;  (எண்ணாகமம்  20:4)

naangga'lum  engga'l  mirugangga'lum  inggea  saagumpadi,  neengga'l  karththarin  sabaiyai  intha  vanaantharaththilea  ko'nduvanthathu  enna;  (e’n’naagamam  20:4)

விதைப்பும்,  அத்திமரமும்,  திராட்சச்செடியும்,  மாதளஞ்செடியும்,  குடிக்கத்தண்ணீரும்  இல்லாத  இந்தக்  கெட்ட  இடத்தில்  எங்களைக்  கொண்டுவரும்படி,  நீங்கள்  எங்களை  எகிப்திலிருந்து  புறப்படப்பண்ணினது  என்ன  என்றார்கள்.  (எண்ணாகமம்  20:5)

vithaippum,  aththimaramum,  thiraadchachsediyum,  maatha'lagnsediyum,  kudikkaththa'n'neerum  illaatha  inthak  ketta  idaththil  engga'laik  ko'nduvarumpadi,  neengga'l  engga'lai  egipthilirunthu  pu’rappadappa'n'ninathu  enna  en’raarga'l.  (e’n’naagamam  20:5)

அப்பொழுது  மோசேயும்  ஆரோனும்  சபையாரைவிட்டு,  ஆசரிப்புக்  கூடாரவாசலில்  போய்,  முகங்குப்புற  விழுந்தார்கள்;  கர்த்தருடைய  மகிமை  அவர்களுக்குக்  காணப்பட்டது.  (எண்ணாகமம்  20:6)

appozhuthu  moaseayum  aaroanum  sabaiyaaraivittu,  aasarippuk  koodaaravaasalil  poay,  mugangkuppu’ra  vizhunthaarga'l;  karththarudaiya  magimai  avarga'lukkuk  kaa'nappattathu.  (e’n’naagamam  20:6)

கர்த்தர்  மோசேயை  நோக்கி:  (எண்ணாகமம்  20:7)

karththar  moaseayai  noakki:  (e’n’naagamam  20:7)

நீ  கோலை  எடுத்துக்கொண்டு,  நீயும்  உன்  சகோதரனாகிய  ஆரோனும்  சபையாரைக்  கூடிவரச்செய்து,  அவர்கள்  கண்களுக்குமுன்னே  கன்மலையைப்  பார்த்துப்  பேசுங்கள்;  அப்பொழுது  அது  தன்னிடத்திலுள்ள  தண்ணீரைக்  கொடுக்கும்;  இப்படி  நீ  அவர்களுக்குக்  கன்மலையிலிருந்து  தண்ணீர்  புறப்படப்பண்ணி,  சபையாருக்கும்  அவர்கள்  மிருகங்களுக்கும்  குடிக்கக்  கொடுப்பாய்  என்றார்.  (எண்ணாகமம்  20:8)

nee  koalai  eduththukko'ndu,  neeyum  un  sagoatharanaagiya  aaroanum  sabaiyaaraik  koodivarachseythu,  avarga'l  ka'nga'lukkumunnea  kanmalaiyaip  paarththup  peasungga'l;  appozhuthu  athu  thannidaththilu'l'la  tha'n'neeraik  kodukkum;  ippadi  nee  avarga'lukkuk  kanmalaiyilirunthu  tha'n'neer  pu’rappadappa'n'ni,  sabaiyaarukkum  avarga'l  mirugangga'lukkum  kudikkak  koduppaay  en’raar.  (e’n’naagamam  20:8)

அப்பொழுது  மோசே  தனக்குக்  கர்த்தர்  கட்டளையிட்டபடியே  கர்த்தருடைய  சந்நிதியிலிருந்த  கோலை  எடுத்தான்.  (எண்ணாகமம்  20:9)

appozhuthu  moasea  thanakkuk  karththar  katta'laiyittapadiyea  karththarudaiya  sannithiyiliruntha  koalai  eduththaan.  (e’n’naagamam  20:9)

மோசேயும்  ஆரோனும்  சபையாரைக்  கன்மலைக்கு  முன்பாகக்  கூடிவரச்செய்தார்கள்;  அப்பொழுது  மோசே  அவர்களை  நோக்கி:  கலகக்காரரே,  கேளுங்கள்,  உங்களுக்கு  இந்தக்  கன்மலையிலிருந்து  நாங்கள்  தண்ணீர்  புறப்படப்பண்ணுவோமோ  என்று  சொல்லி,  (எண்ணாகமம்  20:10)

moaseayum  aaroanum  sabaiyaaraik  kanmalaikku  munbaagak  koodivarachseythaarga'l;  appozhuthu  moasea  avarga'lai  noakki:  kalagakkaararea,  kea'lungga'l,  ungga'lukku  inthak  kanmalaiyilirunthu  naangga'l  tha'n'neer  pu’rappadappa'n'nuvoamoa  en’ru  solli,  (e’n’naagamam  20:10)

தன்  கையை  ஓங்கி,  கன்மலையைத்  தன்  கோலினால்  இரண்டுதரம்  அடித்தான்;  உடனே  தண்ணீர்  ஏராளமாய்ப்  புறப்பட்டது,  சபையார்  குடித்தார்கள்;  அவர்கள்  மிருகங்களும்  குடித்தது.  (எண்ணாகமம்  20:11)

than  kaiyai  oanggi,  kanmalaiyaith  than  koalinaal  ira'ndutharam  adiththaan;  udanea  tha'n'neer  earaa'lamaayp  pu’rappattathu,  sabaiyaar  kudiththaarga'l;  avarga'l  mirugangga'lum  kudiththathu.  (e’n’naagamam  20:11)

பின்பு  கர்த்தர்  மோசேயையும்  ஆரோனையும்  நோக்கி:  இஸ்ரவேல்  புத்திரரின்  கண்களுக்கு  முன்பாக  என்னைப்  பரிசுத்தம்பண்ணும்படி,  நீங்கள்  என்னை  விசுவாசியாமற்  போனபடியினால்,  இந்தச்  சபையாருக்கு  நான்  கொடுத்த  தேசத்துக்குள்  நீங்கள்  அவர்களைக்  கொண்டுபோவதில்லை  என்றார்.  (எண்ணாகமம்  20:12)

pinbu  karththar  moaseayaiyum  aaroanaiyum  noakki:  israveal  puththirarin  ka'nga'lukku  munbaaga  ennaip  parisuththampa'n'numpadi,  neengga'l  ennai  visuvaasiyaama’r  poanapadiyinaal,  inthach  sabaiyaarukku  naan  koduththa  theasaththukku'l  neengga'l  avarga'laik  ko'ndupoavathillai  en’raar.  (e’n’naagamam  20:12)

இங்கே  இஸ்ரவேல்  புத்திரர்  கர்த்தரோடே  வாக்குவாதம்பண்ணினதினாலும்,  அவர்களுக்குள்ளே  அவருடைய  பரிசுத்தம்  விளங்கினதினாலும்  இது  மேரிபாவின்  தண்ணீர்  என்னப்பட்டது.  (எண்ணாகமம்  20:13)

inggea  israveal  puththirar  karththaroadea  vaakkuvaathampa'n'ninathinaalum,  avarga'lukku'l'lea  avarudaiya  parisuththam  vi'langginathinaalum  ithu  mearibaavin  tha'n'neer  ennappattathu.  (e’n’naagamam  20:13)

பின்பு  மோசே  காதேசிலிருந்து  ஏதோமின்  ராஜாவினிடத்துக்கு  ஸ்தானாபதிகளை  அனுப்பி:  (எண்ணாகமம்  20:14)

pinbu  moasea  kaatheasilirunthu  eathoamin  raajaavinidaththukku  sthaanaabathiga'lai  anuppi:  (e’n’naagamam  20:14)

எங்கள்  பிதாக்கள்  எகிப்துக்குப்  போனதும்,  நாங்கள்  எகிப்திலே  நெடுநாள்  வாசம்பண்ணினதும்,  எகிப்தியர்  எங்களையும்  எங்கள்  பிதாக்களையும்  உபத்திரவப்படுத்தினதும்,  இவைகளினால்  எங்களுக்கு  நேரிட்ட  எல்லா  வருத்தமும்  உமக்குத்  தெரிந்திருக்கிறது.  (எண்ணாகமம்  20:15)

engga'l  pithaakka'l  egipthukkup  poanathum,  naangga'l  egipthilea  nedunaa'l  vaasampa'n'ninathum,  egipthiyar  engga'laiyum  engga'l  pithaakka'laiyum  ubaththiravappaduththinathum,  ivaiga'linaal  engga'lukku  nearitta  ellaa  varuththamum  umakkuth  therinthirukki’rathu.  (e’n’naagamam  20:15)

கர்த்தரை  நோக்கி  நாங்கள்  மன்றாடினோம்;  அவர்  எங்களுக்குச்  செவிகொடுத்து,  ஒரு  தூதனை  அனுப்பி,  எங்களை  எகிப்திலிருந்து  புறப்படப்பண்ணினார்;  இப்பொழுது  நாங்கள்  உமது  எல்லைக்கு  உட்பட்ட  காதேஸ்  ஊரில்  வந்திருக்கிறோம்.  (எண்ணாகமம்  20:16)

karththarai  noakki  naangga'l  man’raadinoam;  avar  engga'lukkuch  sevikoduththu,  oru  thoothanai  anuppi,  engga'lai  egipthilirunthu  pu’rappadappa'n'ninaar;  ippozhuthu  naangga'l  umathu  ellaikku  udpatta  kaatheas  ooril  vanthirukki’roam.  (e’n’naagamam  20:16)

நாங்கள்  உமது  தேசத்தின்  வழியாய்க்  கடந்துபோகும்படி  உத்தரவு  கொடுக்கவேண்டும்;  வயல்வெளிகள்  வழியாகவும்,  திராட்சத்தோட்டங்கள்  வழியாகவும்  நாங்கள்  போகாமலும்,  துரவுகளின்  தண்ணீரைக்  குடியாமலும்,  ராஜபாதையாகவே  நடந்து,  உமது  எல்லையைக்  கடந்துபோகுமட்டும்,  வலதுபுறம்  இடதுபுறம்  சாயாதிருப்போம்  என்று,  உமது  சகோதரனாகிய  இஸ்ரவேல்  சொல்லி  அனுப்புகிறான்  என்று  சொல்லச்சொன்னான்.  (எண்ணாகமம்  20:17)

naangga'l  umathu  theasaththin  vazhiyaayk  kadanthupoagumpadi  uththaravu  kodukkavea'ndum;  vayalve'liga'l  vazhiyaagavum,  thiraadchaththoattangga'l  vazhiyaagavum  naangga'l  poagaamalum,  thuravuga'lin  tha'n'neeraik  kudiyaamalum,  raajapaathaiyaagavea  nadanthu,  umathu  ellaiyaik  kadanthupoagumattum,  valathupu’ram  idathupu’ram  saayaathiruppoam  en’ru,  umathu  sagoatharanaagiya  israveal  solli  anuppugi’raan  en’ru  sollachsonnaan.  (e’n’naagamam  20:17)

அதற்கு  ஏதோம்:  நீ  என்  தேசத்தின்  வழியாய்க்  கடந்துபோகக்கூடாது;  போனால்  பட்டயத்தோடே  உன்னை  எதிர்க்கப்  புறப்படுவேன்  என்று  அவனுக்குச்  சொல்லச்சொன்னான்.  (எண்ணாகமம்  20:18)

atha’rku  eathoam:  nee  en  theasaththin  vazhiyaayk  kadanthupoagakkoodaathu;  poanaal  pattayaththoadea  unnai  ethirkkap  pu’rappaduvean  en’ru  avanukkuch  sollachsonnaan.  (e’n’naagamam  20:18)

அப்பொழுது  இஸ்ரவேல்  புத்திரர்  அவனை  நோக்கி:  நடப்பான  பாதையின்  வழியாய்ப்  போவோம்;  நாங்களும்  எங்கள்  மிருகங்களும்  உன்  தண்ணீரைக்  குடித்தால்,  அதற்குக்  கிரயங்கொடுப்போம்;  வேறொன்றும்  செய்யாமல்,  கால்நடையாய்  மாத்திரம்  கடந்துபோவோம்  என்றார்கள்.  (எண்ணாகமம்  20:19)

appozhuthu  israveal  puththirar  avanai  noakki:  nadappaana  paathaiyin  vazhiyaayp  poavoam;  naangga'lum  engga'l  mirugangga'lum  un  tha'n'neeraik  kudiththaal,  atha’rkuk  kirayangkoduppoam;  vea’ron’rum  seyyaamal,  kaalnadaiyaay  maaththiram  kadanthupoavoam  en’raarga'l.  (e’n’naagamam  20:19)

அதற்கு  அவன்:  நீ  கடந்துபோகக்கூடாது  என்று  சொல்லி,  வெகு  ஜனங்களோடும்  பலத்த  கையோடும்  அவர்களை  எதிர்க்கப்  புறப்பட்டான்.  (எண்ணாகமம்  20:20)

atha’rku  avan:  nee  kadanthupoagakkoodaathu  en’ru  solli,  vegu  janangga'loadum  balaththa  kaiyoadum  avarga'lai  ethirkkap  pu’rappattaan.  (e’n’naagamam  20:20)

இப்படி  ஏதோம்  தன்  எல்லைவழியாய்க்  கடந்துபோகும்படி  இஸ்ரவேலருக்கு  உத்தரவு  கொடுக்கவில்லை;  ஆகையால்  இஸ்ரவேலர்  அவனை  விட்டு  விலகிப்போனார்கள்.  (எண்ணாகமம்  20:21)

ippadi  eathoam  than  ellaivazhiyaayk  kadanthupoagumpadi  isravealarukku  uththaravu  kodukkavillai;  aagaiyaal  isravealar  avanai  vittu  vilagippoanaarga'l.  (e’n’naagamam  20:21)

இஸ்ரவேல்  புத்திரரான  சபையார்  எல்லாரும்  காதேசை  விட்டுப்  பிரயாணப்பட்டு,  ஓர்  என்னும்  மலைக்குப்  போனார்கள்.  (எண்ணாகமம்  20:22)

israveal  puththiraraana  sabaiyaar  ellaarum  kaatheasai  vittup  pirayaa'nappattu,  oar  ennum  malaikkup  poanaarga'l.  (e’n’naagamam  20:22)

ஏதோம்  தேசத்தின்  எல்லைக்கு  அருகான  ஓர்  என்னும்  மலையிலே  கர்த்தர்  மோசேயையும்  ஆரோனையும்  நோக்கி:  (எண்ணாகமம்  20:23)

eathoam  theasaththin  ellaikku  arugaana  oar  ennum  malaiyilea  karththar  moaseayaiyum  aaroanaiyum  noakki:  (e’n’naagamam  20:23)

ஆரோன்  தன்  ஜனத்தாரோடே  சேர்க்கப்படுவான்.  மேரிபாவின்  தண்ணீரைப்பற்றிய  காரியத்தில்  நீங்கள்  என்  வாக்குக்குக்  கீழ்ப்படியாமற்போனபடியினால்,  நான்  இஸ்ரவேல்  புத்திரருக்குக்  கொடுக்கிற  தேசத்தில்  அவன்  பிரவேசிப்பதில்லை.  (எண்ணாகமம்  20:24)

aaroan  than  janaththaaroadea  searkkappaduvaan.  mearibaavin  tha'n'neeraippat’riya  kaariyaththil  neengga'l  en  vaakkukkuk  keezhppadiyaama’rpoanapadiyinaal,  naan  israveal  puththirarukkuk  kodukki’ra  theasaththil  avan  piraveasippathillai.  (e’n’naagamam  20:24)

நீ  ஆரோனையும்  அவன்  குமாரனாகிய  எலெயாசாரையும்  கூட்டிக்கொண்டு,  அவர்களை  ஓர்  என்னும்  மலையில்  ஏறப்பண்ணி,  (எண்ணாகமம்  20:25)

nee  aaroanaiyum  avan  kumaaranaagiya  eleyaasaaraiyum  koottikko'ndu,  avarga'lai  oar  ennum  malaiyil  ea’rappa'n'ni,  (e’n’naagamam  20:25)

ஆரோன்  உடுத்திருக்கிற  வஸ்திரங்களைக்  கழற்றி,  அவைகளை  அவன்  குமாரனாகிய  எலெயாசாருக்கு  உடுத்துவாயாக;  ஆரோன்  அங்கே  மரித்து,  தன்  ஜனத்தாரோடே  சேர்க்கப்படுவான்  என்றார்.  (எண்ணாகமம்  20:26)

aaroan  uduththirukki’ra  vasthirangga'laik  kazhat’ri,  avaiga'lai  avan  kumaaranaagiya  eleyaasaarukku  uduththuvaayaaga;  aaroan  anggea  mariththu,  than  janaththaaroadea  searkkappaduvaan  en’raar.  (e’n’naagamam  20:26)

கர்த்தர்  கட்டளையிட்டபடியே  மோசே  செய்தான்;  சபையார்  எல்லாரும்  பார்க்க,  அவர்கள்  ஓர்  என்னும்  மலையில்  ஏறினார்கள்.  (எண்ணாகமம்  20:27)

karththar  katta'laiyittapadiyea  moasea  seythaan;  sabaiyaar  ellaarum  paarkka,  avarga'l  oar  ennum  malaiyil  ea’rinaarga'l.  (e’n’naagamam  20:27)

அங்கே  ஆரோன்  உடுத்திருந்த  வஸ்திரங்களை  மோசே  கழற்றி,  அவைகளை  அவன்  குமாரனாகிய  எலெயாசாருக்கு  உடுத்தினான்;  அப்பொழுது  ஆரோன்  அங்கே  மலையின்  உச்சியிலே  மரித்தான்;  பின்பு  மோசேயும்  எலெயாசாரும்  மலையிலிருந்து  இறங்கினார்கள்.  (எண்ணாகமம்  20:28)

anggea  aaroan  uduththiruntha  vasthirangga'lai  moasea  kazhat’ri,  avaiga'lai  avan  kumaaranaagiya  eleyaasaarukku  uduththinaan;  appozhuthu  aaroan  anggea  malaiyin  uchchiyilea  mariththaan;  pinbu  moaseayum  eleyaasaarum  malaiyilirunthu  i’rangginaarga'l.  (e’n’naagamam  20:28)

ஆரோன்  ஜீவித்துப்போனான்  என்பதைச்  சபையார்  எல்லாரும்  கண்டபோது,  இஸ்ரவேல்  வம்சத்தார்  எல்லாரும்  ஆரோனுக்காக  முப்பது  நாள்  துக்கங்கொண்டாடினார்கள்.  (எண்ணாகமம்  20:29)

aaroan  jeeviththuppoanaan  enbathaich  sabaiyaar  ellaarum  ka'ndapoathu,  israveal  vamsaththaar  ellaarum  aaroanukkaaga  muppathu  naa'l  thukkangko'ndaadinaarga'l.  (e’n’naagamam  20:29)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!