Sunday, July 31, 2016

E'n'naagamam 16 | எண்ணாகமம் 16 | Numbers 16


லேவிக்குப்  பிறந்த  கோகாத்தின்  குமாரனாகிய  இத்சேயாரின்  மகன்  கோராகு  என்பவன்  ரூபன்  வம்சத்திலுள்ள  எலியாபின்  குமாரராகிய  தாத்தானையும்  அபிராமையும்  பேலேத்தின்  குமாரனாகிய  ஓனையும்  கூட்டிக்கொண்டு,  (எண்ணாகமம்  16:1)

leavikkup  pi’rantha  koagaaththin  kumaaranaagiya  ithseayaarin  magan  koaraagu  enbavan  rooban  vamsaththilu'l'la  eliyaabin  kumaararaagiya  thaaththaanaiyum  abiraamaiyum  pealeaththin  kumaaranaagiya  oanaiyum  koottikko'ndu,  (e’n’naagamam  16:1)

இஸ்ரவேல்  புத்திரரில்  சபைக்குத்  தலைவர்களும்  சங்கத்துக்கு  அழைக்கப்பட்டவர்களும்  பிரபலமானவர்களுமாகிய  இருநூற்று  ஐம்பது  பேர்களோடும்  கூட  மோசேக்குமுன்பாக  எழும்பி,  (எண்ணாகமம்  16:2)

israveal  puththiraril  sabaikkuth  thalaivarga'lum  sanggaththukku  azhaikkappattavarga'lum  pirabalamaanavarga'lumaagiya  irunoot’ru  aimbathu  pearga'loadum  kooda  moaseakkumunbaaga  ezhumbi,  (e’n’naagamam  16:2)

மோசேக்கும்  ஆரோனுக்கும்  விரோதமாகக்  கூட்டங்கூடி,  அவர்களை  நோக்கி:  நீங்கள்  மிஞ்சிப்போகிறீர்கள்;  சபையார்  எல்லாரும்  பரிசுத்தமானவர்கள்;  கர்த்தர்  அவர்கள்  நடுவில்  இருக்கிறாரே;  இப்படியிருக்க,  கர்த்தருடைய  சபைக்கு  மேலாக  உங்களை  ஏன்  உயர்த்துகிறீர்கள்  என்றார்கள்.  (எண்ணாகமம்  16:3)

moaseakkum  aaroanukkum  viroathamaagak  koottangkoodi,  avarga'lai  noakki:  neengga'l  mignchippoagi’reerga'l;  sabaiyaar  ellaarum  parisuththamaanavarga'l;  karththar  avarga'l  naduvil  irukki’raarea;  ippadiyirukka,  karththarudaiya  sabaikku  mealaaga  ungga'lai  ean  uyarththugi’reerga'l  en’raarga'l.  (e’n’naagamam  16:3)

மோசே  அதைக்  கேட்டபோது,  முகங்குப்புற  விழுந்தான்.  (எண்ணாகமம்  16:4)

moasea  athaik  keattapoathu,  mugangkuppu’ra  vizhunthaan.  (e’n’naagamam  16:4)

பின்பு  அவன்  கோராகையும்  அவனுடைய  எல்லாக்  கூட்டத்தையும்  நோக்கி:  நாளைக்குக்  கர்த்தர்  தம்முடையவன்  இன்னான்  என்றும்,  தம்மண்டையிலே  சேரத்  தாம்  கட்டளையிட்ட  பரிசுத்தவான்  இன்னான்  என்றும்  காண்பிப்பார்;  அப்பொழுது  எவனைத்  தெரிந்துகொள்வாரோ,  அவனைத்  தம்மிடத்தில்  சேரக்  கட்டளையிடுவார்.  (எண்ணாகமம்  16:5)

pinbu  avan  koaraakaiyum  avanudaiya  ellaak  koottaththaiyum  noakki:  naa'laikkuk  karththar  thammudaiyavan  innaan  en’rum,  thamma'ndaiyilea  searath  thaam  katta'laiyitta  parisuththavaan  innaan  en’rum  kaa'nbippaar;  appozhuthu  evanaith  therinthuko'lvaaroa,  avanaith  thammidaththil  searak  katta'laiyiduvaar.  (e’n’naagamam  16:5)

ஒன்று  செய்யுங்கள்;  கோராகே,  கோராகின்  கூட்டத்தார்களே,  நீங்கள்  எல்லாரும்  தூபகலசங்களை  எடுத்துக்கொண்டு,  (எண்ணாகமம்  16:6)

on’ru  seyyungga'l;  koaraakea,  koaraakin  koottaththaarga'lea,  neengga'l  ellaarum  thoobakalasangga'lai  eduththukko'ndu,  (e’n’naagamam  16:6)

நாளைக்கு  அவைகளில்  அக்கினிபோட்டு,  கர்த்தருடைய  சந்நிதியில்  தூபவர்க்கம்  இடுங்கள்;  அப்பொழுது  கர்த்தர்  எவனைத்  தெரிந்துகொள்வாரோ,  அவன்  பரிசுத்தவானாயிருப்பான்;  லேவியின்  புத்திரராகிய  நீங்களே  மிஞ்சிப்போகிறீர்கள்  என்றான்.  (எண்ணாகமம்  16:7)

naa'laikku  avaiga'lil  akkinipoattu,  karththarudaiya  sannithiyil  thoobavarkkam  idungga'l;  appozhuthu  karththar  evanaith  therinthuko'lvaaroa,  avan  parisuththavaanaayiruppaan;  leaviyin  puththiraraagiya  neengga'lea  mignchippoagi’reerga'l  en’raan.  (e’n’naagamam  16:7)

பின்னும்  மோசே  கோராகை  நோக்கி:  லேவியின்  புத்திரரே,  கேளுங்கள்;  (எண்ணாகமம்  16:8)

pinnum  moasea  koaraakai  noakki:  leaviyin  puththirarea,  kea'lungga'l;  (e’n’naagamam  16:8)

கர்த்தருடைய  வாசஸ்தலத்தின்  பணிவிடைகளைச்  செய்யவும்,  சபையாரின்  முன்நின்று  அவர்கள்  செய்யவேண்டிய  வேலைகளைச்  செய்யவும்,  உங்களைத்  தம்மண்டையிலே  சேரப்பண்ணும்படி  இஸ்ரவேலின்  தேவன்  இஸ்ரவேல்  சபையாரிலிருந்து  உங்களைப்  பிரித்தெடுத்ததும்,  (எண்ணாகமம்  16:9)

karththarudaiya  vaasasthalaththin  pa'nividaiga'laich  seyyavum,  sabaiyaarin  munnin’ru  avarga'l  seyyavea'ndiya  vealaiga'laich  seyyavum,  ungga'laith  thamma'ndaiyilea  searappa'n'numpadi  isravealin  theavan  israveal  sabaiyaarilirunthu  ungga'laip  piriththeduththathum,  (e’n’naagamam  16:9)

அவர்  உன்னையும்  உன்னோடேகூட  லேவியின்  புத்திரராகிய  உன்னுடைய  எல்லாச்  சகோதரரையும்  சேரப்பண்ணினதும்,  உங்களுக்கு  அற்பகாரியமோ?  இப்பொழுது  ஆசாரியப்பட்டத்தையும்  தேடுகிறீர்களோ?  (எண்ணாகமம்  16:10)

avar  unnaiyum  unnoadeakooda  leaviyin  puththiraraagiya  unnudaiya  ellaach  sagoathararaiyum  searappa'n'ninathum,  ungga'lukku  a’rpakaariyamoa?  ippozhuthu  aasaariyappattaththaiyum  theadugi’reerga'loa?  (e’n’naagamam  16:10)

இதற்காக  நீயும்  உன்  கூட்டத்தார்  அனைவரும்  கர்த்தருக்கு  விரோதமாகவே  கூட்டங்கூடினீர்கள்;  ஆரோனுக்கு  விரோதமாக  நீங்கள்  முறுமுறுக்கிறதற்கு  அவன்  எம்மாத்திரம்  என்றான்.  (எண்ணாகமம்  16:11)

itha’rkaaga  neeyum  un  koottaththaar  anaivarum  karththarukku  viroathamaagavea  koottangkoodineerga'l;  aaroanukku  viroathamaaga  neengga'l  mu’rumu’rukki’ratha’rku  avan  emmaaththiram  en’raan.  (e’n’naagamam  16:11)

பின்பு  மோசே  எலியாபின்  குமாரராகிய  தாத்தானையும்  அபிராமையும்  அழைத்தனுப்பினான்.  அவர்கள்:  நாங்கள்  வருகிறதில்லை;  (எண்ணாகமம்  16:12)

pinbu  moasea  eliyaabin  kumaararaagiya  thaaththaanaiyum  abiraamaiyum  azhaiththanuppinaan.  avarga'l:  naangga'l  varugi’rathillai;  (e’n’naagamam  16:12)

இந்த  வனாந்தரத்தில்  எங்களைக்  கொன்றுபோடும்படி,  பாலும்  தேனும்  ஓடுகிற  தேசத்திலிருந்து  எங்களைக்  கொண்டுவந்தது  அற்பகாரியமோ,  எங்கள்மேல்  துரைத்தனமும்  பண்ணப்பார்க்கிறாயோ?  (எண்ணாகமம்  16:13)

intha  vanaantharaththil  engga'laik  kon’rupoadumpadi,  paalum  theanum  oadugi’ra  theasaththilirunthu  engga'laik  ko'nduvanthathu  a’rpakaariyamoa,  engga'lmeal  thuraiththanamum  pa'n'nappaarkki’raayoa?  (e’n’naagamam  16:13)

மேலும்  நீ  எங்களைப்  பாலும்  தேனும்  ஓடுகிற  தேசத்துக்குக்  கொண்டுவந்ததும்  இல்லை,  எங்களுக்கு  வயல்களையும்  திராட்சத்தோட்டங்களையும்  சுதந்தரமாகக்  கொடுத்ததும்  இல்லை;  இந்த  மனிதருடைய  கண்களைப்  பிடுங்கப்பார்க்கிறாயோ?  நாங்கள்  வருகிறதில்லை  என்றார்கள்.  (எண்ணாகமம்  16:14)

mealum  nee  engga'laip  paalum  theanum  oadugi’ra  theasaththukkuk  ko'nduvanthathum  illai,  engga'lukku  vayalga'laiyum  thiraadchaththoattangga'laiyum  suthantharamaagak  koduththathum  illai;  intha  manitharudaiya  ka'nga'laip  pidunggappaarkki’raayoa?  naangga'l  varugi’rathillai  en’raarga'l.  (e’n’naagamam  16:14)

அப்பொழுது  மோசேக்குக்  கடுங்கோபம்  மூண்டது;  அவன்  கர்த்தரை  நோக்கி:  அவர்கள்  செலுத்துங்  காணிக்கையை  அங்கிகரியாதிருப்பீராக;  நான்  அவர்களிடத்தில்  ஒரு  கழுதையை  முதலாய்  எடுத்துக்கொள்ளவில்லை;  அவர்களில்  ஒருவனுக்கும்  யாதொரு  பொல்லாப்பு  செய்யவும்  இல்லை  என்றான்.  (எண்ணாகமம்  16:15)

appozhuthu  moaseakkuk  kadungkoabam  moo'ndathu;  avan  karththarai  noakki:  avarga'l  seluththung  kaa'nikkaiyai  anggigariyaathiruppeeraaga;  naan  avarga'lidaththil  oru  kazhuthaiyai  muthalaay  eduththukko'l'lavillai;  avarga'lil  oruvanukkum  yaathoru  pollaappu  seyyavum  illai  en’raan.  (e’n’naagamam  16:15)

பின்பு  மோசே  கோராகை  நோக்கி:  நீயும்  உன்  கூட்டத்தார்  யாவரும்  நாளைக்குக்  கர்த்தருடைய  சந்நிதியில்  வாருங்கள்;  நீயும்  அவர்களும்  ஆரோனும்  வந்திருங்கள்.  (எண்ணாகமம்  16:16)

pinbu  moasea  koaraakai  noakki:  neeyum  un  koottaththaar  yaavarum  naa'laikkuk  karththarudaiya  sannithiyil  vaarungga'l;  neeyum  avarga'lum  aaroanum  vanthirungga'l.  (e’n’naagamam  16:16)

உங்களில்  ஒவ்வொருவரும்  தங்கள்  தங்கள்  தூபகலசங்களை  எடுத்து,  அவைகளில்  தூபவர்க்கத்தைப்  போட்டு,  தங்கள்  தங்கள்  தூபகலசங்களாகிய  இருநூற்று  ஐம்பது  தூபகலசங்களையும்  கர்த்தருடைய  சந்நிதியில்  கொண்டுவரவேண்டும்;  நீயும்  ஆரோனும்  தன்  தன்  தூபகலசத்தைக்  கொண்டுவாருங்கள்  என்றான்.  (எண்ணாகமம்  16:17)

ungga'lil  ovvoruvarum  thangga'l  thangga'l  thoobakalasangga'lai  eduththu,  avaiga'lil  thoobavarkkaththaip  poattu,  thangga'l  thangga'l  thoobakalasangga'laagiya  irunoot’ru  aimbathu  thoobakalasangga'laiyum  karththarudaiya  sannithiyil  ko'nduvaravea'ndum;  neeyum  aaroanum  than  than  thoobakalasaththaik  ko'nduvaarungga'l  en’raan.  (e’n’naagamam  16:17)

அப்படியே  அவரவர்  தங்கள்  தங்கள்  தூபகலசங்களை  எடுத்து,  அவைகளில்  அக்கினியையும்  தூபவர்க்கத்தையும்  போட்டு,  ஆசரிப்புக்  கூடாரவாசலுக்கு  முன்பாக  வந்து  நின்றார்கள்;  மோசேயும்  ஆரோனும்  அங்கே  நின்றார்கள்.  (எண்ணாகமம்  16:18)

appadiyea  avaravar  thangga'l  thangga'l  thoobakalasangga'lai  eduththu,  avaiga'lil  akkiniyaiyum  thoobavarkkaththaiyum  poattu,  aasarippuk  koodaaravaasalukku  munbaaga  vanthu  nin’raarga'l;  moaseayum  aaroanum  anggea  nin’raarga'l.  (e’n’naagamam  16:18)

அவர்களுக்கு  விரோதமாகக்  கோராகு  சபையையெல்லாம்  ஆசரிப்புக்  கூடாரவாசலுக்கு  முன்பாகக்  கூடிவரும்படி  செய்தான்;  அப்பொழுது  கர்த்தருடைய  மகிமை  சபைக்கெல்லாம்  காணப்பட்டது.  (எண்ணாகமம்  16:19)

avarga'lukku  viroathamaagak  koaraagu  sabaiyaiyellaam  aasarippuk  koodaaravaasalukku  munbaagak  koodivarumpadi  seythaan;  appozhuthu  karththarudaiya  magimai  sabaikkellaam  kaa'nappattathu.  (e’n’naagamam  16:19)

கர்த்தர்  மோசேயோடும்  ஆரோனோடும்  பேசி:  (எண்ணாகமம்  16:20)

karththar  moaseayoadum  aaroanoadum  peasi:  (e’n’naagamam  16:20)

இந்தச்  சபையைவிட்டுப்  பிரிந்துபோங்கள்;  ஒரு  நிமிஷத்திலே  அவர்களை  அதமாக்குவேன்  என்றார்.  (எண்ணாகமம்  16:21)

inthach  sabaiyaivittup  pirinthupoangga'l;  oru  nimishaththilea  avarga'lai  athamaakkuvean  en’raar.  (e’n’naagamam  16:21)

அப்பொழுது  அவர்கள்  முகங்குப்புற  விழுந்து:  தேவனே,  மாம்சமான  யாவருடைய  ஆவிகளுக்கும்  தேவனே,  ஒரு  மனிதன்  பாவம்  செய்திருக்கச்  சபையார்  எல்லார்மேலும்  கடுங்கோபங்கொள்வீரோ  என்றார்கள்.  (எண்ணாகமம்  16:22)

appozhuthu  avarga'l  mugangkuppu’ra  vizhunthu:  theavanea,  maamsamaana  yaavarudaiya  aaviga'lukkum  theavanea,  oru  manithan  paavam  seythirukkach  sabaiyaar  ellaarmealum  kadungkoabangko'lveeroa  en’raarga'l.  (e’n’naagamam  16:22)

அப்பொழுது  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  (எண்ணாகமம்  16:23)

appozhuthu  karththar  moaseayai  noakki:  (e’n’naagamam  16:23)

கோராகு  தாத்தான்  அபிராம்  என்பவர்களுடைய  வாசஸ்தலத்தை  விட்டு  விலகிப்போங்கள்  என்று  சபையாருக்குச்  சொல்  என்றார்.  (எண்ணாகமம்  16:24)

koaraagu  thaaththaan  abiraam  enbavarga'ludaiya  vaasasthalaththai  vittu  vilagippoangga'l  en’ru  sabaiyaarukkuch  sol  en’raar.  (e’n’naagamam  16:24)

உடனே  மோசே  எழுந்திருந்து,  தாத்தான்  அபிராம்  என்பவர்களிடத்தில்  போனான்;  இஸ்ரவேலின்  மூப்பரும்  அவனைப்  பின்சென்று  போனார்கள்.  (எண்ணாகமம்  16:25)

udanea  moasea  ezhunthirunthu,  thaaththaan  abiraam  enbavarga'lidaththil  poanaan;  isravealin  moopparum  avanaip  pinsen’ru  poanaarga'l.  (e’n’naagamam  16:25)

அவன்  சபையாரை  நோக்கி:  இந்தத்  துஷ்டமனிதரின்  சகல  பாவங்களிலும்  நீங்கள்  வாரிக்கொள்ளப்படாதபடிக்கு,  அவர்கள்  கூடாரங்களை  விட்டு  விலகி,  அவர்களுக்கு  உண்டானவைகளில்  ஒன்றையும்  தொடாதிருங்கள்  என்றான்.  (எண்ணாகமம்  16:26)

avan  sabaiyaarai  noakki:  inthath  thushdamanitharin  sagala  paavangga'lilum  neengga'l  vaarikko'l'lappadaathapadikku,  avarga'l  koodaarangga'lai  vittu  vilagi,  avarga'lukku  u'ndaanavaiga'lil  on’raiyum  thodaathirungga'l  en’raan.  (e’n’naagamam  16:26)

அப்படியே  அவர்கள்  கோராகு  தாத்தான்  அபிராம்  என்பவர்களுடைய  வாசஸ்தலத்தை  விட்டு  விலகிப்போனார்கள்;  தாத்தானும்  அபிராமும்  வெளியே  வந்து,  தங்கள்  பெண்ஜாதிகள்  பிள்ளைகள்  குழந்தைகளோடும்  தங்கள்  கூடாரவாசலிலே  நின்றார்கள்.  (எண்ணாகமம்  16:27)

appadiyea  avarga'l  koaraagu  thaaththaan  abiraam  enbavarga'ludaiya  vaasasthalaththai  vittu  vilagippoanaarga'l;  thaaththaanum  abiraamum  ve'liyea  vanthu,  thangga'l  pe'njaathiga'l  pi'l'laiga'l  kuzhanthaiga'loadum  thangga'l  koodaaravaasalilea  nin’raarga'l.  (e’n’naagamam  16:27)

அப்பொழுது  மோசே:  இந்தக்  கிரியைகளையெல்லாம்  செய்கிறதற்குக்  கர்த்தர்  என்னை  அனுப்பினார்  என்றும்,  அவைகளை  நான்  என்  மனதின்படியே  செய்யவில்லை  என்றும்,  நீங்கள்  எதினாலே  அறிவீர்களென்றால்,  (எண்ணாகமம்  16:28)

appozhuthu  moasea:  inthak  kiriyaiga'laiyellaam  seygi’ratha’rkuk  karththar  ennai  anuppinaar  en’rum,  avaiga'lai  naan  en  manathinpadiyea  seyyavillai  en’rum,  neengga'l  ethinaalea  a’riveerga'len’raal,  (e’n’naagamam  16:28)

சகல  மனிதரும்  சாகிறபடி  இவர்கள்  செத்து,  சகல  மனிதருக்கும்  நேரிடுகிறதுபோல  இவர்களுக்கும்  நேரிட்டால்,  கர்த்தர்  என்னை  அனுப்பவில்லை  என்று  அறிவீர்கள்.  (எண்ணாகமம்  16:29)

sagala  manitharum  saagi’rapadi  ivarga'l  seththu,  sagala  manitharukkum  nearidugi’rathupoala  ivarga'lukkum  nearittaal,  karththar  ennai  anuppavillai  en’ru  a’riveerga'l.  (e’n’naagamam  16:29)

கர்த்தர்  ஒரு  புதிய  காரியத்தை  நேரிடச்செய்வதால்,  பூமி  தன்  வாயைத்  திறந்து,  இவர்கள்  உயிரோடே  பாதாளத்தில்  இறங்கத்தக்கதாக  இவர்களையும்  இவர்களுக்கு  உண்டான  யாவையும்  விழுங்கிப்போட்டதேயானால்,  இந்த  மனிதர்  கர்த்தரை  அவமதித்தார்கள்  என்பதை  அறிந்துகொள்வீர்கள்  என்றான்.  (எண்ணாகமம்  16:30)

karththar  oru  puthiya  kaariyaththai  nearidachseyvathaal,  boomi  than  vaayaith  thi’ranthu,  ivarga'l  uyiroadea  paathaa'laththil  i’ranggaththakkathaaga  ivarga'laiyum  ivarga'lukku  u'ndaana  yaavaiyum  vizhunggippoattatheayaanaal,  intha  manithar  karththarai  avamathiththaarga'l  enbathai  a’rinthuko'lveerga'l  en’raan.  (e’n’naagamam  16:30)

அவன்  இந்த  வார்த்தைகளையெல்லாம்  சொல்லி  முடித்தவுடனே,  அவர்கள்  நின்றிருந்த  நிலம்  பிளந்தது;  (எண்ணாகமம்  16:31)

avan  intha  vaarththaiga'laiyellaam  solli  mudiththavudanea,  avarga'l  nin’riruntha  nilam  pi'lanthathu;  (e’n’naagamam  16:31)

பூமி  தன்  வாயைத்  திறந்து,  அவர்களையும்  அவர்கள்  வீடுகளையும்,  கோராகுக்குரிய  எல்லா  மனிதரையும்,  அவர்களுக்கு  உண்டான  சகல  பொருள்களையும்  விழுங்கிப்போட்டது.  (எண்ணாகமம்  16:32)

boomi  than  vaayaith  thi’ranthu,  avarga'laiyum  avarga'l  veeduga'laiyum,  koaraagukkuriya  ellaa  manitharaiyum,  avarga'lukku  u'ndaana  sagala  poru'lga'laiyum  vizhunggippoattathu.  (e’n’naagamam  16:32)

அவர்கள்  தங்களுக்கு  உண்டானவை  எல்லாவற்றோடும்  உயிரோடே  பாதாளத்தில்  இறங்கினார்கள்;  பூமி  அவர்களை  மூடிக்கொண்டது;  இப்படிச்  சபையின்  நடுவிலிருந்து  அழிந்துபோனார்கள்.  (எண்ணாகமம்  16:33)

avarga'l  thangga'lukku  u'ndaanavai  ellaavat’roadum  uyiroadea  paathaa'laththil  i’rangginaarga'l;  boomi  avarga'lai  moodikko'ndathu;  ippadich  sabaiyin  naduvilirunthu  azhinthupoanaarga'l.  (e’n’naagamam  16:33)

அவர்களைச்  சுற்றிலும்  இருந்த  இஸ்ரவேலர்  யாவரும்  அவர்கள்  கூக்குரலைக்கேட்டு,  பூமி  நம்மையும்  விழுங்கிப்போடும்  என்று  சொல்லி  ஓடினார்கள்.  (எண்ணாகமம்  16:34)

avarga'laich  sut’rilum  iruntha  isravealar  yaavarum  avarga'l  kookkuralaikkeattu,  boomi  nammaiyum  vizhunggippoadum  en’ru  solli  oadinaarga'l.  (e’n’naagamam  16:34)

அக்கினி  கர்த்தருடைய  சந்நிதியிலிருந்து  புறப்பட்டு,  தூபங்காட்டின  இருநூற்று  ஐம்பது  பேரையும்  பட்சித்துப்போட்டது.  (எண்ணாகமம்  16:35)

akkini  karththarudaiya  sannithiyilirunthu  pu’rappattu,  thoobangkaattina  irunoot’ru  aimbathu  pearaiyum  padchiththuppoattathu.  (e’n’naagamam  16:35)

பின்பு  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  (எண்ணாகமம்  16:36)

pinbu  karththar  moaseayai  noakki:  (e’n’naagamam  16:36)

அக்கினிக்குள்  அகப்பட்ட  தூபகலசங்களை  எடுத்து,  அவைகளிலிருக்கிற  அக்கினியை  அப்பாலே  கொட்டிப்போடும்படி  ஆசாரியனாகிய  ஆரோனின்  குமாரன்  எலெயாசாருக்குச்  சொல்;  அந்தத்  தூபகலசங்கள்  பரிசுத்தமாயின.  (எண்ணாகமம்  16:37)

akkinikku'l  agappatta  thoobakalasangga'lai  eduththu,  avaiga'lilirukki’ra  akkiniyai  appaalea  kottippoadumpadi  aasaariyanaagiya  aaroanin  kumaaran  eleyaasaarukkuch  sol;  anthath  thoobakalasangga'l  parisuththamaayina.  (e’n’naagamam  16:37)

தங்கள்  ஆத்துமாக்களுக்கே  கேடுண்டாக்கின  அந்தப்  பாவிகளின்  தூபகலசங்களைப்  பலிபீடத்தை  மூடத்தக்க  தட்டையான  தகடுகளாய்  அடிக்கக்கடவர்கள்;  அவர்கள்  கர்த்தருடைய  சந்நிதியில்  அவைகளைக்  கொண்டுவந்ததினால்  அவைகள்  பரிசுத்தமாயின;  அவைகள்  இஸ்ரவேல்  புத்திரருக்கு  ஒரு  அடையாளமாயிருக்கும்  என்றார்.  (எண்ணாகமம்  16:38)

thangga'l  aaththumaakka'lukkea  keadu'ndaakkina  anthap  paaviga'lin  thoobakalasangga'laip  balipeedaththai  moodaththakka  thattaiyaana  thagaduga'laay  adikkakkadavarga'l;  avarga'l  karththarudaiya  sannithiyil  avaiga'laik  ko'nduvanthathinaal  avaiga'l  parisuththamaayina;  avaiga'l  israveal  puththirarukku  oru  adaiyaa'lamaayirukkum  en’raar.  (e’n’naagamam  16:38)

அப்படியே  ஆசாரியனாகிய  எலெயாசார்  சுட்டெரிக்கப்பட்டவர்கள்  கொண்டுவந்திருந்த  வெண்கலத்  தூபகலசங்களை  எடுத்து,  (எண்ணாகமம்  16:39)

appadiyea  aasaariyanaagiya  eleyaasaar  sutterikkappattavarga'l  ko'nduvanthiruntha  ve'ngalath  thoobakalasangga'lai  eduththu,  (e’n’naagamam  16:39)

ஆரோனின்  புத்திரராய்  இராத  அந்நியன்  ஒருவனும்  கர்த்தருடைய  சந்நிதியில்  தூபங்காட்ட  வராதபடிக்கும்,  கோராகைப்போலும்  அவன்  கூட்டத்தாரைப்போலும்  இராதபடிக்கும்,  இஸ்ரவேல்  புத்திரருக்கு  ஞாபகக்குறியாயிருக்கும்பொருட்டு,  கர்த்தர்  மோசேயைக்கொண்டு  தனக்குச்  சொன்னபடியே  அவைகளைப்  பலிபீடத்தை  மூடும்  தகடுகளாக  அடிப்பித்தான்.  (எண்ணாகமம்  16:40)

aaroanin  puththiraraay  iraatha  anniyan  oruvanum  karththarudaiya  sannithiyil  thoobangkaatta  varaathapadikkum,  koaraakaippoalum  avan  koottaththaaraippoalum  iraathapadikkum,  israveal  puththirarukku  gnaabagakku’riyaayirukkumporuttu,  karththar  moaseayaikko'ndu  thanakkuch  sonnapadiyea  avaiga'laip  balipeedaththai  moodum  thagaduga'laaga  adippiththaan.  (e’n’naagamam  16:40)

மறுநாளில்  இஸ்ரவேல்  புத்திரரின்  சபையார்  எல்லாரும்  மோசேக்கும்  ஆரோனுக்கும்  விரோதமாக  முறுமுறுத்து:  நீங்கள்  கர்த்தரின்  ஜனங்களைக்  கொன்றுபோட்டீர்கள்  என்றார்கள்.  (எண்ணாகமம்  16:41)

ma’runaa'lil  israveal  puththirarin  sabaiyaar  ellaarum  moaseakkum  aaroanukkum  viroathamaaga  mu’rumu’ruththu:  neengga'l  karththarin  janangga'laik  kon’rupoatteerga'l  en’raarga'l.  (e’n’naagamam  16:41)

சபையார்  மோசேக்கும்  ஆரோனுக்கும்  விரோதமாகக்  கூடி  ஆசரிப்புக்  கூடாரத்துக்கு  நேரே  பார்க்கிறபோது,  மேகம்  அதை  மூடினது,  கர்த்தரின்  மகிமை  காணப்பட்டது.  (எண்ணாகமம்  16:42)

sabaiyaar  moaseakkum  aaroanukkum  viroathamaagak  koodi  aasarippuk  koodaaraththukku  nearea  paarkki’rapoathu,  meagam  athai  moodinathu,  karththarin  magimai  kaa'nappattathu.  (e’n’naagamam  16:42)

மோசேயும்  ஆரோனும்  ஆசரிப்புக்  கூடாரத்துக்கு  முன்பாக  வந்தார்கள்.  (எண்ணாகமம்  16:43)

moaseayum  aaroanum  aasarippuk  koodaaraththukku  munbaaga  vanthaarga'l.  (e’n’naagamam  16:43)

அப்பொழுது  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  (எண்ணாகமம்  16:44)

appozhuthu  karththar  moaseayai  noakki:  (e’n’naagamam  16:44)

இந்தச்  சபையாரை  விட்டு  விலகிப்போங்கள்;  ஒரு  நிமிஷத்தில்  அவர்களை  அதமாக்குவேன்  என்றார்.  அவர்கள்  முகங்குப்புற  விழுந்தார்கள்.  (எண்ணாகமம்  16:45)

inthach  sabaiyaarai  vittu  vilagippoangga'l;  oru  nimishaththil  avarga'lai  athamaakkuvean  en’raar.  avarga'l  mugangkuppu’ra  vizhunthaarga'l.  (e’n’naagamam  16:45)

மோசே  ஆரோனை  நோக்கி:  நீ  தூபகலசத்தை  எடுத்து,  பலிபீடத்திலிருக்கிற  அக்கினியை  அதில்  போட்டு,  அதின்மேல்  தூபவர்க்கம்  இட்டு,  சீக்கிரமாய்ச்  சபையினிடத்தில்  போய்,  அவர்களுக்காகப்  பாவநிவிர்த்தி  செய்;  கர்த்தருடைய  சந்நிதியிலிருந்து  கடுங்கோபம்  புறப்பட்டது,  வாதை  தொடங்கிற்று  என்றான்.  (எண்ணாகமம்  16:46)

moasea  aaroanai  noakki:  nee  thoobakalasaththai  eduththu,  balipeedaththilirukki’ra  akkiniyai  athil  poattu,  athinmeal  thoobavarkkam  ittu,  seekkiramaaych  sabaiyinidaththil  poay,  avarga'lukkaagap  paavanivirththi  sey;  karththarudaiya  sannithiyilirunthu  kadungkoabam  pu’rappattathu,  vaathai  thodanggit’ru  en’raan.  (e’n’naagamam  16:46)

மோசே  சொன்னபடி  ஆரோன்  அதை  எடுத்துக்கொண்டு  சபையின்  நடுவில்  ஓடினான்;  ஜனங்களுக்குள்ளே  வாதை  தொடங்கியிருந்தது;  அவன்  தூபவர்க்கம்  போட்டு,  ஜனங்களுக்காகப்  பாவநிவிர்த்தி  செய்து,  (எண்ணாகமம்  16:47)

moasea  sonnapadi  aaroan  athai  eduththukko'ndu  sabaiyin  naduvil  oadinaan;  janangga'lukku'l'lea  vaathai  thodanggiyirunthathu;  avan  thoobavarkkam  poattu,  janangga'lukkaagap  paavanivirththi  seythu,  (e’n’naagamam  16:47)

செத்தவர்களுக்கும்  உயிரோடிருக்கிறவர்களுக்கும்  நடுவே  நின்றான்;  அப்பொழுது  வாதை  நிறுத்தப்பட்டது.  (எண்ணாகமம்  16:48)

seththavarga'lukkum  uyiroadirukki’ravarga'lukkum  naduvea  nin’raan;  appozhuthu  vaathai  ni’ruththappattathu.  (e’n’naagamam  16:48)

கோராகின்  காரியத்தினிமித்தம்  செத்தவர்கள்  தவிர,  அந்த  வாதையினால்  செத்துப்போனவர்கள்  பதினாலாயிரத்து  எழுநூறுபேர்.  (எண்ணாகமம்  16:49)

koaraakin  kaariyaththinimiththam  seththavarga'l  thavira,  antha  vaathaiyinaal  seththuppoanavarga'l  pathinaalaayiraththu  ezhunoo’rupear.  (e’n’naagamam  16:49)

வாதை  நிறுத்தப்பட்டது;  அப்பொழுது  ஆரோன்  ஆசரிப்புக்  கூடாரவாசலுக்கு  மோசேயினிடத்தில்  திரும்பிவந்தான்.  (எண்ணாகமம்  16:50)

vaathai  ni’ruththappattathu;  appozhuthu  aaroan  aasarippuk  koodaaravaasalukku  moaseayinidaththil  thirumbivanthaan.  (e’n’naagamam  16:50)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!