Sunday, July 31, 2016

E'n'naagamam 14 | எண்ணாகமம் 14 | Numbers 14

அப்பொழுது  சபையார்  எல்லாரும்  கூக்குரலிட்டுப்  புலம்பினார்கள்;  ஜனங்கள்  அன்று  இராமுழுதும்  அழுதுகொண்டிருந்தார்கள்.  (எண்ணாகமம்  14:1)

appozhuthu  sabaiyaar  ellaarum  kookkuralittup  pulambinaarga'l;  janangga'l  an’ru  iraamuzhuthum  azhuthuko'ndirunthaarga'l.  (e’n’naagamam  14:1)

இஸ்ரவேல்  புத்திரர்  எல்லாரும்  மோசேக்கும்  ஆரோனுக்கும்  விரோதமாக  முறுமுறுத்தார்கள்.  சபையார்  எல்லாரும்  அவர்களை  நோக்கி:  எகிப்துதேசத்திலே  செத்துப்போனோமானால்  நலமாயிருக்கும்;  இந்த  வனாந்தரத்திலே  நாங்கள்  செத்தாலும்  நலம்.  (எண்ணாகமம்  14:2)

israveal  puththirar  ellaarum  moaseakkum  aaroanukkum  viroathamaaga  mu’rumu’ruththaarga'l.  sabaiyaar  ellaarum  avarga'lai  noakki:  egipthutheasaththilea  seththuppoanoamaanaal  nalamaayirukkum;  intha  vanaantharaththilea  naangga'l  seththaalum  nalam.  (e’n’naagamam  14:2)

நாங்கள்  பட்டயத்தால்  மடியும்படிக்கும்,  எங்கள்  பெண்ஜாதிகளும்  பிள்ளைகளும்  கொள்ளையாகும்படிக்கும்,  கர்த்தர்  எங்களை  இந்த  தேசத்துக்குக்  கொண்டுவந்தது  என்ன?  எகிப்துக்குத்  திரும்பிப்போகிறதே  எங்களுக்கு  உத்தமம்  அல்லவோ  என்றார்கள்.  (எண்ணாகமம்  14:3)

naangga'l  pattayaththaal  madiyumpadikkum,  engga'l  pe'njaathiga'lum  pi'l'laiga'lum  ko'l'laiyaagumpadikkum,  karththar  engga'lai  intha  theasaththukkuk  ko'nduvanthathu  enna?  egipthukkuth  thirumbippoagi’rathea  engga'lukku  uththamam  allavoa  en’raarga'l.  (e’n’naagamam  14:3)

பின்பு  அவர்கள்:  நாம்  ஒரு  தலைவனை  ஏற்படுத்திக்கொண்டு  எகிப்துக்குத்  திரும்பிப்போவோம்  வாருங்கள்  என்று  ஒருவரோடொருவர்  சொல்லிக்கொண்டார்கள்.  (எண்ணாகமம்  14:4)

pinbu  avarga'l:  naam  oru  thalaivanai  ea’rpaduththikko'ndu  egipthukkuth  thirumbippoavoam  vaarungga'l  en’ru  oruvaroadoruvar  sollikko'ndaarga'l.  (e’n’naagamam  14:4)

அப்பொழுது  மோசேயும்  ஆரோனும்  இஸ்ரவேல்  புத்திரரின்  சபையாராகிய  எல்லாக்  கூட்டத்தாருக்குமுன்பாகவும்  முகங்குப்புற  விழுந்தார்கள்.  (எண்ணாகமம்  14:5)

appozhuthu  moaseayum  aaroanum  israveal  puththirarin  sabaiyaaraagiya  ellaak  koottaththaarukkumunbaagavum  mugangkuppu’ra  vizhunthaarga'l.  (e’n’naagamam  14:5)

தேசத்தைச்  சுற்றிப்பார்த்தவர்களில்  நூனின்  குமாரனாகிய  யோசுவாவும்,  எப்புன்னேயின்  குமாரனாகிய  காலேபும்,  தங்கள்  வஸ்திரங்களைக்  கிழித்துக்கொண்டு,  (எண்ணாகமம்  14:6)

theasaththaich  sut’rippaarththavarga'lil  noonin  kumaaranaagiya  yoasuvaavum,  eppunneayin  kumaaranaagiya  kaaleabum,  thangga'l  vasthirangga'laik  kizhiththukko'ndu,  (e’n’naagamam  14:6)

இஸ்ரவேல்  புத்திரரின்  சமஸ்த  சபையையும்  நோக்கி:  நாங்கள்  போய்ச்  சுற்றிப்பார்த்து  சோதித்த  தேசம்  மகா  நல்ல  தேசம்.  (எண்ணாகமம்  14:7)

israveal  puththirarin  samastha  sabaiyaiyum  noakki:  naangga'l  poaych  sut’rippaarththu  soathiththa  theasam  mahaa  nalla  theasam.  (e’n’naagamam  14:7)

கர்த்தர்  நம்மேல்  பிரியமாயிருந்தால்,  அந்தத்  தேசத்திலே  நம்மைக்  கொண்டுபோய்,  பாலும்  தேனும்  ஓடுகிற  அந்தத்  தேசத்தை  நமக்குக்  கொடுப்பார்.  (எண்ணாகமம்  14:8)

karththar  nammeal  piriyamaayirunthaal,  anthath  theasaththilea  nammaik  ko'ndupoay,  paalum  theanum  oadugi’ra  anthath  theasaththai  namakkuk  koduppaar.  (e’n’naagamam  14:8)

கர்த்தருக்கு  விரோதமாகமாத்திரம்  கலகம்பண்ணாதிருங்கள்;  அந்த  தேசத்தின்  ஜனங்களுக்கு  நீங்கள்  பயப்படவேண்டியதில்லை;  அவர்கள்  நமக்கு  இரையாவார்கள்;  அவர்களைக்  காத்த  நிழல்  அவர்களைவிட்டு  விலகிப்போயிற்று;  கர்த்தர்  நம்மோடே  இருக்கிறார்;  அவர்களுக்குப்  பயப்படவேண்டியதில்லை  என்றார்கள்.  (எண்ணாகமம்  14:9)

karththarukku  viroathamaagamaaththiram  kalagampa'n'naathirungga'l;  antha  theasaththin  janangga'lukku  neengga'l  bayappadavea'ndiyathillai;  avarga'l  namakku  iraiyaavaarga'l;  avarga'laik  kaaththa  nizhal  avarga'laivittu  vilagippoayit’ru;  karththar  nammoadea  irukki’raar;  avarga'lukkup  bayappadavea'ndiyathillai  en’raarga'l.  (e’n’naagamam  14:9)

அப்பொழுது  அவர்கள்மேல்  கல்லெறியவேண்டும்  என்று  சபையார்  எல்லாரும்  சொன்னார்கள்;  உடனே  கர்த்தருடைய  மகிமை  ஆசரிப்புக்  கூடாரத்தில்  இஸ்ரவேல்  புத்திரர்  எல்லாருக்கும்  முன்பாகக்  காணப்பட்டது.  (எண்ணாகமம்  14:10)

appozhuthu  avarga'lmeal  kalle’riyavea'ndum  en’ru  sabaiyaar  ellaarum  sonnaarga'l;  udanea  karththarudaiya  magimai  aasarippuk  koodaaraththil  israveal  puththirar  ellaarukkum  munbaagak  kaa'nappattathu.  (e’n’naagamam  14:10)

கர்த்தர்  மோசேயை  நோக்கி:  எதுவரைக்கும்  இந்த  ஜனங்கள்  எனக்குக்  கோபம்  உண்டாக்குவார்கள்?  தங்களுக்குள்ளே  நான்  காட்டின  சகல  அடையாளங்களையும்  அவர்கள்  கண்டும்,  எதுவரைக்கும்  என்னை  விசுவாசியாதிருப்பார்கள்?  (எண்ணாகமம்  14:11)

karththar  moaseayai  noakki:  ethuvaraikkum  intha  janangga'l  enakkuk  koabam  u'ndaakkuvaarga'l?  thangga'lukku'l'lea  naan  kaattina  sagala  adaiyaa'langga'laiyum  avarga'l  ka'ndum,  ethuvaraikkum  ennai  visuvaasiyaathiruppaarga'l?  (e’n’naagamam  14:11)

நான்  அவர்களைக்  கொள்ளைநோயினால்  வாதித்து,  சுதந்தரத்துக்குப்  புறம்பாக்கிப்போட்டு,  அவர்களைப்பார்க்கிலும்  உன்னைப்  பெரிதும்  பலத்ததுமான  ஜாதியாக்குவேன்  என்றார்.  (எண்ணாகமம்  14:12)

naan  avarga'laik  ko'l'lainoayinaal  vaathiththu,  suthantharaththukkup  pu’rambaakkippoattu,  avarga'laippaarkkilum  unnaip  perithum  balaththathumaana  jaathiyaakkuvean  en’raar.  (e’n’naagamam  14:12)

மோசே  கர்த்தரை  நோக்கி:  எகிப்தியர்  இதைக்  கேட்பார்கள்,  அவர்கள்  நடுவிலிருந்து  உம்முடைய  வல்லமையினாலே  இந்த  ஜனங்களைக்  கொண்டுவந்தீரே.  (எண்ணாகமம்  14:13)

moasea  karththarai  noakki:  egipthiyar  ithaik  keadpaarga'l,  avarga'l  naduvilirunthu  ummudaiya  vallamaiyinaalea  intha  janangga'laik  ko'nduvantheerea.  (e’n’naagamam  14:13)

கர்த்தராகிய  நீர்  இந்த  ஜனங்களின்  நடுவே  இருக்கிறதையும்,  கர்த்தராகிய  நீர்  முகமுகமாய்த்  தரிசனமாகிறதையும்,  உம்முடைய  மேகம்  இவர்கள்மேல்  நிற்கிறதையும்,  பகலில்  மேகத்தூணிலும்,  இரவில்  அக்கினித்தூணிலும்,  நீர்  இவர்களுக்கு  முன்  செல்லுகிறதையும்  கேட்டிருக்கிறார்கள்;  இந்த  தேசத்தின்  குடிகளுக்கும்  சொல்லுவார்கள்.  (எண்ணாகமம்  14:14)

karththaraagiya  neer  intha  janangga'lin  naduvea  irukki’rathaiyum,  karththaraagiya  neer  mugamugamaayth  tharisanamaagi’rathaiyum,  ummudaiya  meagam  ivarga'lmeal  ni’rki’rathaiyum,  pagalil  meagaththoo'nilum,  iravil  akkiniththoo'nilum,  neer  ivarga'lukku  mun  sellugi’rathaiyum  keattirukki’raarga'l;  intha  theasaththin  kudiga'lukkum  solluvaarga'l.  (e’n’naagamam  14:14)

ஒரே  மனிதனைக்  கொல்லுகிறதுபோல  இந்த  ஜனங்களையெல்லாம்  நீர்  கொல்வீரானால்,  அப்பொழுது  உம்முடைய  கீர்த்தியைக்  கேட்டிருக்கும்  புறஜாதியார்:  (எண்ணாகமம்  14:15)

orea  manithanaik  kollugi’rathupoala  intha  janangga'laiyellaam  neer  kolveeraanaal,  appozhuthu  ummudaiya  keerththiyaik  keattirukkum  pu’rajaathiyaar:  (e’n’naagamam  14:15)

கர்த்தர்  அந்த  ஜனங்களுக்குக்  கொடுப்போம்  என்று  ஆணையிட்டிருந்த  தேசத்திலே  அவர்களைக்  கொண்டுபோய்  விடக்கூடாதேபோனபடியினால்,  அவர்களை  வனாந்தரத்திலே  கொன்றுபோட்டார்  என்பார்களே.  (எண்ணாகமம்  14:16)

karththar  antha  janangga'lukkuk  koduppoam  en’ru  aa'naiyittiruntha  theasaththilea  avarga'laik  ko'ndupoay  vidakkoodaatheapoanapadiyinaal,  avarga'lai  vanaantharaththilea  kon’rupoattaar  enbaarga'lea.  (e’n’naagamam  14:16)

ஆகையால்  கர்த்தர்  நீடிய  சாந்தமும்  மிகுந்த  கிருபையுமுள்ளவர்  என்றும்,  அக்கிரமத்தையும்  மீறுதலையும்  மன்னிக்கிறவர்  என்றும்,  குற்றமுள்ளவர்களைக்  குற்றமற்றவர்களாக  விடாமல்,  பிதாக்கள்  செய்த  அக்கிரமத்தைப்  பிள்ளைகளிடத்தில்  மூன்றாம்  நான்காம்  தலைமுறைமட்டும்  விசாரிக்கிறவர்  என்றும்,  நீர்  சொல்லியிருக்கிறபடியே,  (எண்ணாகமம்  14:17)

aagaiyaal  karththar  neediya  saanthamum  miguntha  kirubaiyumu'l'lavar  en’rum,  akkiramaththaiyum  mee’ruthalaiyum  mannikki’ravar  en’rum,  kut’ramu'l'lavarga'laik  kut’ramat’ravarga'laaga  vidaamal,  pithaakka'l  seytha  akkiramaththaip  pi'l'laiga'lidaththil  moon’raam  naangaam  thalaimu’raimattum  visaarikki’ravar  en’rum,  neer  solliyirukki’rapadiyea,  (e’n’naagamam  14:17)

என்  ஆண்டவருடைய  வல்லமை  பெரிதாய்  விளங்குவதாக.  (எண்ணாகமம்  14:18)

en  aa'ndavarudaiya  vallamai  perithaay  vi'langguvathaaga.  (e’n’naagamam  14:18)

உமது  கிருபையினுடைய  மகத்துவத்தின்படியேயும்,  எகிப்தை  விட்டதுமுதல்  இந்நாள்வரைக்கும்  இந்த  ஜனங்களுக்கு  மன்னித்துவந்ததின்படியேயும்,  இந்த  ஜனங்களின்  அக்கிரமத்தை  மன்னித்தருளும்  என்றான்.  (எண்ணாகமம்  14:19)

umathu  kirubaiyinudaiya  magaththuvaththinpadiyeayum,  egipthai  vittathumuthal  innaa'lvaraikkum  intha  janangga'lukku  manniththuvanthathinpadiyeayum,  intha  janangga'lin  akkiramaththai  manniththaru'lum  en’raan.  (e’n’naagamam  14:19)

அப்பொழுது  கர்த்தர்:  உன்  வார்த்தையின்படியே  மன்னித்தேன்.  (எண்ணாகமம்  14:20)

appozhuthu  karththar:  un  vaarththaiyinpadiyea  manniththean.  (e’n’naagamam  14:20)

பூமியெல்லாம்  கர்த்தருடைய  மகிமையினால்  நிறைந்திருக்கும்  என்று  என்னுடைய  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்.  (எண்ணாகமம்  14:21)

boomiyellaam  karththarudaiya  magimaiyinaal  ni’rainthirukkum  en’ru  ennudaiya  jeevanaikko'ndu  sollugi’rean.  (e’n’naagamam  14:21)

என்  மகிமையையும்,  நான்  எகிப்திலும்  வனாந்தரத்திலும்  செய்த  என்  அடையாளங்களையும்  கண்டிருந்தும்,  என்  சத்தத்துக்குச்  செவிகொடாமல்,  இதனோடே  பத்துமுறை  என்னைப்  பரீட்சைபார்த்த  மனிதரில்  ஒருவரும்,  (எண்ணாகமம்  14:22)

en  magimaiyaiyum,  naan  egipthilum  vanaantharaththilum  seytha  en  adaiyaa'langga'laiyum  ka'ndirunthum,  en  saththaththukkuch  sevikodaamal,  ithanoadea  paththumu’rai  ennaip  pareedchaipaarththa  manitharil  oruvarum,  (e’n’naagamam  14:22)

அவர்கள்  பிதாக்களுக்கு  நான்  ஆணையிட்டுக்கொடுத்த  தேசத்தைக்  காணமாட்டார்கள்;  எனக்குக்  கோபம்  உண்டாக்கினவர்களில்  ஒருவரும்  அதைக்  காணமாட்டார்கள்.  (எண்ணாகமம்  14:23)

avarga'l  pithaakka'lukku  naan  aa'naiyittukkoduththa  theasaththaik  kaa'namaattaarga'l;  enakkuk  koabam  u'ndaakkinavarga'lil  oruvarum  athaik  kaa'namaattaarga'l.  (e’n’naagamam  14:23)

என்னுடைய  தாசனாகிய  காலேப்  வேறே  ஆவியை  உடையவனாயிருக்கிறபடியினாலும்,  உத்தமமாய்  என்னைப்  பின்பற்றிவந்தபடியினாலும்,  அவன்  போய்வந்த  தேசத்திலே  அவனைச்  சேரப்பண்ணுவேன்;  அவன்  சந்ததியார்  அதைச்  சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.  (எண்ணாகமம்  14:24)

ennudaiya  thaasanaagiya  kaaleab  vea’rea  aaviyai  udaiyavanaayirukki’rapadiyinaalum,  uththamamaay  ennaip  pinpat’rivanthapadiyinaalum,  avan  poayvantha  theasaththilea  avanaich  searappa'n'nuvean;  avan  santhathiyaar  athaich  suthanthariththukko'l'luvaarga'l.  (e’n’naagamam  14:24)

அமலேக்கியரும்  கானானியரும்  பள்ளத்தாக்கிலே  குடியிருக்கிறபடியினால்,  நாளைக்கு  நீங்கள்  திரும்பிச்  சிவந்த  சமுத்திரத்துக்குப்  போகிற  வழியாய்  வனாந்தரத்துக்குப்  பிரயாணம்பண்ணுங்கள்  என்றார்.  (எண்ணாகமம்  14:25)

amaleakkiyarum  kaanaaniyarum  pa'l'laththaakkilea  kudiyirukki’rapadiyinaal,  naa'laikku  neengga'l  thirumbich  sivantha  samuththiraththukkup  poagi’ra  vazhiyaay  vanaantharaththukkup  pirayaa'nampa'n'nungga'l  en’raar.  (e’n’naagamam  14:25)

பின்னும்  கர்த்தர்  மோசேயையும்  ஆரோனையும்  நோக்கி:  (எண்ணாகமம்  14:26)

pinnum  karththar  moaseayaiyum  aaroanaiyum  noakki:  (e’n’naagamam  14:26)

எனக்கு  விரோதமாய்  முறுமுறுக்கிற  இந்தப்  பொல்லாத  சபையாரை  எதுவரைக்கும்  பொறுப்பேன்?  இஸ்ரவேல்  புத்திரர்  எனக்கு  விரோதமாய்  முறுமுறுக்கிறதைக்  கேட்டேன்.  (எண்ணாகமம்  14:27)

enakku  viroathamaay  mu’rumu’rukki’ra  inthap  pollaatha  sabaiyaarai  ethuvaraikkum  po’ruppean?  israveal  puththirar  enakku  viroathamaay  mu’rumu’rukki’rathaik  keattean.  (e’n’naagamam  14:27)

நீ  அவர்களோடே  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  நீங்கள்  என்  செவிகள்  கேட்கச்  சொன்னபிரகாரம்  உங்களுக்குச்  செய்வேன்  என்பதை  என்  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்  என்று  கர்த்தர்  உரைக்கிறார்.  (எண்ணாகமம்  14:28)

nee  avarga'loadea  sollavea'ndiyathu  ennaven’raal:  neengga'l  en  seviga'l  keadkach  sonnapiragaaram  ungga'lukkuch  seyvean  enbathai  en  jeevanaikko'ndu  sollugi’rean  en’ru  karththar  uraikki’raar.  (e’n’naagamam  14:28)

இந்த  வனாந்தரத்தில்  உங்கள்  பிரேதங்கள்  விழும்;  உங்களில்  இருபது  வயதுமுதல்  அதற்கு  மேற்பட்டவர்களாக  எண்ணப்பட்டு,  உங்கள்  தொகைக்கு  உட்பட்டவர்களும்  எனக்கு  விரோதமாய்  முறுமுறுத்திருக்கிறவர்களுமாகிய  அனைவரின்  பிரேதங்களும்  விழும்.  (எண்ணாகமம்  14:29)

intha  vanaantharaththil  ungga'l  pireathangga'l  vizhum;  ungga'lil  irubathu  vayathumuthal  atha’rku  mea’rpattavarga'laaga  e'n'nappattu,  ungga'l  thogaikku  udpattavarga'lum  enakku  viroathamaay  mu’rumu’ruththirukki’ravarga'lumaagiya  anaivarin  pireathangga'lum  vizhum.  (e’n’naagamam  14:29)

எப்புன்னேயின்  குமாரன்  காலேபும்,  நூனின்  குமாரன்  யோசுவாவும்  தவிர,  மற்றவர்களாகிய  நீங்கள்  நான்  உங்களைக்  குடியேற்றுவேன்  என்று  ஆணையிட்டுக்கொடுத்த  தேசத்தில்  பிரவேசிப்பதில்லை.  (எண்ணாகமம்  14:30)

eppunneayin  kumaaran  kaaleabum,  noonin  kumaaran  yoasuvaavum  thavira,  mat’ravarga'laagiya  neengga'l  naan  ungga'laik  kudiyeat’ruvean  en’ru  aa'naiyittukkoduththa  theasaththil  piraveasippathillai.  (e’n’naagamam  14:30)

கொள்ளையாவார்கள்  என்று  நீங்கள்  சொன்ன  உங்கள்  குழந்தைகளையோ  நான்  அதில்  பிரவேசிக்கச்  செய்வேன்;  நீங்கள்  அசட்டைப்பண்ணின  தேசத்தை  அவர்கள்  கண்டறிவார்கள்.  (எண்ணாகமம்  14:31)

ko'l'laiyaavaarga'l  en’ru  neengga'l  sonna  ungga'l  kuzhanthaiga'laiyoa  naan  athil  piraveasikkach  seyvean;  neengga'l  asattaippa'n'nina  theasaththai  avarga'l  ka'nda’rivaarga'l.  (e’n’naagamam  14:31)

உங்கள்  பிரேதங்களோ  இந்த  வனாந்தரத்திலே  விழும்.  (எண்ணாகமம்  14:32)

ungga'l  pireathangga'loa  intha  vanaantharaththilea  vizhum.  (e’n’naagamam  14:32)

அவைகள்  வனாந்தரத்திலே  விழுந்து  தீருமட்டும்,  உங்கள்  பிள்ளைகள்  நாற்பது  வருஷம்  வனாந்தரத்திலே  திரிந்து,  நீங்கள்  சோரம்போன  பாதகத்தைச்  சுமப்பார்கள்.  (எண்ணாகமம்  14:33)

avaiga'l  vanaantharaththilea  vizhunthu  theerumattum,  ungga'l  pi'l'laiga'l  naa’rpathu  varusham  vanaantharaththilea  thirinthu,  neengga'l  soarampoana  paathagaththaich  sumappaarga'l.  (e’n’naagamam  14:33)

நீங்கள்  தேசத்தைச்  சுற்றிப்பார்த்த  நாற்பதுநாள்  இலக்கத்தின்படியே,  ஒவ்வொரு  நாள்  ஒவ்வொரு  வருஷமாக,  நீங்கள்  நாற்பது  வருஷம்  உங்கள்  அக்கிரமங்களைச்  சுமந்து,  என்  உடன்படிக்கைக்கு  வந்த  மாறுதலை  உணருவீர்கள்.  (எண்ணாகமம்  14:34)

neengga'l  theasaththaich  sut’rippaarththa  naa’rpathunaa'l  ilakkaththinpadiyea,  ovvoru  naa'l  ovvoru  varushamaaga,  neengga'l  naa’rpathu  varusham  ungga'l  akkiramangga'laich  sumanthu,  en  udanpadikkaikku  vantha  maa’ruthalai  u'naruveerga'l.  (e’n’naagamam  14:34)

கர்த்தராகிய  நான்  இதைச்  சொன்னேன்;  எனக்கு  விரோதமாய்க்  கூட்டங்கூடின  இந்தப்  பொல்லாத  சபையார்  யாவருக்கும்  இப்படியே  செய்வேன்;  இந்த  வனாந்தரத்திலே  அழிவார்கள்,  இங்கே  சாவார்கள்  என்று  சொல்  என்றார்.  (எண்ணாகமம்  14:35)

karththaraagiya  naan  ithaich  sonnean;  enakku  viroathamaayk  koottangkoodina  inthap  pollaatha  sabaiyaar  yaavarukkum  ippadiyea  seyvean;  intha  vanaantharaththilea  azhivaarga'l,  inggea  saavaarga'l  en’ru  sol  en’raar.  (e’n’naagamam  14:35)

அந்த  தேசத்தைச்  சோதித்துப்பார்க்கும்படி  மோசேயால்  அனுப்பப்பட்டுத்  திரும்பி,  அந்த  தேசத்தைக்குறித்துத்  துர்ச்செய்தி  கொண்டுவந்து,  (எண்ணாகமம்  14:36)

antha  theasaththaich  soathiththuppaarkkumpadi  moaseayaal  anuppappattuth  thirumbi,  antha  theasaththaikku’riththuth  thurchseythi  ko'nduvanthu,  (e’n’naagamam  14:36)

சபையார்  எல்லாரும்  அவனுக்கு  விரோதமாய்  முறுமுறுக்கும்படி  அந்தத்  துர்ச்செய்தியைச்  சொன்னவர்களாகிய  அந்த  மனிதர்  கர்த்தருடைய  சந்நிதியில்  வாதையினால்  செத்தார்கள்.  (எண்ணாகமம்  14:37)

sabaiyaar  ellaarum  avanukku  viroathamaay  mu’rumu’rukkumpadi  anthath  thurchseythiyaich  sonnavarga'laagiya  antha  manithar  karththarudaiya  sannithiyil  vaathaiyinaal  seththaarga'l.  (e’n’naagamam  14:37)

தேசத்தைச்  சுற்றிப்பார்க்கப்போன  அந்த  மனிதரில்  நூனின்  குமாரனாகிய  யோசுவாவும்,  எப்புன்னேயின்  குமாரனாகிய  காலேபும்மாத்திரம்  உயிரோடிருந்தார்கள்.  (எண்ணாகமம்  14:38)

theasaththaich  sut’rippaarkkappoana  antha  manitharil  noonin  kumaaranaagiya  yoasuvaavum,  eppunneayin  kumaaranaagiya  kaaleabummaaththiram  uyiroadirunthaarga'l.  (e’n’naagamam  14:38)

மோசே  இந்த  வார்த்தைகளை  இஸ்ரவேல்  புத்திரர்  அனைவரோடும்  சொன்னபோது,  ஜனங்கள்  மிகவும்  துக்கித்தார்கள்.  (எண்ணாகமம்  14:39)

moasea  intha  vaarththaiga'lai  israveal  puththirar  anaivaroadum  sonnapoathu,  janangga'l  migavum  thukkiththaarga'l.  (e’n’naagamam  14:39)

அதிகாலமே  அவர்கள்  எழுந்திருந்து:  நாங்கள்  பாவஞ்செய்தோம்,  கர்த்தர்  வாக்குத்தத்தம்பண்ணின  இடத்துக்கு  நாங்கள்  போவோம்  என்று  சொல்லி  மலையின்  உச்சியில்  ஏறத்துணிந்தார்கள்.  (எண்ணாகமம்  14:40)

athikaalamea  avarga'l  ezhunthirunthu:  naangga'l  paavagnseythoam,  karththar  vaakkuththaththampa'n'nina  idaththukku  naangga'l  poavoam  en’ru  solli  malaiyin  uchchiyil  ea’raththu'ninthaarga'l.  (e’n’naagamam  14:40)

மோசே  அவர்களை  நோக்கி:  நீங்கள்  இப்படி  கர்த்தரின்  கட்டளையை  மீறுகிறதென்ன?  அது  உங்களுக்கு  வாய்க்காது.  (எண்ணாகமம்  14:41)

moasea  avarga'lai  noakki:  neengga'l  ippadi  karththarin  katta'laiyai  mee’rugi’rathenna?  athu  ungga'lukku  vaaykkaathu.  (e’n’naagamam  14:41)

நீங்கள்  உங்கள்  சத்துருக்களுக்கு  முன்பாக  முறிய  அடிக்கப்படாதபடிக்கு  ஏறிப்போகாதிருங்கள்;  கர்த்தர்  உங்கள்  நடுவில்  இரார்.  (எண்ணாகமம்  14:42)

neengga'l  ungga'l  saththurukka'lukku  munbaaga  mu’riya  adikkappadaathapadikku  ea’rippoagaathirungga'l;  karththar  ungga'l  naduvil  iraar.  (e’n’naagamam  14:42)

அமலேக்கியரும்  கானானியரும்  அங்கே  உங்களுக்குமுன்னே  இருக்கிறார்கள்;  பட்டயத்தினால்  விழுவீர்கள்;  நீங்கள்  கர்த்தரை  விட்டுப்  பின்வாங்கினபடியால்,  கர்த்தர்  உங்களோடே  இருக்கமாட்டார்  என்றான்.  (எண்ணாகமம்  14:43)

amaleakkiyarum  kaanaaniyarum  anggea  ungga'lukkumunnea  irukki’raarga'l;  pattayaththinaal  vizhuveerga'l;  neengga'l  karththarai  vittup  pinvaangginapadiyaal,  karththar  ungga'loadea  irukkamaattaar  en’raan.  (e’n’naagamam  14:43)

ஆனாலும்  அவர்கள்  மலையின்  உச்சியில்  ஏறத்  துணிந்தார்கள்;  கர்த்தருடைய  உடன்படிக்கையின்  பெட்டியும்  மோசேயும்  பாளயத்தை  விட்டுப்  போகவில்லை.  (எண்ணாகமம்  14:44)

aanaalum  avarga'l  malaiyin  uchchiyil  ea’rath  thu'ninthaarga'l;  karththarudaiya  udanpadikkaiyin  pettiyum  moaseayum  paa'layaththai  vittup  poagavillai.  (e’n’naagamam  14:44)

அப்பொழுது  அமலேக்கியரும்  கானானியரும்  அந்த  மலையிலே  இருந்து  இறங்கிவந்து,  அவர்களை  முறிய  அடித்து,  அவர்களை  ஓர்மாமட்டும்  துரத்தினார்கள்.  (எண்ணாகமம்  14:45)

appozhuthu  amaleakkiyarum  kaanaaniyarum  antha  malaiyilea  irunthu  i’ranggivanthu,  avarga'lai  mu’riya  adiththu,  avarga'lai  oarmaamattum  thuraththinaarga'l.  (e’n’naagamam  14:45)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!