Sunday, July 31, 2016

E'n'naagamam 13 | எண்ணாகமம் 13 | Numbers 13


கர்த்தர்  மோசேயை  நோக்கி:  (எண்ணாகமம்  13:1)

karththar  moaseayai  noakki:  (e’n’naagamam  13:1)

நான்  இஸ்ரவேல்  புத்திரருக்குக்  கொடுக்கும்  கானான்தேசத்தைச்  சுற்றிப்பார்ப்பதற்கு  நீ  மனிதரை  அனுப்பு;  ஒவ்வொரு  பிதாக்களின்  கோத்திரத்திலும்  ஒவ்வொரு  பிரபுவாகிய  புருஷனை  அனுப்பவேண்டும்  என்றார்.  (எண்ணாகமம்  13:2)

naan  israveal  puththirarukkuk  kodukkum  kaanaantheasaththaich  sut’rippaarppatha’rku  nee  manitharai  anuppu;  ovvoru  pithaakka'lin  koaththiraththilum  ovvoru  pirabuvaagiya  purushanai  anuppavea'ndum  en’raar.  (e’n’naagamam  13:2)

மோசே  கர்த்தருடைய  வாக்கின்படியே  அவர்களைப்  பாரான்  வனாந்தரத்திலிருந்து  அனுப்பினான்;  அந்த  மனிதர்  யாவரும்  இஸ்ரவேல்  புத்திரரின்  தலைவர்கள்.  (எண்ணாகமம்  13:3)

moasea  karththarudaiya  vaakkinpadiyea  avarga'laip  paaraan  vanaantharaththilirunthu  anuppinaan;  antha  manithar  yaavarum  israveal  puththirarin  thalaivarga'l.  (e’n’naagamam  13:3)

அவர்களுடைய  நாமங்களாவன:  ரூபன்  கோத்திரத்தில்  சக்கூரின்  குமாரன்  சம்முவா.  (எண்ணாகமம்  13:4)

avarga'ludaiya  naamangga'laavana:  rooban  koaththiraththil  sakkoorin  kumaaran  sammuvaa.  (e’n’naagamam  13:4)

சிமியோன்  கோத்திரத்தில்  ஓரியின்  குமாரன்  சாப்பாத்.  (எண்ணாகமம்  13:5)

simiyoan  koaththiraththil  oariyin  kumaaran  saappaath.  (e’n’naagamam  13:5)

யூதா  கோத்திரத்தில்  எப்புன்னேயின்  குமாரன்  காலேப்.  (எண்ணாகமம்  13:6)

yoothaa  koaththiraththil  eppunneayin  kumaaran  kaaleab.  (e’n’naagamam  13:6)

இசக்கார்  கோத்திரத்தில்  யோசேப்பின்  குமாரன்  ஈகால்.  (எண்ணாகமம்  13:7)

isakkaar  koaththiraththil  yoaseappin  kumaaran  eekaal.  (e’n’naagamam  13:7)

எப்பிராயீம்  கோத்திரத்தில்  நூனின்  குமாரன்  ஓசேயா.  (எண்ணாகமம்  13:8)

eppiraayeem  koaththiraththil  noonin  kumaaran  oaseayaa.  (e’n’naagamam  13:8)

பென்யமீன்  கோத்திரத்தில்  ரப்பூவின்  குமாரன்  பல்த்தி.  (எண்ணாகமம்  13:9)

benyameen  koaththiraththil  rappoovin  kumaaran  palththi.  (e’n’naagamam  13:9)

செபுலோன்  கோத்திரத்தில்  சோதியின்  குமாரன்  காதியேல்.  (எண்ணாகமம்  13:10)

sebuloan  koaththiraththil  soathiyin  kumaaran  kaathiyeal.  (e’n’naagamam  13:10)

யோசேப்பின்  கோத்திரத்தைச்  சேர்ந்த  மனாசே  கோத்திரத்தில்  சூசின்  குமாரன்  காதி.  (எண்ணாகமம்  13:11)

yoaseappin  koaththiraththaich  searntha  manaasea  koaththiraththil  soosin  kumaaran  kaathi.  (e’n’naagamam  13:11)

தாண்  கோத்திரத்தில்  கெமல்லியின்  குமாரன்  அம்மியேல்.  (எண்ணாகமம்  13:12)

thaa'n  koaththiraththil  kemalliyin  kumaaran  ammiyeal.  (e’n’naagamam  13:12)

ஆசேர்  கோத்திரத்தில்  மிகாவேலின்  குமாரன்  சேத்தூர்.  (எண்ணாகமம்  13:13)

aasear  koaththiraththil  migaavealin  kumaaran  seaththoor.  (e’n’naagamam  13:13)

நப்தலி  கோத்திரத்தில்  ஒப்பேசியின்  குமாரன்  நாகபி.  (எண்ணாகமம்  13:14)

napthali  koaththiraththil  oppeasiyin  kumaaran  naagabi.  (e’n’naagamam  13:14)

காத்  கோத்திரத்தில்  மாகியின்  குமாரன்  கூவேல்.  (எண்ணாகமம்  13:15)

kaath  koaththiraththil  maakiyin  kumaaran  kooveal.  (e’n’naagamam  13:15)

தேசத்தைச்  சுற்றிப்பார்க்கும்படி  மோசே  அனுப்பின  மனிதரின்  நாமங்கள்  இவைகளே;  நூனின்  குமாரனாகிய  ஓசேயாவுக்கு  யோசுவா  என்று  மோசே  பேரிட்டிருந்தான்.  (எண்ணாகமம்  13:16)

theasaththaich  sut’rippaarkkumpadi  moasea  anuppina  manitharin  naamangga'l  ivaiga'lea;  noonin  kumaaranaagiya  oaseayaavukku  yoasuvaa  en’ru  moasea  pearittirunthaan.  (e’n’naagamam  13:16)

அவர்களை  மோசே  கானான்தேசத்தைச்  சுற்றிப்பார்க்கும்படி  அனுப்புகையில்,  அவர்களை  நோக்கி:  நீங்கள்  இப்படித்  தெற்கே  போய்,  மலையில்  ஏறி,  (எண்ணாகமம்  13:17)

avarga'lai  moasea  kaanaantheasaththaich  sut’rippaarkkumpadi  anuppugaiyil,  avarga'lai  noakki:  neengga'l  ippadith  the’rkea  poay,  malaiyil  ea’ri,  (e’n’naagamam  13:17)

தேசம்  எப்படிப்பட்டதென்றும்,  அங்கே  குடியிருக்கிற  ஜனங்கள்  பலவான்களோ  பலவீனர்களோ,  கொஞ்சம்பேரோ  அநேகம்பேரோ  என்றும்,  (எண்ணாகமம்  13:18)

theasam  eppadippattathen’rum,  anggea  kudiyirukki’ra  janangga'l  balavaanga'loa  balaveenarga'loa,  kognchampearoa  aneagampearoa  en’rum,  (e’n’naagamam  13:18)

அவர்கள்  குடியிருக்கிற  தேசம்  எப்படிப்பட்டது,  அது  நல்லதோ  கெட்டதோ  என்றும்,  அவர்கள்  பட்டணங்கள்  எப்படிப்பட்டதென்றும்,  அவர்கள்  கூடாரங்களில்  குடியிருக்கிறவர்களோ  கோட்டைகளில்  குடியிருக்கிறவர்களோ  என்றும்,  (எண்ணாகமம்  13:19)

avarga'l  kudiyirukki’ra  theasam  eppadippattathu,  athu  nallathoa  kettathoa  en’rum,  avarga'l  patta'nangga'l  eppadippattathen’rum,  avarga'l  koodaarangga'lil  kudiyirukki’ravarga'loa  koattaiga'lil  kudiyirukki’ravarga'loa  en’rum,  (e’n’naagamam  13:19)

நிலம்  எப்படிப்பட்டது,  அது  வளப்பமானதோ  இளப்பமானதோ  என்றும்;  அதில்  விருட்சங்கள்  உண்டோ  இல்லையோ  என்றும்  பாருங்கள்;  தைரியங்கொண்டிருந்து,  தேசத்தின்  கனிகளிலே  சிலவற்றைக்  கொண்டுவாருங்கள்  என்றான்.  அக்காலம்  திராட்சச்செடி  முதற்பழம்  பழுக்கிற  காலமாயிருந்தது.  (எண்ணாகமம்  13:20)

nilam  eppadippattathu,  athu  va'lappamaanathoa  i'lappamaanathoa  en’rum;  athil  virudchangga'l  u'ndoa  illaiyoa  en’rum  paarungga'l;  thairiyangko'ndirunthu,  theasaththin  kaniga'lilea  silavat’raik  ko'nduvaarungga'l  en’raan.  akkaalam  thiraadchachsedi  mutha’rpazham  pazhukki’ra  kaalamaayirunthathu.  (e’n’naagamam  13:20)

அவர்கள்  போய்,  சீன்  வனாந்தரந்தொடங்கி,  ஆமாத்துக்குப்  போகிற  வழியாகிய  ரேகொப்மட்டும்,  தேசத்தைச்  சுற்றிப்பார்த்து,  (எண்ணாகமம்  13:21)

avarga'l  poay,  seen  vanaantharanthodanggi,  aamaaththukkup  poagi’ra  vazhiyaagiya  reagobmattum,  theasaththaich  sut’rippaarththu,  (e’n’naagamam  13:21)

தெற்கேயும்  சென்று,  எபிரோன்மட்டும்  போனார்கள்;  அங்கே  ஏனாக்கின்  குமாரராகிய  அகீமானும்  சேசாயும்  தல்மாயும்  இருந்தார்கள்.  எபிரோன்  எகிப்திலுள்ள  சோவானுக்கு  ஏழுவருஷத்திற்குமுன்னே  கட்டப்பட்டது.  (எண்ணாகமம்  13:22)

the’rkeayum  sen’ru,  ebiroanmattum  poanaarga'l;  anggea  eanaakkin  kumaararaagiya  ageemaanum  seasaayum  thalmaayum  irunthaarga'l.  ebiroan  egipthilu'l'la  soavaanukku  eazhuvarushaththi’rkumunnea  kattappattathu.  (e’n’naagamam  13:22)

பின்பு,  அவர்கள்  எஸ்கோல்  பள்ளத்தாக்குமட்டும்  போய்,  அங்கே  ஒரே  குலையுள்ள  ஒரு  திராட்சக்கொடியை  அறுத்தார்கள்;  அதை  ஒரு  தடியிலே  இரண்டு  பேர்  கட்டித்  தூக்கிக்கொண்டுவந்தார்கள்;  மாதளம்பழங்களிலும்  அத்திப்பழங்களிலும்  சிலவற்றைக்  கொண்டுவந்தார்கள்.  (எண்ணாகமம்  13:23)

pinbu,  avarga'l  eskoal  pa'l'laththaakkumattum  poay,  anggea  orea  kulaiyu'l'la  oru  thiraadchakkodiyai  a’ruththaarga'l;  athai  oru  thadiyilea  ira'ndu  pear  kattith  thookkikko'nduvanthaarga'l;  maatha'lampazhangga'lilum  aththippazhangga'lilum  silavat’raik  ko'nduvanthaarga'l.  (e’n’naagamam  13:23)

இஸ்ரவேல்  புத்திரர்  அங்கே  அறுத்த  திராட்சக்குலையினிமித்தம்,  அவ்விடம்  எஸ்கோல்  பள்ளத்தாக்கு  என்னப்பட்டது.  (எண்ணாகமம்  13:24)

israveal  puththirar  anggea  a’ruththa  thiraadchakkulaiyinimiththam,  avvidam  eskoal  pa'l'laththaakku  ennappattathu.  (e’n’naagamam  13:24)

அவர்கள்  தேசத்தைச்  சுற்றிப்பார்த்து,  நாற்பதுநாள்  சென்றபின்பு  திரும்பினார்கள்.  (எண்ணாகமம்  13:25)

avarga'l  theasaththaich  sut’rippaarththu,  naa’rpathunaa'l  sen’rapinbu  thirumbinaarga'l.  (e’n’naagamam  13:25)

அவர்கள்  பாரான்  வனாந்தரத்தில்  இருக்கிற  காதேசுக்கு  வந்து,  மோசே  ஆரோன்  என்பவர்களிடத்திலும்  இஸ்ரவேல்  புத்திரராகிய  சபையார்  எல்லாரிடத்திலும்  சேர்ந்து,  அவர்களுக்கும்  சபையார்  அனைவருக்கும்  சமாசாரத்தை  அறிவித்து,  தேசத்தின்  கனிகளை  அவர்களுக்குக்  காண்பித்தார்கள்.  (எண்ணாகமம்  13:26)

avarga'l  paaraan  vanaantharaththil  irukki’ra  kaatheasukku  vanthu,  moasea  aaroan  enbavarga'lidaththilum  israveal  puththiraraagiya  sabaiyaar  ellaaridaththilum  searnthu,  avarga'lukkum  sabaiyaar  anaivarukkum  samaachaaraththai  a’riviththu,  theasaththin  kaniga'lai  avarga'lukkuk  kaa'nbiththaarga'l.  (e’n’naagamam  13:26)

அவர்கள்  மோசேயை  நோக்கி:  நீர்  எங்களை  அனுப்பின  தேசத்துக்கு  நாங்கள்  போய்வந்தோம்;  அது  பாலும்  தேனும்  ஓடுகிற  தேசந்தான்;  இது  அதினுடைய  கனி.  (எண்ணாகமம்  13:27)

avarga'l  moaseayai  noakki:  neer  engga'lai  anuppina  theasaththukku  naangga'l  poayvanthoam;  athu  paalum  theanum  oadugi’ra  theasanthaan;  ithu  athinudaiya  kani.  (e’n’naagamam  13:27)

ஆனாலும்,  அந்த  தேசத்திலே  குடியிருக்கிற  ஜனங்கள்  பலவான்கள்;  பட்டணங்கள்  அரணிப்பானவைகளும்  மிகவும்  பெரியவைகளுமாய்  இருக்கிறது;  அங்கே  ஏனாக்கின்  குமாரரையும்  கண்டோம்.  (எண்ணாகமம்  13:28)

aanaalum,  antha  theasaththilea  kudiyirukki’ra  janangga'l  balavaanga'l;  patta'nangga'l  ara'nippaanavaiga'lum  migavum  periyavaiga'lumaay  irukki’rathu;  anggea  eanaakkin  kumaararaiyum  ka'ndoam.  (e’n’naagamam  13:28)

அமலேக்கியர்  தென்புறமான  தேசத்தில்  குடியிருக்கிறார்கள்;  ஏத்தியரும்,  எபூசியரும்,  எமோரியரும்  மலைநாட்டில்  குடியிருக்கிறார்கள்;  கானானியர்  கடல்  அருகேயும்  யோர்தானண்டையிலும்  குடியிருக்கிறார்கள்  என்றார்கள்.  (எண்ணாகமம்  13:29)

amaleakkiyar  thenpu’ramaana  theasaththil  kudiyirukki’raarga'l;  eaththiyarum,  eboosiyarum,  emoariyarum  malainaattil  kudiyirukki’raarga'l;  kaanaaniyar  kadal  arugeayum  yoarthaana'ndaiyilum  kudiyirukki’raarga'l  en’raarga'l.  (e’n’naagamam  13:29)

அப்பொழுது  காலேப்  மோசேக்கு  முன்பாக  ஜனங்களை  அமர்த்தி:  நாம்  உடனே  போய்  அதைச்  சுதந்தரித்துக்கொள்வோம்;  நாம்  அதை  எளிதாய்  ஜெயித்துக்கொள்ளலாம்  என்றான்.  (எண்ணாகமம்  13:30)

appozhuthu  kaaleab  moaseakku  munbaaga  janangga'lai  amarththi:  naam  udanea  poay  athaich  suthanthariththukko'lvoam;  naam  athai  e'lithaay  jeyiththukko'l'lalaam  en’raan.  (e’n’naagamam  13:30)

அவனோடேகூடப்  போய்வந்த  மனிதரோ:  நாம்  போய்  அந்த  ஜனங்களோடே  எதிர்க்க  நம்மாலே  கூடாது;  அவர்கள்  நம்மைப்பார்க்கிலும்  பலவான்கள்  என்றார்கள்.  (எண்ணாகமம்  13:31)

avanoadeakoodap  poayvantha  manitharoa:  naam  poay  antha  janangga'loadea  ethirkka  nammaalea  koodaathu;  avarga'l  nammaippaarkkilum  balavaanga'l  en’raarga'l.  (e’n’naagamam  13:31)

நாங்கள்  போய்ச்  சுற்றிப்  பார்த்துவந்த  அந்த  தேசம்  தன்  குடிகளைப்  பட்சிக்கிற  தேசம்;  நாங்கள்  அதிலே  கண்ட  ஜனங்கள்  எல்லாரும்  மிகவும்  பெரிய  ஆட்கள்.  (எண்ணாகமம்  13:32)

naangga'l  poaych  sut’rip  paarththuvantha  antha  theasam  than  kudiga'laip  padchikki’ra  theasam;  naangga'l  athilea  ka'nda  janangga'l  ellaarum  migavum  periya  aadka'l.  (e’n’naagamam  13:32)

அங்கே  இராட்சதப்  பிறவியான  ஏனாக்கின்  குமாரராகிய  இராட்சதரையும்  கண்டோம்;  நாங்கள்  எங்கள்  பார்வைக்கு  வெட்டுக்கிளிகளைப்போல்  இருந்தோம்,  அவர்கள்  பார்வைக்கும்  அப்படியே  இருந்தோம்  என்று  சொல்லி,  இப்படி  இஸ்ரவேல்  புத்திரருக்குள்ளே  தாங்கள்  சுற்றிப்  பார்த்துவந்த  தேசத்தைக்குறித்து  துர்ச்செய்தி  பரம்பச்செய்தார்கள்.  (எண்ணாகமம்  13:33)

anggea  iraadchathap  pi’raviyaana  eanaakkin  kumaararaagiya  iraadchatharaiyum  ka'ndoam;  naangga'l  engga'l  paarvaikku  vettukki'liga'laippoal  irunthoam,  avarga'l  paarvaikkum  appadiyea  irunthoam  en’ru  solli,  ippadi  israveal  puththirarukku'l'lea  thaangga'l  sut’rip  paarththuvantha  theasaththaikku’riththu  thurchseythi  parambachseythaarga'l.  (e’n’naagamam  13:33)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!