Sunday, July 31, 2016

E'n'naagamam 12 | எண்ணாகமம் 12 | Numbers 12


எத்தியோப்பியா  தேசத்து  ஸ்திரீயை  மோசே  விவாகம்பண்ணியிருந்தபடியினால்,  மிரியாமும்  ஆரோனும்  அவன்  விவாகம்பண்ணின  எத்தியோப்பியா  தேசத்து  ஸ்திரீயினிமித்தம்  அவனுக்கு  விரோதமாய்ப்  பேசி:  (எண்ணாகமம்  12:1)

eththiyoappiyaa  theasaththu  sthireeyai  moasea  vivaagampa'n'niyirunthapadiyinaal,  miriyaamum  aaroanum  avan  vivaagampa'n'nina  eththiyoappiyaa  theasaththu  sthireeyinimiththam  avanukku  viroathamaayp  peasi:  (e’n’naagamam  12:1)

கர்த்தர்  மோசேயைக்கொண்டுமாத்திரம்  பேசினாரோ,  எங்களைக்கொண்டும்  அவர்  பேசினதில்லையோ  என்றார்கள்.  கர்த்தர்  அதைக்  கேட்டார்.  (எண்ணாகமம்  12:2)

karththar  moaseayaikko'ndumaaththiram  peasinaaroa,  engga'laikko'ndum  avar  peasinathillaiyoa  en’raarga'l.  karththar  athaik  keattaar.  (e’n’naagamam  12:2)

மோசேயானவன்  பூமியிலுள்ள  சகல  மனிதரிலும்  மிகுந்த  சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்.  (எண்ணாகமம்  12:3)

moaseayaanavan  boomiyilu'l'la  sagala  manitharilum  miguntha  saanthaku'namu'l'lavanaayirunthaan.  (e’n’naagamam  12:3)

சடுதியிலே  கர்த்தர்  மோசேயையும்  ஆரோனையும்  மிரியாமையும்  நோக்கி:  நீங்கள்  மூன்றுபேரும்  ஆசரிப்புக்  கூடாரத்துக்குப்  புறப்பட்டுவாருங்கள்  என்றார்;  மூன்றுபேரும்  போனார்கள்.  (எண்ணாகமம்  12:4)

saduthiyilea  karththar  moaseayaiyum  aaroanaiyum  miriyaamaiyum  noakki:  neengga'l  moon’rupearum  aasarippuk  koodaaraththukkup  pu’rappattuvaarungga'l  en’raar;  moon’rupearum  poanaarga'l.  (e’n’naagamam  12:4)

கர்த்தர்  மேகத்தூணில்  இறங்கி,  கூடாரவாசலிலே  நின்று,  ஆரோனையும்  மிரியாமையும்  கூப்பிட்டார்;  அவர்கள்  இருவரும்  போனார்கள்.  (எண்ணாகமம்  12:5)

karththar  meagaththoo'nil  i’ranggi,  koodaaravaasalilea  nin’ru,  aaroanaiyum  miriyaamaiyum  kooppittaar;  avarga'l  iruvarum  poanaarga'l.  (e’n’naagamam  12:5)

அப்பொழுது  அவர்:  என்  வார்த்தைகளைக்  கேளுங்கள்;  உங்களுக்குள்ளே  ஒருவன்  தீர்க்கதரிசியாயிருந்தால்,  கர்த்தராகிய  நான்  தரிசனத்தில்  என்னை  அவனுக்கு  வெளிப்படுத்தி,  சொப்பனத்தில்  அவனோடே  பேசுவேன்.  (எண்ணாகமம்  12:6)

appozhuthu  avar:  en  vaarththaiga'laik  kea'lungga'l;  ungga'lukku'l'lea  oruvan  theerkkatharisiyaayirunthaal,  karththaraagiya  naan  tharisanaththil  ennai  avanukku  ve'lippaduththi,  soppanaththil  avanoadea  peasuvean.  (e’n’naagamam  12:6)

என்  தாசனாகிய  மோசேயோ  அப்படிப்பட்டவன்  அல்ல,  என்  வீட்டில்  எங்கும்  அவன்  உண்மையுள்ளவன்.  (எண்ணாகமம்  12:7)

en  thaasanaagiya  moaseayoa  appadippattavan  alla,  en  veettil  enggum  avan  u'nmaiyu'l'lavan.  (e’n’naagamam  12:7)

நான்  அவனுடன்  மறைபொருளாக  அல்ல,  முகமுகமாகவும்  பிரத்தியட்சமாகவும்  பேசுகிறேன்;  அவன்  கர்த்தரின்  சாயலைக்  காண்கிறான்;  இப்படியிருக்க,  நீங்கள்  என்  தாசனாகிய  மோசேக்கு  விரோதமாய்ப்  பேச,  உங்களுக்குப்  பயமில்லாமற்போனதென்ன  என்றார்.  (எண்ணாகமம்  12:8)

naan  avanudan  ma’raiporu'laaga  alla,  mugamugamaagavum  piraththiyadchamaagavum  peasugi’rean;  avan  karththarin  saayalaik  kaa'ngi’raan;  ippadiyirukka,  neengga'l  en  thaasanaagiya  moaseakku  viroathamaayp  peasa,  ungga'lukkup  bayamillaama’rpoanathenna  en’raar.  (e’n’naagamam  12:8)

கர்த்தருடைய  கோபம்  அவர்கள்மேல்  மூண்டது;  அவர்  போய்விட்டார்.  (எண்ணாகமம்  12:9)

karththarudaiya  koabam  avarga'lmeal  moo'ndathu;  avar  poayvittaar.  (e’n’naagamam  12:9)

மேகம்  கூடாரத்தை  விட்டு  நீங்கிப்போயிற்று;  மிரியாம்  உறைந்த  மழையின்  வெண்மைபோன்ற  குஷ்டரோகியானாள்;  ஆரோன்  மிரியாமைப்  பார்த்தபோது,  அவள்  குஷ்டரோகியாயிருக்கக்  கண்டான்.  (எண்ணாகமம்  12:10)

meagam  koodaaraththai  vittu  neenggippoayit’ru;  miriyaam  u’raintha  mazhaiyin  ve'nmaipoan’ra  kushdaroagiyaanaa'l;  aaroan  miriyaamaip  paarththapoathu,  ava'l  kushdaroagiyaayirukkak  ka'ndaan.  (e’n’naagamam  12:10)

அப்பொழுது  ஆரோன்  மோசேயை  நோக்கி:  ஆ,  என்  ஆண்டவனே,  நாங்கள்  புத்தியீனமாய்ச்  செய்த  இந்தப்  பாவத்தை  எங்கள்மேல்  சுமத்தாதிரும்.  (எண்ணாகமம்  12:11)

appozhuthu  aaroan  moaseayai  noakki:  aa,  en  aa'ndavanea,  naangga'l  buththiyeenamaaych  seytha  inthap  paavaththai  engga'lmeal  sumaththaathirum.  (e’n’naagamam  12:11)

தன்  தாயின்  கர்ப்பத்தில்  பாதி  மாம்சம்  அழுகிச்  செத்துவிழுந்த  பிள்ளையைப்போல  அவள்  ஆகாதிருப்பாளாக  என்றான்.  (எண்ணாகமம்  12:12)

than  thaayin  karppaththil  paathi  maamsam  azhugich  seththuvizhuntha  pi'l'laiyaippoala  ava'l  aagaathiruppaa'laaga  en’raan.  (e’n’naagamam  12:12)

அப்பொழுது  மோசே  கர்த்தரை  நோக்கி:  என்  தேவனே,  அவளைக்  குணமாக்கும்  என்று  கெஞ்சினான்.  (எண்ணாகமம்  12:13)

appozhuthu  moasea  karththarai  noakki:  en  theavanea,  ava'laik  ku'namaakkum  en’ru  kegnchinaan.  (e’n’naagamam  12:13)

கர்த்தர்  மோசேயை  நோக்கி:  அவள்  தகப்பன்  அவள்  முகத்திலே  காறித்  துப்பினதுண்டானால்,  அவள்  ஏழுநாள்  வெட்கப்படவேண்டாமோ,  அதுபோலவே  அவள்  ஏழுநாள்  பாளயத்துக்குப்  புறம்பே  விலக்கப்பட்டிருந்து,  பின்பு  சேர்த்துக்கொள்ளப்படக்கடவள்  என்றார்.  (எண்ணாகமம்  12:14)

karththar  moaseayai  noakki:  ava'l  thagappan  ava'l  mugaththilea  kaa’rith  thuppinathu'ndaanaal,  ava'l  eazhunaa'l  vedkappadavea'ndaamoa,  athupoalavea  ava'l  eazhunaa'l  paa'layaththukkup  pu’rambea  vilakkappattirunthu,  pinbu  searththukko'l'lappadakkadava'l  en’raar.  (e’n’naagamam  12:14)

அப்படியே  மிரியாம்  ஏழுநாள்  பாளயத்துக்குப்  புறம்பே  விலக்கப்பட்டிருந்தாள்;  மிரியாம்  சேர்த்துக்கொள்ளப்படுமட்டும்  ஜனங்கள்  பிரயாணம்பண்ணாதிருந்தார்கள்.  (எண்ணாகமம்  12:15)

appadiyea  miriyaam  eazhunaa'l  paa'layaththukkup  pu’rambea  vilakkappattirunthaa'l;  miriyaam  searththukko'l'lappadumattum  janangga'l  pirayaa'nampa'n'naathirunthaarga'l.  (e’n’naagamam  12:15)

பின்பு,  ஜனங்கள்  ஆஸரோத்திலிருந்து  புறப்பட்டு,  பாரான்  வனாந்தரத்திலே  பாளயமிறங்கினார்கள்.  (எண்ணாகமம்  12:16)

pinbu,  janangga'l  aasaroaththilirunthu  pu’rappattu,  paaraan  vanaantharaththilea  paa'layami’rangginaarga'l.  (e’n’naagamam  12:16)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!