Monday, July 25, 2016

Aamoas 8 | ஆமோஸ் 8 | Amos 8


பின்பு  கர்த்தராகிய  ஆண்டவர்  எனக்குக்  காண்பித்ததாவது:  இதோ,  பழுத்த  பழங்களுள்ள  ஒரு  கூடை  இருந்தது.  (ஆமோஸ்  8:1)

pinbu  karththaraagiya  aa'ndavar  enakkuk  kaa'nbiththathaavathu:  ithoa,  pazhuththa  pazhangga'lu'l'la  oru  koodai  irunthathu.  (aamoas  8:1)

அவர்:  ஆமோசே,  நீ  என்னத்தைக்  காண்கிறாய்  என்று  கேட்டார்?  பழுத்த  பழங்களுள்ள  ஒரு  கூடையைக்  காண்கிறேன்  என்றேன்.  அப்பொழுது  கர்த்தர்  என்னை  நோக்கி:  என்  ஜனமாகிய  இஸ்ரவேலுக்கு  முடிவுகாலம்  வந்தது;  இனி  அவர்களை  மன்னிக்கமாட்டேன்.  (ஆமோஸ்  8:2)

avar:  aamoasea,  nee  ennaththaik  kaa'ngi’raay  en’ru  keattaar?  pazhuththa  pazhangga'lu'l'la  oru  koodaiyaik  kaa'ngi’rean  en’rean.  appozhuthu  karththar  ennai  noakki:  en  janamaagiya  isravealukku  mudivukaalam  vanthathu;  ini  avarga'lai  mannikkamaattean.  (aamoas  8:2)

அந்நாளிலே  தேவாலயப்பாட்டுகள்  அலறுதலாக  மாறும்;  எல்லா  இடத்திலும்  திரளான  பிரேதங்கள்  புலம்பலில்லாமல்  எறிந்துவிடப்படும்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  (ஆமோஸ்  8:3)

annaa'lilea  theavaalayappaattuga'l  ala’ruthalaaga  maa’rum;  ellaa  idaththilum  thira'laana  pireathangga'l  pulambalillaamal  e’rinthuvidappadum  en’ru  karththaraagiya  aa'ndavar  sollugi’raar.  (aamoas  8:3)

தேசத்தில்  சிறுமைப்பட்டவர்களை  ஒழியப்பண்ண,  எளியவர்களை  விழுங்கி:  (ஆமோஸ்  8:4)

theasaththil  si’rumaippattavarga'lai  ozhiyappa'n'na,  e'liyavarga'lai  vizhunggi:  (aamoas  8:4)

நாங்கள்  மரக்காலைக்  குறைத்து,  சேக்கல்  நிறையை  அதிகமாக்கி,  கள்ளத்தராசினால்  வஞ்சித்து,  தரித்திரரைப்  பணத்துக்கும்,  எளியவர்களை  ஒரு  ஜோடு  பாதரட்சைக்கும்  கொள்ளும்படிக்கும்,  தானியத்தின்  பதரை  விற்கும்படிக்கும்,  (ஆமோஸ்  8:5)

naangga'l  marakkaalaik  ku’raiththu,  seakkal  ni’raiyai  athigamaakki,  ka'l'laththaraasinaal  vagnchiththu,  thariththiraraip  pa'naththukkum,  e'liyavarga'lai  oru  joadu  paatharadchaikkum  ko'l'lumpadikkum,  thaaniyaththin  patharai  vi’rkumpadikkum,  (aamoas  8:5)

நாங்கள்  தவசம்  விற்கத்தக்கதாக  மாதப்பிறப்பும்,  நாங்கள்  தானியத்தின்  பண்டசாலைகளைத்  திறக்கத்தக்கதாக  ஓய்வுநாளும்  எப்போது  முடியும்  என்று  சொல்லுகிறவர்களே,  இதைக்  கேளுங்கள்.  (ஆமோஸ்  8:6)

naangga'l  thavasam  vi’rkaththakkathaaga  maathappi’rappum,  naangga'l  thaaniyaththin  pa'ndasaalaiga'laith  thi’rakkaththakkathaaga  oayvunaa'lum  eppoathu  mudiyum  en’ru  sollugi’ravarga'lea,  ithaik  kea'lungga'l.  (aamoas  8:6)

அவர்கள்  செய்கைகளையெல்லாம்  நான்  ஒருபோதும்  மறப்பதில்லையென்று  கர்த்தர்  யாக்கோபுடைய  மகிமையின்பேரில்  ஆணையிட்டார்.  (ஆமோஸ்  8:7)

avarga'l  seygaiga'laiyellaam  naan  orupoathum  ma’rappathillaiyen’ru  karththar  yaakkoabudaiya  magimaiyinpearil  aa'naiyittaar.  (aamoas  8:7)

இதினிமித்தம்  தேசம்  அதிரவும்,  அதின்  குடிகள்  எல்லாம்  துக்கிக்கவும்,  எங்கும்  நதிகளாய்ப்  புரண்டோடவும்,  எகிப்தின்  ஆற்றுவெள்ளத்தைப்போல்  அடித்து,  பெருவெள்ளமாகவும்  வேண்டாமோ?  (ஆமோஸ்  8:8)

ithinimiththam  theasam  athiravum,  athin  kudiga'l  ellaam  thukkikkavum,  enggum  nathiga'laayp  pura'ndoadavum,  egipthin  aat’ruve'l'laththaippoal  adiththu,  peruve'l'lamaagavum  vea'ndaamoa?  (aamoas  8:8)

அந்நாளிலே  நான்  மத்தியானத்திலே  சூரியனை  அஸ்தமிக்கப்பண்ணி,  பட்டப்பகலிலே  தேசத்தை  அந்தகாரப்படுத்தி,  (ஆமோஸ்  8:9)

annaa'lilea  naan  maththiyaanaththilea  sooriyanai  asthamikkappa'n'ni,  pattappagalilea  theasaththai  anthagaarappaduththi,  (aamoas  8:9)

உங்கள்  பண்டிகைகளைத்  துக்கிப்பாகவும்,  உங்கள்  பாட்டுகளையெல்லாம்  புலம்பலாகவும்  மாறப்பண்ணி,  சகல  அரைகளிலும்  இரட்டையும்,  சகல  தலைகளிலும்  மொட்டையையும்  வருவித்து,  அவர்களுடைய  துக்கிப்பை  ஒரே  பிள்ளைக்காகத்  துக்கிக்கிற  துக்கிப்புக்குச்  சமானமாக்கி,  அவர்களுடைய  முடிவைக்  கசப்பான  நாளாக்குவேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  (ஆமோஸ்  8:10)

ungga'l  pa'ndigaiga'laith  thukkippaagavum,  ungga'l  paattuga'laiyellaam  pulambalaagavum  maa’rappa'n'ni,  sagala  araiga'lilum  irattaiyum,  sagala  thalaiga'lilum  mottaiyaiyum  varuviththu,  avarga'ludaiya  thukkippai  orea  pi'l'laikkaagath  thukkikki’ra  thukkippukkuch  samaanamaakki,  avarga'ludaiya  mudivaik  kasappaana  naa'laakkuvean  en’ru  karththaraagiya  aa'ndavar  sollugi’raar.  (aamoas  8:10)

இதோ,  நான்  தேசத்தின்மேல்  பஞ்சத்தை  அனுப்பும்  நாட்கள்  வரும்;  ஆகாரக்  குறைவினால்  உண்டாகிய  பஞ்சமல்ல,  ஜலக்குறைவினால்  உண்டாகிய  தாகமுமல்ல,  கர்த்தருடைய  வசனம்  கேட்கக்  கிடையாத  பஞ்சத்தை  அனுப்புவேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  (ஆமோஸ்  8:11)

ithoa,  naan  theasaththinmeal  pagnchaththai  anuppum  naadka'l  varum;  aagaarak  ku’raivinaal  u'ndaagiya  pagnchamalla,  jalakku’raivinaal  u'ndaagiya  thaagamumalla,  karththarudaiya  vasanam  keadkak  kidaiyaatha  pagnchaththai  anuppuvean  en’ru  karththaraagiya  aa'ndavar  sollugi’raar.  (aamoas  8:11)

அப்பொழுது  அவர்கள்  கர்த்தருடைய  வசனத்தைத்  தேட  ஒரு  சமுத்திரந்தொடங்கி  மறு  சமுத்திரமட்டும்,  வடதிசைதொடங்கிக்  கீழ்த்திசைமட்டும்  அலைந்து  திரிந்தும்  அதைக்  கண்டடையாமற்  போவார்கள்.  (ஆமோஸ்  8:12)

appozhuthu  avarga'l  karththarudaiya  vasanaththaith  theada  oru  samuththiranthodanggi  ma’ru  samuththiramattum,  vadathisaithodanggik  keezhththisaimattum  alainthu  thirinthum  athaik  ka'ndadaiyaama’r  poavaarga'l.  (aamoas  8:12)

அந்நாளிலே  சௌந்தரியமுள்ள  கன்னிகைகளும்  வாலிபரும்  தாகத்தினால்  சோர்ந்துபோவார்கள்.  (ஆமோஸ்  8:13)

annaa'lilea  saunthariyamu'l'la  kannigaiga'lum  vaalibarum  thaagaththinaal  soarnthupoavaarga'l.  (aamoas  8:13)

தாணே!  உன்  தேவனுடைய  ஜீவனைக்கொண்டும்,  பெயெர்செபா  மார்க்கத்தின்  தேவனுடைய  ஜீவனைக்கொண்டும்  என்று  சொல்லி,  சமாரியாவின்  தோஷத்தின்மேல்  ஆணையிடுகிறவர்கள்  விழுவார்கள்;  இனி  ஒருபோதும்  எழுந்திருக்கமாட்டார்கள்  என்றார்.  (ஆமோஸ்  8:14)

thaa'nea!  un  theavanudaiya  jeevanaikko'ndum,  beyersebaa  maarkkaththin  theavanudaiya  jeevanaikko'ndum  en’ru  solli,  samaariyaavin  thoashaththinmeal  aa'naiyidugi’ravarga'l  vizhuvaarga'l;  ini  orupoathum  ezhunthirukkamaattaarga'l  en’raar.  (aamoas  8:14)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!