Monday, July 25, 2016

Aamoas 7 | ஆமோஸ் 7 | Amos 7


கர்த்தராகிய  ஆண்டவர்  எனக்குக்  காண்பித்ததாவது:  இதோ,  ராஜாவினுடைய  புல்லறுப்புக்குப்பின்பு  இரண்டாம்  கந்தாயத்துப்  புல்  முளைக்கத்  தொடங்குகையில்  அவர்  வெட்டுக்கிளிகளை  உண்டாக்கினார்.  (ஆமோஸ்  7:1)

karththaraagiya  aa'ndavar  enakkuk  kaa'nbiththathaavathu:  ithoa,  raajaavinudaiya  pulla’ruppukkuppinbu  ira'ndaam  kanthaayaththup  pul  mu'laikkath  thodanggugaiyil  avar  vettukki'liga'lai  u'ndaakkinaar.  (aamoas  7:1)

அவைகள்  தேசத்தின்  புல்லைத்தின்று  தீர்ந்தபோது,  நான்:  கர்த்தராகிய  ஆண்டவரே,  மன்னித்தருளும்;  யாக்கோபு  திரும்ப  யாராலே  எழுந்திருப்பான்?  அவன்  சிறுத்துப்போனான்  என்றேன்.  (ஆமோஸ்  7:2)

avaiga'l  theasaththin  pullaiththin’ru  theernthapoathu,  naan:  karththaraagiya  aa'ndavarea,  manniththaru'lum;  yaakkoabu  thirumba  yaaraalea  ezhunthiruppaan?  avan  si’ruththuppoanaan  en’rean.  (aamoas  7:2)

கர்த்தர்  அதற்கு  மனஸ்தாபப்பட்டு,  அப்படி  ஆவதில்லை  என்றார்.  (ஆமோஸ்  7:3)

karththar  atha’rku  manasthaabappattu,  appadi  aavathillai  en’raar.  (aamoas  7:3)

கர்த்தராகிய  ஆண்டவர்  எனக்குக்  காண்பித்ததாவது:  இதோ,  அக்கினியாலே  நியாயம்  விசாரிப்பேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  ஏற்பட்டார்;  அது  மகா  ஆழியைப்  பட்சித்தது,  அதில்  ஒரு  பங்கைப்  பட்சித்துத்  தீர்ந்தது.  (ஆமோஸ்  7:4)

karththaraagiya  aa'ndavar  enakkuk  kaa'nbiththathaavathu:  ithoa,  akkiniyaalea  niyaayam  visaarippean  en’ru  karththaraagiya  aa'ndavar  ea’rpattaar;  athu  mahaa  aazhiyaip  padchiththathu,  athil  oru  panggaip  padchiththuth  theernthathu.  (aamoas  7:4)

அப்பொழுது  நான்:  கர்த்தராகிய  ஆண்டவரே,  நிறுத்துமே;  யாக்கோபு  திரும்ப  யாராலே  எழுந்திருப்பான்?  அவன்  சிறுத்துப்போனான்  என்றேன்.  (ஆமோஸ்  7:5)

appozhuthu  naan:  karththaraagiya  aa'ndavarea,  ni’ruththumea;  yaakkoabu  thirumba  yaaraalea  ezhunthiruppaan?  avan  si’ruththuppoanaan  en’rean.  (aamoas  7:5)

கர்த்தர்  அதற்கு  மனஸ்தாபப்பட்டு,  அப்படி  ஆவதில்லை  என்றார்.  (ஆமோஸ்  7:6)

karththar  atha’rku  manasthaabappattu,  appadi  aavathillai  en’raar.  (aamoas  7:6)

பின்பு  அவர்  எனக்குக்  காண்பித்ததாவது:  இதோ,  தூக்குநூல்  பிரமாணத்தினால்  கட்டப்பட்ட  ஒரு  மதிலின்மேல்  நின்றார்;  அவர்  கையில்  தூக்குநூல்  இருந்தது.  (ஆமோஸ்  7:7)

pinbu  avar  enakkuk  kaa'nbiththathaavathu:  ithoa,  thookkunool  piramaa'naththinaal  kattappatta  oru  mathilinmeal  nin’raar;  avar  kaiyil  thookkunool  irunthathu.  (aamoas  7:7)

கர்த்தர்  என்னை  நோக்கி:  ஆமோசே,  நீ  என்னத்தைக்  காண்கிறாய்  என்றார்;  தூக்குநூலைக்  காண்கிறேன்  என்றேன்;  அப்பொழுது  ஆண்டவர்:  இதோ,  இஸ்ரவேலென்னும்  என்  ஜனத்தின்  நடுவே  தூக்குநூலை  விடுவேன்;  இனி  அவர்களை  மன்னிக்கமாட்டேன்.  (ஆமோஸ்  7:8)

karththar  ennai  noakki:  aamoasea,  nee  ennaththaik  kaa'ngi’raay  en’raar;  thookkunoolaik  kaa'ngi’rean  en’rean;  appozhuthu  aa'ndavar:  ithoa,  isravealennum  en  janaththin  naduvea  thookkunoolai  viduvean;  ini  avarga'lai  mannikkamaattean.  (aamoas  7:8)

ஈசாக்கின்  மேடைகள்  பாழும்,  இஸ்ரவேலின்  பரிசுத்த  ஸ்தலங்கள்  அவாந்தரமுமாக்கப்படும்;  நான்  எரொபெயாம்  வீட்டாருக்கு  விரோதமாய்ப்  பட்டயத்தோடே  எழும்பிவருவேன்  என்றார்.  (ஆமோஸ்  7:9)

eesaakkin  meadaiga'l  paazhum,  isravealin  parisuththa  sthalangga'l  avaantharamumaakkappadum;  naan  erobeyaam  veettaarukku  viroathamaayp  pattayaththoadea  ezhumbivaruvean  en’raar.  (aamoas  7:9)

அப்பொழுது  பெத்தேலில்  ஆசாரியனான  அமத்சியா  இஸ்ரவேலின்  ராஜாவாகிய  எரொபெயாமுக்கு  ஆள்  அனுப்பி:  ஆமோஸ்  இஸ்ரவேல்  வம்சத்தாரின்  நடுவே  உமக்கு  விரோதமாகக்  கட்டுப்பாடு  பண்ணுகிறான்;  தேசம்  அவன்  வார்த்தைகளையெல்லாம்  சகிக்கமாட்டாது.  (ஆமோஸ்  7:10)

appozhuthu  beththealil  aasaariyanaana  amathsiyaa  isravealin  raajaavaagiya  erobeyaamukku  aa'l  anuppi:  aamoas  israveal  vamsaththaarin  naduvea  umakku  viroathamaagak  kattuppaadu  pa'n'nugi’raan;  theasam  avan  vaarththaiga'laiyellaam  sagikkamaattaathu.  (aamoas  7:10)

எரொபெயாம்  பட்டயத்தினால்  சாவான்  என்றும்,  இஸ்ரவேல்  தன்  தேசத்திலிருந்து  சிறைபிடித்துக்  கொண்டுபோகப்படுவான்  என்றும்  ஆமோஸ்  சொல்லுகிறான்  என்று  சொல்லச்சொன்னான்.  (ஆமோஸ்  7:11)

erobeyaam  pattayaththinaal  saavaan  en’rum,  israveal  than  theasaththilirunthu  si’raipidiththuk  ko'ndupoagappaduvaan  en’rum  aamoas  sollugi’raan  en’ru  sollachsonnaan.  (aamoas  7:11)

அமத்சியா  ஆமோசை  நோக்கி:  தரிசனம்  பார்க்கிறவனே,  போ;  நீ  யூதாதேசத்துக்கு  ஓடிப்போ,  அங்கே  அப்பம்  தின்று,  அங்கே  தீர்க்கதரிசனம்  சொல்லு.  (ஆமோஸ்  7:12)

amathsiyaa  aamoasai  noakki:  tharisanam  paarkki’ravanea,  poa;  nee  yoothaatheasaththukku  oadippoa,  anggea  appam  thin’ru,  anggea  theerkkatharisanam  sollu.  (aamoas  7:12)

பெத்தேலிலே  இனித்  தீர்க்கதரிசனம்  சொல்லாதே;  அது  ராஜாவின்  பரிசுத்த  ஸ்தலமும்  ராஜ்யத்தின்  அரமனையுமாயிருக்கிறது  என்றான்.  (ஆமோஸ்  7:13)

beththealilea  inith  theerkkatharisanam  sollaathea;  athu  raajaavin  parisuththa  sthalamum  raajyaththin  aramanaiyumaayirukki’rathu  en’raan.  (aamoas  7:13)

ஆமோஸ்  அமத்சியாவுக்குப்  பிரதியுத்தரமாக:  நான்  தீர்க்கதரிசியுமல்ல,  தீர்க்கதரிசியின்  புத்திரனுமல்ல;  நான்  மந்தை  மேய்க்கிறவனும்,  காட்டத்திப்பழங்களைப்  பொறுக்குகிறவனுமாயிருந்தேன்.  (ஆமோஸ்  7:14)

aamoas  amathsiyaavukkup  pirathiyuththaramaaga:  naan  theerkkatharisiyumalla,  theerkkatharisiyin  puththiranumalla;  naan  manthai  meaykki’ravanum,  kaattaththippazhangga'laip  po’rukkugi’ravanumaayirunthean.  (aamoas  7:14)

ஆனால்  மந்தையின்  பின்னாலே  போகிறபோது  என்னைக்  கர்த்தர்  அழைத்து,  நீ  போய்  என்  ஜனமாகிய  இஸ்ரவேலுக்கு  விரோதமாகத்  தீர்க்கதரிசனம்  சொல்லு  என்று  கர்த்தர்  உரைத்தார்.  (ஆமோஸ்  7:15)

aanaal  manthaiyin  pinnaalea  poagi’rapoathu  ennaik  karththar  azhaiththu,  nee  poay  en  janamaagiya  isravealukku  viroathamaagath  theerkkatharisanam  sollu  en’ru  karththar  uraiththaar.  (aamoas  7:15)

இப்போதும்  நீ  கர்த்தருடைய  வார்த்தையைக்  கேள்;  இஸ்ரவேலுக்கு  விரோதமாய்த்  தீர்க்கதரிசனம்  சொல்லாதே,  ஈசாக்கின்  வம்சத்தாருக்கு  விரோதமாக  ஒன்றையும்  சொல்லாதே  என்று  சொல்லுகிறாயே.  (ஆமோஸ்  7:16)

ippoathum  nee  karththarudaiya  vaarththaiyaik  kea'l;  isravealukku  viroathamaayth  theerkkatharisanam  sollaathea,  eesaakkin  vamsaththaarukku  viroathamaaga  on’raiyum  sollaathea  en’ru  sollugi’raayea.  (aamoas  7:16)

இதினிமித்தம்:  உன்  பெண்ஜாதி  நகரத்தில்  வேசியாவாள்;  உன்  குமாரரும்  உன்  குமாரத்திகளும்  பட்டயத்தால்  விழுவார்கள்;  உன்  வயல்  அளவுநூலால்  பங்கிட்டுக்கொள்ளப்படும்;  நீயோவெனில்  அசுத்தமான  தேசத்திலே  செத்துப்போவாய்;  இஸ்ரவேலும்  தன்  தேசத்திலிருந்து  சிறைபிடிக்கப்பட்டுக்  கொண்டுபோகப்படுவான்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்  என்றான்.  (ஆமோஸ்  7:17)

ithinimiththam:  un  pe'njaathi  nagaraththil  veasiyaavaa'l;  un  kumaararum  un  kumaaraththiga'lum  pattayaththaal  vizhuvaarga'l;  un  vayal  a'lavunoolaal  panggittukko'l'lappadum;  neeyoavenil  asuththamaana  theasaththilea  seththuppoavaay;  isravealum  than  theasaththilirunthu  si’raipidikkappattuk  ko'ndupoagappaduvaan  en’ru  karththar  sollugi’raar  en’raan.  (aamoas  7:17)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!