Monday, July 25, 2016

Aamoas 5 | ஆமோஸ் 5 | Amos 5

இஸ்ரவேல்  வம்சத்தாரே,  உங்களைக்குறித்து  நான்  புலம்பிச்  சொல்லும்  இந்த  வசனத்தைக்  கேளுங்கள்.  (ஆமோஸ்  5:1)

israveal  vamsaththaarea,  ungga'laikku’riththu  naan  pulambich  sollum  intha  vasanaththaik  kea'lungga'l.  (aamoas  5:1)

இஸ்ரவேல்  என்னும்  கன்னிகை  விழுந்தாள்,  அவள்  இனி  ஒருபோதும்  எழுந்திருக்கமாட்டாள்;  தன்  தேசத்தில்  விழுந்துகிடக்கிறாள்,  அவளை  எடுப்பாரில்லை.  (ஆமோஸ்  5:2)

israveal  ennum  kannigai  vizhunthaa'l,  ava'l  ini  orupoathum  ezhunthirukkamaattaa'l;  than  theasaththil  vizhunthukidakki’raa'l,  ava'lai  eduppaarillai.  (aamoas  5:2)

நகரத்திலிருந்து  புறப்பட்ட  ஆயிரம்பேரில்  நூறுபேரும்,  நூறுபேரில்  பத்துப்பேரும்  இஸ்ரவேல்  வம்சத்தாருக்கு  மீந்திருப்பார்கள்  என்று  கர்த்தராகிய  தேவன்  சொல்லுகிறார்.  (ஆமோஸ்  5:3)

nagaraththilirunthu  pu’rappatta  aayirampearil  noo’rupearum,  noo’rupearil  paththuppearum  israveal  vamsaththaarukku  meenthiruppaarga'l  en’ru  karththaraagiya  theavan  sollugi’raar.  (aamoas  5:3)

கர்த்தர்  இஸ்ரவேல்  வம்சத்தாருக்குச்  சொல்லுகிறது  என்னவென்றால்:  என்னைத்  தேடுங்கள்,  அப்பொழுது  பிழைப்பீர்கள்.  (ஆமோஸ்  5:4)

karththar  israveal  vamsaththaarukkuch  sollugi’rathu  ennaven’raal:  ennaith  theadungga'l,  appozhuthu  pizhaippeerga'l.  (aamoas  5:4)

பெத்தேலைத்  தேடாதேயுங்கள்,  கில்காலிலும்  சேராதேயுங்கள்,  பெயெர்செபாவுக்கும்  போகாதேயுங்கள்;  ஏனென்றால்  கில்கால்  சிறையிருப்பாகவும்,  பெத்தேல்  பாழான  ஸ்தலமாகவும்  போகும்.  (ஆமோஸ்  5:5)

beththealaith  theadaatheayungga'l,  kilgaalilum  searaatheayungga'l,  beyersebaavukkum  poagaatheayungga'l;  eanen’raal  kilgaal  si’raiyiruppaagavum,  beththeal  paazhaana  sthalamaagavum  poagum.  (aamoas  5:5)

கர்த்தரைத்  தேடுங்கள்,  அப்பொழுது  பிழைப்பீர்கள்;  இல்லாவிட்டால்  பெத்தேலில்  இருக்கிற  ஒருவராலும்  அவிக்கப்படாத  அக்கினி  யோசேப்பின்  வீட்டில்  பற்றி,  அதைப்  பட்சிக்கும்.  (ஆமோஸ்  5:6)

karththaraith  theadungga'l,  appozhuthu  pizhaippeerga'l;  illaavittaal  beththealil  irukki’ra  oruvaraalum  avikkappadaatha  akkini  yoaseappin  veettil  pat’ri,  athaip  padchikkum.  (aamoas  5:6)

நியாயத்தை  எட்டியாக  மாற்றி,  நீதியைத்  தரையிலே  விழப்பண்ணுகிறவர்களே,  அவரைத்  தேடுங்கள்.  (ஆமோஸ்  5:7)

niyaayaththai  ettiyaaga  maat’ri,  neethiyaith  tharaiyilea  vizhappa'n'nugi’ravarga'lea,  avaraith  theadungga'l.  (aamoas  5:7)

அவர்  அறுமீனையும்  மிருகசீரிஷத்தையும்  உண்டாக்கினவர்;  அவர்  மரண  இருளை  விடியற்காலமாக  மாற்றி,  பகலை  இராத்திரியாக  அந்தகாரப்படுத்துகிறவர்;  அவர்  சமுத்திரத்தின்  தண்ணீர்களை  வரவழைத்து,  அவைகளைப்  பூமியின்  விசாலத்தின்மேல்  ஊற்றுகிறவர்;  கர்த்தர்  என்பது  அவருடைய  நாமம்.  (ஆமோஸ்  5:8)

avar  a’rumeenaiyum  mirugaseerishaththaiyum  u'ndaakkinavar;  avar  mara'na  iru'lai  vidiya’rkaalamaaga  maat’ri,  pagalai  iraaththiriyaaga  anthagaarappaduththugi’ravar;  avar  samuththiraththin  tha'n'neerga'lai  varavazhaiththu,  avaiga'laip  boomiyin  visaalaththinmeal  oot’rugi’ravar;  karththar  enbathu  avarudaiya  naamam.  (aamoas  5:8)

அரணான  ஸ்தலத்தின்மேல்  பாழ்க்கடிப்பு  வரத்தக்கதாக,  அவர்  கொள்ளை  கொடுத்தவனைப்  பலத்தவனுக்கு  விரோதமாய்  லகுவடையப்பண்ணுகிறவர்.  (ஆமோஸ்  5:9)

ara'naana  sthalaththinmeal  paazhkkadippu  varaththakkathaaga,  avar  ko'l'lai  koduththavanaip  balaththavanukku  viroathamaay  laguvadaiyappa'n'nugi’ravar.  (aamoas  5:9)

ஒலிமுகவாசலிலே  கடிந்துகொள்ளுகிறவனை  அவர்கள்  பகைத்து,  யதார்த்தமாய்ப்  பேசுகிறவனை  வெறுக்கிறார்கள்.  (ஆமோஸ்  5:10)

olimugavaasalilea  kadinthuko'l'lugi’ravanai  avarga'l  pagaiththu,  yathaarththamaayp  peasugi’ravanai  ve’rukki’raarga'l.  (aamoas  5:10)

நீங்கள்  தரித்திரனை  மிதித்து,  அவன்  கையிலே  தானியத்தைச்  சுமைசுமையாய்  வாங்குகிறபடியினால்,  நீங்கள்  பொளிந்த  கற்களால்  வீடுகளைக்  கட்டினீர்கள்,  ஆனாலும்  அவைகளில்  நீங்கள்  குடியிருப்பதில்லை;  இன்பமான  திராட்சத்தோட்டங்களை  நாட்டினீர்கள்,  ஆனாலும்  அவைகளின்  இரசத்தை  நீங்கள்  குடிப்பதில்லை.  (ஆமோஸ்  5:11)

neengga'l  thariththiranai  mithiththu,  avan  kaiyilea  thaaniyaththaich  sumaisumaiyaay  vaanggugi’rapadiyinaal,  neengga'l  po'lintha  ka’rka'laal  veeduga'laik  kattineerga'l,  aanaalum  avaiga'lil  neengga'l  kudiyiruppathillai;  inbamaana  thiraadchaththoattangga'lai  naattineerga'l,  aanaalum  avaiga'lin  irasaththai  neengga'l  kudippathillai.  (aamoas  5:11)

உங்கள்  மீறுதல்கள்  மிகுதியென்றும்,  உங்கள்  பாவங்கள்  பலத்ததென்றும்  அறிவேன்;  நீதிமானை  ஒடுக்கி,  பரிதானம்  வாங்கி,  ஒலிமுகவாசலில்  ஏழைகளின்  நியாயத்தைப்  புரட்டுகிறீர்கள்.  (ஆமோஸ்  5:12)

ungga'l  mee’ruthalga'l  miguthiyen’rum,  ungga'l  paavangga'l  balaththathen’rum  a’rivean;  neethimaanai  odukki,  parithaanam  vaanggi,  olimugavaasalil  eazhaiga'lin  niyaayaththaip  purattugi’reerga'l.  (aamoas  5:12)

ஆகையால்  புத்திமான்  அந்தக்  காலத்திலே  மௌனமாயிருக்கவேண்டும்;  அந்தக்  காலம்  தீமையான  காலம்.  (ஆமோஸ்  5:13)

aagaiyaal  buththimaan  anthak  kaalaththilea  maunamaayirukkavea'ndum;  anthak  kaalam  theemaiyaana  kaalam.  (aamoas  5:13)

நீங்கள்  பிழைக்கும்படிக்குத்  தீமையை  அல்ல,  நன்மையைத்  தேடுங்கள்;  அப்பொழுது  நீங்கள்  சொல்லுகிறபடியே  சேனைகளின்  தேவனாகிய  கர்த்தர்  உங்களோடே  இருப்பார்.  (ஆமோஸ்  5:14)

neengga'l  pizhaikkumpadikkuth  theemaiyai  alla,  nanmaiyaith  theadungga'l;  appozhuthu  neengga'l  sollugi’rapadiyea  seanaiga'lin  theavanaagiya  karththar  ungga'loadea  iruppaar.  (aamoas  5:14)

நீங்கள்  தீமையை  வெறுத்து,  நன்மையை  விரும்பி,  ஒலிமுகவாசலில்  நியாயத்தை  நிலைப்படுத்துங்கள்;  ஒருவேளை  சேனைகளின்  தேவனாகிய  கர்த்தர்  யோசேப்பிலே  மீதியானவர்களுக்கு  இரங்குவார்.  (ஆமோஸ்  5:15)

neengga'l  theemaiyai  ve’ruththu,  nanmaiyai  virumbi,  olimugavaasalil  niyaayaththai  nilaippaduththungga'l;  oruvea'lai  seanaiga'lin  theavanaagiya  karththar  yoaseappilea  meethiyaanavarga'lukku  irangguvaar.  (aamoas  5:15)

ஆதலால்  ஆண்டவரும்  சேனைகளின்  தேவனுமாகிய  கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  எல்லாத்தெருக்களிலும்  புலம்பல்  உண்டாகும்;  எல்லா  வீதிகளிலும்  ஐயோ!  ஐயோ!  என்று  ஓலமிடுவார்கள்;  பயிரிடுகிறவர்களைத்  துக்கங்கொண்டாடுகிறதற்கும்,  ஒப்பாரிபாட  அறிந்தவர்களைப்  புலம்புகிறதற்கும்  வரவழைப்பார்கள்.  (ஆமோஸ்  5:16)

aathalaal  aa'ndavarum  seanaiga'lin  theavanumaagiya  karththar  sollugi’rathu  ennaven’raal:  ellaaththerukka'lilum  pulambal  u'ndaagum;  ellaa  veethiga'lilum  aiyoa!  aiyoa!  en’ru  oalamiduvaarga'l;  payiridugi’ravarga'laith  thukkangko'ndaadugi’ratha’rkum,  oppaaripaada  a’rinthavarga'laip  pulambugi’ratha’rkum  varavazhaippaarga'l.  (aamoas  5:16)

எல்லாத்  திராட்சத்தோட்டங்களிலும்  புலம்பல்  உண்டாயிருக்கும்,  நான்  உன்  நடுவே  கடந்துபோவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (ஆமோஸ்  5:17)

ellaath  thiraadchaththoattangga'lilum  pulambal  u'ndaayirukkum,  naan  un  naduvea  kadanthupoavean  en’ru  karththar  sollugi’raar.  (aamoas  5:17)

கர்த்தருடைய  நாளை  விரும்புகிறவர்களுக்கு  ஐயோ!  அதினால்  உங்களுக்கு  என்ன  உண்டு?  கர்த்தருடைய  நாள்  வெளிச்சமாயிராமல்  அந்தகாரமாயிருக்கும்.  (ஆமோஸ்  5:18)

karththarudaiya  naa'lai  virumbugi’ravarga'lukku  aiyoa!  athinaal  ungga'lukku  enna  u'ndu?  karththarudaiya  naa'l  ve'lichchamaayiraamal  anthagaaramaayirukkum.  (aamoas  5:18)

சிங்கத்துக்குத்  தப்பினவனுக்குக்  கரடி  எதிர்ப்பட்டதுபோலவும்,  அல்லது  வீட்டுக்குள்ளே  வந்து  சுவரின்மேல்  தன்  கையை  வைத்தபோது  பாம்பு  அவனைக்  கடித்ததுபோலவும்  இருக்கும்.  (ஆமோஸ்  5:19)

singgaththukkuth  thappinavanukkuk  karadi  ethirppattathupoalavum,  allathu  veettukku'l'lea  vanthu  suvarinmeal  than  kaiyai  vaiththapoathu  paambu  avanaik  kadiththathupoalavum  irukkum.  (aamoas  5:19)

கர்த்தருடைய  நாள்  வெளிச்சமாயிராமல்,  இருளும்  பிரகாசமற்ற  அந்தகாரமுமாயிருக்குமல்லவோ?  (ஆமோஸ்  5:20)

karththarudaiya  naa'l  ve'lichchamaayiraamal,  iru'lum  piragaasamat’ra  anthagaaramumaayirukkumallavoa?  (aamoas  5:20)

உங்கள்  பண்டிகைகளைப்  பகைத்து  வெறுக்கிறேன்;  உங்கள்  ஆசரிப்பு  நாட்களில்  எனக்குப்  பிரியமில்லை.  (ஆமோஸ்  5:21)

ungga'l  pa'ndigaiga'laip  pagaiththu  ve’rukki’rean;  ungga'l  aasarippu  naadka'lil  enakkup  piriyamillai.  (aamoas  5:21)

உங்கள்  தகனபலிகளையும்  போஜனபலிகளையும்  எனக்குப்  படைத்தாலும்  நான்  அங்கீகரிக்கமாட்டேன்;  கொழுமையான  உங்கள்  மிருகங்களின்  ஸ்தோத்திரபலிகளையும்  நான்  நோக்கிப்  பார்க்கமாட்டேன்.  (ஆமோஸ்  5:22)

ungga'l  thaganabaliga'laiyum  poajanabaliga'laiyum  enakkup  padaiththaalum  naan  anggeegarikkamaattean;  kozhumaiyaana  ungga'l  mirugangga'lin  sthoaththirabaliga'laiyum  naan  noakkip  paarkkamaattean.  (aamoas  5:22)

உன்  பாட்டுகளின்  இரைச்சலை  என்னைவிட்டு  அகற்று;  உன்  வீணைகளின்  ஓசையை  நான்  கேட்கமாட்டேன்.  (ஆமோஸ்  5:23)

un  paattuga'lin  iraichchalai  ennaivittu  agat’ru;  un  vee'naiga'lin  oasaiyai  naan  keadkamaattean.  (aamoas  5:23)

நியாயம்  தண்ணீரைப்போலவும்,  நீதி  வற்றாத  நதியைப்போலவும்  புரண்டு  வரக்கடவது.  (ஆமோஸ்  5:24)

niyaayam  tha'n'neeraippoalavum,  neethi  vat’raatha  nathiyaippoalavum  pura'ndu  varakkadavathu.  (aamoas  5:24)

இஸ்ரவேல்  வம்சத்தாரே,  நீங்கள்  வனாந்தரத்திலே  இருந்த  நாற்பது  வருஷம்வரையில்  பலிகளையும்  காணிக்கைகளையும்  எனக்குச்  செலுத்தினீர்களோ?  (ஆமோஸ்  5:25)

israveal  vamsaththaarea,  neengga'l  vanaantharaththilea  iruntha  naa’rpathu  varushamvaraiyil  baliga'laiyum  kaa'nikkaiga'laiyum  enakkuch  seluththineerga'loa?  (aamoas  5:25)

நீங்கள்  உங்களுக்கு  உண்டாக்கின  மோளோகுடைய  கூடாரத்தையும்,  உங்கள்  தேவர்களின்  நட்சத்திரராசியாகிய  உங்கள்  சொரூபங்களின்  சப்பரத்தையும்  சுமந்துகொண்டுவந்தீர்களே.  (ஆமோஸ்  5:26)

neengga'l  ungga'lukku  u'ndaakkina  moa'loakudaiya  koodaaraththaiyum,  ungga'l  theavarga'lin  nadchaththiraraasiyaagiya  ungga'l  soroobangga'lin  sapparaththaiyum  sumanthuko'nduvantheerga'lea.  (aamoas  5:26)

ஆகையால்  உங்களைத்  தமஸ்குவுக்கு  அப்பாலே  குடியோட்டுவேன்  என்று  சேனைகளுடைய  தேவன்  என்னும்  நாமமுள்ள  கர்த்தர்  சொல்லுகிறார்.  (ஆமோஸ்  5:27)

aagaiyaal  ungga'laith  thamaskuvukku  appaalea  kudiyoattuvean  en’ru  seanaiga'ludaiya  theavan  ennum  naamamu'l'la  karththar  sollugi’raar.  (aamoas  5:27)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!