Friday, July 08, 2016

Aabakook 3 | ஆபகூக் 3 | Habakkuk 3


ஆபகூக்  தீர்க்கதரிசி  சிகாயோனில்  பாடின  விண்ணப்பம்.  (ஆபகூக்  3:1)

aabakook  theerkkatharisi  sigaayoanil  paadina  vi'n'nappam.  (aabakook  3:1)

கர்த்தாவே,  நீர்  வெளிப்படுத்தினதை  நான்  கேட்டேன்,  எனக்குப்  பயமுண்டாயிற்று;  கர்த்தாவே,  வருஷங்களின்  நடுவிலே  உம்முடைய  கிரியையை  உயிர்ப்பியும்,  வருஷங்களின்  நடுவிலே  அதை  விளங்கப்பண்ணும்;  கோபித்தாலும்  இரக்கத்தை  நினைத்தருளும்.  (ஆபகூக்  3:2)

karththaavea,  neer  ve'lippaduththinathai  naan  keattean,  enakkup  bayamu'ndaayit’ru;  karththaavea,  varushangga'lin  naduvilea  ummudaiya  kiriyaiyai  uyirppiyum,  varushangga'lin  naduvilea  athai  vi'langgappa'n'num;  koabiththaalum  irakkaththai  ninaiththaru'lum.  (aabakook  3:2)

தேவன்  தேமானிலிருந்தும்,  பரிசுத்தர்  பாரான்  பர்வதத்திலிருந்தும்  வந்தார்;  (சேலா.)  அவருடைய  மகிமை  வானங்களை  மூடிக்கொண்டது;  அவர்  துதியினால்  பூமி  நிறைந்தது.  (ஆபகூக்  3:3)

theavan  theamaanilirunthum,  parisuththar  paaraan  parvathaththilirunthum  vanthaar;  (sealaa.)  avarudaiya  magimai  vaanangga'lai  moodikko'ndathu;  avar  thuthiyinaal  boomi  ni’rainthathu.  (aabakook  3:3)

அவருடைய  பிரகாசம்  சூரியனைப்போலிருந்தது;  அவருடைய  கரத்திலிருந்து  கிரணங்கள்  வீசின;  அங்கே  அவருடைய  பராக்கிரமம்  மறைந்திருந்தது.  (ஆபகூக்  3:4)

avarudaiya  piragaasam  sooriyanaippoalirunthathu;  avarudaiya  karaththilirunthu  kira'nangga'l  veesina;  anggea  avarudaiya  baraakkiramam  ma’rainthirunthathu.  (aabakook  3:4)

அவருக்கு  முன்பாகக்  கொள்ளைநோய்  சென்றது;  அவர்  அடிகளிலிருந்து  எரிபந்தமான  காய்ச்சல்  புறப்பட்டது.  (ஆபகூக்  3:5)

avarukku  munbaagak  ko'l'lainoay  sen’rathu;  avar  adiga'lilirunthu  eripanthamaana  kaaychchal  pu’rappattathu.  (aabakook  3:5)

அவர்  நின்று  பூமியை  அளந்தார்;  அவர்  பார்த்துப்  புறஜாதிகளைக்  கரையப்பண்ணினார்;  பூர்வ  பர்வதங்கள்  சிதறடிக்கப்பட்டது,  என்றுமுள்ள  மலைகள்  தாழ்ந்தது;  அவருடைய  நடைகள்  நித்திய  நடைகளாயிருந்தது.  (ஆபகூக்  3:6)

avar  nin’ru  boomiyai  a'lanthaar;  avar  paarththup  pu’rajaathiga'laik  karaiyappa'n'ninaar;  poorva  parvathangga'l  sitha’radikkappattathu,  en’rumu'l'la  malaiga'l  thaazhnthathu;  avarudaiya  nadaiga'l  niththiya  nadaiga'laayirunthathu.  (aabakook  3:6)

கூஷானின்  கூடாரங்கள்  வருத்தத்தில்  அகப்பட்டிருக்கக்கண்டேன்;  மீதியான்  தேசத்தின்  திரைகள்  நடுங்கின.  (ஆபகூக்  3:7)

kooshaanin  koodaarangga'l  varuththaththil  agappattirukkakka'ndean;  meethiyaan  theasaththin  thiraiga'l  nadunggina.  (aabakook  3:7)

கர்த்தர்  நதிகளின்மேல்  கோபமாயிருந்தாரோ?  தேவரீர்  உம்முடைய  குதிரைகளின்மேலும்  இரட்சிப்புண்டாக்குகிற  உம்முடைய  இரதங்களின்மேலும்  ஏறிவருகிறபோது,  உமது  கோபம்  நதிகளுக்கும்  உமது  சினம்  சமுத்திரத்திற்கும்  விரோதமாயிருந்ததோ?  (ஆபகூக்  3:8)

karththar  nathiga'linmeal  koabamaayirunthaaroa?  theavareer  ummudaiya  kuthiraiga'linmealum  iradchippu'ndaakkugi’ra  ummudaiya  irathangga'linmealum  ea’rivarugi’rapoathu,  umathu  koabam  nathiga'lukkum  umathu  sinam  samuththiraththi’rkum  viroathamaayirunthathoa?  (aabakook  3:8)

கோத்திரங்களுக்கு  ஆணையிட்டுக்  கொடுத்த  வாக்கின்படியே  உம்முடைய  வில்  நாணேற்றப்பட்டதாக  விளங்கினது;  (சேலா.)  நீர்  பூமியைப்  பிளந்து  ஆறுகளை  உண்டாக்கினீர்.  (ஆபகூக்  3:9)

koaththirangga'lukku  aa'naiyittuk  koduththa  vaakkinpadiyea  ummudaiya  vil  naa'neat’rappattathaaga  vi'langginathu;  (sealaa.)  neer  boomiyaip  pi'lanthu  aa’ruga'lai  u'ndaakkineer.  (aabakook  3:9)

பர்வதங்கள்  உம்மைக்  கண்டு  நடுங்கின;  ஜலம்  பிரவாகித்துக்  கடந்துபோயிற்று;  ஆழி  இரைந்தது,  அதின்  கைகளை  உயர  எடுத்தது.  (ஆபகூக்  3:10)

parvathangga'l  ummaik  ka'ndu  nadunggina;  jalam  piravaagiththuk  kadanthupoayit’ru;  aazhi  irainthathu,  athin  kaiga'lai  uyara  eduththathu.  (aabakook  3:10)

சந்திரனும்  சூரியனும்  தன்தன்  மண்டலத்தில்  நின்றன;  உமது  அம்புகளின்  ஜோதியிலும்,  உமது  ஈட்டியினுடைய  மின்னல்  பிரகாசத்திலும்  நடந்தன.  (ஆபகூக்  3:11)

santhiranum  sooriyanum  thanthan  ma'ndalaththil  nin’rana;  umathu  ambuga'lin  joathiyilum,  umathu  eettiyinudaiya  minnal  piragaasaththilum  nadanthana.  (aabakook  3:11)

நீர்  கோபத்தோடே  பூமியில்  நடந்தீர்,  உக்கிரத்தோடே  ஜாதிகளைப்  போரடித்தீர்.  (ஆபகூக்  3:12)

neer  koabaththoadea  boomiyil  nadantheer,  ukkiraththoadea  jaathiga'laip  poaradiththeer.  (aabakook  3:12)

உமது  ஜனத்தின்  இரட்சிப்புக்காகவும்  நீர்  அபிஷேகம்  பண்ணுவித்தவனின்  இரட்சிப்புக்காகவுமே  நீர்  புறப்பட்டீர்;  கழுத்தளவாக  அஸ்திபாரத்தைத்  திறப்பாக்கி,  துஷ்டனுடைய  வீட்டிலிருந்த  தலைவனை  வெட்டினீர்;  சேலா.  (ஆபகூக்  3:13)

umathu  janaththin  iradchippukkaagavum  neer  abisheagam  pa'n'nuviththavanin  iradchippukkaagavumea  neer  pu’rappatteer;  kazhuththa'lavaaga  asthibaaraththaith  thi’rappaakki,  thushdanudaiya  veettiliruntha  thalaivanai  vettineer;  sealaa.  (aabakook  3:13)

என்னைச்  சிதறடிப்பதற்குப்  பெருங்காற்றைப்போல்  வந்தார்கள்;  சிறுமையானவனை  மறைவிடத்திலே  பட்சிப்பது  அவர்களுக்குச்  சந்தோஷமாயிருந்தது;  நீர்  அவனுடைய  ஈட்டிகளினாலேயே  அவனுடைய  கிராமத்து  அதிபதிகளை  உருவக்  குத்தினீர்.  (ஆபகூக்  3:14)

ennaich  sitha’radippatha’rkup  perungkaat’raippoal  vanthaarga'l;  si’rumaiyaanavanai  ma’raividaththilea  padchippathu  avarga'lukkuch  santhoashamaayirunthathu;  neer  avanudaiya  eettiga'linaaleayea  avanudaiya  kiraamaththu  athibathiga'lai  uruvak  kuththineer.  (aabakook  3:14)

திரளான  தண்ணீர்  குவியலாகிய  சமுத்திரத்துக்குள்  உமது  குதிரைகளோடே  நடந்துபோனீர்.  (ஆபகூக்  3:15)

thira'laana  tha'n'neer  kuviyalaagiya  samuththiraththukku'l  umathu  kuthiraiga'loadea  nadanthupoaneer.  (aabakook  3:15)

நான்  கேட்டபொழுது  என்  குடல்  குழம்பிற்று;  அந்தச்  சத்தத்துக்கு  என்  உதடுகள்  துடித்தது;  என்  எலும்புகளில்  உக்கல்  உண்டாயிற்று;  என்  நிலையிலே  நடுங்கினேன்;  ஆனாலும்  எங்களோடே  எதிர்க்கும்  ஜனங்கள்  வரும்போது,  இக்கட்டுநாளிலே  நான்  இளைப்பாறுதல்  அடைவேன்.  (ஆபகூக்  3:16)

naan  keattapozhuthu  en  kudal  kuzhambit’ru;  anthach  saththaththukku  en  uthaduga'l  thudiththathu;  en  elumbuga'lil  ukkal  u'ndaayit’ru;  en  nilaiyilea  nadungginean;  aanaalum  engga'loadea  ethirkkum  janangga'l  varumpoathu,  ikkattunaa'lilea  naan  i'laippaa’ruthal  adaivean.  (aabakook  3:16)

அத்திமரம்  துளிர்விடாமற்போனாலும்,  திராட்சச்செடிகளில்  பழம்  உண்டாகாமற்போனாலும்,  ஒலிவமரத்தின்  பலன்  அற்றுப்போனாலும்,  வயல்கள்  தானியத்தை  விளைவியாமற்போனாலும்,  கிடையில்  ஆட்டுமந்தைகள்  முதலற்றுப்போனாலும்,  தொழுவத்திலே  மாடு  இல்லாமற்போனாலும்,  (ஆபகூக்  3:17)

aththimaram  thu'lirvidaama’rpoanaalum,  thiraadchachsediga'lil  pazham  u'ndaagaama’rpoanaalum,  olivamaraththin  palan  at’ruppoanaalum,  vayalga'l  thaaniyaththai  vi'laiviyaama’rpoanaalum,  kidaiyil  aattumanthaiga'l  muthalat’ruppoanaalum,  thozhuvaththilea  maadu  illaama’rpoanaalum,  (aabakook  3:17)

நான்  கர்த்தருக்குள்  மகிழ்ச்சியாயிருப்பேன்,  என்  இரட்சிப்பின்  தேவனுக்குள்  களிகூருவேன்.  (ஆபகூக்  3:18)

naan  karththarukku'l  magizhchchiyaayiruppean,  en  iradchippin  theavanukku'l  ka'likooruvean.  (aabakook  3:18)

ஆண்டவராகிய  கர்த்தர்  என்  பெலன்;  அவர்  என்  கால்களை  மான்கால்களைப்போலாக்கி,  உயரமான  ஸ்தலங்களில்  என்னை  நடக்கப்பண்ணுவார்.  இது  நெகிநோத்  என்னும்  வாத்தியத்தில்  வாசிக்க  இராகத்தலைவனுக்கு  ஒப்புவிக்கப்பட்ட  சங்கீதம்.  (ஆபகூக்  3:19)

aa'ndavaraagiya  karththar  en  belan;  avar  en  kaalga'lai  maankaalga'laippoalaakki,  uyaramaana  sthalangga'lil  ennai  nadakkappa'n'nuvaar.  ithu  neginoath  ennum  vaaththiyaththil  vaasikka  iraagaththalaivanukku  oppuvikkappatta  sanggeetham.  (aabakook  3:19)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!