Friday, July 08, 2016

Aabakook 1 | ஆபகூக் 1 | Habakkuk 1


ஆபகூக்  என்னும்  தீர்க்கதரிசி  தரிசனமாய்க்  கண்ட  பாரம்.  (ஆபகூக்  1:1)

aabakook  ennum  theerkkatharisi  tharisanamaayk  ka'nda  baaram.  (aabakook  1:1)

கர்த்தாவே,  நான்  எதுவரைக்கும்  உம்மை  நோக்கிக்  கூப்பிடுவேன்,  நீர்  கேளாமலிருக்கிறீரே!  கொடுமையினிமித்தம்  நான்  எதுவரைக்கும்  உம்மை  நோக்கிக்  கூப்பிடுவேன்,  நீர்  இரட்சியாமலிருக்கிறீரே!  (ஆபகூக்  1:2)

karththaavea,  naan  ethuvaraikkum  ummai  noakkik  kooppiduvean,  neer  kea'laamalirukki’reerea!  kodumaiyinimiththam  naan  ethuvaraikkum  ummai  noakkik  kooppiduvean,  neer  iradchiyaamalirukki’reerea!  (aabakook  1:2)

நீர்  எனக்கு  அக்கிரமத்தைக்  காண்பித்து,  என்னைத்  தீவினையைப்  பார்க்கப்பண்ணுகிறதென்ன?  கொள்ளையும்  கொடுமையும்  எனக்கு  எதிரே  நிற்கிறது;  வழக்கையும்  வாதையும்  எழுப்புகிறவர்கள்  உண்டு.  (ஆபகூக்  1:3)

neer  enakku  akkiramaththaik  kaa'nbiththu,  ennaith  theevinaiyaip  paarkkappa'n'nugi’rathenna?  ko'l'laiyum  kodumaiyum  enakku  ethirea  ni’rki’rathu;  vazhakkaiyum  vaathaiyum  ezhuppugi’ravarga'l  u'ndu.  (aabakook  1:3)

ஆகையால்  நியாயப்பிரமாணம்  பெலனற்றதாகி,  நியாயம்  ஒருபோதும்  செல்லாமற்போகிறது;  துன்மார்க்கன்  நீதிமானை  வளைந்துகொள்ளுகிறான்;  ஆதலால்  நியாயம்  புரட்டப்படுகிறது.  (ஆபகூக்  1:4)

aagaiyaal  niyaayappiramaa'nam  belanat’rathaagi,  niyaayam  orupoathum  sellaama’rpoagi’rathu;  thunmaarkkan  neethimaanai  va'lainthuko'l'lugi’raan;  aathalaal  niyaayam  purattappadugi’rathu.  (aabakook  1:4)

நீங்கள்  புறஜாதிகளை  நோக்கிப்பார்த்து,  ஆச்சரியப்பட்டுப்  பிரமியுங்கள்;  விவரிக்கப்பட்டாலும்  நீங்கள்  விசுவாசியாத  ஒரு  கிரியையை  உங்கள்  நாட்களில்  நடப்பிப்பேன்.  (ஆபகூக்  1:5)

neengga'l  pu’rajaathiga'lai  noakkippaarththu,  aachchariyappattup  piramiyungga'l;  vivarikkappattaalum  neengga'l  visuvaasiyaatha  oru  kiriyaiyai  ungga'l  naadka'lil  nadappippean.  (aabakook  1:5)

இதோ,  நான்  கல்தேயரென்னும்  கொடிதும்  வேகமுமான  ஜாதியாரை  எழுப்புவேன்;  அவர்கள்  தங்களுடையதல்லாத  வாசஸ்தலங்களைக்  கட்டிக்கொள்ளத்  தேசத்தின்  விசாலங்களில்  நடந்துவருவார்கள்.  (ஆபகூக்  1:6)

ithoa,  naan  kaltheayarennum  kodithum  veagamumaana  jaathiyaarai  ezhuppuvean;  avarga'l  thangga'ludaiyathallaatha  vaasasthalangga'laik  kattikko'l'lath  theasaththin  visaalangga'lil  nadanthuvaruvaarga'l.  (aabakook  1:6)

அவர்கள்  கெடியும்  பயங்கரமுமானவர்கள்;  அவர்களுடைய  நியாயமும்  அவர்களுடைய  மேன்மையும்  அவர்களாலேயே  உண்டாகும்.  (ஆபகூக்  1:7)

avarga'l  kediyum  bayanggaramumaanavarga'l;  avarga'ludaiya  niyaayamum  avarga'ludaiya  meanmaiyum  avarga'laaleayea  u'ndaagum.  (aabakook  1:7)

அவர்களுடைய  குதிரைகள்  சிவிங்கிகளிலும்  வேகமும்,  சாயங்காலத்தில்  திரிகிற  ஓநாய்களிலும்  தீவிரமுமாயிருக்கும்;  அவர்களுடைய  குதிரைவீரர்  பரவுவார்கள்;  அவர்களுடைய  குதிரைவீரர்  தூரத்திலிருந்து  வருவார்கள்;  இரைக்குத்  தீவிரிக்கிற  கழுகுகளைப்போல்  பறந்துவருவார்கள்.  (ஆபகூக்  1:8)

avarga'ludaiya  kuthiraiga'l  sivinggiga'lilum  veagamum,  saayanggaalaththil  thirigi’ra  oanaayga'lilum  theeviramumaayirukkum;  avarga'ludaiya  kuthiraiveerar  paravuvaarga'l;  avarga'ludaiya  kuthiraiveerar  thooraththilirunthu  varuvaarga'l;  iraikkuth  theevirikki’ra  kazhuguga'laippoal  pa’ranthuvaruvaarga'l.  (aabakook  1:8)

அவர்களெல்லாரும்  கொடுமை  செய்யவருவார்கள்;  அவர்களுடைய  முகங்கள்  சுவறச்  செய்யும்  கீழ்க்காற்றைப்போலிருக்கும்;  அவர்கள்  மணலத்தனை  ஜனங்களைச்  சிறைபிடித்துச்  சேர்ப்பார்கள்.  (ஆபகூக்  1:9)

avarga'lellaarum  kodumai  seyyavaruvaarga'l;  avarga'ludaiya  mugangga'l  suva’rach  seyyum  keezhkkaat’raippoalirukkum;  avarga'l  ma'nalaththanai  janangga'laich  si’raipidiththuch  searppaarga'l.  (aabakook  1:9)

அவர்கள்  ராஜாக்களை  ஆகடியம்பண்ணுவார்கள்;  அதிபதிகள்  அவர்களுக்குப்  பரியாசமாயிருப்பார்கள்;  அவர்கள்  அரண்களையெல்லாம்  பார்த்து  நகைத்து,  மண்மேடுகளைக்  குவித்து  அவைகளைப்  பிடிப்பார்கள்.  (ஆபகூக்  1:10)

avarga'l  raajaakka'lai  aagadiyampa'n'nuvaarga'l;  athibathiga'l  avarga'lukkup  pariyaasamaayiruppaarga'l;  avarga'l  ara'nga'laiyellaam  paarththu  nagaiththu,  ma'nmeaduga'laik  kuviththu  avaiga'laip  pidippaarga'l.  (aabakook  1:10)

அப்பொழுது  அவனுடைய  மனம்மாற,  அவன்  தன்  பெலன்  தன்  தேவனாலே  உண்டானதென்று  சொல்லி  மிஞ்சிப்போய்க்  குற்றவாளியாவான்.  (ஆபகூக்  1:11)

appozhuthu  avanudaiya  manammaa’ra,  avan  than  belan  than  theavanaalea  u'ndaanathen’ru  solli  mignchippoayk  kut’ravaa'liyaavaan.  (aabakook  1:11)

கர்த்தாவே,  நீர்  பூர்வகாலமுதல்  என்  தேவனும்,  என்  பரிசுத்தருமானவர்  அல்லவா?  நாங்கள்  சாவதில்லை;  கர்த்தாவே,  நியாயத்தீர்ப்புச்  செய்ய  அவனை  வைத்தீர்;  கன்மலையே,  தண்டனை  செய்ய  அவனை  நியமித்தீர்.  (ஆபகூக்  1:12)

karththaavea,  neer  poorvakaalamuthal  en  theavanum,  en  parisuththarumaanavar  allavaa?  naangga'l  saavathillai;  karththaavea,  niyaayaththeerppuch  seyya  avanai  vaiththeer;  kanmalaiyea,  tha'ndanai  seyya  avanai  niyamiththeer.  (aabakook  1:12)

தீமையைப்  பார்க்கமாட்டாத  சுத்தக்கண்ணனே,  அநியாயத்தை  நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே;  பின்னை  துரோகிகளை  நீர்  நோக்கிக்கொண்டிருக்கிறதென்ன?  துன்மார்க்கன்  தன்னைப்  பார்க்கிலும்  நீதிமானை  விழுங்கும்போது  நீர்  மௌனமாயிருக்கிறதென்ன?  (ஆபகூக்  1:13)

theemaiyaip  paarkkamaattaatha  suththakka'n'nanea,  aniyaayaththai  noakkikko'ndirukkamaatteerea;  pinnai  thuroagiga'lai  neer  noakkikko'ndirukki’rathenna?  thunmaarkkan  thannaip  paarkkilum  neethimaanai  vizhunggumpoathu  neer  maunamaayirukki’rathenna?  (aabakook  1:13)

மனுஷரைச்  சமுத்திரத்து  மச்சங்களுக்கும்,  அதிகாரியில்லாத  ஊர்வனவற்றிற்கும்  சமானமாக்குகிறதென்ன?  (ஆபகூக்  1:14)

manusharaich  samuththiraththu  machchangga'lukkum,  athigaariyillaatha  oorvanavat’ri’rkum  samaanamaakkugi’rathenna?  (aabakook  1:14)

அவர்களெல்லாரையும்  தூண்டிலினால்  இழுத்துக்கொள்ளுகிறான்;  அவர்களைத்  தன்  வலையினால்  பிடித்து,  தன்  பறியிலே  சேர்த்துக்கொள்ளுகிறான்;  அதினால்  சந்தோஷப்பட்டுக்  களிகூருகிறான்.  (ஆபகூக்  1:15)

avarga'lellaaraiyum  thoo'ndilinaal  izhuththukko'l'lugi’raan;  avarga'laith  than  valaiyinaal  pidiththu,  than  pa’riyilea  searththukko'l'lugi’raan;  athinaal  santhoashappattuk  ka'likoorugi’raan.  (aabakook  1:15)

ஆகையால்  அவைகளினால்  தன்  பங்கு  கொழுப்புள்ளதும்,  தன்  போஜனம்  ருசிகரமுள்ளதுமாயிற்று  என்று  சொல்லி  அவன்  தன்  வலைக்குப்  பலியிட்டுத்  தன்  பறிக்குத்  தூபங்காட்டுகிறான்.  (ஆபகூக்  1:16)

aagaiyaal  avaiga'linaal  than  panggu  kozhuppu'l'lathum,  than  poajanam  rusigaramu'l'lathumaayit’ru  en’ru  solli  avan  than  valaikkup  baliyittuth  than  pa’rikkuth  thoobangkaattugi’raan.  (aabakook  1:16)

இதற்காக  அவன்  தன்  வலையை  இழுத்து  அதிலுள்ளவைகளைக்  கொட்டிக்கொண்டிருந்து,  இரக்கமில்லாமல்  ஜாதிகளை  எப்போதும்  கொன்றுபோட  வேண்டுமோ?  (ஆபகூக்  1:17)

itha’rkaaga  avan  than  valaiyai  izhuththu  athilu'l'lavaiga'laik  kottikko'ndirunthu,  irakkamillaamal  jaathiga'lai  eppoathum  kon’rupoada  vea'ndumoa?  (aabakook  1:17)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!