Friday, June 10, 2016

Yaakkoabu 3 | யாக்கோபு 3 | James 3

என்  சகோதரரே,  அதிக  ஆக்கினையை  அடைவோம்  என்று  அறிந்து,  உங்களில்  அநேகர்  போதகராகாதிருப்பீர்களாக.  (யாக்கோபு  3:1)

en  sagoathararea,  athiga  aakkinaiyai  adaivoam  en’ru  a’rinthu,  ungga'lil  aneagar  poathagaraagaathiruppeerga'laaga.  (yaakkoabu  3:1)

நாம்  எல்லாரும்  அநேக  விஷயங்களில்  தவறுகிறோம்;  ஒருவன்  சொல்தவறாதவனானால்  அவன்  பூரணபுருஷனும்,  தன்  சரீரமுழுவதையும்  கடிவாளத்தினாலே  அடக்கிக்கொள்ளக்கூடியவனுமாயிருக்கிறான்.  (யாக்கோபு  3:2)

naam  ellaarum  aneaga  vishayangga'lil  thava’rugi’roam;  oruvan  solthava’raathavanaanaal  avan  poora'napurushanum,  than  sareeramuzhuvathaiyum  kadivaa'laththinaalea  adakkikko'l'lakkoodiyavanumaayirukki’raan.  (yaakkoabu  3:2)

பாருங்கள்,  குதிரைகள்  நமக்குக்  கீழ்ப்படியும்படிக்கு  அவைகளின்  வாய்களில்  கடிவாளம்போட்டு,  அவைகளுடைய  முழுச்சரீரத்தையும்  திருப்பி  நடத்துகிறோம்.  (யாக்கோபு  3:3)

paarungga'l,  kuthiraiga'l  namakkuk  keezhppadiyumpadikku  avaiga'lin  vaayga'lil  kadivaa'lampoattu,  avaiga'ludaiya  muzhuchsareeraththaiyum  thiruppi  nadaththugi’roam.  (yaakkoabu  3:3)

கப்பல்களையும்  பாருங்கள்,  அவைகள்  மகா  பெரியவைகளாயிருந்தாலும்,  கடுங்காற்றுகளால்  அடிபட்டாலும்,  அவைகளை  நடத்துகிறவன்  போகும்படி  யோசிக்கும்  இடம்  எதுவோ  அவ்விடத்திற்கு  நேராக  மிகவும்  சிறிதான  சுக்கானாலே  திருப்பப்படும்.  (யாக்கோபு  3:4)

kappalga'laiyum  paarungga'l,  avaiga'l  mahaa  periyavaiga'laayirunthaalum,  kadungkaat’ruga'laal  adipattaalum,  avaiga'lai  nadaththugi’ravan  poagumpadi  yoasikkum  idam  ethuvoa  avvidaththi’rku  nearaaga  migavum  si’rithaana  sukkaanaalea  thiruppappadum.  (yaakkoabu  3:4)

அப்படியே,  நாவானதும்  சிறிய  அவயவமாயிருந்தும்  பெருமையானவைகளைப்  பேசும்.  பாருங்கள்,  சிறிய  நெருப்பு  எவ்வளவு  பெரிய  காட்டைக்  கொளுத்திவிடுகிறது!  (யாக்கோபு  3:5)

appadiyea,  naavaanathum  si’riya  avayavamaayirunthum  perumaiyaanavaiga'laip  peasum.  paarungga'l,  si’riya  neruppu  evva'lavu  periya  kaattaik  ko'luththividugi’rathu!  (yaakkoabu  3:5)

நாவும்  நெருப்புத்தான்,  அது  அநீதி  நிறைந்த  உலகம்;  நம்முடைய  அவயவங்களில்  நாவானது  முழுச்சரீரத்தையும்  கறைப்படுத்தி,  ஆயுள்  சக்கரத்தைக்  கொளுத்திவிடுகிறதாயும்,  நரக  அக்கினியினால்  கொளுத்தப்படுகிறதாயும்  இருக்கிறது!  (யாக்கோபு  3:6)

naavum  neruppuththaan,  athu  aneethi  ni’raintha  ulagam;  nammudaiya  avayavangga'lil  naavaanathu  muzhuchsareeraththaiyum  ka’raippaduththi,  aayu'l  sakkaraththaik  ko'luththividugi’rathaayum,  naraga  akkiniyinaal  ko'luththappadugi’rathaayum  irukki’rathu!  (yaakkoabu  3:6)

சகலவிதமான  மிருகங்கள்,  பறவைகள்,  ஊரும்பிராணிகள்,  நீர்வாழும்  ஜெந்துக்கள்  ஆகிய  இவைகளின்  சுபாவம்  மனுஷசுபாவத்தால்  அடக்கப்படும்,  அடக்கப்பட்டதுமுண்டு.  (யாக்கோபு  3:7)

sagalavithamaana  mirugangga'l,  pa’ravaiga'l,  oorumpiraa'niga'l,  neervaazhum  jenthukka'l  aagiya  ivaiga'lin  subaavam  manushasubaavaththaal  adakkappadum,  adakkappattathumu'ndu.  (yaakkoabu  3:7)

நாவை  அடக்க  ஒரு  மனுஷனாலும்  கூடாது;  அது  அடங்காத  பொல்லாங்குள்ளதும்  சாவுக்கேதுவான  விஷம்  நிறைந்ததுமாயிருக்கிறது.  (யாக்கோபு  3:8)

naavai  adakka  oru  manushanaalum  koodaathu;  athu  adanggaatha  pollaanggu'l'lathum  saavukkeathuvaana  visham  ni’rainthathumaayirukki’rathu.  (yaakkoabu  3:8)

அதினாலே  நாம்  பிதாவாகிய  தேவனைத்  துதிக்கிறோம்;  தேவனுடைய  சாயலின்படி  உண்டாக்கப்பட்ட  மனுஷரை  அதினாலேயே  சபிக்கிறோம்.  (யாக்கோபு  3:9)

athinaalea  naam  pithaavaagiya  theavanaith  thuthikki’roam;  theavanudaiya  saayalinpadi  u'ndaakkappatta  manusharai  athinaaleayea  sabikki’roam.  (yaakkoabu  3:9)

துதித்தலும்  சபித்தலும்  ஒரே  வாயிலிருந்து  புறப்படுகிறது.  என்  சகோதரரே,  இப்படியிருக்கலாகாது.  (யாக்கோபு  3:10)

thuthiththalum  sabiththalum  orea  vaayilirunthu  pu’rappadugi’rathu.  en  sagoathararea,  ippadiyirukkalaagaathu.  (yaakkoabu  3:10)

ஒரே  ஊற்றுக்கண்ணிலிருந்து  தித்திப்பும்  கசப்புமான  தண்ணீர்  சுரக்குமா?  (யாக்கோபு  3:11)

orea  oot’rukka'n'nilirunthu  thiththippum  kasappumaana  tha'n'neer  surakkumaa?  (yaakkoabu  3:11)

என்  சகோதரரே,  அத்திமரம்  ஒலிவப்பழங்களையும்,  திராட்சச்செடி  அத்திப்பழங்களையும்  கொடுக்குமா?  அப்படியே  உவர்ப்பான  நீரூற்றுத்  தித்திப்பான  ஜலத்தைக்  கொடுக்கமாட்டாது.  (யாக்கோபு  3:12)

en  sagoathararea,  aththimaram  olivappazhangga'laiyum,  thiraadchachsedi  aththippazhangga'laiyum  kodukkumaa?  appadiyea  uvarppaana  neeroot’ruth  thiththippaana  jalaththaik  kodukkamaattaathu.  (yaakkoabu  3:12)

உங்களில்  ஞானியும்  விவேகியுமாயிருக்கிறவன்  எவனோ,  அவன்  ஞானத்திற்குரிய  சாந்தத்தோடே  தன்  கிரியைகளை  நல்ல  நடக்கையினாலே  காண்பிக்கக்கடவன்.  (யாக்கோபு  3:13)

ungga'lil  gnaaniyum  viveagiyumaayirukki’ravan  evanoa,  avan  gnaanaththi’rkuriya  saanthaththoadea  than  kiriyaiga'lai  nalla  nadakkaiyinaalea  kaa'nbikkakkadavan.  (yaakkoabu  3:13)

உங்கள்  இருதயத்திலே  கசப்பான  வைராக்கியத்தையும்  விரோதத்தையும்  வைத்தீர்களானால்,  நீங்கள்  பெருமைபாராட்டாதிருங்கள்;  சத்தியத்திற்கு  விரோதமாய்ப்  பொய்சொல்லாமலுமிருங்கள்.  (யாக்கோபு  3:14)

ungga'l  iruthayaththilea  kasappaana  vairaakkiyaththaiyum  viroathaththaiyum  vaiththeerga'laanaal,  neengga'l  perumaipaaraattaathirungga'l;  saththiyaththi’rku  viroathamaayp  poysollaamalumirungga'l.  (yaakkoabu  3:14)

இப்படிப்பட்ட  ஞானம்  பரத்திலிருந்து  இறங்கிவருகிற  ஞானமாயிராமல்,  லௌகிக  சம்பந்தமானதும்,  ஜென்மசுபாவத்துக்குரியதும்,  பேய்த்தனத்துக்கடுத்ததுமாயிருக்கிறது.  (யாக்கோபு  3:15)

ippadippatta  gnaanam  paraththilirunthu  i’ranggivarugi’ra  gnaanamaayiraamal,  laugiga  sambanthamaanathum,  jenmasubaavaththukkuriyathum,  peayththanaththukkaduththathumaayirukki’rathu.  (yaakkoabu  3:15)

வைராக்கியமும்  விரோதமும்  எங்கே  உண்டோ,  அங்கே  கலகமும்  சகல  துர்ச்செய்கைகளுமுண்டு.  (யாக்கோபு  3:16)

vairaakkiyamum  viroathamum  enggea  u'ndoa,  anggea  kalagamum  sagala  thurchseygaiga'lumu'ndu.  (yaakkoabu  3:16)

பரத்திலிருந்து  வருகிற  ஞானமோ  முதலாவது  சுத்தமுள்ளதாயும்,  பின்பு  சமாதானமும்  சாந்தமும்  இணக்கமுமுள்ளதாயும்,  இரக்கத்தாலும்  நற்கனிகளாலும்  நிறைந்ததாயும்,  பட்சபாதமில்லாததாயும்,  மாயமற்றதாயுமிருக்கிறது.  (யாக்கோபு  3:17)

paraththilirunthu  varugi’ra  gnaanamoa  muthalaavathu  suththamu'l'lathaayum,  pinbu  samaathaanamum  saanthamum  i'nakkamumu'l'lathaayum,  irakkaththaalum  na’rkaniga'laalum  ni’rainthathaayum,  padchapaathamillaathathaayum,  maayamat’rathaayumirukki’rathu.  (yaakkoabu  3:17)

நீதியாகிய  கனியானது  சமாதானத்தை  நடப்பிக்கிறவர்களாலே  சமாதானத்திலே  விதைக்கப்படுகிறது.  (யாக்கோபு  3:18)

neethiyaagiya  kaniyaanathu  samaathaanaththai  nadappikki’ravarga'laalea  samaathaanaththilea  vithaikkappadugi’rathu.  (yaakkoabu  3:18)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!