Thursday, June 16, 2016

Ve’lippaduththina Viseasham 9 | வெளிப்படுத்தின விசேஷம் 9 | Revelation 9

ஐந்தாம்  தூதன்  எக்காளம்  ஊதினான்;  அப்பொழுது  வானத்திலிருந்து  பூமியின்மேல்  விழுந்த  ஒரு  நட்சத்திரத்தைக்  கண்டேன்;  அவனுக்குப்  பாதாளக்குழியின்  திறவுகோல்  கொடுக்கப்பட்டது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  9:1)

ainthaam  thoothan  ekkaa'lam  oothinaan;  appozhuthu  vaanaththilirunthu  boomiyinmeal  vizhuntha  oru  nadchaththiraththaik  ka'ndean;  avanukkup  paathaa'lakkuzhiyin  thi’ravukoal  kodukkappattathu.  (ve’lippaduththina  viseasham  9:1)

அவன்  பாதாளக்குழியைத்  திறந்தான்;  உடனே  பெருஞ்சூளையின்  புகையைப்போல  அந்தக்  குழியிலிருந்து  புகைஎழும்பிற்று;  அந்தக்  குழியின்  புகையினால்  சூரியனும்  ஆகாயமும்  அந்தகாரப்பட்டது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  9:2)

avan  paathaa'lakkuzhiyaith  thi’ranthaan;  udanea  perugnsoo'laiyin  pugaiyaippoala  anthak  kuzhiyilirunthu  pugaiezhumbit’ru;  anthak  kuzhiyin  pugaiyinaal  sooriyanum  aagaayamum  anthagaarappattathu.  (ve’lippaduththina  viseasham  9:2)

அந்தப்  புகையிலிருந்து  வெட்டுக்கிளிகள்  புறப்பட்டுப்  பூமியின்மேல்  வந்தது;  அவைகளுக்குப்  பூமியிலுள்ள  தேள்களின்  வல்லமைக்கொப்பான  வல்லமை  கொடுக்கப்பட்டது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  9:3)

anthap  pugaiyilirunthu  vettukki'liga'l  pu’rappattup  boomiyinmeal  vanthathu;  avaiga'lukkup  boomiyilu'l'la  thea'lga'lin  vallamaikkoppaana  vallamai  kodukkappattathu.  (ve’lippaduththina  viseasham  9:3)

பூமியின்  புல்லையும்  பசுமையான  எந்தப்  பூண்டையும்  எந்த  மரத்தையும்  சேதப்படுத்தாமல்,  தங்கள்  நெற்றிகளில்  தேவனுடைய  முத்திரையைத்  தரித்திராத  மனுஷரைமாத்திரம்  சேதப்படுத்த  அவைகளுக்கு  உத்தரவு  கொடுக்கப்பட்டது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  9:4)

boomiyin  pullaiyum  pasumaiyaana  enthap  poo'ndaiyum  entha  maraththaiyum  seathappaduththaamal,  thangga'l  net’riga'lil  theavanudaiya  muththiraiyaith  thariththiraatha  manusharaimaaththiram  seathappaduththa  avaiga'lukku  uththaravu  kodukkappattathu.  (ve’lippaduththina  viseasham  9:4)

மேலும்  அவர்களைக்  கொலைசெய்யும்படிக்கு  அவைகளுக்கு  உத்தரவு  கொடுக்கப்படாமல்,  ஐந்துமாதமளவும்  அவர்களை  வேதனைப்படுத்தும்படிக்கு  உத்தரவு  கொடுக்கப்பட்டது;  அவைகள்  செய்யும்  வேதனை  தேளானது  மனுஷரைக்  கொட்டும்போது  உண்டாகும்  வேதனையைப்போலிருக்கும்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  9:5)

mealum  avarga'laik  kolaiseyyumpadikku  avaiga'lukku  uththaravu  kodukkappadaamal,  ainthumaathama'lavum  avarga'lai  veathanaippaduththumpadikku  uththaravu  kodukkappattathu;  avaiga'l  seyyum  veathanai  thea'laanathu  manusharaik  kottumpoathu  u'ndaagum  veathanaiyaippoalirukkum.  (ve’lippaduththina  viseasham  9:5)

அந்நாட்களில்  மனுஷர்கள்  சாவைத்தேடியும்  அதைக்  காணாதிருப்பார்கள்,  சாகவேண்டுமென்று  ஆசைப்படுவார்கள்,  சாவோ  அவர்களுக்கு  விலகி  ஓடிப்போம்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  9:6)

annaadka'lil  manusharga'l  saavaiththeadiyum  athaik  kaa'naathiruppaarga'l,  saagavea'ndumen’ru  aasaippaduvaarga'l,  saavoa  avarga'lukku  vilagi  oadippoam.  (ve’lippaduththina  viseasham  9:6)

அந்த  வெட்டுக்கிளிகளின்  உருவம்  யுத்தத்திற்கு  ஆயத்தம்பண்ணப்பட்ட  குதிரைகளுக்கு  ஒப்பாயிருந்தது;  அவைகளுடைய  தலைகளின்மேல்  பொன்மயமான  கிரீடம்  போன்றவைகளிருந்தன;  அவைகளின்  முகங்கள்  மனுஷருடைய  முகங்கள்போலிருந்தன.  (வெளிப்படுத்தின  விசேஷம்  9:7)

antha  vettukki'liga'lin  uruvam  yuththaththi’rku  aayaththampa'n'nappatta  kuthiraiga'lukku  oppaayirunthathu;  avaiga'ludaiya  thalaiga'linmeal  ponmayamaana  kireedam  poan’ravaiga'lirunthana;  avaiga'lin  mugangga'l  manusharudaiya  mugangga'lpoalirunthana.  (ve’lippaduththina  viseasham  9:7)

அவைகளுடைய  கூந்தல்  ஸ்திரீகளுடைய  கூந்தல்போலிருந்தது;  அவைகளின்  பற்கள்  சிங்கங்களின்  பற்கள்போலிருந்தன.  (வெளிப்படுத்தின  விசேஷம்  9:8)

avaiga'ludaiya  koonthal  sthireega'ludaiya  koonthalpoalirunthathu;  avaiga'lin  pa’rka'l  singgangga'lin  pa’rka'lpoalirunthana.  (ve’lippaduththina  viseasham  9:8)

இருப்புக்  கவசங்களைப்போல  மார்க்கவசங்கள்  அவைகளுக்கு  இருந்தன;  அவைகளுடைய  சிறகுகளின்  இரைச்சல்  யுத்தத்திற்கு  ஓடுகிற  அநேகங்  குதிரைகள்  பூண்ட  இரதங்களின்  இரைச்சலுக்கு  ஒப்பாயிருந்தன.  (வெளிப்படுத்தின  விசேஷம்  9:9)

iruppuk  kavasangga'laippoala  maarkkavasangga'l  avaiga'lukku  irunthana;  avaiga'ludaiya  si’raguga'lin  iraichchal  yuththaththi’rku  oadugi’ra  aneagang  kuthiraiga'l  poo'nda  irathangga'lin  iraichchalukku  oppaayirunthana.  (ve’lippaduththina  viseasham  9:9)

அவைகள்  தேள்களின்  வால்களுக்கு  ஒப்பான  வால்களையும்,  அந்த  வால்களில்  கொடுக்குகளையும்  உடையவைகளாயிருந்தன;  அவைகள்  ஐந்து  மாதமளவும்  மனுஷரைச்  சேதப்படுத்துவதற்கு  அதிகாரம்  உடையவைகளாயிருந்தன.  (வெளிப்படுத்தின  விசேஷம்  9:10)

avaiga'l  thea'lga'lin  vaalga'lukku  oppaana  vaalga'laiyum,  antha  vaalga'lil  kodukkuga'laiyum  udaiyavaiga'laayirunthana;  avaiga'l  ainthu  maathama'lavum  manusharaich  seathappaduththuvatha’rku  athigaaram  udaiyavaiga'laayirunthana.  (ve’lippaduththina  viseasham  9:10)

அவைகளுக்கு  ஒரு  ராஜன்  உண்டு,  அவன்  பாதாளத்தின்  தூதன்;  எபிரெயு  பாஷையிலே  அபெத்தோன்  என்றும்,  கிரேக்கு  பாஷையிலே  அப்பொல்லியோன்  என்றும்  அவனுக்குப்  பெயர்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  9:11)

avaiga'lukku  oru  raajan  u'ndu,  avan  paathaa'laththin  thoothan;  ebireyu  baashaiyilea  abeththoan  en’rum,  kireakku  baashaiyilea  appolliyoan  en’rum  avanukkup  peyar.  (ve’lippaduththina  viseasham  9:11)

முதலாம்  ஆபத்து  கடந்துபோயிற்று;  இவைகளுக்குப்பின்பு  இன்னும்  இரண்டு  ஆபத்துகள்,  இதோ,  வருகிறது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  9:12)

muthalaam  aabaththu  kadanthupoayit’ru;  ivaiga'lukkuppinbu  innum  ira'ndu  aabaththuga'l,  ithoa,  varugi’rathu.  (ve’lippaduththina  viseasham  9:12)

ஆறாம்  தூதன்  எக்காளம்  ஊதினான்;  அப்பொழுது  தேவனுக்கு  முன்பாக  இருந்த  பொற்பீடத்தின்  நான்கு  கொம்புகளிலுமிருந்து  ஒரு  சத்தந்தோன்றி,  (வெளிப்படுத்தின  விசேஷம்  9:13)

aa’raam  thoothan  ekkaa'lam  oothinaan;  appozhuthu  theavanukku  munbaaga  iruntha  po’rpeedaththin  naangu  kombuga'lilumirunthu  oru  saththanthoan’ri,  (ve’lippaduththina  viseasham  9:13)

எக்காளத்தைப்  பிடித்திருந்த  ஆறாம்  தூதனை  நோக்கி:  ஐபிராத்தென்னும்  பெரிய  நதியண்டையிலே  கட்டப்பட்டிருக்கிற  நான்கு  தூதர்களையும்  அவிழ்த்துவிடு  என்று  சொல்லக்கேட்டேன்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  9:14)

ekkaa'laththaip  pidiththiruntha  aa’raam  thoothanai  noakki:  aipiraaththennum  periya  nathiya'ndaiyilea  kattappattirukki’ra  naangu  thootharga'laiyum  avizhththuvidu  en’ru  sollakkeattean.  (ve’lippaduththina  viseasham  9:14)

அப்பொழுது  மனுஷரில்  மூன்றிலொருபங்கைக்  கொல்லும்படிக்கு  ஒருமணிநேரத்திற்கும்,  ஒரு  நாளுக்கும்,  ஒரு  மாதத்திற்கும்,  ஒரு  வருஷத்திற்கும்  ஆயத்தமாக்கப்பட்டிருந்த  அந்த  நான்கு  தூதர்களும்  அவிழ்த்துவிடப்பட்டார்கள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  9:15)

appozhuthu  manusharil  moon’rilorupanggaik  kollumpadikku  oruma'ninearaththi’rkum,  oru  naa'lukkum,  oru  maathaththi’rkum,  oru  varushaththi’rkum  aayaththamaakkappattiruntha  antha  naangu  thootharga'lum  avizhththuvidappattaarga'l.  (ve’lippaduththina  viseasham  9:15)

குதிரைச்சேனைகளாகிய  இராணுவங்களின்  தொகை  இருபது  கோடியாயிருந்தது;  அவைகளின்  தொகையைச்  சொல்லக்கேட்டேன்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  9:16)

kuthiraichseanaiga'laagiya  iraa'nuvangga'lin  thogai  irubathu  koadiyaayirunthathu;  avaiga'lin  thogaiyaich  sollakkeattean.  (ve’lippaduththina  viseasham  9:16)

குதிரைகளையும்  அவைகளின்மேல்  ஏறியிருந்தவர்களையும்  நான்  தரிசனத்தில்  கண்டவிதமாவது;  அவர்கள்  அக்கினிநிறமும்  நீலநிறமும்  கந்தகநிறமுமான  மார்க்கவசங்களையுடையவர்களாயிருந்தார்கள்;  குதிரைகளுடைய  தலைகள்  சிங்கங்களின்  தலைகளைப்போலிருந்தன;  அவைகளுடைய  வாய்களிலிருந்து  அக்கினியும்  புகையும்  கந்தகமும்  புறப்பட்டன.  (வெளிப்படுத்தின  விசேஷம்  9:17)

kuthiraiga'laiyum  avaiga'linmeal  ea’riyirunthavarga'laiyum  naan  tharisanaththil  ka'ndavithamaavathu;  avarga'l  akkinini’ramum  neelani’ramum  kanthagani’ramumaana  maarkkavasangga'laiyudaiyavarga'laayirunthaarga'l;  kuthiraiga'ludaiya  thalaiga'l  singgangga'lin  thalaiga'laippoalirunthana;  avaiga'ludaiya  vaayga'lilirunthu  akkiniyum  pugaiyum  kanthagamum  pu’rappattana.  (ve’lippaduththina  viseasham  9:17)

அவைகளுடைய  வாய்களிலிருந்து  புறப்பட்ட  அக்கினி  புகை  கந்தகம்  என்னும்  இம்மூன்றினாலும்  மனுஷரில்  மூன்றிலொருபங்கு  கொல்லப்பட்டார்கள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  9:18)

avaiga'ludaiya  vaayga'lilirunthu  pu’rappatta  akkini  pugai  kanthagam  ennum  immoon’rinaalum  manusharil  moon’rilorupanggu  kollappattaarga'l.  (ve’lippaduththina  viseasham  9:18)

அந்தக்  குதிரைகளின்  வல்லமை  அவைகளுடைய  வாயிலேயும்  வால்களிலேயும்  இருக்கிறது;  அவைகளுடைய  வால்கள்  பாம்புகளுக்கு  ஒப்பானவைகளாயும்,  தலைகளுள்ளவைகளாயுமிருக்கிறது,  அவைகளாலே  சேதப்படுத்துகிறது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  9:19)

anthak  kuthiraiga'lin  vallamai  avaiga'ludaiya  vaayileayum  vaalga'lileayum  irukki’rathu;  avaiga'ludaiya  vaalga'l  paambuga'lukku  oppaanavaiga'laayum,  thalaiga'lu'l'lavaiga'laayumirukki’rathu,  avaiga'laalea  seathappaduththugi’rathu.  (ve’lippaduththina  viseasham  9:19)

அப்படியிருந்தும்,  அந்த  வாதைகளால்  கொல்லப்படாத  மற்ற  மனுஷர்கள்  பேய்களையும்,  பொன்  வெள்ளி  செம்பு  கல்  மரம்  என்பவைகளால்  செய்யப்பட்டவைகளாயும்  காணவும்  கேட்கவும்  நடக்கவுமாட்டாதவைகளாயுமிருக்கிற  விக்கிரகங்களையும்  வணங்காதபடிக்குத்  தங்கள்  கைகளின்  கிரியைகளைவிட்டு  மனந்திரும்பவுமில்லை;  (வெளிப்படுத்தின  விசேஷம்  9:20)

appadiyirunthum,  antha  vaathaiga'laal  kollappadaatha  mat’ra  manusharga'l  peayga'laiyum,  pon  ve'l'li  sembu  kal  maram  enbavaiga'laal  seyyappattavaiga'laayum  kaa'navum  keadkavum  nadakkavumaattaathavaiga'laayumirukki’ra  vikkiragangga'laiyum  va'nanggaathapadikkuth  thangga'l  kaiga'lin  kiriyaiga'laivittu  mananthirumbavumillai;  (ve’lippaduththina  viseasham  9:20)

தங்கள்  கொலைபாதகங்களையும்,  தங்கள்  சூனியங்களையும்,  தங்கள்  வேசித்தனங்களையும்,  தங்கள்  களவுகளையும்  விட்டு  மனந்திரும்பவுமில்லை.  (வெளிப்படுத்தின  விசேஷம்  9:21)

thangga'l  kolaipaathagangga'laiyum,  thangga'l  sooniyangga'laiyum,  thangga'l  veasiththanangga'laiyum,  thangga'l  ka'lavuga'laiyum  vittu  mananthirumbavumillai.  (ve’lippaduththina  viseasham  9:21)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!