Thursday, June 16, 2016

Ve’lippaduththina Viseasham 8 | வெளிப்படுத்தின விசேஷம் 8 | Revelation 8

அவர்  ஏழாம்  முத்திரையை  உடைத்தபோது,  பரலோகத்தில்  ஏறக்குறைய  அரைமணிநேரமளவும்  அமைதல்  உண்டாயிற்று.  (வெளிப்படுத்தின  விசேஷம்  8:1)

avar  eazhaam  muththiraiyai  udaiththapoathu,  paraloagaththil  ea’rakku’raiya  araima'ninearama'lavum  amaithal  u'ndaayit’ru.  (ve’lippaduththina  viseasham  8:1)

பின்பு,  தேவனுக்குமுன்பாக  நிற்கிற  ஏழு  தூதர்களையுங்  கண்டேன்;  அவர்களுக்கு  ஏழு  எக்காளங்கள்  கொடுக்கப்பட்டது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  8:2)

pinbu,  theavanukkumunbaaga  ni’rki’ra  eazhu  thootharga'laiyung  ka'ndean;  avarga'lukku  eazhu  ekkaa'langga'l  kodukkappattathu.  (ve’lippaduththina  viseasham  8:2)

வேறொரு  தூதனும்  வந்து,  தூபங்காட்டும்  பொற்கலசத்தைப்  பிடித்துப்  பலிபீடத்தின்  படியிலே  நின்றான்;  சிங்காசனத்திற்குமுன்பாக  இருந்த  பொற்பீடத்தின்மேல்  சகல  பரிசுத்தவான்களுடைய  ஜெபங்களோடும்  செலுத்தும்படி  மிகுந்த  தூபவர்க்கம்  அவனுக்குக்  கொடுக்கப்பட்டது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  8:3)

vea’roru  thoothanum  vanthu,  thoobangkaattum  po’rkalasaththaip  pidiththup  balipeedaththin  padiyilea  nin’raan;  singgaasanaththi’rkumunbaaga  iruntha  po’rpeedaththinmeal  sagala  parisuththavaanga'ludaiya  jebangga'loadum  seluththumpadi  miguntha  thoobavarkkam  avanukkuk  kodukkappattathu.  (ve’lippaduththina  viseasham  8:3)

அப்படியே  பரிசுத்தவான்களுடைய  ஜெபங்களோடும்  செலுத்தப்பட்ட  தூபவர்க்கத்தின்  புகையானது  தூதனுடைய  கையிலிருந்து  தேவனுக்குமுன்பாக  எழும்பிற்று.  (வெளிப்படுத்தின  விசேஷம்  8:4)

appadiyea  parisuththavaanga'ludaiya  jebangga'loadum  seluththappatta  thoobavarkkaththin  pugaiyaanathu  thoothanudaiya  kaiyilirunthu  theavanukkumunbaaga  ezhumbit’ru.  (ve’lippaduththina  viseasham  8:4)

பின்பு,  அந்தத்  தூதன்  தூபகலசத்தை  எடுத்து,  அதைப்  பலிபீடத்து  நெருப்பினால்  நிரப்பி,  பூமியிலே  கொட்டினான்;  உடனே  சத்தங்களும்,  இடிமுழக்கங்களும்,  மின்னல்களும்,  பூமியதிர்ச்சியும்  உண்டாயின.  (வெளிப்படுத்தின  விசேஷம்  8:5)

pinbu,  anthath  thoothan  thoobakalasaththai  eduththu,  athaip  balipeedaththu  neruppinaal  nirappi,  boomiyilea  kottinaan;  udanea  saththangga'lum,  idimuzhakkangga'lum,  minnalga'lum,  boomiyathirchchiyum  u'ndaayina.  (ve’lippaduththina  viseasham  8:5)

அப்பொழுது,  ஏழு  எக்காளங்களையுடைய  ஏழு  தூதர்கள்  எக்காளம்  ஊதுகிறதற்குத்  தங்களை  ஆயத்தப்படுத்தினார்கள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  8:6)

appozhuthu,  eazhu  ekkaa'langga'laiyudaiya  eazhu  thootharga'l  ekkaa'lam  oothugi’ratha’rkuth  thangga'lai  aayaththappaduththinaarga'l.  (ve’lippaduththina  viseasham  8:6)

முதலாம்  தூதன்  எக்காளம்  ஊதினான்;  அப்பொழுது  இரத்தங்கலந்த  கல்மழையும்  அக்கினியும்  உண்டாகி,  பூமியிலே  கொட்டப்பட்டது;  அதினால்  மரங்களில்  மூன்றிலொருபங்கு  வெந்துபோயிற்று,  பசும்புல்லெல்லாம்  எரிந்துபோயிற்று.  (வெளிப்படுத்தின  விசேஷம்  8:7)

muthalaam  thoothan  ekkaa'lam  oothinaan;  appozhuthu  iraththangkalantha  kalmazhaiyum  akkiniyum  u'ndaagi,  boomiyilea  kottappattathu;  athinaal  marangga'lil  moon’rilorupanggu  venthupoayit’ru,  pasumpullellaam  erinthupoayit’ru.  (ve’lippaduththina  viseasham  8:7)

இரண்டாம்  தூதன்  எக்காளம்  ஊதினான்;  அப்பொழுது  அக்கினியால்  எரிகிற  பெரிய  மலைபோன்றதொன்று  சமுத்திரத்திலே  போடப்பட்டது;  அதினால்  சமுத்திரத்தில்  மூன்றிலொருபங்கு  இரத்தமாயிற்று.  (வெளிப்படுத்தின  விசேஷம்  8:8)

ira'ndaam  thoothan  ekkaa'lam  oothinaan;  appozhuthu  akkiniyaal  erigi’ra  periya  malaipoan’rathon’ru  samuththiraththilea  poadappattathu;  athinaal  samuththiraththil  moon’rilorupanggu  iraththamaayit’ru.  (ve’lippaduththina  viseasham  8:8)

சமுத்திரத்திலிருந்த  ஜீவனுள்ள  சிருஷ்டிகளில்  மூன்றிலொருபங்கு  செத்துப்போயிற்று;  கப்பல்களில்  மூன்றிலொருபங்கு  சேதமாயிற்று.  (வெளிப்படுத்தின  விசேஷம்  8:9)

samuththiraththiliruntha  jeevanu'l'la  sirushdiga'lil  moon’rilorupanggu  seththuppoayit’ru;  kappalga'lil  moon’rilorupanggu  seathamaayit’ru.  (ve’lippaduththina  viseasham  8:9)

மூன்றாம்  தூதன்  எக்காளம்  ஊதினான்;  அப்பொழுது  ஒரு  பெரிய  நட்சத்திரம்  தீவட்டியைப்போல  எரிந்து,  வானத்திலிருந்து  விழுந்தது;  அது  ஆறுகளில்  மூன்றிலொருபங்கின்மேலும்,  நீரூற்றுகளின்மேலும்  விழுந்தது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  8:10)

moon’raam  thoothan  ekkaa'lam  oothinaan;  appozhuthu  oru  periya  nadchaththiram  theevattiyaippoala  erinthu,  vaanaththilirunthu  vizhunthathu;  athu  aa’ruga'lil  moon’rilorupangginmealum,  neeroot’ruga'linmealum  vizhunthathu.  (ve’lippaduththina  viseasham  8:10)

அந்த  நட்சத்திரத்திற்கு  எட்டியென்று  பெயர்;  அதினால்  தண்ணீரில்  மூன்றிலொருபங்கு  எட்டியைப்போலக்  கசப்பாயிற்று;  இப்படிக்  கசப்பான  தண்ணீரினால்  மனுஷரில்  அநேகர்  செத்தார்கள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  8:11)

antha  nadchaththiraththi’rku  ettiyen’ru  peyar;  athinaal  tha'n'neeril  moon’rilorupanggu  ettiyaippoalak  kasappaayit’ru;  ippadik  kasappaana  tha'n'neerinaal  manusharil  aneagar  seththaarga'l.  (ve’lippaduththina  viseasham  8:11)

நான்காம்  தூதன்  எக்காளம்  ஊதினான்;  அப்பொழுது  சூரியனில்  மூன்றிலொரு  பங்கும்,  சந்திரனில்  மூன்றிலொருபங்கும்,  நட்சத்திரங்களில்  மூன்றிலொருபங்கும்  சேதப்பட்டது,  அவற்றவற்றில்  மூன்றிலொருபங்கு  இருளடைந்தது;  பகலிலும்  மூன்றிலொருபங்கு  பிரகாசமில்லாமற்போயிற்று,  இரவிலும்  அப்படியேயாயிற்று.  (வெளிப்படுத்தின  விசேஷம்  8:12)

naangaam  thoothan  ekkaa'lam  oothinaan;  appozhuthu  sooriyanil  moon’riloru  panggum,  santhiranil  moon’rilorupanggum,  nadchaththirangga'lil  moon’rilorupanggum  seathappattathu,  avat’ravat’ril  moon’rilorupanggu  iru'ladainthathu;  pagalilum  moon’rilorupanggu  piragaasamillaama’rpoayit’ru,  iravilum  appadiyeayaayit’ru.  (ve’lippaduththina  viseasham  8:12)

பின்பு,  ஒரு  தூதன்  வானத்தின்  மத்தியிலே  பறந்துவரக்கண்டேன்;  அவன்  மகா  சத்தமிட்டு:  இனி  எக்காளம்  ஊதப்போகிற  மற்ற  மூன்று  தூதருடைய  எக்காளசத்தங்களினால்  பூமியில்  குடியிருக்கிறவர்களுக்கு  ஐயோ,  ஐயோ,  ஐயோ,  (ஆபத்துவரும்)  என்று  சொல்லக்கேட்டேன்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  8:13)

pinbu,  oru  thoothan  vaanaththin  maththiyilea  pa’ranthuvarakka'ndean;  avan  mahaa  saththamittu:  ini  ekkaa'lam  oothappoagi’ra  mat’ra  moon’ru  thootharudaiya  ekkaa'lasaththangga'linaal  boomiyil  kudiyirukki’ravarga'lukku  aiyoa,  aiyoa,  aiyoa,  (aabaththuvarum)  en’ru  sollakkeattean.  (ve’lippaduththina  viseasham  8:13)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!