Thursday, June 16, 2016

Ve’lippaduththina Viseasham 7 | வெளிப்படுத்தின விசேஷம் 7 | Revelation 7

இவைகளுக்குப்பின்பு,  பூமியின்  நான்கு  திசைகளிலும்  நான்கு  தூதர்கள்  நின்று,  பூமியின்மேலாவது,  சமுத்திரத்தின்மேலாவது,  ஒரு  மரத்தின்மேலாவது,  காற்று  அடியாதபடிக்கு,  பூமியின்  நான்கு  காற்றுகளையும்  பிடித்திருக்கக்கண்டேன்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  7:1)

ivaiga'lukkuppinbu,  boomiyin  naangu  thisaiga'lilum  naangu  thootharga'l  nin’ru,  boomiyinmealaavathu,  samuththiraththinmealaavathu,  oru  maraththinmealaavathu,  kaat’ru  adiyaathapadikku,  boomiyin  naangu  kaat’ruga'laiyum  pidiththirukkakka'ndean.  (ve’lippaduththina  viseasham  7:1)

ஜீவனுள்ள  தேவனுடைய  முத்திரைக்  கோலையுடைய  வேறொரு  தூதன்  சூரியன்  உதிக்குந்திசையிலிருந்து  ஏறிவரக்கண்டேன்;  அவன்,  பூமியையும்  சமுத்திரத்தையும்  சேதப்படுத்துகிறதற்கு  அதிகாரம்  பெற்ற  அந்த  நான்கு  தூதரையும்  நோக்கி:  (வெளிப்படுத்தின  விசேஷம்  7:2)

jeevanu'l'la  theavanudaiya  muththiraik  koalaiyudaiya  vea’roru  thoothan  sooriyan  uthikkunthisaiyilirunthu  ea’rivarakka'ndean;  avan,  boomiyaiyum  samuththiraththaiyum  seathappaduththugi’ratha’rku  athigaaram  pet’ra  antha  naangu  thootharaiyum  noakki:  (ve’lippaduththina  viseasham  7:2)

நாம்  நமது  தேவனுடைய  ஊழியக்காரரின்  நெற்றிகளில்  முத்திரைபோட்டுத்  தீருமளவும்  பூமியையும்  சமுத்திரத்தையும்  மரங்களையும்  சேதப்படுத்தாதிருங்கள்  என்று  மகா  சத்தமிட்டுக்  கூப்பிட்டான்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  7:3)

naam  namathu  theavanudaiya  oozhiyakkaararin  net’riga'lil  muththiraipoattuth  theeruma'lavum  boomiyaiyum  samuththiraththaiyum  marangga'laiyum  seathappaduththaathirungga'l  en’ru  mahaa  saththamittuk  kooppittaan.  (ve’lippaduththina  viseasham  7:3)

முத்திரைபோடப்பட்டவர்களின்  தொகையைச்  சொல்லக்கேட்டேன்;  இஸ்ரவேல்  புத்திரருடைய  சகல  கோத்திரங்களிலும்  முத்திரைபோடப்பட்டவர்கள்  இலட்சத்து  நாற்பத்து  நாலாயிரம்பேர்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  7:4)

muththiraipoadappattavarga'lin  thogaiyaich  sollakkeattean;  israveal  puththirarudaiya  sagala  koaththirangga'lilum  muththiraipoadappattavarga'l  iladchaththu  naa’rpaththu  naalaayirampear.  (ve’lippaduththina  viseasham  7:4)

யூதா  கோத்திரத்தில்  முத்திரைபோடப்பட்டவர்கள்  பன்னீராயிரம்.  ரூபன்  கோத்திரத்தில்  முத்திரைபோடப்பட்டவர்கள்  பன்னீராயிரம்.  காத்  கோத்திரத்தில்  முத்திரைபோடப்பட்டவர்கள்  பன்னீராயிரம்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  7:5)

yoothaa  koaththiraththil  muththiraipoadappattavarga'l  panneeraayiram.  rooban  koaththiraththil  muththiraipoadappattavarga'l  panneeraayiram.  kaath  koaththiraththil  muththiraipoadappattavarga'l  panneeraayiram.  (ve’lippaduththina  viseasham  7:5)

ஆசேர்  கோத்திரத்தில்  முத்திரைபோடப்பட்டவர்கள்  பன்னீராயிரம்.  நப்தலி  கோத்திரத்தில்  முத்திரைபோடப்பட்டவர்கள்  பன்னீராயிரம்.  மனாசே  கோத்திரத்தில்  முத்திரைபோடப்பட்டவர்கள்  பன்னீராயிரம்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  7:6)

aasear  koaththiraththil  muththiraipoadappattavarga'l  panneeraayiram.  napthali  koaththiraththil  muththiraipoadappattavarga'l  panneeraayiram.  manaasea  koaththiraththil  muththiraipoadappattavarga'l  panneeraayiram.  (ve’lippaduththina  viseasham  7:6)

சிமியோன்  கோத்திரத்தில்  முத்திரைபோடப்பட்டவர்கள்  பன்னீராயிரம்.  லேவி  கோத்திரத்தில்  முத்திரைபோடப்பட்டவர்கள்  பன்னீராயிரம்.  இசக்கார்  கோத்திரத்தில்  முத்திரைபோடப்பட்டவர்கள்  பன்னீராயிரம்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  7:7)

simiyoan  koaththiraththil  muththiraipoadappattavarga'l  panneeraayiram.  leavi  koaththiraththil  muththiraipoadappattavarga'l  panneeraayiram.  isakkaar  koaththiraththil  muththiraipoadappattavarga'l  panneeraayiram.  (ve’lippaduththina  viseasham  7:7)

செபுலோன்  கோத்திரத்தில்  முத்திரைபோடப்பட்டவர்கள்  பன்னீராயிரம்.  யோசேப்பு  கோத்திரத்தில்  முத்திரைபோடப்பட்டவர்கள்  பன்னீராயிரம்.  பென்யமீன்  கோத்திரத்தில்  முத்திரைபோடப்பட்டவர்கள்  பன்னீராயிரம்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  7:8)

sebuloan  koaththiraththil  muththiraipoadappattavarga'l  panneeraayiram.  yoaseappu  koaththiraththil  muththiraipoadappattavarga'l  panneeraayiram.  benyameen  koaththiraththil  muththiraipoadappattavarga'l  panneeraayiram.  (ve’lippaduththina  viseasham  7:8)

இவைகளுக்குப்பின்பு,  நான்  பார்த்தபோது,  இதோ,  சகல  ஜாதிகளிலும்  கோத்திரங்களிலும்  ஜனங்களிலும்  பாஷைக்காரரிலுமிருந்து  வந்ததும்,  ஒருவனும்  எண்ணக்கூடாததுமான  திரளான  கூட்டமாகிய  ஜனங்கள்,  வெள்ளை  அங்கிகளைத்  தரித்து,  தங்கள்  கைகளில்  குருத்தோலைகளைப்  பிடித்து,  சிங்காசனத்திற்கு  முன்பாகவும்  ஆட்டுக்குட்டியானவருக்கு  முன்பாகவும்  நிற்கக்கண்டேன்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  7:9)

ivaiga'lukkuppinbu,  naan  paarththapoathu,  ithoa,  sagala  jaathiga'lilum  koaththirangga'lilum  janangga'lilum  baashaikkaararilumirunthu  vanthathum,  oruvanum  e'n'nakkoodaathathumaana  thira'laana  koottamaagiya  janangga'l,  ve'l'lai  anggiga'laith  thariththu,  thangga'l  kaiga'lil  kuruththoalaiga'laip  pidiththu,  singgaasanaththi’rku  munbaagavum  aattukkuttiyaanavarukku  munbaagavum  ni’rkakka'ndean.  (ve’lippaduththina  viseasham  7:9)

அவர்கள்  மகா  சத்தமிட்டு:  இரட்சிப்பின்  மகிமை  சிங்காசனத்தின்மேல்  வீற்றிருக்கிற  எங்கள்  தேவனுக்கும்  ஆட்டுக்குட்டியானவருக்கும்  உண்டாவதாக  என்று  ஆர்ப்பரித்தார்கள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  7:10)

avarga'l  mahaa  saththamittu:  iradchippin  magimai  singgaasanaththinmeal  veet’rirukki’ra  engga'l  theavanukkum  aattukkuttiyaanavarukkum  u'ndaavathaaga  en’ru  aarppariththaarga'l.  (ve’lippaduththina  viseasham  7:10)

தூதர்கள்  யாவரும்  சிங்காசனத்தையும்  மூப்பர்களையும்  நான்கு  ஜீவன்களையும்  சூழநின்று,  சிங்காசனத்திற்குமுன்பாக  முகங்குப்புற  விழுந்து,  தேவனைத்  தொழுதுகொண்டு:  (வெளிப்படுத்தின  விசேஷம்  7:11)

thootharga'l  yaavarum  singgaasanaththaiyum  moopparga'laiyum  naangu  jeevanga'laiyum  soozhanin’ru,  singgaasanaththi’rkumunbaaga  mugangkuppu’ra  vizhunthu,  theavanaith  thozhuthuko'ndu:  (ve’lippaduththina  viseasham  7:11)

ஆமென்,  எங்கள்  தேவனுக்குத்  துதியும்  மகிமையும்  ஞானமும்  ஸ்தோத்திரமும்  கனமும்  வல்லமையும்  பெலனும்  சதாகாலங்களிலும்  உண்டாவதாக;  ஆமென்,  என்றார்கள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  7:12)

aamen,  engga'l  theavanukkuth  thuthiyum  magimaiyum  gnaanamum  sthoaththiramum  kanamum  vallamaiyum  belanum  sathaakaalangga'lilum  u'ndaavathaaga;  aamen,  en’raarga'l.  (ve’lippaduththina  viseasham  7:12)

அப்பொழுது,  மூப்பர்களில்  ஒருவன்  என்னை  நோக்கி:  வெள்ளை  அங்கிகளைத்  தரித்திருக்கிற  இவர்கள்  யார்?  எங்கேயிருந்து  வந்தார்கள்?  என்று  கேட்டான்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  7:13)

appozhuthu,  moopparga'lil  oruvan  ennai  noakki:  ve'l'lai  anggiga'laith  thariththirukki’ra  ivarga'l  yaar?  enggeayirunthu  vanthaarga'l?  en’ru  keattaan.  (ve’lippaduththina  viseasham  7:13)

அதற்கு  நான்:  ஆண்டவனே,  அது  உமக்கே  தெரியும்  என்றேன்.  அப்பொழுது  அவன்:  இவர்கள்  மிகுந்த  உபத்திரவத்திலிருந்து  வந்தவர்கள்;  இவர்கள்  தங்கள்  அங்கிகளை  ஆட்டுக்குட்டியானவருடைய  இரத்தத்திலே  தோய்த்து  வெளுத்தவர்கள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  7:14)

atha’rku  naan:  aa'ndavanea,  athu  umakkea  theriyum  en’rean.  appozhuthu  avan:  ivarga'l  miguntha  ubaththiravaththilirunthu  vanthavarga'l;  ivarga'l  thangga'l  anggiga'lai  aattukkuttiyaanavarudaiya  iraththaththilea  thoayththu  ve'luththavarga'l.  (ve’lippaduththina  viseasham  7:14)

ஆனபடியால்,  இவர்கள்  தேவனுடைய  சிங்காசனத்திற்கு  முன்பாக  இருந்து,  இரவும்  பகலும்  அவருடைய  ஆலயத்திலே  அவரைச்  சேவிக்கிறார்கள்;  சிங்காசனத்தின்மேல்  வீற்றிருக்கிறவர்  இவர்களுக்குள்ளே  வாசமாயிருப்பார்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  7:15)

aanapadiyaal,  ivarga'l  theavanudaiya  singgaasanaththi’rku  munbaaga  irunthu,  iravum  pagalum  avarudaiya  aalayaththilea  avaraich  seavikki’raarga'l;  singgaasanaththinmeal  veet’rirukki’ravar  ivarga'lukku'l'lea  vaasamaayiruppaar.  (ve’lippaduththina  viseasham  7:15)

இவர்கள்  இனி  பசியடைவதுமில்லை,  இனி  தாகமடைவதுமில்லை;  வெயிலாவது  உஷ்ணமாவது  இவர்கள்மேல்  படுவதுமில்லை.  (வெளிப்படுத்தின  விசேஷம்  7:16)

ivarga'l  ini  pasiyadaivathumillai,  ini  thaagamadaivathumillai;  veyilaavathu  ush'namaavathu  ivarga'lmeal  paduvathumillai.  (ve’lippaduththina  viseasham  7:16)

சிங்காசனத்தின்  மத்தியிலிருக்கிற  ஆட்டுக்குட்டியானவரே  இவர்களை  மேய்த்து,  இவர்களை  ஜீவத்தண்ணீருள்ள  ஊற்றுகளண்டைக்கு  நடத்துவார்;  தேவன்தாமே  இவர்களுடைய  கண்ணீர்  யாவையும்  துடைப்பார்  என்றான்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  7:17)

singgaasanaththin  maththiyilirukki’ra  aattukkuttiyaanavarea  ivarga'lai  meayththu,  ivarga'lai  jeevaththa'n'neeru'l'la  oot’ruga'la'ndaikku  nadaththuvaar;  theavanthaamea  ivarga'ludaiya  ka'n'neer  yaavaiyum  thudaippaar  en’raan.  (ve’lippaduththina  viseasham  7:17)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!