Thursday, June 16, 2016

Ve’lippaduththina Viseasham 6 | வெளிப்படுத்தின விசேஷம் 6 | Revelation 6

ஆட்டுக்குட்டியானவர்  முத்திரைகளில்  ஒன்றை  உடைக்கக்கண்டேன்.  அப்பொழுது  நான்கு  ஜீவன்களில்  ஒன்று  என்னை  நோக்கி:  நீ  வந்து  பார்  என்று  இடிமுழக்கம்போன்ற  சத்தமாய்ச்  சொல்லக்கேட்டேன்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  6:1)

aattukkuttiyaanavar  muththiraiga'lil  on’rai  udaikkakka'ndean.  appozhuthu  naangu  jeevanga'lil  on’ru  ennai  noakki:  nee  vanthu  paar  en’ru  idimuzhakkampoan’ra  saththamaaych  sollakkeattean.  (ve’lippaduththina  viseasham  6:1)

நான்  பார்த்தபோது,  இதோ,  ஒரு  வெள்ளைக்குதிரையைக்  கண்டேன்;  அதின்மேல்  ஏறியிருந்தவன்  வில்லைப்  பிடித்திருந்தான்;  அவனுக்கு  ஒரு  கிரீடங்  கொடுக்கப்பட்டது;  அவன்  ஜெயிக்கிறவனாகவும்  ஜெயிப்பவனாகவும்  புறப்பட்டான்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  6:2)

naan  paarththapoathu,  ithoa,  oru  ve'l'laikkuthiraiyaik  ka'ndean;  athinmeal  ea’riyirunthavan  villaip  pidiththirunthaan;  avanukku  oru  kireedang  kodukkappattathu;  avan  jeyikki’ravanaagavum  jeyippavanaagavum  pu’rappattaan.  (ve’lippaduththina  viseasham  6:2)

அவர்  இரண்டாம்  முத்திரையை  உடைத்தபோது,  இரண்டாம்  ஜீவனானது:  நீ  வந்துபார்  என்று  சொல்லக்கேட்டேன்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  6:3)

avar  ira'ndaam  muththiraiyai  udaiththapoathu,  ira'ndaam  jeevanaanathu:  nee  vanthupaar  en’ru  sollakkeattean.  (ve’lippaduththina  viseasham  6:3)

அப்பொழுது  சிவப்பான  வேறொரு  குதிரை  புறப்பட்டது;  அதின்மேல்  ஏறியிருந்தவனுக்கு,  பூமியிலுள்ளவர்கள்  ஒருவரையொருவர்  கொலைசெய்யத்தக்கதாகச்  சமாதானத்தைப்  பூமியிலிருந்தெடுத்துப்  போடும்படியான  அதிகாரம்  கொடுக்கப்பட்டது;  ஒரு  பெரிய  பட்டயமும்  அவனுக்குக்  கொடுக்கப்பட்டது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  6:4)

appozhuthu  sivappaana  vea’roru  kuthirai  pu’rappattathu;  athinmeal  ea’riyirunthavanukku,  boomiyilu'l'lavarga'l  oruvaraiyoruvar  kolaiseyyaththakkathaagach  samaathaanaththaip  boomiyiliruntheduththup  poadumpadiyaana  athigaaram  kodukkappattathu;  oru  periya  pattayamum  avanukkuk  kodukkappattathu.  (ve’lippaduththina  viseasham  6:4)

அவர்  மூன்றாம்  முத்திரையை  உடைத்தபோது,  மூன்றாம்  ஜீவனானது:  நீ  வந்துபார்  என்று  சொல்லக்கேட்டேன்.  நான்  பார்த்தபோது,  இதோ,  ஒரு  கறுப்புக்குதிரையைக்  கண்டேன்;  அதின்மேல்  ஏறியிருந்தவன்  ஒரு  தராசைத்  தன்  கையிலே  பிடித்திருந்தான்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  6:5)

avar  moon’raam  muththiraiyai  udaiththapoathu,  moon’raam  jeevanaanathu:  nee  vanthupaar  en’ru  sollakkeattean.  naan  paarththapoathu,  ithoa,  oru  ka’ruppukkuthiraiyaik  ka'ndean;  athinmeal  ea’riyirunthavan  oru  tharaasaith  than  kaiyilea  pidiththirunthaan.  (ve’lippaduththina  viseasham  6:5)

அப்பொழுது,  ஒரு  பணத்துக்கு  ஒருபடி  கோதுமையென்றும்,  ஒரு  பணத்துக்கு  மூன்றுபடி  வாற்கோதுமையென்றும்,  எண்ணெயையும்  திராட்சரசத்தையும்  சேதப்படுத்தாதே  என்றும்,  நான்கு  ஜீவன்களின்  மத்தியிலிருந்து  உண்டான  சத்தத்தைக்  கேட்டேன்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  6:6)

appozhuthu,  oru  pa'naththukku  orupadi  koathumaiyen’rum,  oru  pa'naththukku  moon’rupadi  vaa’rkoathumaiyen’rum,  e'n'neyaiyum  thiraadcharasaththaiyum  seathappaduththaathea  en’rum,  naangu  jeevanga'lin  maththiyilirunthu  u'ndaana  saththaththaik  keattean.  (ve’lippaduththina  viseasham  6:6)

அவர்  நாலாம்  முத்திரையை  உடைத்தபோது,  நாலாம்  ஜீவனானது:  நீ  வந்துபார்  என்று  சொல்லுஞ்  சத்தத்தைக்  கேட்டேன்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  6:7)

avar  naalaam  muththiraiyai  udaiththapoathu,  naalaam  jeevanaanathu:  nee  vanthupaar  en’ru  sollugn  saththaththaik  keattean.  (ve’lippaduththina  viseasham  6:7)

நான்  பார்த்தபோது,  இதோ,  மங்கின  நிறமுள்ள  ஒரு  குதிரையைக்  கண்டேன்;  அதின்மேல்  ஏறியிருந்தவனுக்கு  மரணம்  என்று  பெயர்;  பாதாளம்  அவன்பின்  சென்றது.  பட்டயத்தினாலும்,  பஞ்சத்தினாலும்,  சாவினாலும்,  பூமியின்  துஷ்ட  மிருகங்களினாலும்,  பூமியின்  காற்பங்கிலுள்ளவர்களைக்  கொலைசெய்யும்படியான  அதிகாரம்  அவைகளுக்குக்  கொடுக்கப்பட்டது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  6:8)

naan  paarththapoathu,  ithoa,  manggina  ni’ramu'l'la  oru  kuthiraiyaik  ka'ndean;  athinmeal  ea’riyirunthavanukku  mara'nam  en’ru  peyar;  paathaa'lam  avanpin  sen’rathu.  pattayaththinaalum,  pagnchaththinaalum,  saavinaalum,  boomiyin  thushda  mirugangga'linaalum,  boomiyin  kaa’rpanggilu'l'lavarga'laik  kolaiseyyumpadiyaana  athigaaram  avaiga'lukkuk  kodukkappattathu.  (ve’lippaduththina  viseasham  6:8)

அவர்  ஐந்தாம்  முத்திரையை  உடைத்தபோது,  தேவவசனத்தினிமித்தமும்  தாங்கள்  கொடுத்த  சாட்சியினிமித்தமும்  கொல்லப்பட்டவர்களுடைய  ஆத்துமாக்களைப்  பலிபீடத்தின்கீழே  கண்டேன்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  6:9)

avar  ainthaam  muththiraiyai  udaiththapoathu,  theavavasanaththinimiththamum  thaangga'l  koduththa  saadchiyinimiththamum  kollappattavarga'ludaiya  aaththumaakka'laip  balipeedaththinkeezhea  ka'ndean.  (ve’lippaduththina  viseasham  6:9)

அவர்கள்:  பரிசுத்தமும்  சத்தியமுமுள்ள  ஆண்டவரே,  தேவரீர்  பூமியின்மேல்  குடியிருக்கிறவர்களிடத்தில்  எங்கள்  இரத்தத்தைக்குறித்து  எதுவரைக்கும்  நியாயத்தீர்ப்புச்செய்யாமலும்  பழிவாங்காமலும்  இருப்பீர்  என்று  மகா  சத்தமிட்டுக்  கூப்பிட்டார்கள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  6:10)

avarga'l:  parisuththamum  saththiyamumu'l'la  aa'ndavarea,  theavareer  boomiyinmeal  kudiyirukki’ravarga'lidaththil  engga'l  iraththaththaikku’riththu  ethuvaraikkum  niyaayaththeerppuchseyyaamalum  pazhivaanggaamalum  iruppeer  en’ru  mahaa  saththamittuk  kooppittaarga'l.  (ve’lippaduththina  viseasham  6:10)

அப்பொழுது  அவர்கள்  ஒவ்வொருவருக்கும்  வெள்ளை  அங்கிகள்  கொடுக்கப்பட்டது;  அன்றியும்,  அவர்கள்  தங்களைப்போலக்  கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய  தங்கள்  உடன்பணிவிடைக்காரரும்  தங்கள்  சகோதரருமானவர்களின்  தொகை  நிறைவாகுமளவும்  இன்னுங்கொஞ்சக்காலம்  இளைப்பாறவேண்டும்  என்று  அவர்களுக்குச்  சொல்லப்பட்டது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  6:11)

appozhuthu  avarga'l  ovvoruvarukkum  ve'l'lai  anggiga'l  kodukkappattathu;  an’riyum,  avarga'l  thangga'laippoalak  kolaiseyyappadappoagi’ravarga'laagiya  thangga'l  udanpa'nividaikkaararum  thangga'l  sagoathararumaanavarga'lin  thogai  ni’raivaaguma'lavum  innungkognchakkaalam  i'laippaa’ravea'ndum  en’ru  avarga'lukkuch  sollappattathu.  (ve’lippaduththina  viseasham  6:11)

அவர்  ஆறாம்  முத்திரையை  உடைக்கக்கண்டேன்;  இதோ,  பூமி  மிகவும்  அதிர்ந்தது;  சூரியன்  கறுப்புக்  கம்பளியைப்போலக்  கறுத்தது;  சந்திரன்  இரத்தம்  போலாயிற்று.  (வெளிப்படுத்தின  விசேஷம்  6:12)

avar  aa’raam  muththiraiyai  udaikkakka'ndean;  ithoa,  boomi  migavum  athirnthathu;  sooriyan  ka’ruppuk  kamba'liyaippoalak  ka’ruththathu;  santhiran  iraththam  poalaayit’ru.  (ve’lippaduththina  viseasham  6:12)

அத்திமரமானது  பெருங்காற்றினால்  அசைக்கப்படும்போது,  அதின்  காய்கள்  உதிருகிறதுபோல,  வானத்தின்  நட்சத்திரங்களும்  பூமியிலே  விழுந்தது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  6:13)

aththimaramaanathu  perungkaat’rinaal  asaikkappadumpoathu,  athin  kaayga'l  uthirugi’rathupoala,  vaanaththin  nadchaththirangga'lum  boomiyilea  vizhunthathu.  (ve’lippaduththina  viseasham  6:13)

வானமும்  சுருட்டப்பட்ட  புஸ்தகம்  போலாகி  விலகிப்போயிற்று;  மலைகள்  தீவுகள்  யாவும்  தங்கள்  இடங்களைவிட்டு  அகன்றுபோயின.  (வெளிப்படுத்தின  விசேஷம்  6:14)

vaanamum  suruttappatta  pusthagam  poalaagi  vilagippoayit’ru;  malaiga'l  theevuga'l  yaavum  thangga'l  idangga'laivittu  agan’rupoayina.  (ve’lippaduththina  viseasham  6:14)

பூமியின்  ராஜாக்களும்,  பெரியோர்களும்,  ஐசுவரியவான்களும்,  சேனைத்தலைவர்களும்,  பலவான்களும்,  அடிமைகள்  யாவரும்,  சுயாதீனர்  யாவரும்,  பர்வதங்களின்  குகைகளிலும்  கன்மலைகளிலும்  ஒளித்துக்கொண்டு,  (வெளிப்படுத்தின  விசேஷம்  6:15)

boomiyin  raajaakka'lum,  periyoarga'lum,  aisuvariyavaanga'lum,  seanaiththalaivarga'lum,  balavaanga'lum,  adimaiga'l  yaavarum,  suyaatheenar  yaavarum,  parvathangga'lin  kugaiga'lilum  kanmalaiga'lilum  o'liththukko'ndu,  (ve’lippaduththina  viseasham  6:15)

பர்வதங்களையும்  கன்மலைகளையும்  நோக்கி:  நீங்கள்  எங்கள்மேல்  விழுந்து,  சிங்காசனத்தின்மேல்  வீற்றிருக்கிறவருடைய  முகத்திற்கும்,  ஆட்டுக்குட்டியானவருடைய  கோபத்திற்கும்  எங்களை  மறைத்துக்கொள்ளுங்கள்;  (வெளிப்படுத்தின  விசேஷம்  6:16)

parvathangga'laiyum  kanmalaiga'laiyum  noakki:  neengga'l  engga'lmeal  vizhunthu,  singgaasanaththinmeal  veet’rirukki’ravarudaiya  mugaththi’rkum,  aattukkuttiyaanavarudaiya  koabaththi’rkum  engga'lai  ma’raiththukko'l'lungga'l;  (ve’lippaduththina  viseasham  6:16)

அவருடைய  கோபாக்கினையின்  மகாநாள்  வந்துவிட்டது,  யார்  நிலைநிற்கக்கூடும்  என்றார்கள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  6:17)

avarudaiya  koabaakkinaiyin  mahaanaa'l  vanthuvittathu,  yaar  nilaini’rkakkoodum  en’raarga'l.  (ve’lippaduththina  viseasham  6:17)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!