Thursday, June 16, 2016

Ve’lippaduththina Viseasham 5 | வெளிப்படுத்தின விசேஷம் 5 | Revelation 5

அன்றியும்,  உள்ளும்  புறம்பும்  எழுதப்பட்டு,  ஏழு  முத்திரைகளால்  முத்திரிக்கப்பட்டிருந்த  ஒரு  புஸ்தகத்தைச்  சிங்காசனத்தின்மேல்  வீற்றிருக்கிறவருடைய  வலதுகரத்திலே  கண்டேன்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  5:1)

an’riyum,  u'l'lum  pu’rambum  ezhuthappattu,  eazhu  muththiraiga'laal  muththirikkappattiruntha  oru  pusthagaththaich  singgaasanaththinmeal  veet’rirukki’ravarudaiya  valathukaraththilea  ka'ndean.  (ve'lippaduththina  viseasham  5:1)

புஸ்தகத்தைத்  திறக்கவும்  அதின்  முத்திரைகளை  உடைக்கவும்  பாத்திரவான்  யார்  என்று  மிகுந்த  சத்தமிட்டுக்  கூறுகிற  பலமுள்ள  ஒரு  தூதனையுங்  கண்டேன்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  5:2)

pusthagaththaith  thi’rakkavum  athin  muththiraiga'lai  udaikkavum  paaththiravaan  yaar  en’ru  miguntha  saththamittuk  koo’rugi’ra  balamu'l'la  oru  thoothanaiyung  ka'ndean.  (ve’lippaduththina  viseasham  5:2)

வானத்திலாவது,  பூமியிலாவது,  பூமியின்கீழாவது,  ஒருவனும்  அந்தப்  புஸ்தகத்தைத்  திறக்கவும்,  அதைப்  பார்க்கவும்  கூடாதிருந்தது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  5:3)

vaanaththilaavathu,  boomiyilaavathu,  boomiyinkeezhaavathu,  oruvanum  anthap  pusthagaththaith  thi’rakkavum,  athaip  paarkkavum  koodaathirunthathu.  (ve’lippaduththina  viseasham  5:3)

ஒருவனும்  அந்தப்  புஸ்தகத்தைத்  திறந்து  வாசிக்கவும்  அதைப்  பார்க்கவும்  பாத்திரவானாகக்  காணப்படாததினால்  நான்  மிகவும்  அழுதேன்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  5:4)

oruvanum  anthap  pusthagaththaith  thi’ranthu  vaasikkavum  athaip  paarkkavum  paaththiravaanaagak  kaa'nappadaathathinaal  naan  migavum  azhuthean.  (ve’lippaduththina  viseasham  5:4)

அப்பொழுது  மூப்பர்களில்  ஒருவன்  என்னை  நோக்கி:  நீ  அழவேண்டாம்;  இதோ,  யூதா  கோத்திரத்துச்  சிங்கமும்  தாவீதின்  வேருமானவர்  புஸ்தகத்தைத்  திறக்கவும்  அதின்  ஏழு  முத்திரைகளையும்  உடைக்கவும்  ஜெயங்கொண்டிருக்கிறார்  என்றான்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  5:5)

appozhuthu  moopparga'lil  oruvan  ennai  noakki:  nee  azhavea'ndaam;  ithoa,  yoothaa  koaththiraththuch  singgamum  thaaveethin  vearumaanavar  pusthagaththaith  thi’rakkavum  athin  eazhu  muththiraiga'laiyum  udaikkavum  jeyangko'ndirukki’raar  en’raan.  (ve’lippaduththina  viseasham  5:5)

அப்பொழுது,  இதோ,  அடிக்கப்பட்ட  வண்ணமாயிருக்கிற  ஒரு  ஆட்டுக்குட்டி  சிங்காசனத்திற்கும்,  நான்கு  ஜீவன்களுக்கும்,  மூப்பர்களுக்கும்  மத்தியிலே  நிற்கக்கண்டேன்;  அது  ஏழு  கொம்புகளையும்  ஏழு  கண்களையும்  உடையதாயிருந்தது;  அந்தக்  கண்கள்  பூமியெங்கும்  அனுப்பப்படுகிற  தேவனுடைய  ஏழு  ஆவிகளேயாம்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  5:6)

appozhuthu,  ithoa,  adikkappatta  va'n'namaayirukki’ra  oru  aattukkutti  singgaasanaththi’rkum,  naangu  jeevanga'lukkum,  moopparga'lukkum  maththiyilea  ni’rkakka'ndean;  athu  eazhu  kombuga'laiyum  eazhu  ka'nga'laiyum  udaiyathaayirunthathu;  anthak  ka'nga'l  boomiyenggum  anuppappadugi’ra  theavanudaiya  eazhu  aaviga'leayaam.  (ve’lippaduththina  viseasham  5:6)

அந்த  ஆட்டுக்குட்டியானவர்  வந்து,  சிங்காசனத்தின்மேல்  உட்கார்ந்தவருடைய  வலதுகரத்திலிருந்த  புஸ்தகத்தை  வாங்கினார்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  5:7)

antha  aattukkuttiyaanavar  vanthu,  singgaasanaththinmeal  udkaarnthavarudaiya  valathukaraththiliruntha  pusthagaththai  vaangginaar.  (ve’lippaduththina  viseasham  5:7)

அந்தப்  புஸ்தகத்தை  அவர்  வாங்கினபோது,  அந்த  நான்கு  ஜீவன்களும்,  இருபத்துநான்கு  மூப்பர்களும்  தங்கள்  தங்கள்  சுரமண்டலங்களையும்,  பரிசுத்தவான்களுடைய  ஜெபங்களாகிய  தூபவர்க்கத்தால்  நிறைந்த  பொற்கலசங்களையும்  பிடித்துக்கொண்டு,  ஆட்டுக்குட்டியானவருக்கு  முன்பாக  வணக்கமாய்  விழுந்து:  (வெளிப்படுத்தின  விசேஷம்  5:8)

anthap  pusthagaththai  avar  vaangginapoathu,  antha  naangu  jeevanga'lum,  irubaththunaangu  moopparga'lum  thangga'l  thangga'l  surama'ndalangga'laiyum,  parisuththavaanga'ludaiya  jebangga'laagiya  thoobavarkkaththaal  ni’raintha  po’rkalasangga'laiyum  pidiththukko'ndu,  aattukkuttiyaanavarukku  munbaaga  va'nakkamaay  vizhunthu:  (ve’lippaduththina  viseasham  5:8)

தேவரீர்  புஸ்தகத்தை  வாங்கவும்  அதின்  முத்திரைகளை  உடைக்கவும்  பாத்திரராயிருக்கிறீர்;  ஏனெனில்  நீர்  அடிக்கப்பட்டு,  சகல  கோத்திரங்களிலும்  பாஷைக்காரரிலும்  ஜனங்களிலும்  ஜாதிகளிலுமிருந்து  எங்களைத்  தேவனுக்கென்று  உம்முடைய  இரத்தத்தினாலே  மீட்டுக்கொண்டு,  (வெளிப்படுத்தின  விசேஷம்  5:9)

theavareer  pusthagaththai  vaanggavum  athin  muththiraiga'lai  udaikkavum  paaththiraraayirukki’reer;  eanenil  neer  adikkappattu,  sagala  koaththirangga'lilum  baashaikkaararilum  janangga'lilum  jaathiga'lilumirunthu  engga'laith  theavanukken’ru  ummudaiya  iraththaththinaalea  meettukko'ndu,  (ve’lippaduththina  viseasham  5:9)

எங்கள்  தேவனுக்குமுன்பாக  எங்களை  ராஜாக்களும்  ஆசாரியர்களுமாக்கினீர்;  நாங்கள்  பூமியிலே  அரசாளுவோம்  என்று  புதிய  பாட்டைப்  பாடினார்கள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  5:10)

engga'l  theavanukkumunbaaga  engga'lai  raajaakka'lum  aasaariyarga'lumaakkineer;  naangga'l  boomiyilea  arasaa'luvoam  en’ru  puthiya  paattaip  paadinaarga'l.  (ve’lippaduththina  viseasham  5:10)

பின்னும்  நான்  பார்த்தபோது,  சிங்காசனத்தையும்  ஜீவன்களையும்  மூப்பர்களையும்  சூழ்ந்திருந்த  அநேக  தூதர்களுடைய  சத்தத்தைக்  கேட்டேன்;  அவர்களுடைய  இலக்கம்  பதினாயிரம்  பதினாயிரமாகவும்,  ஆயிரமாயிரமாகவுமிருந்தது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  5:11)

pinnum  naan  paarththapoathu,  singgaasanaththaiyum  jeevanga'laiyum  moopparga'laiyum  soozhnthiruntha  aneaga  thootharga'ludaiya  saththaththaik  keattean;  avarga'ludaiya  ilakkam  pathinaayiram  pathinaayiramaagavum,  aayiramaayiramaagavumirunthathu.  (ve’lippaduththina  viseasham  5:11)

அவர்களும்  மகா  சத்தமிட்டு:  அடிக்கப்பட்ட  ஆட்டுக்குட்டியானவர்  வல்லமையையும்  ஐசுவரியத்தையும்  ஞானத்தையும்  பெலத்தையும்  கனத்தையும்  மகிமையையும்  ஸ்தோத்திரத்தையும்  பெற்றுக்கொள்ளப்  பாத்திரராயிருக்கிறார்  என்று  சொன்னார்கள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  5:12)

avarga'lum  mahaa  saththamittu:  adikkappatta  aattukkuttiyaanavar  vallamaiyaiyum  aisuvariyaththaiyum  gnaanaththaiyum  belaththaiyum  kanaththaiyum  magimaiyaiyum  sthoaththiraththaiyum  pet’rukko'l'lap  paaththiraraayirukki’raar  en’ru  sonnaarga'l.  (ve’lippaduththina  viseasham  5:12)

அப்பொழுது,  வானத்திலும்  பூமியிலும்  பூமியின்கீழுமிருக்கிற  சிருஷ்டிகள்  யாவும்,  சமுத்திரத்திலுள்ளவைகளும்,  அவற்றுளடங்கிய  வஸ்துக்கள்  யாவும்:  சிங்காசனத்தின்மேல்  வீற்றிருக்கிறவருக்கும்  ஆட்டுக்குட்டியானவருக்கும்  ஸ்தோத்திரமும்  கனமும்  மகிமையும்  வல்லமையும்  சதாகாலங்களிலும்  உண்டாவதாக  என்று  சொல்லக்கேட்டேன்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  5:13)

appozhuthu,  vaanaththilum  boomiyilum  boomiyinkeezhumirukki’ra  sirushdiga'l  yaavum,  samuththiraththilu'l'lavaiga'lum,  avat’ru'ladanggiya  vasthukka'l  yaavum:  singgaasanaththinmeal  veet’rirukki’ravarukkum  aattukkuttiyaanavarukkum  sthoaththiramum  kanamum  magimaiyum  vallamaiyum  sathaakaalangga'lilum  u'ndaavathaaga  en’ru  sollakkeattean.  (ve’lippaduththina  viseasham  5:13)

அதற்கு  நான்கு  ஜீவன்களும்:  ஆமென்  என்று  சொல்லின.  இருபத்துநான்கு  மூப்பர்களும்  வணக்கமாய்  விழுந்து  சதாகாலங்களிலும்  உயிரோடிருக்கிறவரைத்  தொழுதுகொண்டார்கள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  5:14)

atha’rku  naangu  jeevanga'lum:  aamen  en’ru  sollina.  irubaththunaangu  moopparga'lum  va'nakkamaay  vizhunthu  sathaakaalangga'lilum  uyiroadirukki’ravaraith  thozhuthuko'ndaarga'l.  (ve’lippaduththina  viseasham  5:14)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!