Thursday, June 16, 2016

Ve’lippaduththina Viseasham 4 | வெளிப்படுத்தின விசேஷம் 4 | Revelation 4

இவைகளுக்குப்பின்பு,  இதோ,  பரலோகத்தில்  திறக்கப்பட்டிருந்த  ஒரு  வாசலைக்  கண்டேன்.  முன்னே  எக்காளசத்தம்போல  என்னுடனே  பேச  நான்  கேட்டிருந்த  சத்தமானது:  இங்கே  ஏறிவா,  இவைகளுக்குப்பின்பு  சம்பவிக்கவேண்டியவைகளை  உனக்குக்  காண்பிப்பேன்  என்று  விளம்பினது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  4:1)

ivaiga'lukkuppinbu,  ithoa,  paraloagaththil  thi’rakkappattiruntha  oru  vaasalaik  ka'ndean.  munnea  ekkaa'lasaththampoala  ennudanea  peasa  naan  keattiruntha  saththamaanathu:  inggea  ea’rivaa,  ivaiga'lukkuppinbu  sambavikkavea'ndiyavaiga'lai  unakkuk  kaa'nbippean  en’ru  vi'lambinathu.  (ve’lippaduththina  viseasham  4:1)

உடனே  ஆவிக்குள்ளானேன்;  அப்பொழுது,  இதோ,  வானத்தில்  ஒரு  சிங்காசனம்  வைக்கப்பட்டிருந்தது,  அந்தச்  சிங்காசனத்தின்மேல்  ஒருவர்  வீற்றிருந்தார்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  4:2)

udanea  aavikku'l'laanean;  appozhuthu,  ithoa,  vaanaththil  oru  singgaasanam  vaikkappattirunthathu,  anthach  singgaasanaththinmeal  oruvar  veet’rirunthaar.  (ve’lippaduththina  viseasham  4:2)

வீற்றிருந்தவர்,  பார்வைக்கு  வச்சிரக்கல்லுக்கும்  பதுமராகத்துக்கும்  ஒப்பாயிருந்தார்;  அந்தச்  சிங்காசனத்தைச்சுற்றி  ஒரு  வானவில்லிருந்தது;  அது  பார்வைக்கு  மரகதம்போல்  தோன்றிற்று.  (வெளிப்படுத்தின  விசேஷம்  4:3)

veet’rirunthavar,  paarvaikku  vachchirakkallukkum  pathumaraagaththukkum  oppaayirunthaar;  anthach  singgaasanaththaichsut’ri  oru  vaanavillirunthathu;  athu  paarvaikku  maragathampoal  thoan’rit’ru.  (ve’lippaduththina  viseasham  4:3)

அந்தச்  சிங்காசனத்தைச்  சூழ  இருபத்துநான்கு  சிங்காசனங்களிருந்தன;  இருபத்துநான்கு  மூப்பர்கள்  வெண்வஸ்திரந்தரித்து,  தங்கள்  சிரசுகளில்  பொன்முடி  சூடி,  அந்தச்  சிங்காசனங்களின்மேல்  உட்கார்ந்திருக்கக்கண்டேன்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  4:4)

anthach  singgaasanaththaich  soozha  irubaththunaangu  singgaasanangga'lirunthana;  irubaththunaangu  moopparga'l  ve'nvasthiranthariththu,  thangga'l  sirasuga'lil  ponmudi  soodi,  anthach  singgaasanangga'linmeal  udkaarnthirukkakka'ndean.  (ve’lippaduththina  viseasham  4:4)

அந்தச்  சிங்காசனத்திலிருந்து  மின்னல்களும்  இடிமுழக்கங்களும்  சத்தங்களும்  புறப்பட்டன;  தேவனுடைய  ஏழு  ஆவிகளாகிய  ஏழு  அக்கினி  தீபங்கள்  சிங்காசனத்திற்கு  முன்பாக  எரிந்துகொண்டிருந்தன.  (வெளிப்படுத்தின  விசேஷம்  4:5)

anthach  singgaasanaththilirunthu  minnalga'lum  idimuzhakkangga'lum  saththangga'lum  pu’rappattana;  theavanudaiya  eazhu  aaviga'laagiya  eazhu  akkini  theebangga'l  singgaasanaththi’rku  munbaaga  erinthuko'ndirunthana.  (ve’lippaduththina  viseasham  4:5)

அந்தச்  சிங்காசனத்திற்கு  முன்பாகப்  பளிங்குக்கொப்பான  கண்ணாடிக்கடலிருந்தது;  அந்தச்  சிங்காசனத்தின்  மத்தியிலும்  அந்தச்  சிங்காசனத்தைச்  சுற்றிலும்  நான்கு  ஜீவன்களிருந்தன,  அவைகள்  முன்புறத்திலும்  பின்புறத்திலும்  கண்களால்  நிறைந்திருந்தன.  (வெளிப்படுத்தின  விசேஷம்  4:6)

anthach  singgaasanaththi’rku  munbaagap  pa'linggukkoppaana  ka'n'naadikkadalirunthathu;  anthach  singgaasanaththin  maththiyilum  anthach  singgaasanaththaich  sut’rilum  naangu  jeevanga'lirunthana,  avaiga'l  munpu’raththilum  pinpu’raththilum  ka'nga'laal  ni’rainthirunthana.  (ve’lippaduththina  viseasham  4:6)

முதலாம்  ஜீவன்  சிங்கத்திற்கொப்பாகவும்,  இரண்டாம்  ஜீவன்  காளைக்கொப்பாகவும்,  மூன்றாம்  ஜீவன்  மனுஷமுகம்  போன்ற  முகமுள்ளதாகவும்,  நான்காம்  ஜீவன்  பறக்கிற  கழுகுக்கு  ஒப்பாகவுமிருந்தன.  (வெளிப்படுத்தின  விசேஷம்  4:7)

muthalaam  jeevan  singgaththi’rkoppaagavum,  ira'ndaam  jeevan  kaa'laikkoppaagavum,  moon’raam  jeevan  manushamugam  poan’ra  mugamu'l'lathaagavum,  naangaam  jeevan  pa’rakki’ra  kazhugukku  oppaagavumirunthana.  (ve’lippaduththina  viseasham  4:7)

அந்த  நான்கு  ஜீவன்களிலும்  ஒவ்வொன்று  அவ்வாறு  சிறகுகளுள்ளவைகளும்,  சுற்றிலும்  உள்ளேயும்  கண்களால்  நிறைந்தவைகளுமாயிருந்தன.  அவைகள்:  இருந்தவரும்  இருக்கிறவரும்  வருகிறவருமாகிய  சர்வவல்லமையுள்ள  தேவனாகிய  கர்த்தர்  பரிசுத்தர்  பரிசுத்தர்  பரிசுத்தர்  என்று  இரவும்  பகலும்  ஓய்வில்லாமல்  சொல்லிக்கொண்டிருந்தன.  (வெளிப்படுத்தின  விசேஷம்  4:8)

antha  naangu  jeevanga'lilum  ovvon’ru  avvaa’ru  si’raguga'lu'l'lavaiga'lum,  sut’rilum  u'l'leayum  ka'nga'laal  ni’rainthavaiga'lumaayirunthana.  avaiga'l:  irunthavarum  irukki’ravarum  varugi’ravarumaagiya  sarvavallamaiyu'l'la  theavanaagiya  karththar  parisuththar  parisuththar  parisuththar  en’ru  iravum  pagalum  oayvillaamal  sollikko'ndirunthana.  (ve’lippaduththina  viseasham  4:8)

மேலும்,  சிங்காசனத்தின்மேல்  வீற்றிருந்து,  சதாகாலங்களிலும்  உயிரோடிருக்கிறவருக்கு  அந்த  ஜீவன்கள்,  மகிமையையும்  கனத்தையும்  ஸ்தோத்திரத்தையும்  செலுத்தும்போது,  (வெளிப்படுத்தின  விசேஷம்  4:9)

mealum,  singgaasanaththinmeal  veet’rirunthu,  sathaakaalangga'lilum  uyiroadirukki’ravarukku  antha  jeevanga'l,  magimaiyaiyum  kanaththaiyum  sthoaththiraththaiyum  seluththumpoathu,  (ve’lippaduththina  viseasham  4:9)

இருபத்துநான்கு  மூப்பர்களும்  சிங்காசனத்தின்மேல்  வீற்றிருக்கிறவருக்கு  முன்பாக  வணக்கமாய்  விழுந்து,  சதாகாலங்களிலும்  உயிரோடிருக்கிறவரைத்  தொழுதுகொண்டு,  தங்கள்  கிரீடங்களைச்  சிங்காசனத்திற்குமுன்பாக  வைத்து:  (வெளிப்படுத்தின  விசேஷம்  4:10)

irubaththunaangu  moopparga'lum  singgaasanaththinmeal  veet’rirukki’ravarukku  munbaaga  va'nakkamaay  vizhunthu,  sathaakaalangga'lilum  uyiroadirukki’ravaraith  thozhuthuko'ndu,  thangga'l  kireedangga'laich  singgaasanaththi’rkumunbaaga  vaiththu:  (ve’lippaduththina  viseasham  4:10)

கர்த்தாவே,  தேவரீர்,  மகிமையையும்  கனத்தையும்  வல்லமையையும்  பெற்றுக்கொள்ளுகிறதற்குப்  பாத்திரராயிருக்கிறீர்;  நீரே  சகலத்தையும்  சிருஷ்டித்தீர்,  உம்முடைய  சித்தத்தினாலே  அவைகள்  உண்டாயிருக்கிறவைகளும்  சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது  என்றார்கள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  4:11)

karththaavea,  theavareer,  magimaiyaiyum  kanaththaiyum  vallamaiyaiyum  pet’rukko'l'lugi’ratha’rkup  paaththiraraayirukki’reer;  neerea  sagalaththaiyum  sirushdiththeer,  ummudaiya  siththaththinaalea  avaiga'l  u'ndaayirukki’ravaiga'lum  sirushdikkappattavaiga'lumaayirukki’rathu  en’raarga'l.  (ve’lippaduththina  viseasham  4:11)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!