Thursday, June 16, 2016

Ve’lippaduththina Viseasham 21 | வெளிப்படுத்தின விசேஷம் 21 | Revelation 21

பின்பு,  நான்  புதிய  வானத்தையும்  புதிய  பூமியையும்  கண்டேன்;  முந்தின  வானமும்  முந்தின  பூமியும்  ஒழிந்துபோயின;  சமுத்திரமும்  இல்லாமற்போயிற்று.  (வெளிப்படுத்தின  விசேஷம்  21:1)

pinbu,  naan  puthiya  vaanaththaiyum  puthiya  boomiyaiyum  ka'ndean;  munthina  vaanamum  munthina  boomiyum  ozhinthupoayina;  samuththiramum  illaama’rpoayit’ru.  (ve’lippaduththina  viseasham  21:1)

யோவானாகிய  நான்,  புதிய  எருசலேமாகிய  பரிசுத்த  நகரத்தைத்  தேவனிடத்தினின்று  பரலோகத்தைவிட்டு  இறங்கி  வரக்கண்டேன்;  அது  தன்  புருஷனுக்காக  அலங்கரிக்கப்பட்ட  மணவாட்டியைப்போல  ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  21:2)

yoavaanaagiya  naan,  puthiya  erusaleamaagiya  parisuththa  nagaraththaith  theavanidaththinin’ru  paraloagaththaivittu  i’ranggi  varakka'ndean;  athu  than  purushanukkaaga  alanggarikkappatta  ma'navaattiyaippoala  aayaththamaakkappattirunthathu.  (ve’lippaduththina  viseasham  21:2)

மேலும்,  பரலோகத்திலிருந்து  உண்டான  ஒரு  பெருஞ்சத்தத்தைக்  கேட்டேன்;  அது:  இதோ,  மனுஷர்களிடத்திலே  தேவனுடைய  வாசஸ்தலமிருக்கிறது,  அவர்களிடத்திலே  அவர்  வாசமாயிருப்பார்;  அவர்களும்  அவருடைய  ஜனங்களாயிருப்பார்கள்,  தேவன்தாமே  அவர்களோடேகூட  இருந்து  அவர்களுடைய  தேவனாயிருப்பார்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  21:3)

mealum,  paraloagaththilirunthu  u'ndaana  oru  perugnsaththaththaik  keattean;  athu:  ithoa,  manusharga'lidaththilea  theavanudaiya  vaasasthalamirukki’rathu,  avarga'lidaththilea  avar  vaasamaayiruppaar;  avarga'lum  avarudaiya  janangga'laayiruppaarga'l,  theavanthaamea  avarga'loadeakooda  irunthu  avarga'ludaiya  theavanaayiruppaar.  (ve’lippaduththina  viseasham  21:3)

அவர்களுடைய  கண்ணீர்  யாவையும்  தேவன்  துடைப்பார்;  இனி  மரணமுமில்லை,  துக்கமுமில்லை,  அலறுதலுமில்லை,  வருத்தமுமில்லை;  முந்தினவைகள்  ஒழிந்துபோயின  என்று  விளம்பினது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  21:4)

avarga'ludaiya  ka'n'neer  yaavaiyum  theavan  thudaippaar;  ini  mara'namumillai,  thukkamumillai,  ala’ruthalumillai,  varuththamumillai;  munthinavaiga'l  ozhinthupoayina  en’ru  vi'lambinathu.  (ve’lippaduththina  viseasham  21:4)

சிங்காசனத்தின்மேல்  வீற்றிருந்தவர்:  இதோ,  நான்  சகலத்தையும்  புதிதாக்குகிறேன்  என்றார்.  பின்னும்,  அவர்:  இந்த  வசனங்கள்  சத்தியமும்  உண்மையுமானவைகள்,  இவைகளை  எழுது  என்றார்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  21:5)

singgaasanaththinmeal  veet’rirunthavar:  ithoa,  naan  sagalaththaiyum  puthithaakkugi’rean  en’raar.  pinnum,  avar:  intha  vasanangga'l  saththiyamum  u'nmaiyumaanavaiga'l,  ivaiga'lai  ezhuthu  en’raar.  (ve’lippaduththina  viseasham  21:5)

அன்றியும்,  அவர்  என்னை  நோக்கி:  ஆயிற்று,  நான்  அல்பாவும்  ஓமெகாவும்,  ஆதியும்  அந்தமுமாயிருக்கிறேன்.  தாகமாயிருக்கிறவனுக்கு  நான்  ஜீவத்தண்ணீரூற்றில்  இலவசமாய்க்  கொடுப்பேன்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  21:6)

an’riyum,  avar  ennai  noakki:  aayit’ru,  naan  alpaavum  oamegaavum,  aathiyum  anthamumaayirukki’rean.  thaagamaayirukki’ravanukku  naan  jeevaththa'n'neeroot’ril  ilavasamaayk  koduppean.  (ve’lippaduththina  viseasham  21:6)

ஜெயங்கொள்ளுகிறவன்  எல்லாவற்றையும்  சுதந்தரித்துக்கொள்ளுவான்;  நான்  அவன்  தேவனாயிருப்பேன்,  அவன்  என்  குமாரனாயிருப்பான்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  21:7)

jeyangko'l'lugi’ravan  ellaavat’raiyum  suthanthariththukko'l'luvaan;  naan  avan  theavanaayiruppean,  avan  en  kumaaranaayiruppaan.  (ve’lippaduththina  viseasham  21:7)

பயப்படுகிறவர்களும்,  அவிசுவாசிகளும்,  அருவருப்பானவர்களும்,  கொலைபாதகரும்,  விபசாரக்காரரும்,  சூனியக்காரரும்,  விக்கிரகாராதனைக்காரரும்,  பொய்யர்  அனைவரும்  இரண்டாம்  மரணமாகிய  அக்கினியும்  கந்தகமும்  எரிகிற  கடலிலே  பங்கடைவார்கள்  என்றார்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  21:8)

bayappadugi’ravarga'lum,  avisuvaasiga'lum,  aruvaruppaanavarga'lum,  kolaipaathagarum,  vibasaarakkaararum,  sooniyakkaararum,  vikkiragaaraathanaikkaararum,  poyyar  anaivarum  ira'ndaam  mara'namaagiya  akkiniyum  kanthagamum  erigi’ra  kadalilea  panggadaivaarga'l  en’raar.  (ve’lippaduththina  viseasham  21:8)

பின்பு,  கடைசியான  ஏழு  வாதைகளால்  நிறைந்த  ஏழு  கலசங்களையுடைய  அந்த  ஏழு  தூதரில்  ஒருவன்  என்னிடத்தில்  வந்து:  நீ  இங்கே  வா,  ஆட்டுக்குட்டியானவருடைய  மனைவியாகிய  மணவாட்டியை  உனக்குக்  காண்பிக்கிறேன்  என்று  சொல்லி,  (வெளிப்படுத்தின  விசேஷம்  21:9)

pinbu,  kadaisiyaana  eazhu  vaathaiga'laal  ni’raintha  eazhu  kalasangga'laiyudaiya  antha  eazhu  thootharil  oruvan  ennidaththil  vanthu:  nee  inggea  vaa,  aattukkuttiyaanavarudaiya  manaiviyaagiya  ma'navaattiyai  unakkuk  kaa'nbikki’rean  en’ru  solli,  (ve’lippaduththina  viseasham  21:9)

பெரிதும்  உயரமுமான  ஒரு  பர்வதத்தின்மேல்  என்னை  ஆவியில்  கொண்டுபோய்,  தேவனுடைய  மகிமையை  அடைந்த  எருசலேமாகிய  பரிசுத்தநகரம்  பரலோகத்தைவிட்டுத்  தேவனிடத்திலிருந்து  இறங்கிவருகிறதை  எனக்குக்  காண்பித்தான்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  21:10)

perithum  uyaramumaana  oru  parvathaththinmeal  ennai  aaviyil  ko'ndupoay,  theavanudaiya  magimaiyai  adaintha  erusaleamaagiya  parisuththanagaram  paraloagaththaivittuth  theavanidaththilirunthu  i’ranggivarugi’rathai  enakkuk  kaa'nbiththaan.  (ve’lippaduththina  viseasham  21:10)

அதின்  பிரகாசம்  மிகவும்  விலையுயர்ந்த  இரத்தினக்கல்லைப்போலவும்,  பளிங்கினொளியுள்ள  வச்சிரக்கல்லைப்போலவும்  இருந்தது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  21:11)

athin  piragaasam  migavum  vilaiyuyarntha  iraththinakkallaippoalavum,  pa'linggino'liyu'l'la  vachchirakkallaippoalavum  irunthathu.  (ve’lippaduththina  viseasham  21:11)

அதற்குப்  பெரிதும்  உயரமுமான  மதிலும்,  கிழக்கே  மூன்று  வாசல்கள்,  வடக்கே  மூன்று  வாசல்கள்,  தெற்கே  மூன்று  வாசல்கள்,  மேற்கே  மூன்று  வாசல்கள்  ஆகப்  பன்னிரண்டு  வாசல்களும்  இருந்தன.  (வெளிப்படுத்தின  விசேஷம்  21:12)

atha’rkup  perithum  uyaramumaana  mathilum,  kizhakkea  moon’ru  vaasalga'l,  vadakkea  moon’ru  vaasalga'l,  the’rkea  moon’ru  vaasalga'l,  mea’rkea  moon’ru  vaasalga'l  aagap  pannira'ndu  vaasalga'lum  irunthana.  (ve’lippaduththina  viseasham  21:12)

வாசல்களின்  அருகே  பன்னிரண்டு  தூதர்களிருந்தார்கள்;  அந்த  வாசல்களின்மேல்  இஸ்ரவேல்  சந்ததியாராகிய  பன்னிரண்டு  கோத்திரத்தாருடைய  நாமங்களும்  எழுதப்பட்டிருந்தன.  (வெளிப்படுத்தின  விசேஷம்  21:13)

vaasalga'lin  arugea  pannira'ndu  thootharga'lirunthaarga'l;  antha  vaasalga'linmeal  israveal  santhathiyaaraagiya  pannira'ndu  koaththiraththaarudaiya  naamangga'lum  ezhuthappattirunthana.  (ve’lippaduththina  viseasham  21:13)

நகரத்தின்  மதிலுக்குப்  பன்னிரண்டு  அஸ்திபாரக்  கற்களிருந்தன;  அவைகள்மேல்  ஆட்டுக்குட்டியானவருடைய  பன்னிரண்டு  அப்போஸ்தலரின்  பன்னிரண்டு  நாமங்களும்  பதிந்திருந்தன.  (வெளிப்படுத்தின  விசேஷம்  21:14)

nagaraththin  mathilukkup  pannira'ndu  asthibaarak  ka’rka'lirunthana;  avaiga'lmeal  aattukkuttiyaanavarudaiya  pannira'ndu  appoasthalarin  pannira'ndu  naamangga'lum  pathinthirunthana.  (ve’lippaduththina  viseasham  21:14)

என்னுடனே  பேசினவன்,  நகரத்தையும்  அதின்  வாசல்களையும்  அதின்  மதிலையும்  அளக்கிறதற்கு  ஒரு  பொற்கோலைப்  பிடித்திருந்தான்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  21:15)

ennudanea  peasinavan,  nagaraththaiyum  athin  vaasalga'laiyum  athin  mathilaiyum  a'lakki’ratha’rku  oru  po’rkoalaip  pidiththirunthaan.  (ve’lippaduththina  viseasham  21:15)

அந்த  நகரம்  சதுரமாயிருந்தது,  அதின்  அகலமும்  நீளமும்  சமமாயிருந்தது.  அவன்  அந்தக்  கோலினால்  நகரத்தை  அளந்தான்;  அது  பன்னீராயிரம்  ஸ்தாதி  அளவாயிருந்தது;  அதின்  நீளமும்  அகலமும்  உயரமும்  சமமாயிருந்தது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  21:16)

antha  nagaram  sathuramaayirunthathu,  athin  agalamum  nee'lamum  samamaayirunthathu.  avan  anthak  koalinaal  nagaraththai  a'lanthaan;  athu  panneeraayiram  sthaathi  a'lavaayirunthathu;  athin  nee'lamum  agalamum  uyaramum  samamaayirunthathu.  (ve’lippaduththina  viseasham  21:16)

அவன்  அதின்  மதிலை  அளந்தபோது,  அது  தூதனுடைய  அளவாகிய  மனுஷ  அளவின்படியே  நூற்றுநாற்பத்துநான்கு  முழமாயிருந்தது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  21:17)

avan  athin  mathilai  a'lanthapoathu,  athu  thoothanudaiya  a'lavaagiya  manusha  a'lavinpadiyea  noot’runaa’rpaththunaangu  muzhamaayirunthathu.  (ve’lippaduththina  viseasham  21:17)

அதின்  மதில்  வச்சிரக்கல்லால்  கட்டப்பட்டிருந்தது;  நகரம்  தெளிந்த  பளிங்குக்கு  ஒப்பான  சுத்தப்பொன்னாயிருந்தது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  21:18)

athin  mathil  vachchirakkallaal  kattappattirunthathu;  nagaram  the'lintha  pa'linggukku  oppaana  suththapponnaayirunthathu.  (ve’lippaduththina  viseasham  21:18)

நகரத்து  மதில்களின்  அஸ்திபாரங்கள்  சகலவித  இரத்தினங்களினாலும்  அலங்கரிக்கப்பட்டிருந்தன;  முதலாம்  அஸ்திபாரம்  வச்சிரக்கல்,  இரண்டாவது  இந்திரநீலம்,  மூன்றாவது  சந்திரகாந்தம்,  நான்காவது  மரகதம்,  (வெளிப்படுத்தின  விசேஷம்  21:19)

nagaraththu  mathilga'lin  asthibaarangga'l  sagalavitha  iraththinangga'linaalum  alanggarikkappattirunthana;  muthalaam  asthibaaram  vachchirakkal,  ira'ndaavathu  inthiraneelam,  moon’raavathu  santhirakaantham,  naangaavathu  maragatham,  (ve’lippaduththina  viseasham  21:19)

ஐந்தாவது  கோமேதகம்,  ஆறாவது  பதுமராகம்,  ஏழாவது  சுவர்ணரத்தினம்,  எட்டாவது  படிகப்பச்சை,  ஒன்பதாவது  புஷ்பராகம்,  பத்தாவது  வைடூரியம்,  பதினோராவது  சுநீரம்,  பன்னிரண்டாவது  சுகந்தி  இவைகளே.  (வெளிப்படுத்தின  விசேஷம்  21:20)

ainthaavathu  koameathagam,  aa’raavathu  pathumaraagam,  eazhaavathu  suvar'naraththinam,  ettaavathu  padigappachchai,  onbathaavathu  pushparaagam,  paththaavathu  vaidooriyam,  pathinoaraavathu  suneeram,  pannira'ndaavathu  suganthi  ivaiga'lea.  (ve’lippaduththina  viseasham  21:20)

பன்னிரண்டு  வாசல்களும்  பன்னிரண்டு  முத்துக்களாயிருந்தன;  ஒவ்வொரு  வாசலும்  ஒவ்வொரு  முத்தாயிருந்தது.  நகரத்தின்  வீதி  தெளிவுள்ள  பளிங்குபோலச்  சுத்தப்பொன்னாயிருந்தது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  21:21)

pannira'ndu  vaasalga'lum  pannira'ndu  muththukka'laayirunthana;  ovvoru  vaasalum  ovvoru  muththaayirunthathu.  nagaraththin  veethi  the'livu'l'la  pa'linggupoalach  suththapponnaayirunthathu.  (ve’lippaduththina  viseasham  21:21)

அதிலே  தேவாலயத்தை  நான்  காணவில்லை;  சர்வவல்லமையுள்ள  தேவனாகிய  கர்த்தரும்  ஆட்டுக்குட்டியானவருமே  அதற்கு  ஆலயம்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  21:22)

athilea  theavaalayaththai  naan  kaa'navillai;  sarvavallamaiyu'l'la  theavanaagiya  karththarum  aattukkuttiyaanavarumea  atha’rku  aalayam.  (ve’lippaduththina  viseasham  21:22)

நகரத்திற்கு  வெளிச்சங்கொடுக்கச்  சூரியனும்  சந்திரனும்  அதற்கு  வேண்டுவதில்லை;  தேவனுடைய  மகிமையே  அதைப்  பிரகாசிப்பித்தது,  ஆட்டுக்குட்டியானவரே  அதற்கு  விளக்கு.  (வெளிப்படுத்தின  விசேஷம்  21:23)

nagaraththi’rku  ve'lichchangkodukkach  sooriyanum  santhiranum  atha’rku  vea'nduvathillai;  theavanudaiya  magimaiyea  athaip  piragaasippiththathu,  aattukkuttiyaanavarea  atha’rku  vi'lakku.  (ve’lippaduththina  viseasham  21:23)

இரட்சிக்கப்படுகிற  ஜனங்கள்  அதின்  வெளிச்சத்திலே  நடப்பார்கள்.  பூமியின்  ராஜாக்கள்  தங்கள்  மகிமையையும்  கனத்தையும்  அதற்குள்ளே  கொண்டுவருவார்கள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  21:24)

iradchikkappadugi’ra  janangga'l  athin  ve'lichchaththilea  nadappaarga'l.  boomiyin  raajaakka'l  thangga'l  magimaiyaiyum  kanaththaiyum  atha’rku'l'lea  ko'nduvaruvaarga'l.  (ve’lippaduththina  viseasham  21:24)

அங்கே  இராக்காலம்  இல்லாதபடியால்,  அதின்  வாசல்கள்  பகலில்  அடைக்கப்படுவதே  இல்லை.  (வெளிப்படுத்தின  விசேஷம்  21:25)

anggea  iraakkaalam  illaathapadiyaal,  athin  vaasalga'l  pagalil  adaikkappaduvathea  illai.  (ve’lippaduththina  viseasham  21:25)

உலகத்தாருடைய  மகிமையையும்  கனத்தையும்  அதற்குள்ளே  கொண்டுவருவார்கள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  21:26)

ulagaththaarudaiya  magimaiyaiyum  kanaththaiyum  atha’rku'l'lea  ko'nduvaruvaarga'l.  (ve’lippaduththina  viseasham  21:26)

தீட்டுள்ளதும்  அருவருப்பையும்  பொய்யையும்  நடப்பிக்கிறதுமாகிய  ஒன்றும்  அதில்  பிரவேசிப்பதில்லை;  ஆட்டுக்குட்டியானவரின்  ஜீவபுஸ்தகத்தில்  எழுதப்பட்டவர்கள்  மாத்திரம்  அதில்  பிரவேசிப்பார்கள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  21:27)

theettu'l'lathum  aruvaruppaiyum  poyyaiyum  nadappikki’rathumaagiya  on’rum  athil  piraveasippathillai;  aattukkuttiyaanavarin  jeevapusthagaththil  ezhuthappattavarga'l  maaththiram  athil  piraveasippaarga'l.  (ve’lippaduththina  viseasham  21:27)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!