Thursday, June 16, 2016

Ve’lippaduththina Viseasham 20 | வெளிப்படுத்தின விசேஷம் 20 | Revelation 20


ஒரு  தூதன்  பாதாளத்தின்  திறவுகோலையும்  பெரிய  சங்கிலியையும்  தன்  கையிலே  பிடித்துக்கொண்டு  வானத்திலிருந்திறங்கி  வரக்கண்டேன்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  20:1)

oru  thoothan  paathaa'laththin  thi’ravukoalaiyum  periya  sanggiliyaiyum  than  kaiyilea  pidiththukko'ndu  vaanaththilirunthi’ranggi  varakka'ndean.  (ve’lippaduththina  viseasham  20:1)

பிசாசென்றும்  சாத்தானென்றும்  சொல்லப்பட்ட  பழைய  பாம்பாகிய  வலுசர்ப்பத்தை  அவன்  பிடித்து,  அதை  ஆயிரம்  வருஷமளவுங்  கட்டிவைத்து,  அந்த  ஆயிரம்  வருஷம்  நிறைவேறும்வரைக்கும்  அது  ஜனங்களை  மோசம்போக்காதபடிக்கு  அதைப்  பாதாளத்திலே  தள்ளியடைத்து,  அதின்மேல்  முத்திரைபோட்டான்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  20:2)

pisaasen’rum  saaththaanen’rum  sollappatta  pazhaiya  paambaagiya  valusarppaththai  avan  pidiththu,  athai  aayiram  varushama'lavung  kattivaiththu,  antha  aayiram  varusham  ni’raivea’rumvaraikkum  athu  janangga'lai  moasampoakkaathapadikku  athaip  paathaa'laththilea  tha'l'liyadaiththu,  athinmeal  muththiraipoattaan.  (ve’lippaduththina  viseasham  20:2)

அதற்குப்  பின்பு  அது  கொஞ்சக்காலம்  விடுதலையாகவேண்டும்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  20:3)

atha’rkup  pinbu  athu  kognchakkaalam  viduthalaiyaagavea'ndum.  (ve’lippaduththina  viseasham  20:3)

அன்றியும்,  நான்  சிங்காசனங்களைக்  கண்டேன்;  அவைகளின்மேல்  உட்கார்ந்தார்கள்;  நியாயத்தீர்ப்புக்  கொடுக்கும்படி  அவர்களுக்கு  அதிகாரம்  அளிக்கப்பட்டது.  இயேசுவைப்பற்றிய  சாட்சியினிமித்தமும்  தேவனுடைய  வசனத்தினிமித்தமும்  சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய  ஆத்துமாக்களையும்,  மிருகத்தையாவது  அதின்  சொரூபத்தையாவது  வணங்காமலும்  தங்கள்  நெற்றியிலும்  தங்கள்  கையிலும்  அதின்  முத்திரையைத்  தரித்துக்கொள்ளாமலும்  இருந்தவர்களையும்  கண்டேன்.  அவர்கள்  உயிர்த்துக்  கிறிஸ்துவுடனேகூட  ஆயிரம்  வருஷம்  அரசாண்டார்கள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  20:4)

an’riyum,  naan  singgaasanangga'laik  ka'ndean;  avaiga'linmeal  udkaarnthaarga'l;  niyaayaththeerppuk  kodukkumpadi  avarga'lukku  athigaaram  a'likkappattathu.  iyeasuvaippat’riya  saadchiyinimiththamum  theavanudaiya  vasanaththinimiththamum  sirachseathampa'n'nappattavarga'ludaiya  aaththumaakka'laiyum,  mirugaththaiyaavathu  athin  soroobaththaiyaavathu  va'nanggaamalum  thangga'l  net’riyilum  thangga'l  kaiyilum  athin  muththiraiyaith  thariththukko'l'laamalum  irunthavarga'laiyum  ka'ndean.  avarga'l  uyirththuk  ki’risthuvudaneakooda  aayiram  varusham  arasaa'ndaarga'l.  (ve’lippaduththina  viseasham  20:4)

மரணமடைந்த  மற்றவர்கள்  அந்த  ஆயிரம்  வருஷம்  முடியுமளவும்  உயிரடையவில்லை.  இதுவே  முதலாம்  உயிர்த்தெழுதல்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  20:5)

mara'namadaintha  mat’ravarga'l  antha  aayiram  varusham  mudiyuma'lavum  uyiradaiyavillai.  ithuvea  muthalaam  uyirththezhuthal.  (ve’lippaduththina  viseasham  20:5)

முதலாம்  உயிர்த்தெழுதலுக்குப்  பங்குள்ளவன்  பாக்கியவானும்  பரிசுத்தவானுமாயிருக்கிறான்;  இவர்கள்மேல்  இரண்டாம்  மரணத்திற்கு  அதிகாரமில்லை;  இவர்கள்  தேவனுக்கும்  கிறிஸ்துவுக்கும்  முன்பாக  ஆசாரியராயிருந்து,  அவரோடேகூட  ஆயிரம்  வருஷம்  அரசாளுவார்கள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  20:6)

muthalaam  uyirththezhuthalukkup  panggu'l'lavan  baakkiyavaanum  parisuththavaanumaayirukki’raan;  ivarga'lmeal  ira'ndaam  mara'naththi’rku  athigaaramillai;  ivarga'l  theavanukkum  ki’risthuvukkum  munbaaga  aasaariyaraayirunthu,  avaroadeakooda  aayiram  varusham  arasaa'luvaarga'l.  (ve’lippaduththina  viseasham  20:6)

அந்த  ஆயிரம்  வருஷம்  முடியும்போது  சாத்தான்  தன்  காவலிலிருந்து  விடுதலையாகி,  (வெளிப்படுத்தின  விசேஷம்  20:7)

antha  aayiram  varusham  mudiyumpoathu  saaththaan  than  kaavalilirunthu  viduthalaiyaagi,  (ve’lippaduththina  viseasham  20:7)

பூமியின்  நான்கு  திசைகளிலுமுள்ள  ஜாதிகளாகிய  கோகையும்  மாகோகையும்  மோசம்போக்கும்படிக்கும்,  அவர்களை  யுத்தத்திற்குக்  கூட்டிக்கொள்ளும்படிக்கும்  புறப்படுவான்;  அவர்களுடைய  தொகை  கடற்கரை  மணலத்தனையாயிருக்கும்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  20:8)

boomiyin  naangu  thisaiga'lilumu'l'la  jaathiga'laagiya  koagaiyum  maakoagaiyum  moasampoakkumpadikkum,  avarga'lai  yuththaththi’rkuk  koottikko'l'lumpadikkum  pu’rappaduvaan;  avarga'ludaiya  thogai  kada’rkarai  ma'nalaththanaiyaayirukkum.  (ve’lippaduththina  viseasham  20:8)

அவர்கள்  பூமியெங்கும்  பரம்பி,  பரிசுத்தவான்களுடைய  பாளையத்தையும்,  பிரியமான  நகரத்தையும்  வளைந்துகொண்டார்கள்;  அப்பொழுது  தேவனால்  வானத்திலிருந்து  அக்கினி  இறங்கி  அவர்களைப்  பட்சித்துப்போட்டது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  20:9)

avarga'l  boomiyenggum  parambi,  parisuththavaanga'ludaiya  paa'laiyaththaiyum,  piriyamaana  nagaraththaiyum  va'lainthuko'ndaarga'l;  appozhuthu  theavanaal  vaanaththilirunthu  akkini  i’ranggi  avarga'laip  padchiththuppoattathu.  (ve’lippaduththina  viseasham  20:9)

மேலும்  அவர்களை  மோசம்போக்கின  பிசாசானவன்,  மிருகமும்  கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற  இடமாகிய  அக்கினியும்  கந்தகமுமான  கடலிலே  தள்ளப்பட்டான்.  அவர்கள்  இரவும்  பகலும்  சதாகாலங்களிலும்  வாதிக்கப்படுவார்கள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  20:10)

mealum  avarga'lai  moasampoakkina  pisaasaanavan,  mirugamum  ka'l'laththeerkkatharisiyumirukki’ra  idamaagiya  akkiniyum  kanthagamumaana  kadalilea  tha'l'lappattaan.  avarga'l  iravum  pagalum  sathaakaalangga'lilum  vaathikkappaduvaarga'l.  (ve’lippaduththina  viseasham  20:10)

பின்பு,  நான்  பெரிய  வெள்ளைச்  சிங்காசனத்தையும்  அதின்மேல்  வீற்றிருக்கிறவரையும்  கண்டேன்;  அவருடைய  சமுகத்திலிருந்து  பூமியும்  வானமும்  அகன்றுபோயின;  அவைகளுக்கு  இடங்காணப்படவில்லை.  (வெளிப்படுத்தின  விசேஷம்  20:11)

pinbu,  naan  periya  ve'l'laich  singgaasanaththaiyum  athinmeal  veet’rirukki’ravaraiyum  ka'ndean;  avarudaiya  samugaththilirunthu  boomiyum  vaanamum  agan’rupoayina;  avaiga'lukku  idangkaa'nappadavillai.  (ve’lippaduththina  viseasham  20:11)

மரித்தோராகிய  சிறியோரையும்  பெரியோரையும்  தேவனுக்குமுன்பாக  நிற்கக்கண்டேன்;  அப்பொழுது  புஸ்தகங்கள்  திறக்கப்பட்டன;  ஜீவபுஸ்தகம்  என்னும்  வேறொரு  புஸ்தகமும்  திறக்கப்பட்டது;  அப்பொழுது  அந்தப்  புஸ்தகங்களில்  எழுதப்பட்டவைகளின்படியே  மரித்தோர்  தங்கள்  தங்கள்  கிரியைகளுக்குத்தக்கதாக  நியாயத்தீர்ப்படைந்தார்கள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  20:12)

mariththoaraagiya  si’riyoaraiyum  periyoaraiyum  theavanukkumunbaaga  ni’rkakka'ndean;  appozhuthu  pusthagangga'l  thi’rakkappattana;  jeevapusthagam  ennum  vea’roru  pusthagamum  thi’rakkappattathu;  appozhuthu  anthap  pusthagangga'lil  ezhuthappattavaiga'linpadiyea  mariththoar  thangga'l  thangga'l  kiriyaiga'lukkuththakkathaaga  niyaayaththeerppadainthaarga'l.  (ve’lippaduththina  viseasham  20:12)

சமுத்திரம்  தன்னிலுள்ள  மரித்தோரை  ஒப்புவித்தது;  மரணமும்  பாதாளமும்  தங்களிலுள்ள  மரித்தோரை  ஒப்புவித்தன.  யாவரும்  தங்கள்  தங்கள்  கிரியைகளின்படியே  நியாயத்தீர்ப்படைந்தார்கள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  20:13)

samuththiram  thannilu'l'la  mariththoarai  oppuviththathu;  mara'namum  paathaa'lamum  thangga'lilu'l'la  mariththoarai  oppuviththana.  yaavarum  thangga'l  thangga'l  kiriyaiga'linpadiyea  niyaayaththeerppadainthaarga'l.  (ve’lippaduththina  viseasham  20:13)

அப்பொழுது  மரணமும்  பாதாளமும்  அக்கினிக்கடலிலே  தள்ளப்பட்டன.  இது  இரண்டாம்  மரணம்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  20:14)

appozhuthu  mara'namum  paathaa'lamum  akkinikkadalilea  tha'l'lappattana.  ithu  ira'ndaam  mara'nam.  (ve’lippaduththina  viseasham  20:14)

ஜீவபுஸ்தகத்திலே  எழுதப்பட்டவனாகக்  காணப்படாதவனெவனோ  அவன்  அக்கினிக்கடலிலே  தள்ளப்பட்டான்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  20:15)

jeevapusthagaththilea  ezhuthappattavanaagak  kaa'nappadaathavanevanoa  avan  akkinikkadalilea  tha'l'lappattaan.  (ve’lippaduththina  viseasham  20:15)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!