Thursday, June 16, 2016

Ve’lippaduththina Viseasham 19 | வெளிப்படுத்தின விசேஷம் 19 | Revelation 19

இவைகளுக்குப்பின்பு,  பரலோகத்தில்  திரளான  ஜனக்கூட்டம்  இடுகிற  ஆரவாரத்தைக்  கேட்டேன்.  அவர்கள்:  அல்லேலூயா,  இரட்சணியமும்  மகிமையும்  கனமும்  வல்லமையும்  நம்முடைய  தேவனாகிய  கர்த்தருக்கே  உரியது;  அவருடைய  நியாயத்தீர்ப்புகள்  சத்தியமும்  நீதியுமானவைகள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  19:1)

ivaiga'lukkuppinbu,  paraloagaththil  thira'laana  janakkoottam  idugi’ra  aaravaaraththaik  keattean.  avarga'l:  allealooyaa,  iradcha'niyamum  magimaiyum  kanamum  vallamaiyum  nammudaiya  theavanaagiya  karththarukkea  uriyathu;  avarudaiya  niyaayaththeerppuga'l  saththiyamum  neethiyumaanavaiga'l.  (ve’lippaduththina  viseasham  19:1)

தன்  வேசித்தனத்தினால்  பூமியைக்  கெடுத்த  மகா  வேசிக்கு  அவர்  நியாயத்தீர்ப்புக்கொடுத்து,  தம்முடைய  ஊழியக்காரரின்  இரத்தத்திற்காக  அவளிடத்தில்  பழிவாங்கினாரே  என்றார்கள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  19:2)

than  veasiththanaththinaal  boomiyaik  keduththa  mahaa  veasikku  avar  niyaayaththeerppukkoduththu,  thammudaiya  oozhiyakkaararin  iraththaththi’rkaaga  ava'lidaththil  pazhivaangginaarea  en’raarga'l.  (ve’lippaduththina  viseasham  19:2)

மறுபடியும்  அவர்கள்:  அல்லேலூயா  என்று  சொல்லி  ஆர்ப்பரித்தார்கள்.  அவளுடைய  புகை  என்றென்றைக்கும்  எழும்புகிறது  என்றார்கள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  19:3)

ma’rupadiyum  avarga'l:  allealooyaa  en’ru  solli  aarppariththaarga'l.  ava'ludaiya  pugai  en’ren’raikkum  ezhumbugi’rathu  en’raarga'l.  (ve’lippaduththina  viseasham  19:3)

இருபத்துநான்கு  மூப்பர்களும்,  நான்கு  ஜீவன்களும்  வணக்கமாய்  விழுந்து:  ஆமென்,  அல்லேலூயா,  என்று  சொல்லி,  சிங்காசனத்தின்மேல்  வீற்றிருக்கும்  தேவனைத்  தொழுதுகொண்டார்கள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  19:4)

irubaththunaangu  moopparga'lum,  naangu  jeevanga'lum  va'nakkamaay  vizhunthu:  aamen,  allealooyaa,  en’ru  solli,  singgaasanaththinmeal  veet’rirukkum  theavanaith  thozhuthuko'ndaarga'l.  (ve’lippaduththina  viseasham  19:4)

மேலும்,  நமது  தேவனுடைய  ஊழியக்காரரே,  அவருக்குப்  பயப்படுகிற  சிறியோரும்  பெரியோருமானவர்களே,  நீங்கள்  யாவரும்  அவரைத்  துதியுங்கள்  என்று  ஒரு  சத்தம்  சிங்காசனத்திலிருந்து  பிறந்தது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  19:5)

mealum,  namathu  theavanudaiya  oozhiyakkaararea,  avarukkup  bayappadugi’ra  si’riyoarum  periyoarumaanavarga'lea,  neengga'l  yaavarum  avaraith  thuthiyungga'l  en’ru  oru  saththam  singgaasanaththilirunthu  pi’ranthathu.  (ve’lippaduththina  viseasham  19:5)

அப்பொழுது  திரளான  ஜனங்கள்  இடும்  ஆரவாரம்போலவும்,  பெருவெள்ள  இரைச்சல்போலவும்,  பலத்த  இடிமுழக்கம்போலவும்,  ஒரு  சத்தமுண்டாகி:  அல்லேலூயா,  சர்வவல்லமையுள்ள  தேவனாகிய  கர்த்தர்  ராஜ்யபாரம்பண்ணுகிறார்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  19:6)

appozhuthu  thira'laana  janangga'l  idum  aaravaarampoalavum,  peruve'l'la  iraichchalpoalavum,  balaththa  idimuzhakkampoalavum,  oru  saththamu'ndaagi:  allealooyaa,  sarvavallamaiyu'l'la  theavanaagiya  karththar  raajyabaarampa'n'nugi’raar.  (ve’lippaduththina  viseasham  19:6)

நாம்  சந்தோஷப்பட்டுக்  களிகூர்ந்து  அவருக்குத்  துதிசெலுத்தக்கடவோம்.  ஆட்டுக்குட்டியானவருடைய  கலியாணம்  வந்தது,  அவருடைய  மனைவி  தன்னை  ஆயத்தம்பண்ணினாள்  என்று  சொல்லக்  கேட்டேன்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  19:7)

naam  santhoashappattuk  ka'likoornthu  avarukkuth  thuthiseluththakkadavoam.  aattukkuttiyaanavarudaiya  kaliyaa'nam  vanthathu,  avarudaiya  manaivi  thannai  aayaththampa'n'ninaa'l  en’ru  sollak  keattean.  (ve’lippaduththina  viseasham  19:7)

சுத்தமும்  பிரகாசமுமான  மெல்லிய  வஸ்திரம்  தரித்துக்கொள்ளும்படி  அவளுக்கு  அளிக்கப்பட்டது;  அந்த  மெல்லிய  வஸ்திரம்  பரிசுத்தவான்களுடைய  நீதிகளே.  (வெளிப்படுத்தின  விசேஷம்  19:8)

suththamum  piragaasamumaana  melliya  vasthiram  thariththukko'l'lumpadi  ava'lukku  a'likkappattathu;  antha  melliya  vasthiram  parisuththavaanga'ludaiya  neethiga'lea.  (ve’lippaduththina  viseasham  19:8)

பின்னும்,  அவன்  என்னை  நோக்கி:  ஆட்டுக்குட்டியானவரின்  கலியாண  விருந்துக்கு  அழைக்கப்பட்டவர்கள்  பாக்கியவான்கள்  என்றெழுது  என்றான்.  மேலும்,  இவைகள்  தேவனுடைய  சத்தியமான  வசனங்கள்  என்று  என்னுடனே  சொன்னான்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  19:9)

pinnum,  avan  ennai  noakki:  aattukkuttiyaanavarin  kaliyaa'na  virunthukku  azhaikkappattavarga'l  baakkiyavaanga'l  en’rezhuthu  en’raan.  mealum,  ivaiga'l  theavanudaiya  saththiyamaana  vasanangga'l  en’ru  ennudanea  sonnaan.  (ve’lippaduththina  viseasham  19:9)

அப்பொழுது  அவனை  வணங்கும்படி  அவனுடைய  பாதத்தில்  விழுந்தேன்.  அவன்  என்னை  நோக்கி:  இப்படிச்  செய்யாதபடிக்குப்  பார்;  உன்னோடும்  இயேசுவைக்குறித்துச்  சாட்சியிட்ட  உன்  சகோதரரோடுங்கூட  நானும்  ஒரு  ஊழியக்காரன்;  தேவனைத்  தொழுதுகொள்.  இயேசுவைப்பற்றின  சாட்சி  தீர்க்கதரிசனத்தின்  ஆவியாயிருக்கிறது  என்றான்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  19:10)

appozhuthu  avanai  va'nanggumpadi  avanudaiya  paathaththil  vizhunthean.  avan  ennai  noakki:  ippadich  seyyaathapadikkup  paar;  unnoadum  iyeasuvaikku’riththuch  saadchiyitta  un  sagoathararoadungkooda  naanum  oru  oozhiyakkaaran;  theavanaith  thozhuthuko'l.  iyeasuvaippat’rina  saadchi  theerkkatharisanaththin  aaviyaayirukki’rathu  en’raan.  (ve’lippaduththina  viseasham  19:10)

பின்பு,  பரலோகம்  திறந்திருக்கக்  கண்டேன்;  இதோ,  ஒரு  வெள்ளைக்குதிரை  காணப்பட்டது,  அதின்மேல்  ஏறியிருந்தவர்  உண்மையும்  சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்;  அவர்  நீதியாய்  நியாயந்தீர்த்து  யுத்தம்பண்ணுகிறார்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  19:11)

pinbu,  paraloagam  thi’ranthirukkak  ka'ndean;  ithoa,  oru  ve'l'laikkuthirai  kaa'nappattathu,  athinmeal  ea’riyirunthavar  u'nmaiyum  saththiyamumu'l'lavarennappattavar;  avar  neethiyaay  niyaayantheerththu  yuththampa'n'nugi’raar.  (ve’lippaduththina  viseasham  19:11)

அவருடைய  கண்கள்  அக்கினிஜுவாலையைப்போலிருந்தன,  அவருடைய  சிரசின்மேல்  அநேக  கிரீடங்கள்  இருந்தன;  அவருக்கேயன்றி  வேறொருவருக்குந்  தெரியாத  ஒரு  நாமமும்  எழுதியிருந்தது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  19:12)

avarudaiya  ka'nga'l  akkinijuvaalaiyaippoalirunthana,  avarudaiya  sirasinmeal  aneaga  kireedangga'l  irunthana;  avarukkeayan’ri  vea’roruvarukkun  theriyaatha  oru  naamamum  ezhuthiyirunthathu.  (ve’lippaduththina  viseasham  19:12)

இரத்தத்தில்  தோய்க்கப்பட்ட  வஸ்திரத்தைத்  தரித்திருந்தார்;  அவருடைய  நாமம்  தேவனுடைய  வார்த்தை  என்பதே.  (வெளிப்படுத்தின  விசேஷம்  19:13)

iraththaththil  thoaykkappatta  vasthiraththaith  thariththirunthaar;  avarudaiya  naamam  theavanudaiya  vaarththai  enbathea.  (ve’lippaduththina  viseasham  19:13)

பரலோகத்திலுள்ள  சேனைகள்  வெண்மையும்  சுத்தமுமான  மெல்லிய  வஸ்திரந்  தரித்தவர்களாய்,  வெள்ளைக்குதிரைகளின்மேல்  ஏறி,  அவருக்குப்  பின்சென்றார்கள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  19:14)

paraloagaththilu'l'la  seanaiga'l  ve'nmaiyum  suththamumaana  melliya  vasthiran  thariththavarga'laay,  ve'l'laikkuthiraiga'linmeal  ea’ri,  avarukkup  pinsen’raarga'l.  (ve’lippaduththina  viseasham  19:14)

புறஜாதிகளை  வெட்டும்படிக்கு  அவருடைய  வாயிலிருந்து  கூர்மையான  பட்டயம்  புறப்படுகிறது;  இருப்புக்கோலால்  அவர்களை  அரசாளுவார்;  அவர்  சர்வவல்லமையுள்ள  தேவனுடைய  உக்கிரகோபமாகிய  மதுவுள்ள  ஆலையை  மிதிக்கிறார்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  19:15)

pu’rajaathiga'lai  vettumpadikku  avarudaiya  vaayilirunthu  koormaiyaana  pattayam  pu’rappadugi’rathu;  iruppukkoalaal  avarga'lai  arasaa'luvaar;  avar  sarvavallamaiyu'l'la  theavanudaiya  ukkirakoabamaagiya  mathuvu'l'la  aalaiyai  mithikki’raar.  (ve’lippaduththina  viseasham  19:15)

ராஜாதி  ராஜா,  கர்த்தாதி  கர்த்தா  என்னும்  நாமம்  அவருடைய  வஸ்திரத்தின்மேலும்  அவருடைய  தொடையின்மேலும்  எழுதப்பட்டிருந்தது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  19:16)

raajaathi  raajaa,  karththaathi  karththaa  ennum  naamam  avarudaiya  vasthiraththinmealum  avarudaiya  thodaiyinmealum  ezhuthappattirunthathu.  (ve’lippaduththina  viseasham  19:16)

பின்பு  ஒரு  தூதன்  சூரியனில்  நிற்கக்கண்டேன்;  அவன்  வானத்தின்  மத்தியில்  பறக்கிற  சகல  பறவைகளையும்  பார்த்து:  (வெளிப்படுத்தின  விசேஷம்  19:17)

pinbu  oru  thoothan  sooriyanil  ni’rkakka'ndean;  avan  vaanaththin  maththiyil  pa’rakki’ra  sagala  pa’ravaiga'laiyum  paarththu:  (ve’lippaduththina  viseasham  19:17)

நீங்கள்  ராஜாக்களின்  மாம்சத்தையும்,  சேனைத்தலைவர்களின்  மாம்சத்தையும்,  பலவான்களின்  மாம்சத்தையும்,  குதிரைகளின்  மாம்சத்தையும்,  அவைகளின்மேல்  ஏறியிருக்கிறவர்களின்  மாம்சத்தையும்,  சுயாதீனர்  அடிமைகள்,  சிறியோர்  பெரியோர்,  இவர்களெல்லாருடைய  மாம்சத்தையும்  பட்சிக்கும்படிக்கு,  மகா  தேவன்  கொடுக்கும்  விருந்துக்குக்  கூடிவாருங்கள்  என்று  மிகுந்த  சத்தத்தோடே  கூப்பிட்டான்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  19:18)

neengga'l  raajaakka'lin  maamsaththaiyum,  seanaiththalaivarga'lin  maamsaththaiyum,  balavaanga'lin  maamsaththaiyum,  kuthiraiga'lin  maamsaththaiyum,  avaiga'linmeal  ea’riyirukki’ravarga'lin  maamsaththaiyum,  suyaatheenar  adimaiga'l,  si’riyoar  periyoar,  ivarga'lellaarudaiya  maamsaththaiyum  padchikkumpadikku,  mahaa  theavan  kodukkum  virunthukkuk  koodivaarungga'l  en’ru  miguntha  saththaththoadea  kooppittaan.  (ve’lippaduththina  viseasham  19:18)

பின்பு,  மிருகமும்  பூமியின்  ராஜாக்களும்  அவர்களுடைய  சேனைகளும்,  குதிரையின்மேல்  ஏறியிருக்கிறவரோடும்  அவருடைய  சேனையோடும்  யுத்தம்பண்ணும்படிக்குக்  கூடிவரக்கண்டேன்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  19:19)

pinbu,  mirugamum  boomiyin  raajaakka'lum  avarga'ludaiya  seanaiga'lum,  kuthiraiyinmeal  ea’riyirukki’ravaroadum  avarudaiya  seanaiyoadum  yuththampa'n'numpadikkuk  koodivarakka'ndean.  (ve’lippaduththina  viseasham  19:19)

அப்பொழுது  மிருகம்  பிடிக்கப்பட்டது;  மிருகத்தின்முன்பாகச்  செய்த  அற்புதங்களால்  அதின்  முத்திரையைத்  தரித்தவர்களையும்  அதின்  சொரூபத்தை  வணங்கினவர்களையும்  மோசம்போக்கின  கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப்  பிடிக்கப்பட்டான்;  இருவரும்  கந்தகம்  எரிகிற  அக்கினிக்கடலிலே  உயிரோடே  தள்ளப்பட்டார்கள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  19:20)

appozhuthu  mirugam  pidikkappattathu;  mirugaththinmunbaagach  seytha  a’rputhangga'laal  athin  muththiraiyaith  thariththavarga'laiyum  athin  soroobaththai  va'nangginavarga'laiyum  moasampoakkina  ka'l'laththeerkkatharisiyungkoodap  pidikkappattaan;  iruvarum  kanthagam  erigi’ra  akkinikkadalilea  uyiroadea  tha'l'lappattaarga'l.  (ve’lippaduththina  viseasham  19:20)

மற்றவர்கள்  குதிரையின்மேல்  ஏறினவருடைய  வாயிலிருந்து  புறப்படுகிற  பட்டயத்தால்  கொல்லப்பட்டார்கள்;  அவர்களுடைய  மாம்சத்தினால்  பறவைகள்  யாவும்  திருப்தியடைந்தன.  (வெளிப்படுத்தின  விசேஷம்  19:21)

mat’ravarga'l  kuthiraiyinmeal  ea’rinavarudaiya  vaayilirunthu  pu’rappadugi’ra  pattayaththaal  kollappattaarga'l;  avarga'ludaiya  maamsaththinaal  pa’ravaiga'l  yaavum  thirupthiyadainthana.  (ve’lippaduththina  viseasham  19:21)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!