Thursday, June 16, 2016

Ve’lippaduththina Viseasham 18 | வெளிப்படுத்தின விசேஷம் 18 | Revelation 18

இவைகளுக்குப்பின்பு,  வேறொரு  தூதன்  மிகுந்த  அதிகாரமுடையவனாய்,  வானத்திலிருந்திறங்கி  வரக்கண்டேன்;  அவனுடைய  மகிமையினால்  பூமி  பிரகாசமாயிற்று.  (வெளிப்படுத்தின  விசேஷம்  18:1)

ivaiga'lukkuppinbu,  vea’roru  thoothan  miguntha  athigaaramudaiyavanaay,  vaanaththilirunthi’ranggi  varakka'ndean;  avanudaiya  magimaiyinaal  boomi  piragaasamaayit’ru.  (ve’lippaduththina  viseasham  18:1)

அவன்  பலத்த  சத்தமிட்டு:  மகா  பாபிலோன்  விழுந்தது!  விழுந்தது!  அது  பேய்களுடைய  குடியிருப்பும்,  சகலவித  அசுத்தஆவிகளுடைய  காவல்வீடும்,  அசுத்தமும்  அருவருப்புமுள்ள  சகலவித  பறவைகளுடைய  கூடுமாயிற்று.  (வெளிப்படுத்தின  விசேஷம்  18:2)

avan  balaththa  saththamittu:  mahaa  baabiloan  vizhunthathu!  vizhunthathu!  athu  peayga'ludaiya  kudiyiruppum,  sagalavitha  asuththaaaviga'ludaiya  kaavalveedum,  asuththamum  aruvaruppumu'l'la  sagalavitha  pa’ravaiga'ludaiya  koodumaayit’ru.  (ve’lippaduththina  viseasham  18:2)

அவளுடைய  வேசித்தனத்தின்  உக்கிரமான  மதுவை  எல்லா  ஜாதிகளும்  குடித்தார்கள்;  பூமியின்  ராஜாக்கள்  அவளோடே  வேசித்தனம்பண்ணினார்கள்;  பூமியின்  வர்த்தகர்  அவளுடைய  செல்வச்செருக்கின்  மிகுதியினால்  ஐசுவரியவான்களானார்கள்  என்று  விளம்பினான்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  18:3)

ava'ludaiya  veasiththanaththin  ukkiramaana  mathuvai  ellaa  jaathiga'lum  kudiththaarga'l;  boomiyin  raajaakka'l  ava'loadea  veasiththanampa'n'ninaarga'l;  boomiyin  varththagar  ava'ludaiya  selvachserukkin  miguthiyinaal  aisuvariyavaanga'laanaarga'l  en’ru  vi'lambinaan.  (ve’lippaduththina  viseasham  18:3)

பின்பு,  வேறொரு  சத்தம்  வானத்திலிருந்து  உண்டாகக்  கேட்டேன்.  அது:  என்  ஜனங்களே,  நீங்கள்  அவளுடைய  பாவங்களுக்கு  உடன்படாமலும்,  அவளுக்கு  நேரிடும்  வாதைகளில்  அகப்படாமலும்  இருக்கும்படிக்கு  அவளைவிட்டு  வெளியே  வாருங்கள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  18:4)

pinbu,  vea’roru  saththam  vaanaththilirunthu  u'ndaagak  keattean.  athu:  en  janangga'lea,  neengga'l  ava'ludaiya  paavangga'lukku  udanpadaamalum,  ava'lukku  nearidum  vaathaiga'lil  agappadaamalum  irukkumpadikku  ava'laivittu  ve'liyea  vaarungga'l.  (ve’lippaduththina  viseasham  18:4)

அவளுடைய  பாவம்  வானபரியந்தம்  எட்டினது,  அவளுடைய  அநியாயங்களைத்  தேவன்  நினைவுகூர்ந்தார்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  18:5)

ava'ludaiya  paavam  vaanapariyantham  ettinathu,  ava'ludaiya  aniyaayangga'laith  theavan  ninaivukoornthaar.  (ve’lippaduththina  viseasham  18:5)

அவள்  உங்களுக்குப்  பலனளித்ததுபோல  நீங்களும்  அவளுக்குப்  பலனளியுங்கள்;  அவளுடைய  கிரியைகளுக்குத்தக்கதாக  அவளுக்கு  இரட்டிப்பாகக்  கொடுத்துத்  தீருங்கள்;  அவள்  உங்களுக்குக்  கலந்துகொடுத்த  பாத்திரத்திலே  இரட்டிப்பாக  அவளுக்குக்  கலந்துகொடுங்கள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  18:6)

ava'l  ungga'lukkup  palana'liththathupoala  neengga'lum  ava'lukkup  palana'liyungga'l;  ava'ludaiya  kiriyaiga'lukkuththakkathaaga  ava'lukku  irattippaagak  koduththuth  theerungga'l;  ava'l  ungga'lukkuk  kalanthukoduththa  paaththiraththilea  irattippaaga  ava'lukkuk  kalanthukodungga'l.  (ve’lippaduththina  viseasham  18:6)

அவள்  தன்னை  மகிமைப்படுத்தி,  செல்வச்செருக்காய்  வாழ்ந்ததெவ்வளவோ  அவ்வளவாய்  வாதையையும்  துக்கத்தையும்  அவளுக்குக்  கொடுங்கள்.  நான்  ராஜஸ்திரீயாய்  வீற்றிருக்கிறேன்;  நான்  கைம்பெண்ணல்ல,  நான்  துக்கத்தைக்  காண்பதில்லையென்று  அவள்  தன்  இருதயத்திலே  எண்ணினாள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  18:7)

ava'l  thannai  magimaippaduththi,  selvachserukkaay  vaazhnthathevva'lavoa  avva'lavaay  vaathaiyaiyum  thukkaththaiyum  ava'lukkuk  kodungga'l.  naan  raajasthireeyaay  veet’rirukki’rean;  naan  kaimpe'n'nalla,  naan  thukkaththaik  kaa'nbathillaiyen’ru  ava'l  than  iruthayaththilea  e'n'ninaa'l.  (ve’lippaduththina  viseasham  18:7)

ஆகையால்  அவளுக்கு  வரும்  வாதைகளாகிய  சாவும்  துக்கமும்  பஞ்சமும்  ஒரேநாளிலே  வரும்;  அவள்  அக்கினியினாலே  சுட்டெரிக்கப்படுவாள்;  அவளுக்கு  நியாயத்தீர்ப்புக்  கொடுக்கும்  தேவனாகிய  கர்த்தர்  வல்லமையுள்ளவர்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  18:8)

aagaiyaal  ava'lukku  varum  vaathaiga'laagiya  saavum  thukkamum  pagnchamum  oreanaa'lilea  varum;  ava'l  akkiniyinaalea  sutterikkappaduvaa'l;  ava'lukku  niyaayaththeerppuk  kodukkum  theavanaagiya  karththar  vallamaiyu'l'lavar.  (ve’lippaduththina  viseasham  18:8)

அவளுடனே  வேசித்தனஞ்செய்து  செல்வச்செருக்காய்  வாழ்ந்த  பூமியின்  ராஜாக்களும்  அவள்  வேகிறதினால்  உண்டான  புகையைக்  காணும்போது  அவளுக்காக  அழுது  புலம்பி,  (வெளிப்படுத்தின  விசேஷம்  18:9)

ava'ludanea  veasiththanagnseythu  selvachserukkaay  vaazhntha  boomiyin  raajaakka'lum  ava'l  veagi’rathinaal  u'ndaana  pugaiyaik  kaa'numpoathu  ava'lukkaaga  azhuthu  pulambi,  (ve’lippaduththina  viseasham  18:9)

அவளுக்கு  உண்டான  வாதையினால்  பயந்து,  தூரத்திலே  நின்று:  ஐயையோ!  பாபிலோன்,  மகா  நகரமே!  பலமான  பட்டணமே!  ஒரே  நாழிகையில்  உனக்கு  ஆக்கினை  வந்ததே!  என்பார்கள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  18:10)

ava'lukku  u'ndaana  vaathaiyinaal  bayanthu,  thooraththilea  nin’ru:  aiyaiyoa!  baabiloan,  mahaa  nagaramea!  balamaana  patta'namea!  orea  naazhigaiyil  unakku  aakkinai  vanthathea!  enbaarga'l.  (ve’lippaduththina  viseasham  18:10)

பூமியின்  வர்த்தகர்களும்  தங்கள்  தங்கள்  சரக்குகளாகிய  பொன்னையும்,  வெள்ளியையும்,  இரத்தினங்களையும்,  முத்துக்களையும்,  சல்லாவையும்,  இரத்தாம்பரத்தையும்,  பட்டாடைகளையும்,  சிவப்பாடைகளையும்,  (வெளிப்படுத்தின  விசேஷம்  18:11)

boomiyin  varththagarga'lum  thangga'l  thangga'l  sarakkuga'laagiya  ponnaiyum,  ve'l'liyaiyum,  iraththinangga'laiyum,  muththukka'laiyum,  sallaavaiyum,  iraththaambaraththaiyum,  pattaadaiga'laiyum,  sivappaadaiga'laiyum,  (ve’lippaduththina  viseasham  18:11)

சகலவித  வாசனைக்  கட்டைகளையும்,  தந்தத்தினால்  செய்திருக்கிற  சகலவித  வஸ்துக்களையும்,  விலையுயர்ந்த  மரத்தினாலும்  வெண்கலத்தினாலும்  இரும்பினாலும்  வெள்ளைக்  கல்லினாலும்  செய்திருக்கிற  சகலவித  வஸ்துக்களையும்,  (வெளிப்படுத்தின  விசேஷம்  18:12)

sagalavitha  vaasanaik  kattaiga'laiyum,  thanthaththinaal  seythirukki’ra  sagalavitha  vasthukka'laiyum,  vilaiyuyarntha  maraththinaalum  ve'ngalaththinaalum  irumbinaalum  ve'l'laik  kallinaalum  seythirukki’ra  sagalavitha  vasthukka'laiyum,  (ve’lippaduththina  viseasham  18:12)

இலவங்கப்பட்டையையும்,  தூபவர்க்கங்களையும்,  தைலங்களையும்,  சாம்பிராணியையும்,  திராட்சரசத்தையும்,  எண்ணெயையும்,  மெல்லிய  மாவையும்,  கோதுமையையும்,  மாடுகளையும்,  ஆடுகளையும்,  குதிரைகளையும்,  இரதங்களையும்,  அடிமைகளையும்,  மனுஷருடைய  ஆத்துமாக்களையும்  இனிக்  கொள்வாரில்லாதபடியால்,  அவளுக்காக  அழுது  புலம்புவார்கள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  18:13)

ilavanggappattaiyaiyum,  thoobavarkkangga'laiyum,  thailangga'laiyum,  saambiraa'niyaiyum,  thiraadcharasaththaiyum,  e'n'neyaiyum,  melliya  maavaiyum,  koathumaiyaiyum,  maaduga'laiyum,  aaduga'laiyum,  kuthiraiga'laiyum,  irathangga'laiyum,  adimaiga'laiyum,  manusharudaiya  aaththumaakka'laiyum  inik  ko'lvaarillaathapadiyaal,  ava'lukkaaga  azhuthu  pulambuvaarga'l.  (ve’lippaduththina  viseasham  18:13)

உன்  ஆத்துமா  இச்சித்த  பழவர்க்கங்கள்  உன்னைவிட்டு  நீங்கிப்போயின;  கொழுமையானவைகளும்  சம்பிரமமானவைகளும்  உன்னைவிட்டு  நீங்கிப்போயின;  நீ  அவைகளை  இனிக்  காண்பதில்லை.  (வெளிப்படுத்தின  விசேஷம்  18:14)

un  aaththumaa  ichchiththa  pazhavarkkangga'l  unnaivittu  neenggippoayina;  kozhumaiyaanavaiga'lum  sambiramamaanavaiga'lum  unnaivittu  neenggippoayina;  nee  avaiga'lai  inik  kaa'nbathillai.  (ve’lippaduththina  viseasham  18:14)

இப்படிப்பட்டவைகளைக்  கொண்டு  வர்த்தகம்பண்ணி,  அவளால்  ஐசுவரியவான்களானவர்கள்  அவளுக்கு  உண்டான  வாதையினால்  பயந்து,  தூரத்திலே  நின்று;  (வெளிப்படுத்தின  விசேஷம்  18:15)

ippadippattavaiga'laik  ko'ndu  varththagampa'n'ni,  ava'laal  aisuvariyavaanga'laanavarga'l  ava'lukku  u'ndaana  vaathaiyinaal  bayanthu,  thooraththilea  nin’ru;  (ve’lippaduththina  viseasham  18:15)

ஐயையோ!  சல்லாவும்  இரத்தாம்பரமும்  சிவப்பாடையும்  தரித்து,  பொன்னினாலும்  இரத்தினங்களினாலும்  முத்துக்களினாலும்  சிங்காரிக்கப்பட்டிருந்த  மகா  நகரமே!  ஒரு  நாழிகையிலே  இவ்வளவு  ஐசுவரியமும்  அழிந்துபோயிற்றே!  என்று  சொல்லி,  அழுது  துக்கிப்பார்கள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  18:16)

aiyaiyoa!  sallaavum  iraththaambaramum  sivappaadaiyum  thariththu,  ponninaalum  iraththinangga'linaalum  muththukka'linaalum  singgaarikkappattiruntha  mahaa  nagaramea!  oru  naazhigaiyilea  ivva'lavu  aisuvariyamum  azhinthupoayit’rea!  en’ru  solli,  azhuthu  thukkippaarga'l.  (ve’lippaduththina  viseasham  18:16)

மாலுமிகள்  யாவரும்,  கப்பல்களில்  யாத்திரை  பண்ணுகிறவர்கள்  யாவரும்,  கப்பலாட்களும்,  சமுத்திரத்திலே  தொழில்செய்கிற  யாவரும்  தூரத்திலே  நின்று,  (வெளிப்படுத்தின  விசேஷம்  18:17)

maalumiga'l  yaavarum,  kappalga'lil  yaaththirai  pa'n'nugi’ravarga'l  yaavarum,  kappalaadka'lum,  samuththiraththilea  thozhilseygi’ra  yaavarum  thooraththilea  nin’ru,  (ve’lippaduththina  viseasham  18:17)

அவள்  வேகிறதினால்  உண்டான  புகையைப்  பார்த்து:  இந்த  மகா  நகரத்திற்கொப்பான  நகரம்  உண்டோ  என்று  சத்தமிட்டு,  (வெளிப்படுத்தின  விசேஷம்  18:18)

ava'l  veagi’rathinaal  u'ndaana  pugaiyaip  paarththu:  intha  mahaa  nagaraththi’rkoppaana  nagaram  u'ndoa  en’ru  saththamittu,  (ve’lippaduththina  viseasham  18:18)

தங்கள்  தலைகள்மேல்  புழுதியைப்போட்டுக்கொண்டு:  ஐயையோ,  மகா  நகரமே!  சமுத்திரத்திலே  கப்பல்களையுடைய  அனைவரும்  இவளுடைய  உச்சிதமான  சம்பூரணத்தினால்  ஐசுவரியவான்களானார்களே!  ஒரு  நாழிகையிலே  இவள்  பாழாய்ப்போனாளே!  என்று  அழுது  துக்கித்து  ஓலமிடுவார்கள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  18:19)

thangga'l  thalaiga'lmeal  puzhuthiyaippoattukko'ndu:  aiyaiyoa,  mahaa  nagaramea!  samuththiraththilea  kappalga'laiyudaiya  anaivarum  iva'ludaiya  uchchithamaana  sampoora'naththinaal  aisuvariyavaanga'laanaarga'lea!  oru  naazhigaiyilea  iva'l  paazhaayppoanaa'lea!  en’ru  azhuthu  thukkiththu  oalamiduvaarga'l.  (ve’lippaduththina  viseasham  18:19)

பரலோகமே!  பரிசுத்தவான்களாகிய  அப்போஸ்தலர்களே!  தீர்க்கதரிசிகளே!  அவளைக்குறித்துக்  களிகூருங்கள்.  உங்கள்  நிமித்தம்  தேவன்  அவளை  நியாயந்தீர்த்தாரே!  என்று  தூதன்  சொன்னான்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  18:20)

paraloagamea!  parisuththavaanga'laagiya  appoasthalarga'lea!  theerkkatharisiga'lea!  ava'laikku’riththuk  ka'likoorungga'l.  ungga'l  nimiththam  theavan  ava'lai  niyaayantheerththaarea!  en’ru  thoothan  sonnaan.  (ve’lippaduththina  viseasham  18:20)

அப்பொழுது,  பலமுள்ள  தூதனொருவன்  பெரிய  ஏந்திரக்கல்லையொத்த  ஒரு  கல்லை  எடுத்துச்  சமுத்திரத்திலே  எறிந்து:  இப்படியே  பாபிலோன்  மகாநகரம்  வேகமாய்த்  தள்ளுண்டு,  இனி  ஒருபோதும்  காணப்படாமற்போகும்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  18:21)

appozhuthu,  balamu'l'la  thoothanoruvan  periya  eanthirakkallaiyoththa  oru  kallai  eduththuch  samuththiraththilea  e’rinthu:  ippadiyea  baabiloan  mahaanagaram  veagamaayth  tha'l'lu'ndu,  ini  orupoathum  kaa'nappadaama’rpoagum.  (ve’lippaduththina  viseasham  18:21)

சுரமண்டலக்காரரும்,  கீதவாத்தியக்காரரும்,  நாகசுரக்காரரும்,  எக்காளக்காரருமானவர்களுடைய  சத்தம்  இனி  உன்னிடத்தில்  கேட்கப்படுவதுமில்லை;  எந்தத்  தொழிலாளியும்  இனி  உன்னிடத்தில்  காணப்படுவதுமில்லை;  ஏந்திரசத்தம்  இனி  உன்னிடத்தில்  கேட்கப்படுவதுமில்லை.  (வெளிப்படுத்தின  விசேஷம்  18:22)

surama'ndalakkaararum,  keethavaaththiyakkaararum,  naagasurakkaararum,  ekkaa'lakkaararumaanavarga'ludaiya  saththam  ini  unnidaththil  keadkappaduvathumillai;  enthath  thozhilaa'liyum  ini  unnidaththil  kaa'nappaduvathumillai;  eanthirasaththam  ini  unnidaththil  keadkappaduvathumillai.  (ve’lippaduththina  viseasham  18:22)

விளக்குவெளிச்சம்  இனி  உன்னிடத்தில்  பிரகாசிப்பதுமில்லை;  மணவாளனும்  மணவாட்டியுமானவர்களுடைய  சத்தம்  இனி  உன்னிடத்தில்  கேட்கப்படுவதுமில்லை.  உன்  வர்த்தகர்  பூமியில்  பெரியோர்களாயிருந்தார்களே;  உன்  சூனியத்தால்  எல்லா  ஜாதிகளும்  மோசம்போனார்களே.  (வெளிப்படுத்தின  விசேஷம்  18:23)

vi'lakkuve'lichcham  ini  unnidaththil  piragaasippathumillai;  ma'navaa'lanum  ma'navaattiyumaanavarga'ludaiya  saththam  ini  unnidaththil  keadkappaduvathumillai.  un  varththagar  boomiyil  periyoarga'laayirunthaarga'lea;  un  sooniyaththaal  ellaa  jaathiga'lum  moasampoanaarga'lea.  (ve’lippaduththina  viseasham  18:23)

தீர்க்கதரிசிகளுடைய  இரத்தமும்  பரிசுத்தவான்களுடைய  இரத்தமும்  பூமியில்  கொல்லப்பட்ட  அனைவருடைய  இரத்தமும்  அவளிடத்தில்  காணப்பட்டது  என்று  விளம்பினான்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  18:24)

theerkkatharisiga'ludaiya  iraththamum  parisuththavaanga'ludaiya  iraththamum  boomiyil  kollappatta  anaivarudaiya  iraththamum  ava'lidaththil  kaa'nappattathu  en’ru  vi'lambinaan.  (ve’lippaduththina  viseasham  18:24)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!