Thursday, June 16, 2016

Ve’lippaduththina Viseasham 17 | வெளிப்படுத்தின விசேஷம் 17 | Revelation 17

ஏழு  கலசங்களையுடைய  அந்த  ஏழு  தூதரில்  ஒருவன்  வந்து  என்னோடே  பேசி:  நீ  வா,  திரளான  தண்ணீர்கள்மேல்  உட்கார்ந்திருக்கிற  மகா  வேசியோடே  பூமியின்  ராஜாக்கள்  வேசித்தனம்பண்ணினார்களே,  அவளுடைய  வேசித்தனமாகிய  மதுவால்  பூமியின்  குடிகளும்  வெறிகொண்டிருந்தார்களே;  (வெளிப்படுத்தின  விசேஷம்  17:1)

eazhu  kalasangga'laiyudaiya  antha  eazhu  thootharil  oruvan  vanthu  ennoadea  peasi:  nee  vaa,  thira'laana  tha'n'neerga'lmeal  udkaarnthirukki’ra  mahaa  veasiyoadea  boomiyin  raajaakka'l  veasiththanampa'n'ninaarga'lea,  ava'ludaiya  veasiththanamaagiya  mathuvaal  boomiyin  kudiga'lum  ve’riko'ndirunthaarga'lea;  (ve’lippaduththina  viseasham  17:1)

அவளுக்கு  வருகிற  ஆக்கினையை  உனக்குக்  காண்பிப்பேன்  என்று  சொல்லி;  (வெளிப்படுத்தின  விசேஷம்  17:2)

ava'lukku  varugi’ra  aakkinaiyai  unakkuk  kaa'nbippean  en’ru  solli;  (ve’lippaduththina  viseasham  17:2)

ஆவிக்குள்  என்னை  வனாந்தரத்திற்குக்  கொண்டுபோனான்.  அப்பொழுது  ஏழு  தலைகளையும்  பத்துக்  கொம்புகளையும்  உடையதும்  தூஷணமான  நாமங்களால்  நிறைந்ததுமான  சிவப்புநிறமுள்ள  மிருகத்தின்மேல்  ஒரு  ஸ்திரீ  ஏறியிருக்கக்கண்டேன்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  17:3)

aavikku'l  ennai  vanaantharaththi’rkuk  ko'ndupoanaan.  appozhuthu  eazhu  thalaiga'laiyum  paththuk  kombuga'laiyum  udaiyathum  thoosha'namaana  naamangga'laal  ni’rainthathumaana  sivappuni’ramu'l'la  mirugaththinmeal  oru  sthiree  ea’riyirukkakka'ndean.  (ve’lippaduththina  viseasham  17:3)

அந்த  ஸ்திரீ  இரத்தாம்பரமும்  சிவப்பான  ஆடையுந்தரித்து,  பொன்னினாலும்  இரத்தினங்களினாலும்  முத்துக்களினாலும்  சிங்காரிக்கப்பட்டு,  தன்  வேசித்தனமாகிய  அருவருப்புகளாலும்  அசுத்தத்தாலும்  நிறைந்த  பொற்பாத்திரத்தைத்  தன்  கையிலே  பிடித்திருந்தாள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  17:4)

antha  sthiree  iraththaambaramum  sivappaana  aadaiyunthariththu,  ponninaalum  iraththinangga'linaalum  muththukka'linaalum  singgaarikkappattu,  than  veasiththanamaagiya  aruvaruppuga'laalum  asuththaththaalum  ni’raintha  po’rpaaththiraththaith  than  kaiyilea  pidiththirunthaa'l.  (ve’lippaduththina  viseasham  17:4)

மேலும்,  இரகசியம்,  மகா  பாபிலோன்,  வேசிகளுக்கும்  பூமியிலுள்ள  அருவருப்புகளுக்கும்  தாய்  என்னும்  நாமம்  அவள்  நெற்றியில்  எழுதியிருந்தது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  17:5)

mealum,  iragasiyam,  mahaa  baabiloan,  veasiga'lukkum  boomiyilu'l'la  aruvaruppuga'lukkum  thaay  ennum  naamam  ava'l  net’riyil  ezhuthiyirunthathu.  (ve’lippaduththina  viseasham  17:5)

அந்த  ஸ்திரீ  பரிசுத்தவான்களின்  இரத்தத்தினாலும்,  இயேசுவினுடைய  சாட்சிகளின்  இரத்தத்தினாலும்  வெறிகொண்டிருக்கிறதைக்  கண்டேன்;  அவளைக்  கண்டு  நான்  மிகவும்  ஆச்சரியப்பட்டேன்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  17:6)

antha  sthiree  parisuththavaanga'lin  iraththaththinaalum,  iyeasuvinudaiya  saadchiga'lin  iraththaththinaalum  ve’riko'ndirukki’rathaik  ka'ndean;  ava'laik  ka'ndu  naan  migavum  aachchariyappattean.  (ve’lippaduththina  viseasham  17:6)

அப்பொழுது,  தூதனானவன்  என்னை  நோக்கி:  ஏன்  ஆச்சரியப்படுகிறாய்?  இந்த  ஸ்திரீயினுடைய  இரகசியத்தையும்,  ஏழு  தலைகளையும்  பத்துக்  கொம்புகளையுமுடையதாய்  இவளைச்  சுமக்கிற  மிருகத்தினுடைய  இரகசியத்தையும்  உனக்குச்  சொல்லுகிறேன்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  17:7)

appozhuthu,  thoothanaanavan  ennai  noakki:  ean  aachchariyappadugi’raay?  intha  sthireeyinudaiya  iragasiyaththaiyum,  eazhu  thalaiga'laiyum  paththuk  kombuga'laiyumudaiyathaay  iva'laich  sumakki’ra  mirugaththinudaiya  iragasiyaththaiyum  unakkuch  sollugi’rean.  (ve’lippaduththina  viseasham  17:7)

நீ  கண்ட  மிருகம்  முன்னே  இருந்தது,  இப்பொழுது  இல்லை;  அது  பாதாளத்திலிருந்து  ஏறிவந்து,  நாசமடையப்போகிறது.  உலகத்தோற்றமுதல்  ஜீவபுஸ்தகத்தில்  பேரெழுதப்பட்டிராத  பூமியின்  குடிகள்,  இருந்ததும்,  இராமற்போனதும்,  இனி  இருப்பதுமாயிருக்கிற  மிருகத்தைப்பார்த்து  ஆச்சரியப்படுவார்கள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  17:8)

nee  ka'nda  mirugam  munnea  irunthathu,  ippozhuthu  illai;  athu  paathaa'laththilirunthu  ea’rivanthu,  naasamadaiyappoagi’rathu.  ulagaththoat’ramuthal  jeevapusthagaththil  pearezhuthappattiraatha  boomiyin  kudiga'l,  irunthathum,  iraama’rpoanathum,  ini  iruppathumaayirukki’ra  mirugaththaippaarththu  aachchariyappaduvaarga'l.  (ve’lippaduththina  viseasham  17:8)

ஞானமுள்ள  மனம்  இதிலே  விளங்கும்.  அந்த  ஏழு  தலைகளும்  அந்த  ஸ்திரீ  உட்கார்ந்திருக்கிற  ஏழு  மலைகளாம்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  17:9)

gnaanamu'l'la  manam  ithilea  vi'langgum.  antha  eazhu  thalaiga'lum  antha  sthiree  udkaarnthirukki’ra  eazhu  malaiga'laam.  (ve’lippaduththina  viseasham  17:9)

அவைகள்  ஏழு  ராஜாக்களாம்;  இவர்களில்  ஐந்துபேர்  விழுந்தார்கள்,  ஒருவன்  இருக்கிறான்,  மற்றவன்  இன்னும்  வரவில்லை;  வரும்போது  அவன்  கொஞ்சக்காலம்  தரித்திருக்கவேண்டும்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  17:10)

avaiga'l  eazhu  raajaakka'laam;  ivarga'lil  ainthupear  vizhunthaarga'l,  oruvan  irukki’raan,  mat’ravan  innum  varavillai;  varumpoathu  avan  kognchakkaalam  thariththirukkavea'ndum.  (ve’lippaduththina  viseasham  17:10)

இருந்ததும்  இராததுமாகிய  மிருகமே  எட்டாவதானவனும்,  அவ்வேழிலிருந்து  தோன்றுகிறவனும்,  நாசமடையப்போகிறவனுமாயிருக்கிறான்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  17:11)

irunthathum  iraathathumaagiya  mirugamea  ettaavathaanavanum,  avveazhilirunthu  thoan’rugi’ravanum,  naasamadaiyappoagi’ravanumaayirukki’raan.  (ve’lippaduththina  viseasham  17:11)

நீ  கண்ட  பத்துக்  கொம்புகளும்  பத்து  ராஜாக்களாம்;  இவர்கள்  இன்னும்  ராஜ்யம்  பெறவில்லை;  இவர்கள்  மிருகத்துடனேகூட  ஒருமணி  நேரமளவும்  ராஜாக்கள்போல  அதிகாரம்  பெற்றுக்கொள்ளுகிறார்கள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  17:12)

nee  ka'nda  paththuk  kombuga'lum  paththu  raajaakka'laam;  ivarga'l  innum  raajyam  pe’ravillai;  ivarga'l  mirugaththudaneakooda  oruma'ni  nearama'lavum  raajaakka'lpoala  athigaaram  pet’rukko'l'lugi’raarga'l.  (ve’lippaduththina  viseasham  17:12)

இவர்கள்  ஒரே  யோசனையுள்ளவர்கள்;  இவர்கள்  தங்கள்  வல்லமையையும்  அதிகாரத்தையும்  மிருகத்திற்குக்  கொடுப்பார்கள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  17:13)

ivarga'l  orea  yoasanaiyu'l'lavarga'l;  ivarga'l  thangga'l  vallamaiyaiyum  athigaaraththaiyum  mirugaththi’rkuk  koduppaarga'l.  (ve’lippaduththina  viseasham  17:13)

இவர்கள்  ஆட்டுக்குட்டியானவருடனே  யுத்தம்பண்ணுவார்கள்;  ஆட்டுக்குட்டியானவர்  கர்த்தாதி  கர்த்தரும்  ராஜாதி  ராஜாவுமாயிருக்கிறபடியால்  அவர்களை  ஜெயிப்பார்;  அவரோடுகூட  இருக்கிறவர்கள்  அழைக்கப்பட்டவர்களும்  தெரிந்துகொள்ளப்பட்டவர்களும்  உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்  என்றான்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  17:14)

ivarga'l  aattukkuttiyaanavarudanea  yuththampa'n'nuvaarga'l;  aattukkuttiyaanavar  karththaathi  karththarum  raajaathi  raajaavumaayirukki’rapadiyaal  avarga'lai  jeyippaar;  avaroadukooda  irukki’ravarga'l  azhaikkappattavarga'lum  therinthuko'l'lappattavarga'lum  u'nmaiyu'l'lavarga'lumaayirukki’raarga'l  en’raan.  (ve’lippaduththina  viseasham  17:14)

பின்னும்  அவன்  என்னை  நோக்கி:  அந்த  வேசி  உட்கார்ந்திருக்கிற  தண்ணீர்களைக்  கண்டாயே;  அவைகள்  ஜனங்களும்  கூட்டங்களும்  ஜாதிகளும்  பாஷைக்காரருமாம்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  17:15)

pinnum  avan  ennai  noakki:  antha  veasi  udkaarnthirukki’ra  tha'n'neerga'laik  ka'ndaayea;  avaiga'l  janangga'lum  koottangga'lum  jaathiga'lum  baashaikkaararumaam.  (ve’lippaduththina  viseasham  17:15)

நீ  மிருகத்தின்மேல்  கண்ட  பத்துக்  கொம்புகளானவர்கள்  அந்த  வேசியைப்  பகைத்து,  அவளைப்  பாழும்  நிர்வாணமுமாக்கி,  அவளுடைய  மாம்சத்தைப்  பட்சித்து,  அவளை  நெருப்பினால்  சுட்டெரித்துப்போடுவார்கள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  17:16)

nee  mirugaththinmeal  ka'nda  paththuk  kombuga'laanavarga'l  antha  veasiyaip  pagaiththu,  ava'laip  paazhum  nirvaa'namumaakki,  ava'ludaiya  maamsaththaip  padchiththu,  ava'lai  neruppinaal  sutteriththuppoaduvaarga'l.  (ve’lippaduththina  viseasham  17:16)

தேவன்  தம்முடைய  வார்த்தைகள்  நிறைவேறுமளவும்,  அவர்கள்  தமது  யோசனையை  நிறைவேற்றுகிறதற்கும்,  ஒரே  யோசனையுள்ளவர்களாயிருந்து,  தங்கள்  ராஜ்யத்தை  மிருகத்திற்குக்  கொடுக்கிறதற்கும்  அவர்களுடைய  இருதயங்களை  ஏவினார்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  17:17)

theavan  thammudaiya  vaarththaiga'l  ni’raivea’ruma'lavum,  avarga'l  thamathu  yoasanaiyai  ni’raiveat’rugi’ratha’rkum,  orea  yoasanaiyu'l'lavarga'laayirunthu,  thangga'l  raajyaththai  mirugaththi’rkuk  kodukki’ratha’rkum  avarga'ludaiya  iruthayangga'lai  eavinaar.  (ve’lippaduththina  viseasham  17:17)

நீ  கண்ட  ஸ்திரீயானவள்  பூமியின்  ராஜாக்கள்மேல்  ராஜ்யபாரம்பண்ணுகிற  மகா  நகரமேயாம்  என்றான்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  17:18)

nee  ka'nda  sthireeyaanava'l  boomiyin  raajaakka'lmeal  raajyabaarampa'n'nugi’ra  mahaa  nagarameayaam  en’raan.  (ve’lippaduththina  viseasham  17:18)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!