Thursday, June 16, 2016

Ve’lippaduththina Viseasham 15 | வெளிப்படுத்தின விசேஷம் 15 | Revelation 15

பின்பு,  வானத்திலே  பெரிதும்  ஆச்சரியமுமான  வேறொரு  அடையாளமாகிய  கடைசியான  ஏழு  வாதைகளையுடைய  ஏழு  தூதரைக்  கண்டேன்,  அவைகளால்  தேவனுடைய  கோபம்  முடிகிறது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  15:1)

pinbu,  vaanaththilea  perithum  aachchariyamumaana  vea’roru  adaiyaa'lamaagiya  kadaisiyaana  eazhu  vaathaiga'laiyudaiya  eazhu  thootharaik  ka'ndean,  avaiga'laal  theavanudaiya  koabam  mudigi’rathu.  (ve’lippaduththina  viseasham  15:1)

அன்றியும்,  அக்கினிகலந்த  கண்ணாடிக்  கடல்போன்ற  ஒரு  கடலையும்,  மிருகத்திற்கும்  அதின்  சொரூபத்திற்கும்  அதின்  முத்திரைக்கும்  அதின்  நாமத்தின்  இலக்கத்திற்கும்  உள்ளாகாமல்  ஜெயங்கொண்டவர்கள்  தேவ  சுரமண்டலங்களைப்  பிடித்துக்கொண்டு  அந்தக்  கண்ணாடிக்  கடலருகே  நிற்கிறதையும்  கண்டேன்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  15:2)

an’riyum,  akkinikalantha  ka'n'naadik  kadalpoan’ra  oru  kadalaiyum,  mirugaththi’rkum  athin  soroobaththi’rkum  athin  muththiraikkum  athin  naamaththin  ilakkaththi’rkum  u'l'laagaamal  jeyangko'ndavarga'l  theava  surama'ndalangga'laip  pidiththukko'ndu  anthak  ka'n'naadik  kadalarugea  ni’rki’rathaiyum  ka'ndean.  (ve’lippaduththina  viseasham  15:2)

அவர்கள்  தேவனுடைய  ஊழியக்காரனாகிய  மோசேயின்  பாட்டையும்  ஆட்டுக்குட்டியானவருடைய  பாட்டையும்  பாடி:  சர்வவல்லமையுள்ள  தேவனாகிய  கர்த்தாவே,  தேவரீருடைய  கிரியைகள்  மகத்துவமும்  ஆச்சரியமுமானவைகள்;  பரிசுத்தவான்களின்  ராஜாவே,  தேவரீருடைய  வழிகள்  நீதியும்  சத்தியமுமானவைகள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  15:3)

avarga'l  theavanudaiya  oozhiyakkaaranaagiya  moaseayin  paattaiyum  aattukkuttiyaanavarudaiya  paattaiyum  paadi:  sarvavallamaiyu'l'la  theavanaagiya  karththaavea,  theavareerudaiya  kiriyaiga'l  magaththuvamum  aachchariyamumaanavaiga'l;  parisuththavaanga'lin  raajaavea,  theavareerudaiya  vazhiga'l  neethiyum  saththiyamumaanavaiga'l.  (ve’lippaduththina  viseasham  15:3)

கர்த்தாவே,  யார்  உமக்குப்  பயப்படாமலும்,  உமது  நாமத்தை  மகிமைப்படுத்தாமலும்  இருக்கலாம்?  தேவரீர்  ஒருவரே  பரிசுத்தர்,  எல்லா  ஜாதிகளும்  வந்து  உமக்கு  முன்பாகத்  தொழுதுகொள்வார்கள்;  உம்முடைய  நீதியான  செயல்கள்  வெளியரங்கமாயின  என்றார்கள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  15:4)

karththaavea,  yaar  umakkup  bayappadaamalum,  umathu  naamaththai  magimaippaduththaamalum  irukkalaam?  theavareer  oruvarea  parisuththar,  ellaa  jaathiga'lum  vanthu  umakku  munbaagath  thozhuthuko'lvaarga'l;  ummudaiya  neethiyaana  seyalga'l  ve'liyaranggamaayina  en’raarga'l.  (ve’lippaduththina  viseasham  15:4)

இவைகளுக்குப்பின்பு,  நான்  பார்த்தபோது,  இதோ,  பரலோகத்திலே  சாட்சியின்  கூடாரமாகிய  ஆலயம்  திறக்கப்பட்டது;  (வெளிப்படுத்தின  விசேஷம்  15:5)

ivaiga'lukkuppinbu,  naan  paarththapoathu,  ithoa,  paraloagaththilea  saadchiyin  koodaaramaagiya  aalayam  thi’rakkappattathu;  (ve’lippaduththina  viseasham  15:5)

அந்த  ஆலயத்திலிருந்து  ஏழு  வாதைகளையுடைய  அவ்வேழு  தூதர்களும்  சுத்தமும்  பிரகாசமுமான  மெல்லிய  வஸ்திரந்தரித்து,  மார்பருகே  பொற்கச்சைகளைக்  கட்டிக்கொண்டு  புறப்பட்டார்கள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  15:6)

antha  aalayaththilirunthu  eazhu  vaathaiga'laiyudaiya  avveazhu  thootharga'lum  suththamum  piragaasamumaana  melliya  vasthiranthariththu,  maarbarugea  po’rkachchaiga'laik  kattikko'ndu  pu’rappattaarga'l.  (ve’lippaduththina  viseasham  15:6)

அப்பொழுது  அந்த  நான்கு  ஜீவன்களில்  ஒன்று,  சதாகாலங்களிலும்  உயிரோடிருக்கிற  தேவனுடைய  கோபாக்கினையால்  நிறைந்த  பொற்கலசங்கள்  ஏழையும்  அந்த  ஏழு  தூதர்களுக்குங்  கொடுத்தது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  15:7)

appozhuthu  antha  naangu  jeevanga'lil  on’ru,  sathaakaalangga'lilum  uyiroadirukki’ra  theavanudaiya  koabaakkinaiyaal  ni’raintha  po’rkalasangga'l  eazhaiyum  antha  eazhu  thootharga'lukkung  koduththathu.  (ve’lippaduththina  viseasham  15:7)

அப்பொழுது,  தேவனுடைய  மகிமையினாலும்  அவருடைய  வல்லமையினாலும்  உண்டான  புகையினாலே  தேவாலயம்  நிறைந்தது;  ஏழு  தூதர்களுடைய  ஏழு  வாதைகளும்  முடியும்வரைக்கும்  ஒருவரும்  தேவாலயத்திற்குள்  பிரவேசிக்கக்  கூடாதிருந்தது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  15:8)

appozhuthu,  theavanudaiya  magimaiyinaalum  avarudaiya  vallamaiyinaalum  u'ndaana  pugaiyinaalea  theavaalayam  ni’rainthathu;  eazhu  thootharga'ludaiya  eazhu  vaathaiga'lum  mudiyumvaraikkum  oruvarum  theavaalayaththi’rku'l  piraveasikkak  koodaathirunthathu.  (ve’lippaduththina  viseasham  15:8)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!