Thursday, June 16, 2016

Ve’lippaduththina Viseasham 14 | வெளிப்படுத்தின விசேஷம் 14 | Revelation 14

பின்பு  நான்  பார்த்தபோது,  இதோ,  சீயோன்  மலையின்மேல்  ஆட்டுக்குட்டியானவரையும்,  அவரோடேகூட  அவருடைய  பிதாவின்  நாமம்  தங்கள்  நெற்றிகளில்  எழுதப்பட்டிருந்த  இலட்சத்து  நாற்பத்து  நாலாயிரம்பேரையும்  நிற்கக்கண்டேன்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  14:1)

pinbu  naan  paarththapoathu,  ithoa,  seeyoan  malaiyinmeal  aattukkuttiyaanavaraiyum,  avaroadeakooda  avarudaiya  pithaavin  naamam  thangga'l  net’riga'lil  ezhuthappattiruntha  iladchaththu  naa’rpaththu  naalaayirampearaiyum  ni’rkakka'ndean.  (ve’lippaduththina  viseasham  14:1)

அல்லாமலும்,  பெருவெள்ள  இரைச்சல்போலவும்,  பலத்த  இடிமுழக்கம்போலவும்,  ஒரு  சத்தம்  வானத்திலிருந்து  உண்டாகக்கேட்டேன்;  நான்  கேட்ட  சத்தம்  சுரமண்டலக்காரர்  தங்கள்  சுரமண்டலங்களை  வாசிக்கிற  ஓசையைப்போலிருந்தது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  14:2)

allaamalum,  peruve'l'la  iraichchalpoalavum,  balaththa  idimuzhakkampoalavum,  oru  saththam  vaanaththilirunthu  u'ndaagakkeattean;  naan  keatta  saththam  surama'ndalakkaarar  thangga'l  surama'ndalangga'lai  vaasikki’ra  oasaiyaippoalirunthathu.  (ve’lippaduththina  viseasham  14:2)

அவர்கள்  சிங்காசனத்திற்கு  முன்பாகவும்,  நான்கு  ஜீவன்களுக்கு  முன்பாகவும்,  மூப்பர்களுக்கு  முன்பாகவும்  புதுப்பாட்டைப்  பாடினார்கள்;  அந்தப்  பாட்டு  பூமியிலிருந்து  மீட்டுக்கொள்ளப்பட்ட  இலட்சத்து  நாற்பத்துநாலாயிரம்  பேரேயல்லாமல்  வேறொருவரும்  கற்றுக்கொள்ளக்  கூடாதிருந்தது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  14:3)

avarga'l  singgaasanaththi’rku  munbaagavum,  naangu  jeevanga'lukku  munbaagavum,  moopparga'lukku  munbaagavum  puthuppaattaip  paadinaarga'l;  anthap  paattu  boomiyilirunthu  meettukko'l'lappatta  iladchaththu  naa’rpaththunaalaayiram  peareayallaamal  vea’roruvarum  kat’rukko'l'lak  koodaathirunthathu.  (ve’lippaduththina  viseasham  14:3)

ஸ்திரீகளால்  தங்களைக்  கறைப்படுத்தாதவர்கள்  இவர்களே;  கற்புள்ளவர்கள்  இவர்களே;  ஆட்டுக்குட்டியானவர்  எங்கே  போனாலும்  அவரைப்  பின்பற்றுகிறவர்கள்  இவர்களே;  இவர்கள்  மனுஷரிலிருந்து  தேவனுக்கும்  ஆட்டுக்குட்டியானவருக்கும்  முதற்பலனாக  மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  14:4)

sthireega'laal  thangga'laik  ka’raippaduththaathavarga'l  ivarga'lea;  ka’rpu'l'lavarga'l  ivarga'lea;  aattukkuttiyaanavar  enggea  poanaalum  avaraip  pinpat’rugi’ravarga'l  ivarga'lea;  ivarga'l  manusharilirunthu  theavanukkum  aattukkuttiyaanavarukkum  mutha’rpalanaaga  meettukko'l'lappattavarga'l.  (ve’lippaduththina  viseasham  14:4)

இவர்களுடைய  வாயிலே  கபடம்  காணப்படவில்லை;  இவர்கள்  தேவனுடைய  சிங்காசனத்திற்குமுன்பாக  மாசில்லாதவர்களாயிருக்கிறார்கள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  14:5)

ivarga'ludaiya  vaayilea  kabadam  kaa'nappadavillai;  ivarga'l  theavanudaiya  singgaasanaththi’rkumunbaaga  maasillaathavarga'laayirukki’raarga'l.  (ve’lippaduththina  viseasham  14:5)

பின்பு,  வேறொரு  தூதன்  வானத்தின்  மத்தியிலே  பறக்கக்கண்டேன்;  அவன்  பூமியில்  வாசம்பண்ணுகிற  சகல  ஜாதிகளுக்கும்,  கோத்திரத்தாருக்கும்,  பாஷைக்காரருக்கும்,  ஜனக்கூட்டத்தாருக்கும்  அறிவிக்கத்தக்கதாக  நித்திய  சுவிசேஷத்தை  உடையவனாயிருந்து,  (வெளிப்படுத்தின  விசேஷம்  14:6)

pinbu,  vea’roru  thoothan  vaanaththin  maththiyilea  pa’rakkakka'ndean;  avan  boomiyil  vaasampa'n'nugi’ra  sagala  jaathiga'lukkum,  koaththiraththaarukkum,  baashaikkaararukkum,  janakkoottaththaarukkum  a’rivikkaththakkathaaga  niththiya  suviseashaththai  udaiyavanaayirunthu,  (ve’lippaduththina  viseasham  14:6)

மிகுந்த  சத்தமிட்டு:  தேவனுக்குப்  பயந்து,  அவரை  மகிமைப்படுத்துங்கள்;  அவர்  நியாயத்தீர்ப்புக்கொடுக்கும்  வேளை  வந்தது;  வானத்தையும்  பூமியையும்  சமுத்திரத்தையும்  நீரூற்றுகளையும்  உண்டாக்கினவரையே  தொழுதுகொள்ளுங்கள்  என்று  கூறினான்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  14:7)

miguntha  saththamittu:  theavanukkup  bayanthu,  avarai  magimaippaduththungga'l;  avar  niyaayaththeerppukkodukkum  vea'lai  vanthathu;  vaanaththaiyum  boomiyaiyum  samuththiraththaiyum  neeroot’ruga'laiyum  u'ndaakkinavaraiyea  thozhuthuko'l'lungga'l  en’ru  koo’rinaan.  (ve’lippaduththina  viseasham  14:7)

வேறொரு  தூதன்  பின்சென்று:  பாபிலோன்  மகா  நகரம்  விழுந்தது!  விழுந்தது!  தன்  வேசித்தனமாகிய  உக்கிரமான  மதுவைச்  சகல  ஜாதிகளுக்கும்  குடிக்கக்  கொடுத்தாளே!  என்றான்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  14:8)

vea’roru  thoothan  pinsen’ru:  baabiloan  mahaa  nagaram  vizhunthathu!  vizhunthathu!  than  veasiththanamaagiya  ukkiramaana  mathuvaich  sagala  jaathiga'lukkum  kudikkak  koduththaa'lea!  en’raan.  (ve’lippaduththina  viseasham  14:8)

அவர்களுக்குப்  பின்னே  மூன்றாம்  தூதன்  வந்து,  மிகுந்த  சத்தமிட்டு:  மிருகத்தையும்  அதின்  சொரூபத்தையும்  வணங்கித்  தன்  நெற்றியிலாவது  தன்  கையிலாவது  அதின்  முத்திரையைத்  தரித்துக்கொள்ளுகிறவனெவனோ,  (வெளிப்படுத்தின  விசேஷம்  14:9)

avarga'lukkup  pinnea  moon’raam  thoothan  vanthu,  miguntha  saththamittu:  mirugaththaiyum  athin  soroobaththaiyum  va'nanggith  than  net’riyilaavathu  than  kaiyilaavathu  athin  muththiraiyaith  thariththukko'l'lugi’ravanevanoa,  (ve’lippaduththina  viseasham  14:9)

அவன்  தேவனுடைய  கோபாக்கினையாகிய  பாத்திரத்திலே  கலப்பில்லாமல்  வார்க்கப்பட்ட  அவருடைய  உக்கிரமாகிய  மதுவைக்  குடித்து,  பரிசுத்த  தூதர்களுக்குமுன்பாகவும்,  ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாகவும்  அக்கினியினாலும்  கந்தகத்தினாலும்  வாதிக்கப்படுவான்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  14:10)

avan  theavanudaiya  koabaakkinaiyaagiya  paaththiraththilea  kalappillaamal  vaarkkappatta  avarudaiya  ukkiramaagiya  mathuvaik  kudiththu,  parisuththa  thootharga'lukkumunbaagavum,  aattukkuttiyaanavarukkumunbaagavum  akkiniyinaalum  kanthagaththinaalum  vaathikkappaduvaan.  (ve’lippaduththina  viseasham  14:10)

அவர்களுடைய  வாதையின்  புகை  சதாகாலங்களிலும்  எழும்பும்;  மிருகத்தையும்  அதின்  சொரூபத்தையும்  வணங்குகிறவர்களுக்கும்,  அதினுடைய  நாமத்தின்  முத்திரையைத்  தரித்துக்கொள்ளுகிற  எவனுக்கும்  இரவும்  பகலும்  இளைப்பாறுதலிராது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  14:11)

avarga'ludaiya  vaathaiyin  pugai  sathaakaalangga'lilum  ezhumbum;  mirugaththaiyum  athin  soroobaththaiyum  va'nanggugi’ravarga'lukkum,  athinudaiya  naamaththin  muththiraiyaith  thariththukko'l'lugi’ra  evanukkum  iravum  pagalum  i'laippaa’ruthaliraathu.  (ve’lippaduththina  viseasham  14:11)

தேவனுடைய  கற்பனைகளையும்  இயேசுவின்  மேலுள்ள  விசுவாசத்தையும்  காத்துக்கொள்ளுகிறவர்களாகிய  பரிசுத்தவான்களுடைய  பொறுமை  இதிலே  விளங்கும்  என்று  கூறினான்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  14:12)

theavanudaiya  ka’rpanaiga'laiyum  iyeasuvin  mealu'l'la  visuvaasaththaiyum  kaaththukko'l'lugi’ravarga'laagiya  parisuththavaanga'ludaiya  po’rumai  ithilea  vi'langgum  en’ru  koo’rinaan.  (ve’lippaduththina  viseasham  14:12)

பின்பு,  பரலோகத்திலிருந்து  ஒரு  சத்தம்  உண்டாகக்  கேட்டேன்;  அது:  கர்த்தருக்குள்  மரிக்கிறவர்கள்  இதுமுதல்  பாக்கியவான்கள்  என்றெழுது;  அவர்கள்  தங்கள்  பிரயாசங்களை  விட்டொழிந்து  இளைப்பாறுவார்கள்;  அவர்களுடைய  கிரியைகள்  அவர்களோடே  கூடப்போம்;  ஆவியானவரும்  ஆம்  என்று  திருவுளம்பற்றுகிறார்  என்று  சொல்லிற்று.  (வெளிப்படுத்தின  விசேஷம்  14:13)

pinbu,  paraloagaththilirunthu  oru  saththam  u'ndaagak  keattean;  athu:  karththarukku'l  marikki’ravarga'l  ithumuthal  baakkiyavaanga'l  en’rezhuthu;  avarga'l  thangga'l  pirayaasangga'lai  vittozhinthu  i'laippaa’ruvaarga'l;  avarga'ludaiya  kiriyaiga'l  avarga'loadea  koodappoam;  aaviyaanavarum  aam  en’ru  thiruvu'lampat’rugi’raar  en’ru  sollit’ru.  (ve’lippaduththina  viseasham  14:13)

பின்பு  நான்  பார்த்தபோது,  இதோ,  வெண்மையான  மேகத்தையும்,  அந்த  மேகத்தின்மேல்  மனுஷகுமாரனுக்கொப்பானவராய்த்  தமது  சிரசின்மேல்  பொற்கிரீடத்தையும்  தமது  கையிலே  கருக்குள்ள  அரிவாளையுமுடைய  ஒருவர்  உட்கார்ந்திருக்கிறதையும்  கண்டேன்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  14:14)

pinbu  naan  paarththapoathu,  ithoa,  ve'nmaiyaana  meagaththaiyum,  antha  meagaththinmeal  manushakumaaranukkoppaanavaraayth  thamathu  sirasinmeal  po’rkireedaththaiyum  thamathu  kaiyilea  karukku'l'la  arivaa'laiyumudaiya  oruvar  udkaarnthirukki’rathaiyum  ka'ndean.  (ve’lippaduththina  viseasham  14:14)

அப்பொழுது  வேறொரு  தூதன்  தேவாலயத்திலிருந்து  புறப்பட்டு,  மேகத்தின்மேல்  உட்கார்ந்திருக்கிறவரை  நோக்கி:  பூமியின்  பயிர்  முதிர்ந்தது,  அறுக்கிறதற்குக்  காலம்  வந்தது,  ஆகையால்  உம்முடைய  அரிவாளை  நீட்டி  அறுத்துவிடும்  என்று  மிகுந்த  சத்தமிட்டுச்  சொன்னான்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  14:15)

appozhuthu  vea’roru  thoothan  theavaalayaththilirunthu  pu’rappattu,  meagaththinmeal  udkaarnthirukki’ravarai  noakki:  boomiyin  payir  muthirnthathu,  a’rukki’ratha’rkuk  kaalam  vanthathu,  aagaiyaal  ummudaiya  arivaa'lai  neetti  a’ruththuvidum  en’ru  miguntha  saththamittuch  sonnaan.  (ve’lippaduththina  viseasham  14:15)

அப்பொழுது  மேகத்தின்மேல்  உட்கார்ந்தவர்  தமது  அரிவாளைப்  பூமியின்மேல்  நீட்டினார்,  பூமியின்  விளைவு  அறுப்புண்டது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  14:16)

appozhuthu  meagaththinmeal  udkaarnthavar  thamathu  arivaa'laip  boomiyinmeal  neettinaar,  boomiyin  vi'laivu  a’ruppu'ndathu.  (ve’lippaduththina  viseasham  14:16)

பின்பு  வேறொரு  தூதனும்  கருக்குள்ள  அரிவாளைப்  பிடித்துக்கொண்டு  பரலோகத்திலுள்ள  தேவாலயத்திலிருந்து  புறப்பட்டுவந்தான்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  14:17)

pinbu  vea’roru  thoothanum  karukku'l'la  arivaa'laip  pidiththukko'ndu  paraloagaththilu'l'la  theavaalayaththilirunthu  pu’rappattuvanthaan.  (ve’lippaduththina  viseasham  14:17)

அக்கினியின்மேல்  அதிகாரமுள்ள  வேறொரு  தூதனும்  பலிபீடத்திலிருந்து  புறப்பட்டுவந்து,  கருக்குள்ள  அரிவாளைப்  பிடித்திருக்கிறவனை  நோக்கி:  பூமியின்  திராட்சப்பழங்கள்  பழுத்திருக்கிறது,  கருக்குள்ள  உமது  அரிவாளை  நீட்டி,  அதின்  குலைகளை  அறுத்துவிடும்  என்று  மிகுந்த  சத்தத்தோடே  சொன்னான்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  14:18)

akkiniyinmeal  athigaaramu'l'la  vea’roru  thoothanum  balipeedaththilirunthu  pu’rappattuvanthu,  karukku'l'la  arivaa'laip  pidiththirukki’ravanai  noakki:  boomiyin  thiraadchappazhangga'l  pazhuththirukki’rathu,  karukku'l'la  umathu  arivaa'lai  neetti,  athin  kulaiga'lai  a’ruththuvidum  en’ru  miguntha  saththaththoadea  sonnaan.  (ve’lippaduththina  viseasham  14:18)

அப்பொழுது  அந்தத்  தூதன்  தன்  அரிவாளைப்  பூமியின்மேலே  நீட்டி,  பூமியின்  திராட்சப்பழங்களை  அறுத்து,  தேவனுடைய  கோபாக்கினையென்னும்  பெரிய  ஆலையிலே  போட்டான்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  14:19)

appozhuthu  anthath  thoothan  than  arivaa'laip  boomiyinmealea  neetti,  boomiyin  thiraadchappazhangga'lai  a’ruththu,  theavanudaiya  koabaakkinaiyennum  periya  aalaiyilea  poattaan.  (ve’lippaduththina  viseasham  14:19)

நகரத்திற்குப்  புறம்பேயுள்ள  அந்த  ஆலையிலே  அது  மிதிக்கப்பட்டது;  அந்த  ஆலையிலிருந்து  ஆயிரத்தறுநூறு  ஸ்தாதி  தூரத்திற்கு  இரத்தம்  புறப்பட்டுக்  குதிரைகளின்  கடிவாளங்கள்மட்டும்  பெருகிவந்தது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  14:20)

nagaraththi’rkup  pu’rambeayu'l'la  antha  aalaiyilea  athu  mithikkappattathu;  antha  aalaiyilirunthu  aayiraththa’runoo’ru  sthaathi  thooraththi’rku  iraththam  pu’rappattuk  kuthiraiga'lin  kadivaa'langga'lmattum  perugivanthathu.  (ve’lippaduththina  viseasham  14:20)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!