Thursday, June 16, 2016

Ve’lippaduththina Viseasham 13 | வெளிப்படுத்தின விசேஷம் 13 | Revelation 13

பின்பு  நான்  கடற்கரை  மணலின்மேல்  நின்றேன்.  அப்பொழுது  சமுத்திரத்திலிருந்து  ஒரு  மிருகம்  எழும்பிவரக்  கண்டேன்;  அதற்கு  ஏழு  தலைகளும்  பத்துக்  கொம்புகளும்  இருந்தன;  அதின்  கொம்புகளின்மேல்  பத்து  முடிகளும்,  அதின்  தலைகளின்மேல்  தூஷணமான  நாமமும்  இருந்தன.  (வெளிப்படுத்தின  விசேஷம்  13:1)

pinbu  naan  kada’rkarai  ma'nalinmeal  nin’rean.  appozhuthu  samuththiraththilirunthu  oru  mirugam  ezhumbivarak  ka'ndean;  atha’rku  eazhu  thalaiga'lum  paththuk  kombuga'lum  irunthana;  athin  kombuga'linmeal  paththu  mudiga'lum,  athin  thalaiga'linmeal  thoosha'namaana  naamamum  irunthana.  (ve’lippaduththina  viseasham  13:1)

நான்  கண்ட  மிருகம்  சிறுத்தையைப்போலிருந்தது;  அதின்  கால்கள்  கரடியின்  கால்களைப்போலவும்,  அதின்  வாய்  சிங்கத்தின்  வாயைப்போலவும்  இருந்தன;  வலுசர்ப்பமானது  தன்  பலத்தையும்  தன்  சிங்காசனத்தையும்  மிகுந்த  அதிகாரத்தையும்  அதற்குக்  கொடுத்தது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  13:2)

naan  ka'nda  mirugam  si’ruththaiyaippoalirunthathu;  athin  kaalga'l  karadiyin  kaalga'laippoalavum,  athin  vaay  singgaththin  vaayaippoalavum  irunthana;  valusarppamaanathu  than  balaththaiyum  than  singgaasanaththaiyum  miguntha  athigaaraththaiyum  atha’rkuk  koduththathu.  (ve’lippaduththina  viseasham  13:2)

அதின்  தலைகளிலொன்று  சாவுக்கேதுவாய்க்  காயப்பட்டிருக்கக்  கண்டேன்;  ஆனாலும்  சாவுக்கேதுவான  அந்தக்  காயம்  சொஸ்தமாக்கப்பட்டது.  பூமியிலுள்ள  யாவரும்  ஆச்சரியத்தோடே  அந்த  மிருகத்தைப்  பின்பற்றி,  (வெளிப்படுத்தின  விசேஷம்  13:3)

athin  thalaiga'lilon’ru  saavukkeathuvaayk  kaayappattirukkak  ka'ndean;  aanaalum  saavukkeathuvaana  anthak  kaayam  sosthamaakkappattathu.  boomiyilu'l'la  yaavarum  aachchariyaththoadea  antha  mirugaththaip  pinpat’ri,  (ve’lippaduththina  viseasham  13:3)

அந்த  மிருகத்திற்கு  அப்படிப்பட்ட  அதிகாரங்கொடுத்த  வலுசர்ப்பத்தை  வணங்கினார்கள்.  அல்லாமலும்:  மிருகத்திற்கு  ஒப்பானவன்  யார்?  அதினோடே  யுத்தம்பண்ணத்தக்கவன்  யார்?  என்று  சொல்லி,  மிருகத்தையும்  வணங்கினார்கள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  13:4)

antha  mirugaththi’rku  appadippatta  athigaarangkoduththa  valusarppaththai  va'nangginaarga'l.  allaamalum:  mirugaththi’rku  oppaanavan  yaar?  athinoadea  yuththampa'n'naththakkavan  yaar?  en’ru  solli,  mirugaththaiyum  va'nangginaarga'l.  (ve’lippaduththina  viseasham  13:4)

பெருமையானவைகளையும்  தூஷணங்களையும்  பேசும்  வாய்  அதற்குக்  கொடுக்கப்பட்டது;  அல்லாமலும்,  நாற்பத்திரண்டு  மாதம்  யுத்தம்பண்ண  அதற்கு  அதிகாரங்  கொடுக்கப்பட்டது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  13:5)

perumaiyaanavaiga'laiyum  thoosha'nangga'laiyum  peasum  vaay  atha’rkuk  kodukkappattathu;  allaamalum,  naa’rpaththira'ndu  maatham  yuththampa'n'na  atha’rku  athigaarang  kodukkappattathu.  (ve’lippaduththina  viseasham  13:5)

அது  தேவனைத்  தூஷிக்கும்படி  தன்  வாயைத்  திறந்து,  அவருடைய  நாமத்தையும்,  அவருடைய  வாசஸ்தலத்தையும்,  பரலோகத்தில்  வாசமாயிருக்கிறவர்களையும்  தூஷித்தது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  13:6)

athu  theavanaith  thooshikkumpadi  than  vaayaith  thi’ranthu,  avarudaiya  naamaththaiyum,  avarudaiya  vaasasthalaththaiyum,  paraloagaththil  vaasamaayirukki’ravarga'laiyum  thooshiththathu.  (ve’lippaduththina  viseasham  13:6)

மேலும்,  பரிசுத்தவான்களோடே  யுத்தம்பண்ணி  அவர்களை  ஜெயிக்கும்படிக்கு  அதற்கு  அதிகாரங்கொடுக்கப்பட்டதுமல்லாமல்,  ஒவ்வொரு  கோத்திரத்தின்மேலும்  பாஷைக்காரர்மேலும்  ஜாதிகள்மேலும்  அதற்கு  அதிகாரங்கொடுக்கப்பட்டது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  13:7)

mealum,  parisuththavaanga'loadea  yuththampa'n'ni  avarga'lai  jeyikkumpadikku  atha’rku  athigaarangkodukkappattathumallaamal,  ovvoru  koaththiraththinmealum  baashaikkaararmealum  jaathiga'lmealum  atha’rku  athigaarangkodukkappattathu.  (ve’lippaduththina  viseasham  13:7)

உலகத்தோற்றமுதல்  அடிக்கப்பட்ட  ஆட்டுக்குட்டியினுடைய  ஜீவபுஸ்தகத்தில்  பேரெழுதப்பட்டிராத  பூமியின்  குடிகள்  யாவரும்  அதை  வணங்குவார்கள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  13:8)

ulagaththoat’ramuthal  adikkappatta  aattukkuttiyinudaiya  jeevapusthagaththil  pearezhuthappattiraatha  boomiyin  kudiga'l  yaavarum  athai  va'nangguvaarga'l.  (ve’lippaduththina  viseasham  13:8)

காதுள்ளவனெவனோ  அவன்  கேட்கக்கடவன்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  13:9)

kaathu'l'lavanevanoa  avan  keadkakkadavan.  (ve’lippaduththina  viseasham  13:9)

சிறைப்படுத்திக்கொண்டு  போகிறவன்  சிறைப்பட்டுப்போவான்;  பட்டயத்தினாலே  கொல்லுகிறவன்  பட்டயத்தினாலே  கொல்லப்படவேண்டும்.  பரிசுத்தவான்களுடைய  பொறுமையும்  விசுவாசமும்  இதிலே  விளங்கும்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  13:10)

si’raippaduththikko'ndu  poagi’ravan  si’raippattuppoavaan;  pattayaththinaalea  kollugi’ravan  pattayaththinaalea  kollappadavea'ndum.  parisuththavaanga'ludaiya  po’rumaiyum  visuvaasamum  ithilea  vi'langgum.  (ve’lippaduththina  viseasham  13:10)

பின்பு,  வேறொரு  மிருகம்  பூமியிலிருந்து  எழும்பக்  கண்டேன்;  அது  ஒரு  ஆட்டுக்குட்டிக்கு  ஒப்பாக  இரண்டு  கொம்புகளையுடையதாயிருந்து,  வலுசர்ப்பத்தைப்போலப்  பேசினது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  13:11)

pinbu,  vea’roru  mirugam  boomiyilirunthu  ezhumbak  ka'ndean;  athu  oru  aattukkuttikku  oppaaga  ira'ndu  kombuga'laiyudaiyathaayirunthu,  valusarppaththaippoalap  peasinathu.  (ve’lippaduththina  viseasham  13:11)

அது  முந்தின  மிருகத்தின்  அதிகாரம்  முழுவதையும்  அதின்  முன்பாக  நடப்பித்து,  சாவுக்கேதுவான  காயம்  ஆறச்  சொஸ்தமடைந்த  முந்தின  மிருகத்தைப்  பூமியும்  அதின்  குடிகளும்  வணங்கும்படி  செய்தது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  13:12)

athu  munthina  mirugaththin  athigaaram  muzhuvathaiyum  athin  munbaaga  nadappiththu,  saavukkeathuvaana  kaayam  aa’rach  sosthamadaintha  munthina  mirugaththaip  boomiyum  athin  kudiga'lum  va'nanggumpadi  seythathu.  (ve’lippaduththina  viseasham  13:12)

அன்றியும்,  அது  மனுஷருக்குமுன்பாக  வானத்திலிருந்து  பூமியின்மேல்  அக்கினியை  இறங்கப்பண்ணத்தக்கதாகப்  பெரிய  அற்புதங்களை  நடப்பித்து,  (வெளிப்படுத்தின  விசேஷம்  13:13)

an’riyum,  athu  manusharukkumunbaaga  vaanaththilirunthu  boomiyinmeal  akkiniyai  i’ranggappa'n'naththakkathaagap  periya  a’rputhangga'lai  nadappiththu,  (ve’lippaduththina  viseasham  13:13)

மிருகத்தின்முன்பாக  அந்த  அற்புதங்களைச்  செய்யும்படி  தனக்குக்  கொடுக்கப்பட்ட  சத்துவத்தினாலே  பூமியின்  குடிகளை  மோசம்போக்கி,  பட்டயத்தினாலே  காயப்பட்டுப்  பிழைத்த  மிருகத்திற்கு  ஒரு  சொரூபம்  பண்ணவேண்டுமென்று  பூமியின்  குடிகளுக்குச்  சொல்லிற்று.  (வெளிப்படுத்தின  விசேஷம்  13:14)

mirugaththinmunbaaga  antha  a’rputhangga'laich  seyyumpadi  thanakkuk  kodukkappatta  saththuvaththinaalea  boomiyin  kudiga'lai  moasampoakki,  pattayaththinaalea  kaayappattup  pizhaiththa  mirugaththi’rku  oru  soroobam  pa'n'navea'ndumen’ru  boomiyin  kudiga'lukkuch  sollit’ru.  (ve’lippaduththina  viseasham  13:14)

மேலும்  அம்மிருகத்தின்  சொரூபம்  பேசத்தக்கதாகவும்,  மிருகத்தின்  சொரூபத்தை  வணங்காத  யாவரையும்  கொலைசெய்யத்தக்கதாகவும்,  மிருகத்தின்  சொரூபத்திற்கு  ஆவியைக்  கொடுக்கும்படி  அதற்குச்  சத்துவங்கொடுக்கப்பட்டது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  13:15)

mealum  ammirugaththin  soroobam  peasaththakkathaagavum,  mirugaththin  soroobaththai  va'nanggaatha  yaavaraiyum  kolaiseyyaththakkathaagavum,  mirugaththin  soroobaththi’rku  aaviyaik  kodukkumpadi  atha’rkuch  saththuvangkodukkappattathu.  (ve’lippaduththina  viseasham  13:15)

அது  சிறியோர்,  பெரியோர்,  ஐசுவரியவான்கள்,  தரித்திரர்,  சுயாதீனர்,  அடிமைகள்,  இவர்கள்  யாவரும்  தங்கள்  தங்கள்  வலதுகைகளிலாவது  நெற்றிகளிலாவது  ஒரு  முத்திரையைப்  பெறும்படிக்கும்,  (வெளிப்படுத்தின  விசேஷம்  13:16)

athu  si’riyoar,  periyoar,  aisuvariyavaanga'l,  thariththirar,  suyaatheenar,  adimaiga'l,  ivarga'l  yaavarum  thangga'l  thangga'l  valathukaiga'lilaavathu  net’riga'lilaavathu  oru  muththiraiyaip  pe’rumpadikkum,  (ve’lippaduththina  viseasham  13:16)

அந்த  மிருகத்தின்  முத்திரையையாவது  அதின்  நாமத்தையாவது  அதின்  நாமத்தின்  இலக்கத்தையாவது  தரித்துக்கொள்ளுகிறவன்  தவிர  வேறொருவனும்  கொள்ளவும்  விற்கவுங்  கூடாதபடிக்கும்  செய்தது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  13:17)

antha  mirugaththin  muththiraiyaiyaavathu  athin  naamaththaiyaavathu  athin  naamaththin  ilakkaththaiyaavathu  thariththukko'l'lugi’ravan  thavira  vea’roruvanum  ko'l'lavum  vi’rkavung  koodaathapadikkum  seythathu.  (ve’lippaduththina  viseasham  13:17)

இதிலே  ஞானம்  விளங்கும்;  அந்த  மிருகத்தின்  இலக்கத்தைப்  புத்தியுடையவன்  கணக்குப்பார்க்கக்கடவன்;  அது  மனுஷனுடைய  இலக்கமாயிருக்கிறது;  அதினுடைய  இலக்கம்  அறுநூற்றறுபத்தாறு.  (வெளிப்படுத்தின  விசேஷம்  13:18)

ithilea  gnaanam  vi'langgum;  antha  mirugaththin  ilakkaththaip  buththiyudaiyavan  ka'nakkuppaarkkakkadavan;  athu  manushanudaiya  ilakkamaayirukki’rathu;  athinudaiya  ilakkam  a’runoot’ra’rubaththaa’ru.  (ve’lippaduththina  viseasham  13:18)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!