Thursday, June 16, 2016

Ve’lippaduththina Viseasham 12 | வெளிப்படுத்தின விசேஷம் 12 | Revelation 12

அன்றியும்  ஒரு  பெரிய  அடையாளம்  வானத்திலே  காணப்பட்டது;  ஒரு  ஸ்திரீ  சூரியனை  அணிந்திருந்தாள்,  அவள்  பாதங்களின்  கீழே  சந்திரனும்,  அவள்  சிரசின்மேல்  பன்னிரண்டு  நட்சத்திரங்களுள்ள  கிரீடமும்  இருந்தன.  (வெளிப்படுத்தின  விசேஷம்  12:1)

an’riyum  oru  periya  adaiyaa'lam  vaanaththilea  kaa'nappattathu;  oru  sthiree  sooriyanai  a'ninthirunthaa'l,  ava'l  paathangga'lin  keezhea  santhiranum,  ava'l  sirasinmeal  pannira'ndu  nadchaththirangga'lu'l'la  kireedamum  irunthana.  (ve’lippaduththina  viseasham  12:1)

அவள்  கர்ப்பவதியாயிருந்து,  பிரசவவேதனையடைந்து,  பிள்ளைபெறும்படி  வருத்தப்பட்டு  அலறினாள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  12:2)

ava'l  karppavathiyaayirunthu,  pirasavaveathanaiyadainthu,  pi'l'laipe’rumpadi  varuththappattu  ala’rinaa'l.  (ve’lippaduththina  viseasham  12:2)

அப்பொழுது  வேறொரு  அடையாளம்  வானத்திலே  காணப்பட்டது;  ஏழு  தலைகளையும்,  பத்துக்  கொம்புகளையும்,  தன்  தலைகளின்மேல்  ஏழு  முடிகளையுமுடைய  சிவப்பான  பெரிய  வலுசர்ப்பமிருந்தது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  12:3)

appozhuthu  vea’roru  adaiyaa'lam  vaanaththilea  kaa'nappattathu;  eazhu  thalaiga'laiyum,  paththuk  kombuga'laiyum,  than  thalaiga'linmeal  eazhu  mudiga'laiyumudaiya  sivappaana  periya  valusarppamirunthathu.  (ve’lippaduththina  viseasham  12:3)

அதின்  வால்  வானத்தின்  நட்சத்திரங்களில்  மூன்றிலொருபங்கை  இழுத்து,  அவைகளைப்  பூமியில்  விழத்தள்ளிற்று;  பிரசவவேதனைப்படுகிற  அந்த  ஸ்திரீ  பிள்ளை  பெற்றவுடனே,  அவளுடைய  பிள்ளையைப்  பட்சித்துப்போடும்படிக்கு  அந்த  வலுசர்ப்பம்  அவளுக்கு  முன்பாக  நின்றது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  12:4)

athin  vaal  vaanaththin  nadchaththirangga'lil  moon’rilorupanggai  izhuththu,  avaiga'laip  boomiyil  vizhaththa'l'lit’ru;  pirasavaveathanaippadugi’ra  antha  sthiree  pi'l'lai  pet’ravudanea,  ava'ludaiya  pi'l'laiyaip  padchiththuppoadumpadikku  antha  valusarppam  ava'lukku  munbaaga  nin’rathu.  (ve’lippaduththina  viseasham  12:4)

சகல  ஜாதிகளையும்  இருப்புக்கோலால்  ஆளுகைசெய்யும்  ஆண்பிள்ளையை  அவள்  பெற்றாள்;  அவளுடைய  பிள்ளை  தேவனிடத்திற்கும்  அவருடைய  சிங்காசனத்தினிடத்திற்கும்  எடுத்துக்கொள்ளப்பட்டது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  12:5)

sagala  jaathiga'laiyum  iruppukkoalaal  aa'lugaiseyyum  aa'npi'l'laiyai  ava'l  pet’raa'l;  ava'ludaiya  pi'l'lai  theavanidaththi’rkum  avarudaiya  singgaasanaththinidaththi’rkum  eduththukko'l'lappattathu.  (ve’lippaduththina  viseasham  12:5)

ஸ்திரீயானவள்  வனாந்தரத்திற்கு  ஓடிப்போனாள்;  அங்கே  ஆயிரத்திருநூற்றறுபதுநாளளவும்  அவளைப்  போஷிப்பதற்காகத்  தேவனால்  ஆயத்தமாக்கப்பட்ட  இடம்  அவளுக்கு  உண்டாயிருந்தது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  12:6)

sthireeyaanava'l  vanaantharaththi’rku  oadippoanaa'l;  anggea  aayiraththirunoot’ra’rubathunaa'la'lavum  ava'laip  poashippatha’rkaagath  theavanaal  aayaththamaakkappatta  idam  ava'lukku  u'ndaayirunthathu.  (ve’lippaduththina  viseasham  12:6)

வானத்திலே  யுத்தமுண்டாயிற்று;  மிகாவேலும்  அவனைச்  சேர்ந்த  தூதர்களும்  வலுசர்ப்பத்தோடே  யுத்தம்பண்ணினார்கள்;  வலுசர்ப்பமும்  அதைச்சேர்ந்த  தூதரும்  யுத்தம்பண்ணியும்  ஜெயங்கொள்ளவில்லை.  (வெளிப்படுத்தின  விசேஷம்  12:7)

vaanaththilea  yuththamu'ndaayit’ru;  migaavealum  avanaich  searntha  thootharga'lum  valusarppaththoadea  yuththampa'n'ninaarga'l;  valusarppamum  athaichsearntha  thootharum  yuththampa'n'niyum  jeyangko'l'lavillai.  (ve’lippaduththina  viseasham  12:7)

வானத்தில்  அவர்கள்  இருந்த  இடமும்  காணப்படாமற்போயிற்று.  (வெளிப்படுத்தின  விசேஷம்  12:8)

vaanaththil  avarga'l  iruntha  idamum  kaa'nappadaama’rpoayit’ru.  (ve’lippaduththina  viseasham  12:8)

உலகமனைத்தையும்  மோசம்போக்குகிற  பிசாசு  என்றும்  சாத்தான்  என்றும்  சொல்லப்பட்ட  பழைய  பாம்பாகிய  பெரிய  வலுசர்ப்பம்  தள்ளப்பட்டது;  அது  பூமியிலே  விழத்தள்ளப்பட்டது,  அதனோடேகூட  அதைச்சேர்ந்த  தூதரும்  தள்ளப்பட்டார்கள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  12:9)

ulagamanaiththaiyum  moasampoakkugi’ra  pisaasu  en’rum  saaththaan  en’rum  sollappatta  pazhaiya  paambaagiya  periya  valusarppam  tha'l'lappattathu;  athu  boomiyilea  vizhaththa'l'lappattathu,  athanoadeakooda  athaichsearntha  thootharum  tha'l'lappattaarga'l.  (ve’lippaduththina  viseasham  12:9)

அப்பொழுது  வானத்திலே  ஒரு  பெரிய  சத்தமுண்டாகி:  இப்பொழுது  இரட்சிப்பும்  வல்லமையும்  நமது  தேவனுடைய  ராஜ்யமும்,  அவருடைய  கிறிஸ்துவின்  அதிகாரமும்  உண்டாயிருக்கிறது;  இரவும்  பகலும்  நம்முடைய  தேவனுக்கு  முன்பாக  நம்முடைய  சகோதரர்மேல்  குற்றஞ்  சுமத்தும்பொருட்டு  அவர்கள்மேல்  குற்றஞ்சாட்டுகிறவன்  தாழத்  தள்ளப்பட்டுப்போனான்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  12:10)

appozhuthu  vaanaththilea  oru  periya  saththamu'ndaagi:  ippozhuthu  iradchippum  vallamaiyum  namathu  theavanudaiya  raajyamum,  avarudaiya  ki’risthuvin  athigaaramum  u'ndaayirukki’rathu;  iravum  pagalum  nammudaiya  theavanukku  munbaaga  nammudaiya  sagoathararmeal  kut’ragn  sumaththumporuttu  avarga'lmeal  kut’ragnsaattugi’ravan  thaazhath  tha'l'lappattuppoanaan.  (ve’lippaduththina  viseasham  12:10)

மரணம்  நேரிடுகிறதாயிருந்தாலும்  அதற்குத்  தப்பும்படி  தங்கள்  ஜீவனையும்  பாராமல்,  ஆட்டுக்குட்டியின்  இரத்தத்தினாலும்  தங்கள்  சாட்சியின்  வசனத்தினாலும்  அவனை  ஜெயித்தார்கள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  12:11)

mara'nam  nearidugi’rathaayirunthaalum  atha’rkuth  thappumpadi  thangga'l  jeevanaiyum  paaraamal,  aattukkuttiyin  iraththaththinaalum  thangga'l  saadchiyin  vasanaththinaalum  avanai  jeyiththaarga'l.  (ve’lippaduththina  viseasham  12:11)

ஆகையால்  பரலோகங்களே!  அவைகளில்  வாசமாயிருக்கிறவர்களே!  களிகூருங்கள்.  பூமியிலும்  சமுத்திரத்திலும்  குடியிருக்கிறவர்களே!  ஐயோ,  பிசாசானவன்  தனக்குக்  கொஞ்சக்காலமாத்திரம்  உண்டென்று  அறிந்து,  மிகுந்த  கோபங்கொண்டு,  உங்களிடத்தில்  இறங்கினபடியால்,  உங்களுக்கு  ஆபத்துவரும்  என்று  சொல்லக்கேட்டேன்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  12:12)

aagaiyaal  paraloagangga'lea!  avaiga'lil  vaasamaayirukki’ravarga'lea!  ka'likoorungga'l.  boomiyilum  samuththiraththilum  kudiyirukki’ravarga'lea!  aiyoa,  pisaasaanavan  thanakkuk  kognchakkaalamaaththiram  u'nden’ru  a’rinthu,  miguntha  koabangko'ndu,  ungga'lidaththil  i’rangginapadiyaal,  ungga'lukku  aabaththuvarum  en’ru  sollakkeattean.  (ve’lippaduththina  viseasham  12:12)

வலுசர்ப்பமானது  தான்  பூமியிலே  தள்ளப்பட்டதை  அறிந்து,  அந்த  ஆண்பிள்ளையைப்பெற்ற  ஸ்திரீயைத்  துன்பப்படுத்தினது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  12:13)

valusarppamaanathu  thaan  boomiyilea  tha'l'lappattathai  a’rinthu,  antha  aa'npi'l'laiyaippet’ra  sthireeyaith  thunbappaduththinathu.  (ve’lippaduththina  viseasham  12:13)

ஸ்திரீயானவள்  அந்தப்  பாம்பின்  முகத்திற்கு  விலகி,  ஒரு  காலமும்,  காலங்களும்,  அரைக்காலமுமாகப்  போஷிக்கப்படத்தக்கதாய்  வனாந்தரத்திலுள்ள  தன்  இடத்திற்குப்  பறந்துபோகும்படி  பெருங்கழுகின்  இரண்டு  சிறகுகள்  அவளுக்குக்  கொடுக்கப்பட்டது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  12:14)

sthireeyaanava'l  anthap  paambin  mugaththi’rku  vilagi,  oru  kaalamum,  kaalangga'lum,  araikkaalamumaagap  poashikkappadaththakkathaay  vanaantharaththilu'l'la  than  idaththi’rkup  pa’ranthupoagumpadi  perungkazhugin  ira'ndu  si’raguga'l  ava'lukkuk  kodukkappattathu.  (ve’lippaduththina  viseasham  12:14)

அப்பொழுது  அந்த  ஸ்திரீயை  வெள்ளங்கொண்டுபோகும்படிக்குப்  பாம்பானது  தன்  வாயிலிருந்து  ஒரு  நதிபோன்ற  வெள்ளத்தை  அவளுக்குப்  பின்னாக  ஊற்றிவிட்டது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  12:15)

appozhuthu  antha  sthireeyai  ve'l'langko'ndupoagumpadikkup  paambaanathu  than  vaayilirunthu  oru  nathipoan’ra  ve'l'laththai  ava'lukkup  pinnaaga  oot’rivittathu.  (ve’lippaduththina  viseasham  12:15)

பூமியானது  ஸ்திரீக்கு  உதவியாகத்  தன்  வாயைத்  திறந்து,  வலுசர்ப்பம்  தன்  வாயிலிருந்து  ஊற்றின  வெள்ளத்தை  விழுங்கினது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  12:16)

boomiyaanathu  sthireekku  uthaviyaagath  than  vaayaith  thi’ranthu,  valusarppam  than  vaayilirunthu  oot’rina  ve'l'laththai  vizhungginathu.  (ve’lippaduththina  viseasham  12:16)

அப்பொழுது  வலுசர்ப்பமானது  ஸ்திரீயின்மேல்  கோபங்கொண்டு,  தேவனுடைய  கற்பனைகளைக்  கைக்கொள்ளுகிறவர்களும்,  இயேசுகிறிஸ்துவைக்குறித்துச்  சாட்சியை  உடையவர்களுமாகிய  அவளுடைய  சந்ததியான  மற்றவர்களுடனே  யுத்தம்பண்ணப்போயிற்று.  (வெளிப்படுத்தின  விசேஷம்  12:17)

appozhuthu  valusarppamaanathu  sthireeyinmeal  koabangko'ndu,  theavanudaiya  ka’rpanaiga'laik  kaikko'l'lugi’ravarga'lum,  iyeasuki’risthuvaikku’riththuch  saadchiyai  udaiyavarga'lumaagiya  ava'ludaiya  santhathiyaana  mat’ravarga'ludanea  yuththampa'n'nappoayit’ru.  (ve’lippaduththina  viseasham  12:17)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!