Thursday, June 16, 2016

Ve’lippaduththina Viseasham 11 | வெளிப்படுத்தின விசேஷம் 11 | Revelation 11


பின்பு  கைக்கோலுக்கு  ஒப்பான  ஒரு  அளவுகோல்  என்னிடத்தில்  கொடுக்கப்பட்டது.  அப்பொழுது  தேவதூதன்  நின்று,  என்னை  நோக்கி:  நீ  எழுந்து,  தேவனுடைய  ஆலயத்தையும்,  பலிபீடத்தையும்,  அதில்  தொழுதுகொள்ளுகிறவர்களையும்  அளந்துபார்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  11:1)

pinbu  kaikkoalukku  oppaana  oru  a'lavukoal  ennidaththil  kodukkappattathu.  appozhuthu  theavathoothan  nin’ru,  ennai  noakki:  nee  ezhunthu,  theavanudaiya  aalayaththaiyum,  balipeedaththaiyum,  athil  thozhuthuko'l'lugi’ravarga'laiyum  a'lanthupaar.  (ve’lippaduththina  viseasham  11:1)

ஆலயத்திற்குப்  புறம்பே  இருக்கிற  பிராகாரம்  புறஜாதியாருக்குக்  கொடுக்கப்பட்டபடியால்  அதை  அளவாமல்  புறம்பாக்கிப்போடு;  பரிசுத்த  நகரத்தை  அவர்கள்  நாற்பத்திரண்டு  மாதமளவும்  மிதிப்பார்கள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  11:2)

aalayaththi’rkup  pu’rambea  irukki’ra  piraagaaram  pu’rajaathiyaarukkuk  kodukkappattapadiyaal  athai  a'lavaamal  pu’rambaakkippoadu;  parisuththa  nagaraththai  avarga'l  naa’rpaththira'ndu  maathama'lavum  mithippaarga'l.  (ve’lippaduththina  viseasham  11:2)

என்னுடைய  இரண்டு  சாட்சிகளும்  இரட்டு  வஸ்திரமுடுத்திக்கொண்டிருக்கிறவர்களாய்,  ஆயிரத்திருநூற்றறுபது  நாளளவும்  தீர்க்கதரிசனஞ்சொல்லும்படி  அவர்களுக்கு  அதிகாரம்  கொடுப்பேன்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  11:3)

ennudaiya  ira'ndu  saadchiga'lum  irattu  vasthiramuduththikko'ndirukki’ravarga'laay,  aayiraththirunoot’ra’rubathu  naa'la'lavum  theerkkatharisanagnsollumpadi  avarga'lukku  athigaaram  koduppean.  (ve’lippaduththina  viseasham  11:3)

பூலோகத்தின்  ஆண்டவருக்குமுன்பாக  நிற்கிற  இரண்டு  ஒலிவமரங்களும்  இரண்டு  விளக்குத்தண்டுகளும்  இவர்களே.  (வெளிப்படுத்தின  விசேஷம்  11:4)

booloagaththin  aa'ndavarukkumunbaaga  ni’rki’ra  ira'ndu  olivamarangga'lum  ira'ndu  vi'lakkuththa'nduga'lum  ivarga'lea.  (ve’lippaduththina  viseasham  11:4)

ஒருவன்  அவர்களைச்  சேதப்படுத்த  மனதாயிருந்தால்,  அவர்களுடைய  வாயிலிருந்து  அக்கினி  புறப்பட்டு,  அவர்களுடைய  சத்துருக்களைப்  பட்சிக்கும்;  அவர்களைச்  சேதப்படுத்த  மனதாயிருக்கிறவன்  எவனோ  அவன்  அப்படியே  கொல்லப்படவேண்டும்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  11:5)

oruvan  avarga'laich  seathappaduththa  manathaayirunthaal,  avarga'ludaiya  vaayilirunthu  akkini  pu’rappattu,  avarga'ludaiya  saththurukka'laip  padchikkum;  avarga'laich  seathappaduththa  manathaayirukki’ravan  evanoa  avan  appadiyea  kollappadavea'ndum.  (ve’lippaduththina  viseasham  11:5)

அவர்கள்  தீர்க்கதரிசனஞ்  சொல்லிவருகிற  நாட்களிலே  மழைபெய்யாதபடிக்கு  வானத்தை  அடைக்க  அவர்களுக்கு  அதிகாரமுண்டு;  அவர்கள்  தண்ணீர்களை  இரத்தமாக  மாற்றவும்,  தங்களுக்கு  வேண்டும்போதெல்லாம்  பூமியைச்  சகலவித  வாதைகளாலும்  வாதிக்கவும்  அவர்களுக்கு  அதிகாரமுண்டு.  (வெளிப்படுத்தின  விசேஷம்  11:6)

avarga'l  theerkkatharisanagn  sollivarugi’ra  naadka'lilea  mazhaipeyyaathapadikku  vaanaththai  adaikka  avarga'lukku  athigaaramu'ndu;  avarga'l  tha'n'neerga'lai  iraththamaaga  maat’ravum,  thangga'lukku  vea'ndumpoathellaam  boomiyaich  sagalavitha  vaathaiga'laalum  vaathikkavum  avarga'lukku  athigaaramu'ndu.  (ve’lippaduththina  viseasham  11:6)

அவர்கள்  தங்கள்  சாட்சியைச்  சொல்லி  முடித்திருக்கும்போது,  பாதாளத்திலிருந்தேறுகிற  மிருகம்  அவர்களோடே  யுத்தம்பண்ணி,  அவர்களை  ஜெயித்து,  அவர்களைக்  கொன்றுபோடும்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  11:7)

avarga'l  thangga'l  saadchiyaich  solli  mudiththirukkumpoathu,  paathaa'laththilirunthea’rugi’ra  mirugam  avarga'loadea  yuththampa'n'ni,  avarga'lai  jeyiththu,  avarga'laik  kon’rupoadum.  (ve’lippaduththina  viseasham  11:7)

அவர்களுடைய  உடல்கள்  மகா  நகரத்தின்  விசாலமான  வீதியிலே  கிடக்கும்.  அந்த  நகரம்  சோதோம்  என்றும்  எகிப்து  என்றும்  ஞானார்த்தமாய்ச்  சொல்லப்படும்;  அதிலே  நம்முடைய  கர்த்தரும்  சிலுவையிலே  அறையப்பட்டார்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  11:8)

avarga'ludaiya  udalga'l  mahaa  nagaraththin  visaalamaana  veethiyilea  kidakkum.  antha  nagaram  soathoam  en’rum  egipthu  en’rum  gnaanaarththamaaych  sollappadum;  athilea  nammudaiya  karththarum  siluvaiyilea  a’raiyappattaar.  (ve’lippaduththina  viseasham  11:8)

ஜனங்களிலும்,  கோத்திரங்களிலும்,  பாஷைக்காரரிலும்,  ஜாதிகளிலுமுள்ளவர்கள்  அவர்களுடைய  உடல்களை  மூன்றரை  நாள்வரைக்கும்  பார்ப்பார்கள்,  அவர்களுடைய  உடல்களைக்  கல்லறைகளில்  வைக்கவொட்டார்கள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  11:9)

janangga'lilum,  koaththirangga'lilum,  baashaikkaararilum,  jaathiga'lilumu'l'lavarga'l  avarga'ludaiya  udalga'lai  moon’rarai  naa'lvaraikkum  paarppaarga'l,  avarga'ludaiya  udalga'laik  kalla’raiga'lil  vaikkavottaarga'l.  (ve’lippaduththina  viseasham  11:9)

அவ்விரண்டு  தீர்க்கதரிசிகளும்  பூமியின்  குடிகளை  வேதனைப்படுத்தினபடியால்  அவர்கள்  நிமித்தம்  பூமியில்  குடியிருக்கிறவர்கள்  சந்தோஷப்பட்டுக்  களிகூர்ந்து,  ஒருவருக்கொருவர்  வெகுமதிகளை  அனுப்புவார்கள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  11:10)

avvira'ndu  theerkkatharisiga'lum  boomiyin  kudiga'lai  veathanaippaduththinapadiyaal  avarga'l  nimiththam  boomiyil  kudiyirukki’ravarga'l  santhoashappattuk  ka'likoornthu,  oruvarukkoruvar  vegumathiga'lai  anuppuvaarga'l.  (ve’lippaduththina  viseasham  11:10)

மூன்றரை  நாளைக்குப்பின்பு  தேவனிடத்திலிருந்து  ஜீவஆவி  அவர்களுக்குள்  பிரவேசித்தது,  அப்பொழுது  அவர்கள்  காலூன்றி  நின்றார்கள்;  அவர்களைப்  பார்த்தவர்களுக்கு  மிகுந்த  பயமுண்டாயிற்று.  (வெளிப்படுத்தின  விசேஷம்  11:11)

moon’rarai  naa'laikkuppinbu  theavanidaththilirunthu  jeevaaavi  avarga'lukku'l  piraveasiththathu,  appozhuthu  avarga'l  kaaloon’ri  nin’raarga'l;  avarga'laip  paarththavarga'lukku  miguntha  bayamu'ndaayit’ru.  (ve’lippaduththina  viseasham  11:11)

இங்கே  ஏறிவாருங்கள்  என்று  வானத்திலிருந்து  தங்களுக்கு  உண்டான  பெரிய  சத்தத்தை  அவர்கள்  கேட்டு,  மேகத்தில்  ஏறி  வானத்திற்குப்  போனார்கள்;  அவர்களுடைய  சத்துருக்கள்  அவர்களைப்  பார்த்தார்கள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  11:12)

inggea  ea’rivaarungga'l  en’ru  vaanaththilirunthu  thangga'lukku  u'ndaana  periya  saththaththai  avarga'l  keattu,  meagaththil  ea’ri  vaanaththi’rkup  poanaarga'l;  avarga'ludaiya  saththurukka'l  avarga'laip  paarththaarga'l.  (ve’lippaduththina  viseasham  11:12)

அந்நேரத்திலே  பூமி  மிகவும்  அதிர்ந்தது,  உடனே  அந்த  நகரத்தில்  பத்திலொருபங்கு  இடிந்து  விழுந்தது;  மனுஷரில்  ஏழாயிரம்பேர்  பூமியதிர்ச்சியினால்  அழிந்தார்கள்;  மீதியானவர்கள்  பயமடைந்து  பரலோகத்தின்  தேவனை  மகிமைப்படுத்தினார்கள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  11:13)

annearaththilea  boomi  migavum  athirnthathu,  udanea  antha  nagaraththil  paththilorupanggu  idinthu  vizhunthathu;  manusharil  eazhaayirampear  boomiyathirchchiyinaal  azhinthaarga'l;  meethiyaanavarga'l  bayamadainthu  paraloagaththin  theavanai  magimaippaduththinaarga'l.  (ve’lippaduththina  viseasham  11:13)

இரண்டாம்  ஆபத்து  கடந்துபோயிற்று;  இதோ,  மூன்றாம்  ஆபத்து  சீக்கிரமாய்  வருகிறது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  11:14)

ira'ndaam  aabaththu  kadanthupoayit’ru;  ithoa,  moon’raam  aabaththu  seekkiramaay  varugi’rathu.  (ve’lippaduththina  viseasham  11:14)

ஏழாம்  தூதன்  எக்காளம்  ஊதினான்;  அப்பொழுது  உலகத்தின்  ராஜ்யங்கள்  நம்முடைய  கர்த்தருக்கும்,  அவருடைய  கிறிஸ்துவுக்குமுரிய  ராஜ்யங்களாயின;  அவர்  சதாகாலங்களிலும்  ராஜ்யபாரம்  பண்ணுவார்  என்னும்  கெம்பீர  சத்தங்கள்  வானத்தில்  உண்டாயின.  (வெளிப்படுத்தின  விசேஷம்  11:15)

eazhaam  thoothan  ekkaa'lam  oothinaan;  appozhuthu  ulagaththin  raajyangga'l  nammudaiya  karththarukkum,  avarudaiya  ki’risthuvukkumuriya  raajyangga'laayina;  avar  sathaakaalangga'lilum  raajyabaaram  pa'n'nuvaar  ennum  kembeera  saththangga'l  vaanaththil  u'ndaayina.  (ve’lippaduththina  viseasham  11:15)

அப்பொழுது  தேவனுக்கு  முன்பாகத்  தங்கள்  சிங்காசனங்கள்மேல்  உட்கார்ந்திருந்த  இருபத்துநான்கு  மூப்பர்களும்  முகங்குப்புற  விழுந்து:  (வெளிப்படுத்தின  விசேஷம்  11:16)

appozhuthu  theavanukku  munbaagath  thangga'l  singgaasanangga'lmeal  udkaarnthiruntha  irubaththunaangu  moopparga'lum  mugangkuppu’ra  vizhunthu:  (ve’lippaduththina  viseasham  11:16)

இருக்கிறவரும்  இருந்தவரும்  வருகிறவருமாகிய  சர்வவல்லமையுள்ள  கர்த்தராகிய  தேவனே,  உம்மை  ஸ்தோத்திரிக்கிறோம்;  தேவரீர்  உமது  மகா  வல்லமையைக்கொண்டு  ராஜ்யபாரம்பண்ணுகிறீர்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  11:17)

irukki’ravarum  irunthavarum  varugi’ravarumaagiya  sarvavallamaiyu'l'la  karththaraagiya  theavanea,  ummai  sthoaththirikki’roam;  theavareer  umathu  mahaa  vallamaiyaikko'ndu  raajyabaarampa'n'nugi’reer.  (ve’lippaduththina  viseasham  11:17)

ஜாதிகள்  கோபித்தார்கள்,  அப்பொழுது  உம்முடைய  கோபம்  மூண்டது;  மரித்தோர்  நியாயத்தீர்ப்படைகிறதற்கும்,  தீர்க்கதரிசிகளாகிய  உம்முடைய  ஊழியக்காரருக்கும்  பரிசுத்தவான்களுக்கும்  உமது  நாமத்தின்மேல்  பயபக்தியாயிருந்த  சிறியோர்  பெரியோருக்கும்  பலனளிக்கிறதற்கும்,  பூமியைக்  கெடுத்தவர்களைக்  கெடுக்கிறதற்கும்,  காலம்  வந்தது  என்று  சொல்லி,  தேவனைத்  தொழுதுகொண்டார்கள்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  11:18)

jaathiga'l  koabiththaarga'l,  appozhuthu  ummudaiya  koabam  moo'ndathu;  mariththoar  niyaayaththeerppadaigi’ratha’rkum,  theerkkatharisiga'laagiya  ummudaiya  oozhiyakkaararukkum  parisuththavaanga'lukkum  umathu  naamaththinmeal  bayabakthiyaayiruntha  si’riyoar  periyoarukkum  palana'likki’ratha’rkum,  boomiyaik  keduththavarga'laik  kedukki’ratha’rkum,  kaalam  vanthathu  en’ru  solli,  theavanaith  thozhuthuko'ndaarga'l.  (ve’lippaduththina  viseasham  11:18)

அப்பொழுது  பரலோகத்தில்  தேவனுடைய  ஆலயம்  திறக்கப்பட்டது,  அவருடைய  ஆலயத்திலே  அவருடைய  உடன்படிக்கையின்  பெட்டி  காணப்பட்டது;  அப்பொழுது  மின்னல்களும்,  சத்தங்களும்,  இடிமுழக்கங்களும்,  பூமியதிர்ச்சியும்,  பெருங்கல்மழையும்  உண்டாயின.  (வெளிப்படுத்தின  விசேஷம்  11:19)

appozhuthu  paraloagaththil  theavanudaiya  aalayam  thi’rakkappattathu,  avarudaiya  aalayaththilea  avarudaiya  udanpadikkaiyin  petti  kaa'nappattathu;  appozhuthu  minnalga'lum,  saththangga'lum,  idimuzhakkangga'lum,  boomiyathirchchiyum,  perungkalmazhaiyum  u'ndaayina.  (ve’lippaduththina  viseasham  11:19)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!