Thursday, June 16, 2016

Ve’lippaduththina Viseasham 10 | வெளிப்படுத்தின விசேஷம் 10 | Revelation 10

பின்பு,  பலமுள்ள  வேறொரு  தூதன்  வானத்திலிருந்திறங்கி  வரக்கண்டேன்;  மேகம்  அவனைச்  சூழ்ந்திருந்தது,  அவனுடைய  சிரசின்மேல்  வானவில்லிருந்தது,  அவனுடைய  முகம்  சூரியனைப்போலவும்,  அவனுடைய  கால்கள்  அக்கினி  ஸ்தம்பங்களைப்போலவும்  இருந்தது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  10:1)

pinbu,  balamu'l'la  vea’roru  thoothan  vaanaththilirunthi’ranggi  varakka'ndean;  meagam  avanaich  soozhnthirunthathu,  avanudaiya  sirasinmeal  vaanavillirunthathu,  avanudaiya  mugam  sooriyanaippoalavum,  avanudaiya  kaalga'l  akkini  sthambangga'laippoalavum  irunthathu.  (ve’lippaduththina  viseasham  10:1)

திறக்கப்பட்ட  ஒரு  சிறு  புஸ்தகம்  அவன்  கையில்  இருந்தது;  தன்  வலதுபாதத்தைச்  சமுத்திரத்தின்மேலும்,  தன்  இடதுபாதத்தைப்  பூமியின்மேலும்  வைத்து,  (வெளிப்படுத்தின  விசேஷம்  10:2)

thi’rakkappatta  oru  si’ru  pusthagam  avan  kaiyil  irunthathu;  than  valathupaathaththaich  samuththiraththinmealum,  than  idathupaathaththaip  boomiyinmealum  vaiththu,  (ve’lippaduththina  viseasham  10:2)

சிங்கம்  கெர்ச்சிக்கிறதுபோல  மகா  சத்தமாய்  ஆர்ப்பரித்தான்;  அவன்  ஆர்ப்பரித்தபோது  ஏழு  இடிகளும்  சத்தமிட்டு  முழங்கின.  (வெளிப்படுத்தின  விசேஷம்  10:3)

singgam  kerchchikki’rathupoala  mahaa  saththamaay  aarppariththaan;  avan  aarppariththapoathu  eazhu  idiga'lum  saththamittu  muzhanggina.  (ve’lippaduththina  viseasham  10:3)

அவ்வேழு  இடிகளும்  தங்கள்  சத்தங்களை  முழங்கினபோது,  நான்  எழுதவேண்டுமென்றிருந்தேன்.  அப்பொழுது:  ஏழு  இடிமுழக்கங்கள்  சொன்னவைகளை  நீ  எழுதாமல்  முத்திரைபோடு  என்று  வானத்திலிருந்து  ஒரு  சத்தம்  உண்டாகக்  கேட்டேன்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  10:4)

avveazhu  idiga'lum  thangga'l  saththangga'lai  muzhangginapoathu,  naan  ezhuthavea'ndumen’rirunthean.  appozhuthu:  eazhu  idimuzhakkangga'l  sonnavaiga'lai  nee  ezhuthaamal  muththiraipoadu  en’ru  vaanaththilirunthu  oru  saththam  u'ndaagak  keattean.  (ve’lippaduththina  viseasham  10:4)

சமுத்திரத்தின்மேலும்  பூமியின்மேலும்  நிற்கிறதாக  நான்  கண்ட  தூதன்,  தன்  கையை  வானத்திற்கு  நேராக  உயர்த்தி:  (வெளிப்படுத்தின  விசேஷம்  10:5)

samuththiraththinmealum  boomiyinmealum  ni’rki’rathaaga  naan  ka'nda  thoothan,  than  kaiyai  vaanaththi’rku  nearaaga  uyarththi:  (ve’lippaduththina  viseasham  10:5)

இனி  காலம்  செல்லாது;  ஆனாலும்  தேவன்  தம்முடைய  ஊழியக்காரராகிய  தீர்க்கதரிசிகளுக்குச்  சுவிசேஷமாய்  அறிவித்தபடி,  ஏழாம்  தூதனுடைய  சத்தத்தின்  நாட்களிலே  அவன்  எக்காளம்  ஊதப்போகிறபோது  தேவரகசியம்  நிறைவேறும்  என்று,  (வெளிப்படுத்தின  விசேஷம்  10:6)

ini  kaalam  sellaathu;  aanaalum  theavan  thammudaiya  oozhiyakkaararaagiya  theerkkatharisiga'lukkuch  suviseashamaay  a’riviththapadi,  eazhaam  thoothanudaiya  saththaththin  naadka'lilea  avan  ekkaa'lam  oothappoagi’rapoathu  theavaragasiyam  ni’raivea’rum  en’ru,  (ve’lippaduththina  viseasham  10:6)

வானத்தையும்  அதிலுள்ளவைகளையும்,  பூமியையும்  அதிலுள்ளவைகளையும்,  சமுத்திரத்தையும்  அதிலுள்ளவைகளையும்  சிருஷ்டித்தவரும்,  சதாகாலங்களிலும்  உயிரோடிருக்கிறவருமானவர்மேல்  ஆணையிட்டுச்  சொன்னான்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  10:7)

vaanaththaiyum  athilu'l'lavaiga'laiyum,  boomiyaiyum  athilu'l'lavaiga'laiyum,  samuththiraththaiyum  athilu'l'lavaiga'laiyum  sirushdiththavarum,  sathaakaalangga'lilum  uyiroadirukki’ravarumaanavarmeal  aa'naiyittuch  sonnaan.  (ve’lippaduththina  viseasham  10:7)

நான்  வானத்திலிருந்து  பிறக்கக்கேட்ட  சத்தம்  மறுபடியும்  என்னுடனே  பேசி:  சமுத்திரத்தின்மேலும்  பூமியின்மேலும்  நிற்கிற  தூதனுடைய  கையிலிருக்கும்  திறக்கப்பட்ட  சிறு  புஸ்தகத்தை  நீ  போய்  வாங்கிக்கொள்  என்று  சொல்ல,  (வெளிப்படுத்தின  விசேஷம்  10:8)

naan  vaanaththilirunthu  pi’rakkakkeatta  saththam  ma’rupadiyum  ennudanea  peasi:  samuththiraththinmealum  boomiyinmealum  ni’rki’ra  thoothanudaiya  kaiyilirukkum  thi’rakkappatta  si’ru  pusthagaththai  nee  poay  vaanggikko'l  en’ru  solla,  (ve’lippaduththina  viseasham  10:8)

நான்  தூதனிடத்தில்  போய்:  அந்தச்  சிறு  புஸ்தகத்தை  எனக்குத்  தாரும்  என்றேன்.  அதற்கு  அவன்:  நீ  இதை  வாங்கிப்  புசி;  இது  உன்  வயிற்றுக்குக்  கசப்பாயிருக்கும்,  ஆகிலும்  உன்  வாய்க்கு  இது  தேனைப்போல  மதுரமாயிருக்கும்  என்றான்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  10:9)

naan  thoothanidaththil  poay:  anthach  si’ru  pusthagaththai  enakkuth  thaarum  en’rean.  atha’rku  avan:  nee  ithai  vaanggip  pusi;  ithu  un  vayit’rukkuk  kasappaayirukkum,  aagilum  un  vaaykku  ithu  theanaippoala  mathuramaayirukkum  en’raan.  (ve’lippaduththina  viseasham  10:9)

நான்  அந்தச்  சிறு  புஸ்தகத்தைத்  தூதனுடைய  கையிலிருந்து  வாங்கி,  அதைப்  புசித்தேன்;  என்  வாய்க்கு  அது  தேனைப்போல  மதுரமாயிருந்தது;  நான்  அதைப்  புசித்தவுடனே  என்  வயிறு  கசப்பாயிற்று.  (வெளிப்படுத்தின  விசேஷம்  10:10)

naan  anthach  si’ru  pusthagaththaith  thoothanudaiya  kaiyilirunthu  vaanggi,  athaip  pusiththean;  en  vaaykku  athu  theanaippoala  mathuramaayirunthathu;  naan  athaip  pusiththavudanea  en  vayi’ru  kasappaayit’ru.  (ve’lippaduththina  viseasham  10:10)

அப்பொழுது  அவன்  என்னை  நோக்கி:  நீ  மறுபடியும்  அநேக  ஜனங்களையும்,  ஜாதிகளையும்,  பாஷைக்காரரையும்,  ராஜாக்களையுங்குறித்துத்  தீர்க்கதரிசனஞ்சொல்லவேண்டும்  என்றான்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  10:11)

appozhuthu  avan  ennai  noakki:  nee  ma’rupadiyum  aneaga  janangga'laiyum,  jaathiga'laiyum,  baashaikkaararaiyum,  raajaakka'laiyungku’riththuth  theerkkatharisanagnsollavea'ndum  en’raan.  (ve’lippaduththina  viseasham  10:11)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!