Thursday, June 16, 2016

Ve’lippaduththina Viseasham 1 | வெளிப்படுத்தின விசேஷம் 1 | Revelation 1

சீக்கிரத்தில்  சம்பவிக்கவேண்டியவைகளைத்  தம்முடைய  ஊழியக்காரருக்குக்  காண்பிக்கும்பொருட்டு,  தேவன்  இயேசுகிறிஸ்துவுக்கு  ஒப்புவித்ததும்,  இவர்  தம்முடைய  தூதனை  அனுப்பி,  தம்முடைய  ஊழியக்காரனாகிய  யோவானுக்கு  வெளிப்படுத்தினதுமான  விசேஷம்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  1:1)

seekkiraththil  sambavikkavea'ndiyavaiga'laith  thammudaiya  oozhiyakkaararukkuk  kaa'nbikkumporuttu,  theavan  iyeasuki’risthuvukku  oppuviththathum,  ivar  thammudaiya  thoothanai  anuppi,  thammudaiya  oozhiyakkaaranaagiya  yoavaanukku  ve'lippaduththinathumaana  viseasham.  (ve’lippaduththina  viseasham  1:1)

இவன்  தேவனுடைய  வசனத்தைக்குறித்தும்,  இயேசுகிறிஸ்துவைப்பற்றிய  சாட்சியைக்குறித்தும்,  தான்  கண்ட  யாவற்றையும்  சாட்சியாக  அறிவித்திருக்கிறான்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  1:2)

ivan  theavanudaiya  vasanaththaikku’riththum,  iyeasuki’risthuvaippat’riya  saadchiyaikku’riththum,  thaan  ka'nda  yaavat’raiyum  saadchiyaaga  a’riviththirukki’raan.  (ve’lippaduththina  viseasham  1:2)

இந்தத்  தீர்க்கதரிசன  வசனங்களை  வாசிக்கிறவனும்,  கேட்கிறவர்களும்,  இதில்  எழுதியிருக்கிறவைகளைக்  கைக்கொள்ளுகிறவர்களும்  பாக்கியவான்கள்,  காலம்  சமீபமாயிருக்கிறது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  1:3)

inthath  theerkkatharisana  vasanangga'lai  vaasikki’ravanum,  keadki’ravarga'lum,  ithil  ezhuthiyirukki’ravaiga'laik  kaikko'l'lugi’ravarga'lum  baakkiyavaanga'l,  kaalam  sameebamaayirukki’rathu.  (ve’lippaduththina  viseasham  1:3)

யோவான்  ஆசியாவிலுள்ள  ஏழுசபைகளுக்கும்  எழுதுகிறதாவது:  இருக்கிறவரும்  இருந்தவரும்  வருகிறவருமானவராலும்,  அவருடைய  சிங்காசனத்திற்கு  முன்பாக  இருக்கிற  ஏழு  ஆவிகளாலும்,  (வெளிப்படுத்தின  விசேஷம்  1:4)

yoavaan  aasiyaavilu'l'la  eazhusabaiga'lukkum  ezhuthugi’rathaavathu:  irukki’ravarum  irunthavarum  varugi’ravarumaanavaraalum,  avarudaiya  singgaasanaththi’rku  munbaaga  irukki’ra  eazhu  aaviga'laalum,  (ve’lippaduththina  viseasham  1:4)

உண்மையுள்ள  சாட்சியும்,  மரித்தோரிலிருந்து  முதற்பிறந்தவரும்,  பூமியின்  ராஜாக்களுக்கு  அதிபதியுமாகிய  இயேசுகிறிஸ்துவினாலும்  உங்களுக்குக்  கிருபையும்  சமாதானமும்  உண்டாவதாக.  (வெளிப்படுத்தின  விசேஷம்  1:5)

u'nmaiyu'l'la  saadchiyum,  mariththoarilirunthu  mutha’rpi’ranthavarum,  boomiyin  raajaakka'lukku  athibathiyumaagiya  iyeasuki’risthuvinaalum  ungga'lukkuk  kirubaiyum  samaathaanamum  u'ndaavathaaga.  (ve’lippaduththina  viseasham  1:5)

நம்மிடத்தில்  அன்புகூர்ந்து,  தமது  இரத்தத்தினாலே  நம்முடைய  பாவங்களற  நம்மைக்  கழுவி,  தம்முடைய  பிதாவாகிய  தேவனுக்கு  முன்பாக  நம்மை  ராஜாக்களும்  ஆசாரியர்களுமாக்கின  அவருக்கு  மகிமையும்  வல்லமையும்  என்றென்றைக்கும்  உண்டாயிருப்பதாக.  ஆமென்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  1:6)

nammidaththil  anbukoornthu,  thamathu  iraththaththinaalea  nammudaiya  paavangga'la’ra  nammaik  kazhuvi,  thammudaiya  pithaavaagiya  theavanukku  munbaaga  nammai  raajaakka'lum  aasaariyarga'lumaakkina  avarukku  magimaiyum  vallamaiyum  en’ren’raikkum  u'ndaayiruppathaaga.  aamen.  (ve’lippaduththina  viseasham  1:6)

இதோ,  மேகங்களுடனே  வருகிறார்;  கண்கள்  யாவும்  அவரைக்  காணும்,  அவரைக்  குத்தினவர்களும்  அவரைக்  காண்பார்கள்;  பூமியின்  கோத்திரத்தாரெல்லாரும்  அவரைப்  பார்த்துப்  புலம்புவார்கள்.  அப்படியே  ஆகும்,  ஆமென்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  1:7)

ithoa,  meagangga'ludanea  varugi’raar;  ka'nga'l  yaavum  avaraik  kaa'num,  avaraik  kuththinavarga'lum  avaraik  kaa'nbaarga'l;  boomiyin  koaththiraththaarellaarum  avaraip  paarththup  pulambuvaarga'l.  appadiyea  aagum,  aamen.  (ve’lippaduththina  viseasham  1:7)

இருக்கிறவரும்  இருந்தவரும்  வருகிறவருமாகிய  சர்வவல்லமையுள்ள  கர்த்தர்:  நான்  அல்பாவும்,  ஓமெகாவும்,  ஆதியும்  அந்தமுமாயிருக்கிறேன்  என்று  திருவுளம்பற்றுகிறார்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  1:8)

irukki’ravarum  irunthavarum  varugi’ravarumaagiya  sarvavallamaiyu'l'la  karththar:  naan  alpaavum,  oamegaavum,  aathiyum  anthamumaayirukki’rean  en’ru  thiruvu'lampat’rugi’raar.  (ve’lippaduththina  viseasham  1:8)

உங்கள்  சகோதரனும்,  இயேசுகிறிஸ்துவினிமித்தம்  வருகிற  உபத்திரவத்திற்கும்  அவருடைய  ராஜ்யத்திற்கும்  அவருடைய  பொறுமைக்கும்  உங்கள்  உடன்பங்காளனுமாயிருக்கிற  யோவானாகிய  நான்  தேவவசனத்தினிமித்தமும்,  இயேசுகிறிஸ்துவைப்பற்றிய  சாட்சியினிமித்தமும்,  பத்மு  என்னும்  தீவிலே  இருந்தேன்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  1:9)

ungga'l  sagoatharanum,  iyeasuki’risthuvinimiththam  varugi’ra  ubaththiravaththi’rkum  avarudaiya  raajyaththi’rkum  avarudaiya  po’rumaikkum  ungga'l  udanpanggaa'lanumaayirukki’ra  yoavaanaagiya  naan  theavavasanaththinimiththamum,  iyeasuki’risthuvaippat’riya  saadchiyinimiththamum,  pathmu  ennum  theevilea  irunthean.  (ve’lippaduththina  viseasham  1:9)

கர்த்தருடைய  நாளில்  ஆவிக்குள்ளானேன்;  அப்பொழுது  எனக்குப்  பின்னாலே  எக்காளசத்தம்போன்ற  பெரிதான  ஒரு  சத்தத்தைக்  கேட்டேன்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  1:10)

karththarudaiya  naa'lil  aavikku'l'laanean;  appozhuthu  enakkup  pinnaalea  ekkaa'lasaththampoan’ra  perithaana  oru  saththaththaik  keattean.  (ve’lippaduththina  viseasham  1:10)

அது:  நான்  அல்பாவும்  ஓமெகாவும்,  முந்தினவரும்  பிந்தினவருமாயிருக்கிறேன்.  நீ  காண்கிறதை  ஒரு  புஸ்தகத்தில்  எழுதி,  ஆசியாவிலிருக்கிற  எபேசு,  சிமிர்னா,  பெர்கமு,  தியத்தீரா,  சர்தை,  பிலதெல்பியா,  லவோதிக்கேயா  என்னும்  பட்டணங்களிலுள்ள  ஏழு  சபைகளுக்கும்  அனுப்பு  என்று  விளம்பினது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  1:11)

athu:  naan  alpaavum  oamegaavum,  munthinavarum  pinthinavarumaayirukki’rean.  nee  kaa'ngi’rathai  oru  pusthagaththil  ezhuthi,  aasiyaavilirukki’ra  ebeasu,  simirnaa,  pergamu,  thiyaththeeraa,  sarthai,  pilathelpiyaa,  lavoathikkeayaa  ennum  patta'nangga'lilu'l'la  eazhu  sabaiga'lukkum  anuppu  en’ru  vi'lambinathu.  (ve’lippaduththina  viseasham  1:11)

அப்பொழுது  என்னுடனே  பேசின  சத்தத்தைப்  பார்க்கத்  திரும்பினேன்;  திரும்பினபோது,  ஏழு  பொன்  குத்துவிளக்குகளையும்,  (வெளிப்படுத்தின  விசேஷம்  1:12)

appozhuthu  ennudanea  peasina  saththaththaip  paarkkath  thirumbinean;  thirumbinapoathu,  eazhu  pon  kuththuvi'lakkuga'laiyum,  (ve’lippaduththina  viseasham  1:12)

அந்த  ஏழு  குத்துவிளக்குகளின்  மத்தியிலே,  நிலையங்கி  தரித்து,  மார்பருகே  பொற்கச்சை  கட்டியிருந்த  மனுஷகுமாரனுக்கொப்பானவரையும்  கண்டேன்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  1:13)

antha  eazhu  kuththuvi'lakkuga'lin  maththiyilea,  nilaiyanggi  thariththu,  maarbarugea  po’rkachchai  kattiyiruntha  manushakumaaranukkoppaanavaraiyum  ka'ndean.  (ve’lippaduththina  viseasham  1:13)

அவருடைய  சிரசும்  மயிரும்  வெண்பஞ்சைப்போலவும்  உறைந்த  மழையைப்போலவும்  வெண்மையாயிருந்தது;  அவருடைய  கண்கள்  அக்கினிஜுவாலையைப்  போலிருந்தது;  (வெளிப்படுத்தின  விசேஷம்  1:14)

avarudaiya  sirasum  mayirum  ve'npagnchaippoalavum  u’raintha  mazhaiyaippoalavum  ve'nmaiyaayirunthathu;  avarudaiya  ka'nga'l  akkinijuvaalaiyaip  poalirunthathu;  (ve’lippaduththina  viseasham  1:14)

அவருடைய  பாதங்கள்  உலைக்களத்தில்  காய்ந்த  பிரகாசமான  வெண்கலம்போலிருந்தது;  அவருடைய  சத்தம்  பெருவெள்ளத்து  இரைச்சலைப்போலிருந்தது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  1:15)

avarudaiya  paathangga'l  ulaikka'laththil  kaayntha  piragaasamaana  ve'ngalampoalirunthathu;  avarudaiya  saththam  peruve'l'laththu  iraichchalaippoalirunthathu.  (ve’lippaduththina  viseasham  1:15)

தமது  வலதுகரத்திலே  ஏழு  நட்சத்திரங்களை  ஏந்திக்கொண்டிருந்தார்;  அவர்  வாயிலிருந்து  இருபுறமும்  கருக்குள்ள  பட்டயம்  புறப்பட்டது;  அவருடைய  முகம்  வல்லமையாய்ப்  பிரகாசிக்கிற  சூரியனைப்போலிருந்தது.  (வெளிப்படுத்தின  விசேஷம்  1:16)

thamathu  valathukaraththilea  eazhu  nadchaththirangga'lai  eanthikko'ndirunthaar;  avar  vaayilirunthu  irupu’ramum  karukku'l'la  pattayam  pu’rappattathu;  avarudaiya  mugam  vallamaiyaayp  piragaasikki’ra  sooriyanaippoalirunthathu.  (ve’lippaduththina  viseasham  1:16)

நான்  அவரைக்  கண்டபோது  செத்தவனைப்போல  அவருடைய  பாதத்தில்  விழுந்தேன்;  அப்பொழுது  அவர்  தம்முடைய  வலதுகரத்தை  என்மேல்  வைத்து,  என்னை  நோக்கி:  பயப்படாதே,  நான்  முந்தினவரும்  பிந்தினவரும்,  உயிருள்ளவருமாயிருக்கிறேன்;  (வெளிப்படுத்தின  விசேஷம்  1:17)

naan  avaraik  ka'ndapoathu  seththavanaippoala  avarudaiya  paathaththil  vizhunthean;  appozhuthu  avar  thammudaiya  valathukaraththai  enmeal  vaiththu,  ennai  noakki:  bayappadaathea,  naan  munthinavarum  pinthinavarum,  uyiru'l'lavarumaayirukki’rean;  (ve’lippaduththina  viseasham  1:17)

மரித்தேன்,  ஆனாலும்,  இதோ,  சதாகாலங்களிலும்  உயிரோடிருக்கிறேன்,  ஆமென்;  நான்  மரணத்திற்கும்  பாதாளத்திற்குமுரிய  திறவுகோல்களை  உடையவராயிருக்கிறேன்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  1:18)

mariththean,  aanaalum,  ithoa,  sathaakaalangga'lilum  uyiroadirukki’rean,  aamen;  naan  mara'naththi’rkum  paathaa'laththi’rkumuriya  thi’ravukoalga'lai  udaiyavaraayirukki’rean.  (ve’lippaduththina  viseasham  1:18)

நீ  கண்டவைகளையும்,  இருக்கிறவைகளையும்,  இவைகளுக்குப்பின்பு  சம்பவிப்பவைகளையும்  எழுது;  (வெளிப்படுத்தின  விசேஷம்  1:19)

nee  ka'ndavaiga'laiyum,  irukki’ravaiga'laiyum,  ivaiga'lukkuppinbu  sambavippavaiga'laiyum  ezhuthu;  (ve’lippaduththina  viseasham  1:19)

என்  வலதுகரத்தில்  நீ  கண்ட  ஏழு  நட்சத்திரங்களின்  இரகசியத்தையும்,  ஏழு  பொன்  குத்துவிளக்குகளின்  இரகசியத்தையும்  எழுது;  அந்த  ஏழு  நட்சத்திரங்களும்  ஏழு  சபைகளின்  தூதர்களாம்;  நீ  கண்ட  ஏழு  குத்துவிளக்குகளும்  ஏழு  சபைகளாம்.  (வெளிப்படுத்தின  விசேஷம்  1:20)

en  valathukaraththil  nee  ka'nda  eazhu  nadchaththirangga'lin  iragasiyaththaiyum,  eazhu  pon  kuththuvi'lakkuga'lin  iragasiyaththaiyum  ezhuthu;  antha  eazhu  nadchaththirangga'lum  eazhu  sabaiga'lin  thootharga'laam;  nee  ka'nda  eazhu  kuththuvi'lakkuga'lum  eazhu  sabaiga'laam.  (ve’lippaduththina  viseasham  1:20)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!