ஆ,
நீர் என் தாயின்
பால்குடித்த என் சகோதரனைப்போலிருந்தீரானால், நான் உம்மை வெளியிலே
சந்தித்து முத்தமிடுவேன்; என்னை நிந்திக்கவுமாட்டார்கள். (உன்னதப்பாட்டு 8:1)
aa, neer en thaayin paalkudiththa
en sagoatharanaippoaliruntheeraanaal, naan ummai ve'liyilea santhiththu muththamiduvean; ennai ninthikkavumaattaarga'l. (unnathappaattu 8:1)
நான்
உம்மைக் கூட்டிக்கொண்டு, என் தாயின் வீட்டுக்கு
அழைத்துக்கொண்டுபோவேன்; நீர் என்னைப்
போதிப்பீர், கந்தவர்க்கமிட்ட திராட்சரசத்தையும், என் மாதளம்பழரசத்தையும் உமக்குக்
குடிக்கக்கொடுப்பேன். (உன்னதப்பாட்டு 8:2)
naan ummaik koottikko'ndu, en thaayin veettukku azhaiththukko'ndupoavean; neer ennaip poathippeer,
kanthavarkkamitta thiraadcharasaththaiyum, en maatha'lampazharasaththaiyum umakkuk
kudikkakkoduppean. (unnathappaattu 8:2)
அவர்
இடதுகை என் தலையின்
கீழிருக்கும், அவர் வலதுகை
என்னை அணைக்கும். (உன்னதப்பாட்டு 8:3)
avar idathukai en thalaiyin keezhirukkum,
avar valathukai ennai a'naikkum. (unnathappaattu 8:3)
எருசலேமின் குமாரத்திகளே!
எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும்
நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலும்
இருக்க உங்களை ஆணையிடுகிறேன். (உன்னதப்பாட்டு 8:4)
erusaleamin kumaaraththiga'lea! enakkup
piriyamaanava'lukku manathaagumattum neengga'l ava'lai
vizhikkappa'n'naamalum ezhuppaamalum irukka
ungga'lai
aa'naiyidugi’rean. (unnathappaattu 8:4)
தன்
நேசர்மேல் சார்ந்துகொண்டு வனாந்தரத்திலிருந்து வருகிற
இவள் யார்? கிச்சிலிமரத்தின்கீழ் உம்மை எழுப்பினேன்; அங்கே உமது தாய் உம்மைப் பெற்றாள்;
அங்கே உம்மைப் பெற்றவள்
வேதனைப்பட்டு உம்மைப் பெற்றாள்.
(உன்னதப்பாட்டு 8:5)
than neasarmeal
saarnthuko'ndu vanaantharaththilirunthu varugi’ra iva'l yaar? kichchilimaraththinkeezh ummai ezhuppinean; anggea umathu
thaay ummaip pet’raa'l; anggea ummaip
pet’rava'l veathanaippattu ummaip
pet’raa'l. (unnathappaattu 8:5)
நீர்
என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்; நேசம் மரணத்தைப்போல் வலிது;
நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது; அதின் தழல் அக்கினித்தழலும் அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கிறது. (உன்னதப்பாட்டு 8:6)
neer ennai umathu
iruthayaththinmeal muththiraiyaippoalavum, umathu
puyaththinmeal muththiraiyaippoalavum vaiththukko'l'lum; neasam mara'naththaippoal valithu;
neasavairaakkiyam paathaa'laththaippoal kodithaayirukki’rathu; athin thazhal akkiniththazhalum athin juvaalai kadum juvaalaiyumaayirukki’rathu. (unnathappaattu 8:6)
திரளான
தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது, வெள்ளங்களும்
அதைத் தணிக்கமாட்டாது; ஒருவன்
தன் வீட்டிலுள்ள ஆஸ்திகளையெல்லாம் நேசத்துக்காகக் கொடுத்தாலும்,
அது முற்றிலும் அசட்டைபண்ணப்படும். (உன்னதப்பாட்டு 8:7)
thira'laana tha'n'neerga'l neasaththai avikkamaattaathu, ve'l'langga'lum athaith tha'nikkamaattaathu; oruvan
than veettilu'l'la aasthiga'laiyellaam neasaththukkaagak koduththaalum, athu mut’rilum asattaipa'n'nappadum.
(unnathappaattu 8:7)
நமக்கு
ஒரு சிறிய சகோதரியுண்டு,
அவளுக்கு ஸ்தனங்களில்லை; நம்முடைய
சகோதரியைக் கேட்கும் நாளில்
அவளுக்காக நாம் என்ன செய்வோம்? (உன்னதப்பாட்டு 8:8)
namakku oru si’riya sagoathariyu'ndu, ava'lukku
sthanangga'lillai; nammudaiya sagoathariyaik keadkum
naa'lil ava'lukkaaga naam enna seyvoam? (unnathappaattu 8:8)
அவள்
ஒரு மதிலானால், அதின்மேல்
வெள்ளிக்கோட்டையைக் கட்டுவோம்; அவள் கதவானால், கேதுருப்பலகைகளை அதற்கு
இணைப்போம். (உன்னதப்பாட்டு 8:9)
ava'l oru mathilaanaal,
athinmeal ve'l'likkoattaiyaik kattuvoam; ava'l kathavaanaal,
keathuruppalagaiga'lai atha’rku i'naippoam.
(unnathappaattu 8:9)
நான்
மதில்தான், என் ஸ்தனங்கள்
கோபுரங்கள்; அவருடைய கண்களில்
கடாட்சம்பெறலானேன். (உன்னதப்பாட்டு 8:10)
naan mathilthaan, en sthanangga'l koapurangga'l; avarudaiya ka'nga'lil kadaadchampe’ralaanean. (unnathappaattu 8:10)
பாகால்
ஆமோனிலே சாலொமோனுக்கு ஒரு திராட்சத்தோட்டம் உண்டாயிருந்தது, அந்தத்
தோட்டத்தைக் காவலாளிகள் வசத்திலே
அதின் பலனுக்காக, ஒவ்வொருவன்
ஆயிரம் வெள்ளிக்காசு கொண்டுவரும்படி விட்டார்.
(உன்னதப்பாட்டு 8:11)
baagaal aamoanilea saalomoanukku oru thiraadchaththoattam u'ndaayirunthathu, anthath
thoattaththaik kaavalaa'liga'l vasaththilea athin palanukkaaga, ovvoruvan aayiram
ve'l'likkaasu ko'nduvarumpadi vittaar. (unnathappaattu 8:11)
என்
திராட்சத்தோட்டம் எனக்கு முன்பாக
இருக்கிறது; சாலொமோனே! உமக்கு
அந்த ஆயிரமும், அதின் கனியைக் காக்கிறவர்களுக்கு இருநூறும்
சேரும். (உன்னதப்பாட்டு 8:12)
en thiraadchaththoattam enakku
munbaaga
irukki’rathu; saalomoanea! umakku
antha aayiramum, athin kaniyaik kaakki’ravarga'lukku irunoo’rum searum.
(unnathappaattu 8:12)
தோட்டங்களில் வாசம்பண்ணுகிறவளே! தோழர் உன் சத்தத்தைக்
கேட்கிறார்கள்; நானும் அதைக் கேட்கட்டும். (உன்னதப்பாட்டு 8:13)
thoattangga'lil vaasampa'n'nugi’rava'lea! thoazhar un saththaththaik keadki’raarga'l; naanum athaik
keadkattum. (unnathappaattu 8:13)
என்
நேசரே! தீவிரியும், கந்தவர்க்கங்களின் மலைகள்மேலுள்ள
வெளிமானுக்கும் மரைகளின் குட்டிக்கும்
சமானமாயிரும். (உன்னதப்பாட்டு 8:14)
en neasarea! theeviriyum,
kanthavarkkangga'lin malaiga'lmealu'l'la ve'limaanukkum maraiga'lin kuttikkum samaanamaayirum. (unnathappaattu 8:14)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!